Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 21 Sep, 2025 | 01:36 PM ஆர்.ராம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவது தொடர்பில் அடுத்தவார இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொறடாவுமான கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடாபில் பரிசீலிக்க வேண்டும் என்று எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் அந்த விடயம் ச…

  2. 21 Sep, 2025 | 11:42 AM (நமது நிருபர்) நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் பிரத்தியேகமாக இல்லமொன்றை பெற்றுள்ள நிலையில் அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதேநேரம், எனக்கு மருத்துவச் சிகிச்சைகளையும் பெறவேண்டியுள்ளது. ஆகவே, தற்போதைய அரச இல்லத்தில் தங்குவதற்கு இரண்டு மாத கால அவகாசம் கோரியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டமை உட்பட சமகால நிலைமைகள் சம்பந்தமாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மே…

  3. Published By: Vishnu 21 Sep, 2025 | 06:57 PM இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் முன்நாள் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த தேர்தலை விரைவாக நடத்த அரசு நடவடிக்கி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். வன் டெக்ஸ்ட் இன்னிஷியேற்றிவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (21) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடமாகாண சபையில் கடந்தகால அனுபவங்கள் மற்றும் மாகாண சபைக்கான தேர்தலை வலியுறுத்தும் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இந்தக்கலந்துரையாடலில் வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.தவராசா, அமைச்சர்களான குருகுலராஜா, கலாநிதி.சர்வேஸ்வரன், உறுப்பினர்களா…

  4. தியாக தீபத்திற்கு எம்.ஏ சுமந்திரன் அஞ்சலி 21 Sep, 2025 | 04:57 PM நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்ற தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தி ஆவண காப்பகத்தினை பார்வையிட்டார். தியாக தீபத்தின் நினைவுகளை தாங்கிய ஆவண காப்பகம் சனிக்கிழமை (20) மாலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் , ஆவண காப்பகத்திற்கு சென்று தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினார். https://www.virakesari.lk/article/225675

  5. ”தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற கட்சிகள் கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்” - செல்வம் அடைக்கலநாதன் வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்று கட்சிகளின் அதிகாரங்களிற்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை தேர்தலினை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை விடுகின்ற இச்சந்தர்ப்பத்திலே அதிகார பரவலாக்களின் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இந…

  6. கனகசபை ஐயாவின் மறைவு பேரிழப்பாகும்! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய நேர்மையான மனிதர் மறைந்த தன்மன்பிள்ளை கனகசபை அவர்களின் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை தந்தது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், அவர் காலத்தில் நான் பாராளுமன்றம் செல்லாவிட்டாலும் அவருடைய செயல்பாடுகள் அமைதியான நடத்தை தொடர்பாக நான் அறிந்துள்ளேன். கடந்த 2004, ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் அதில் கூடிய விருப்புவாக்காக்குகளை அவர் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக கனகசபை ஐயா …

  7. 21 Sep, 2025 | 11:25 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கும் (ஐ.நா. பொதுச் சபை) மற்றும் ஜப்பானுக்கும் நாளை திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கிறார். இந்த பயணங்கள் இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களையும், எதிர்கால கொள்கைகளையும் உலக அரங்கில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை வெளிவிவகார அமைச்சர் விஜய ஹேரத்தின் கூற்றுப்படி, 22 ஆம் திகதி திங்கட்கிழமை நியூயார்க்கிற்குப் புறப்பட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வார். செப்டம்பர் 24 ஆம் திக…

  8. யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது! adminSeptember 21, 2025 யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்பவும் , யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கும் தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மண்டைதீவு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் படகு சவாரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை ( 21.09.25) நடைபெற்றது. நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்திருந்தனர். நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது,…

  9. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (20) அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அனுமதிப்பத்திரத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி, பொது போக்குவரத்து சாரதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகள் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட போதே சீட் பெல்ட்கள் இல்லை என்பத…

  10. இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (20) நாட்டிற்கு வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இந்திய கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டை வந்தடைந்த போர்க் கப்பலான ‘INS SATPURA’ 142.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 403 பணியாளர்களைக் கொண்டுள்ளது. கப்பல் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில் அதன் பணியாளர்களை இலங்கையின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmft987bi00k8o29n5d59slsa

  11. 21 Sep, 2025 | 11:31 AM (ஆர்.ராம்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதாகவும், நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் முரணான விதிகளை திரும்பப் பெறுவதாகவும், ஒரு சுயாதீனமான வழக்குத்தொடுநர் அமைப்பை நிற…

  12. நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகள் வரும் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மருந்துப் பதிவின் போது வரம்பற்ற விலைகளை அனுமதிக்க முடியாததால் சில நிறுவனங்கள் விநியோகத்தில் ஈடுபடவில்லை என…

  13. Published By: Vishnu 21 Sep, 2025 | 12:31 AM தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் 20ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரலாற்று ஆவணக் காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால்…

  14. இராணுவம் – கடற்படை அதிகளவான நீரை எடுத்து செல்வதனால் உவராகும் குடிநீர் கிணறுகள் written by admin September 20, 2025 மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் பெருமளவான நீரை தினமும் எடுத்து செல்வதால் , அப்பகுதி கிணற்று நீர் உவராகியுள்ளது. அதானல் மக்கள் தாம் குடிப்பதற்கு பணம் கொடுத்து நீரை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் , அதனால் மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து இராணுவத்தினர் நீரினை பெறுவதை தடை செய்ய வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.நாகரஞ்சினி தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித…

  15. இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்! 2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் வுட்லர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https:…

  16. Published By: Vishnu 20 Sep, 2025 | 02:37 AM வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (19) தவிசாளரும் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் நீண்ட கயிறுகளில் வீதியோரங்களில் கட்டுகின்றனர். இதனால் அந்த கால்நடைகள் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லும்போது அந்தக் கயிறு வாகனங்களில் சிக்குவதாலும், கால்நடைகள் குறுக்கே வருவதாலும் விபத்துக்கள்…

  17. அம்பாறை, மட்டக்களப்பில் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 7 வது வருடாந்த பல்துறை மருத்துவ முகாம் Published By: Vishnu 19 Sep, 2025 | 07:20 PM இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நடாத்தப்பட்ட பல்துறை மருத்துவ முகாம்களின் 7 வது கட்டம் வெள்ளிக்கிழமை (19) அம்பாறை, கொண்டுவட்டுவான் இலங்கை இராணுவ போர் பயிற்சிப் பாடசாலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசிக்கும் காயமடைந்த போர்வீரர்கள், வீரமரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட 1250 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். போர் வீரர் விவகாரம் மற்றும் புணர்வாழ்வு பணிப்…

  18. Published By: Vishnu 19 Sep, 2025 | 06:47 PM (இராஜதுரை ஹஷான்) 2026நிதி ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அரச செலவீனமாக 4,43,435 கோடியே 6,46,8000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4,21,824 கோடியே 8,018,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 21,610 கோடியே 8,450,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தை காட்டிலும் 2026ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. அரச செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு மற்றும் பொ…

  19. 19 Sep, 2025 | 02:57 PM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட இரைப்பை மற்றும் குடல் சிகிச்சை பிரிவு மற்றும் கல்லீரல் சிகிச்சை பிரிவு ஆகியன பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்பட உள்ளன. கிழக்கு மாகாண மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக வைத்தியசாலையின் வினைத்திறன் பெரிதும் மேம்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெ குஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இருதய சிகிச்சை பிரிவின் கட்டட திறப்பு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட இரைப்பை குடல் பிரிவு மற்றும் கல்லீரல் பிரிவு திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை கா…

  20. யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மனு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி, யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று வி…

  21. சாதாரண தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, 2025 வரை இணையவழியில் கோரப்படும் என கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்…

  22. Editorial / 2025 செப்டெம்பர் 19 , பி.ப. 06:44 - 0 - 38 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருக்கின்றார். இந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதியும், மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ மஹிந்தவை கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். Tamilmirror Online || மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

  23. இந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை வடிவமைப்புத் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த சீநோர் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றியதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அவ்வளவு தூரம் இந்த நிறுவனம் பிரபல்யமாக இருந்தது. இன்று அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் இந்த நிறுவனம் முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும். இந்த அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற…

  24. 19 Sep, 2025 | 03:12 PM யாழ். நகர்ப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்து நிலையம் அமைத்துத் தருமாறு நாங்கள் யாரிடமும் கோரிக்கை முன்வைக்கவில்லை என தெரிவித்த இ.போ.சபையின் வட மாகாண பிரதிப் பொது முகாமையாளர், எந்த முடிவானாலும், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியே எடுக்க முடியும் என தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (18) யாழ். மாவட்ட செயலகத்தில் துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் வீதி விருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ். நகரை அபிவிருத்தி செய்வதாயின், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நிலையத்தை பிறிதொரு இடத்திற்கு மாற்றவேண்டுமெனக் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெ…

  25. Published By: Digital Desk 1 19 Sep, 2025 | 10:17 AM வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இதய மற்றும் குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வு கூடம் (Cath Lab) இன்று முதல் செயற்பாட்டில் உள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த இதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடம் இன்றைய தினம் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. நெதர்லாந்து அரசின் நிதிப்பங்களிப்போடு இருதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடம் அதற்கான உபகரணங்களோடு அமைக்கப்பட்ட நிலையிலும் மனிதவளப் பற்றாக்குறை காரணமாக இயங்காநிலையில் காணப்பட்டது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்ட குறித்த ஆய்வுகூடம் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.