ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
-தி.இறைவன் (தாயகம்)- சிறிலங்கா வான்படைக்கு கட்டுநாயக்கவில் இரண்டாவது தடவையும் இடி விழுந்திருக்கின்றது. அதேவேளை தமிழ் மக்களிடையே பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் விடுதலைப் போராட்டத்தின் புதிய பாய்ச்சலின் எழுச்சியுமாக உள்ளது. தங்களை அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த நிலையில் தமிழ்மக்களை கொன்றொழித்து வந்த சிறிலங்கா வான்படை தலைமைத்;தளத்தின், கிபிர் மற்றும் மிக் விமானங்களினுடைய தரிப்பிடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை விமானங்கள் தாக்குதலை நடத்தி தளம் திரும்பியுள்ளன. இங்கு இந்த விமானத் தாக்குதலில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது வான்புலிகளினுடைய விமானங்கள் வெற்றிகரமாக தாக்குலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தளம் திரும்பியமை தான். சிறிலங்கா அரச…
-
- 0 replies
- 1.2k views
-
-
கட்டுநாயக்கா தாக்குதலையடுத்து யாழில் படையினர் மத்தியில் கலக்கம். - பண்டார வன்னியன் Wednesday, 28 March 2007 17:00 கொழும்பு அரசின் இதய பகுதியான கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதை அடுத்து யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றும் இன்றும் பரவலாக தமிழ்ப் பத்திரிகைகளை மக்களிடம் படையினர் கேட்டுவாங்கிப் படிப்பதுடன் தமது அச்சநிலையையும் வெளிப்படுத்தி வருவதாக தெரியவருகிறது. தாம் இனி எந்த நேரத்திலும் கொல்லப்பட்டுவிடுவோம் என்ற மனநிலையில் படையினர் மத்தியில் பாரிய அளவில் மனச்…
-
- 5 replies
- 2.8k views
-
-
வியாழன் 29-03-2007 18:19 மணி தமிழீழம் [கோபி] யாழில் மீண்டும் புகைப் படங்களைக் கேட்டு வரும் படையினர் யாழ்ப்பாணம் வலிகாமத்தில் நிலை கொண்டுள்ள 513 இராணுவத்தினரின் சங்கானை சண்டிலிப்பாய் உதவி அரசாங்க அதிபர் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பொது மக்களிடம் குடும்பப் புகைப்படங்களை தங்களுக்கு வழங்கும் படி வலியுறுத்தி வருகின்றார்கள். குறிப்பிட்ட பகுதி உதவி அரசாங்க அதிபர்கள் கிராம அலுவலர்களினால் புகைப்படங்களை உறுதிப்படுத்தி தமக்கு வழங்கும் படியும் தவறும் சந்தர்ப்பத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பயமுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புகைப்பட தாள்கள் பலத்த தட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலமையில் பொது மக்கள் தொழிலும் ப…
-
- 1 reply
- 985 views
-
-
மட்டக்களப்பின்அவலத்தை கூறுகிறார் அரியநேத்திரன் எம்.பி. -ஏ.ரஜீவன்- மட்டக்களப்பு மாவட்டத்தில் கன்னன்குடா, ஈச்சம்பற்று பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அகதிமுகாம்களில் அரை இறாத்தல் பாணை ஐவர் பகிர்ந்து கொள்ளும் பரிதாப நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பிலிப் குணவர்தன மைதானத்தில் புதன்கிழமை காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்ட சத்தியாக் கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். காணாமற் போனோரை தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் கலந்து…
-
- 1 reply
- 909 views
-
-
பத்திரிகை ஆசிரியர்கள் மத்தியில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்திய விமானத் தாக்குதல் பாரதூரமான அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராயிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். விமானப்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து தோன்றியிருக்கும் பாதுகாப்பு நெருக்கடி நிலைவரம் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்களுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அலரிமாளிகையில் விளக்கமளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, `அரசியல் வேறுபாடுகளை அரசியல் களத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்புடன் சம…
-
- 0 replies
- 863 views
-
-
கட்டுநாயக்க விமானப்படைதளம் மீதான விமானத்தாக்குதலை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்டனி வழிநடத்தியுள்ளதாக பாதுகாப்பு படையின் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சிங்கள பத்திரிகையான லக்பிம நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்தசெய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை விமானப்படையினர் தயார்நிலையில் இருக்காததன் காரணமாகவே விடுதலைப்புலிகள், விமானப்படைத்தளம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்லக் கூடியதாக இருந்துள்ளதென முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான விமானத்தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென இலங்கை விமானப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. …
-
- 19 replies
- 5.3k views
-
-
புலிகளின் விமானத் தளத் தாக்குதலுக்கு சர்வதேச ஊடகங்கள் பரந்த பிரசாரம் [29 - March - 2007] கட்டுநாயக்க விமானத் தளத்தின் மீது புலிகள் இயக்கத்தினரின் விமானம் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களுக்குள்ளேயே புலிகள் இயக்கத்தின் இராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் கிளிநொச்சிக் காட்டுக்குள்ளே பதுங்கு குழி ஒன்றிலிருந்து செய்மதி தொலைபேசி மூலம் இந்தத் தாக்குதல் பற்றி ராய்ட்டர் தலைமையகத்துக்குத் தகவல் தெரிவித்ததுடன் இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி பரந்த முறையில் பிரசாரம் செய்யும் படியும் வேண்டிக் கொண்டுள்ளார். இந்தத் தாக்குதல் பற்றி புலிகளின் இணையத் தளமாகிய "தமிழ் நெற்" உடனடியாகவே உலகம் முழுவதும் அறிவித்து விட்டது. தொடர்ந்து ஏ.பி. செய்தி ஸ்தாபனம் (அசோசியேட்டட் பிரெஸ்), சீ.என்…
-
- 12 replies
- 2.8k views
-
-
'கருணா குழுவின் அராஜகங்களை சிறிலங்கா அரசு விசாரிக்கவோ- நிறுத்தவோ முயற்சிக்கவில்லை': மனித உரிமைகள் காப்பகம் சாடல் [வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 18:05 ஈழம்] [க.திருக்குமார்] "சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரின் சிறார் படைச் சேர்ப்பையும், கடத்தல்களையும் விசாரணைகள் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதும், அரசாங்கத் தரப்பு செயற்திறனுள்ள நடவடிக்கைகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என்பதுடன் கருணா குழுவினரின் கடத்தல்களும் தொடர்கின்றன." மேற்கண்டவாறு இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கும் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சிறார்களை படையில் சேர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 638 views
-
-
'''போரா ...சமதானமா..? குழப்பத்தில் மகிந்தா...'' இலங்கை அரசு தனது இழப்புக்களை அவமானத்தை மறைக்க ஒரு பாரிய வலிந்து தாக்குதலை தொடுத்து அதன் ஊடாக வெற்றி செய்தி ஒன்றை சிங்கள மக்களிற்கும் உலகிற்கும் சொல்ல முற்படுகிறது ஆயினும் என்ன யாவும் தோல்வியில் முடிகிறது. கடந்த விமான தாக்குதலை அடுத்து தனது பாதுகாப்பில் பாரிய இடை வெளி உண்டு என்பதை ஒத்து கொண்ட படைகள் அவற்றை நிவர்த்தி செய்ய பாரிய படை கலங்களை வேண்டி குவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன அன்றி உள்ளவற்றை சரியான முறையில் செயற்படுத்த வைத்துள்ளது. ஒட்டு மொத்த ஆக்கிரமிப்பு படைகளின் நிலைகளையும் தற்போது தக்க வைத்து கொள்ள முடியுமா என்ற வினா அரச படை மட்டத்தில் எழுந்துள்ளது. இந்த வினாவிற்க்கு விடையை த…
-
- 1 reply
- 963 views
-
-
புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல் [29 - March - 2007] கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது தாக்குதலை நடத்திய புலிக…
-
- 4 replies
- 1.8k views
-
-
புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல் [29 - March - 2007] [Font Size - A - A - A] கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்கும் இடையே முல்லைக் கடற்பரப்பில் மோதல் ஒன்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. COLOMBO (Reuters) - Sri Lanka's navy said on Thursday it sank three Tamil Tiger boats off the island's northeast coast, killing between 15 and 18 rebel fighters. The attack late on Wednesday off the coast of the rebel-held northeastern district of Mullaithivu is the latest in a rash of land and sea battles after the resumption of a two-decade civil war that has killed around 68,000 people since 1983. "A naval patrol has come across about 10 Tiger boats and our boats launched an attack, and we were able to destroy…
-
- 10 replies
- 3.6k views
-
-
புலிகள் விமானம்-எல்லோருக்கும் ஆபத்து-இலங்கை மார்ச் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றிருப்பதால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளாக இலங்கை அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள், கொழும்பு காட்டுநாயகே விமானப்படை தளம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டு அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்களர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. தாக்குதல் தொடரும் என புலிகள் அறிவித்துள்ளால் கொழும்பு முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக் ஷே தலைமையில், கொழும்பில் அவசர ஆலோசனைக் கூட…
-
- 3 replies
- 2k views
-
-
வீதிக்கடமையில் ஈ.டுபட படையினர் மறுப்பு - படையதிகாரியிடம் வாக்குவாதம். யாழ்ப்பாணம் நுணாவில் 190 கட்டைப்பகுதியில் வீதிப்போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் நிற்க அதிகாரியால் பணிக்கப்பட்ட போது படையினர் அவ் உத்தரவை உதாசினப்படுத்திவிட்டு தமது பாதுகாப்புக் கருதி கண்டிவீதியைவிட்டு விலகி மக்களின் காணிகளில் நின்றிருந்தனர். இதன் போது அவ்வழியாக வந்த படையினரின் சிறிய வாகனத்தொடரணி ஒன்று வீதியினால் வந்தவேளை குறிப்பிட்ட இடத்தில் படையினரைக் காணமையால் அச்சம் அடைந்த நிலையில் சத்தம்போட்டு கூப்பிட்டபோது வளவுகளில் இருந்து படையினர் சிலர் வெளிப்பட்டு உள்ளனர். இவர்களுக்கும் வாகனத்தில் வந்த அதிகாரிக்கும் இடையே பத்து நிமிடங்களுக்கு மேலாக கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் பொதுமக…
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்தியாவினால் வழங்கப்படட் ரேடார்கள் செயல்படாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை : இந்தியா - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 11:06 சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. நேற்று புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தச் சம்பவம் குறித்து நேரடியாகக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்த அவர், இதுபோன்ற தனிப்பட்ட சம்பவங்களை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்வது, மூலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எந்த வக…
-
- 2 replies
- 1k views
-
-
யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜவரை காணவில்லையென முறைப்பாடு. - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 09:47 யாழ். குடாநாட்டில் ஜந்து இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளரென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று குடும்பத்தவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு காணாமல் போனவர்களுள் சோசலிச சமத்துவக்கட்சியின் உறுப்பினர்கள் இருவரும் உள்ளடங்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி வேலணையிலிருந்து புங்குடுதீவு பகுதிக்கென புறப்பட்டுச் சென்றிருந்த நடராசா விமலேஸ்வரன் (27) மற்றும் சிவநாதன் மதிவதனன் (23) ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளனர் இவர்கள் இருவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்களென அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 920 views
-
-
உதட்டளவில் அல்ல, உள்ளத்தளவில் பேச்சுக்கான அர்ப்பணிப்பு அவசியம் ` விடுதலைப்புலிகளோடு சமாதானப் பேச்சுகளை நாளை நடத்தவும் அரசு தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கின்றார். கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் முதல் விமானத்தாக்குதல் நடைபெற்று அடுத்தநாள் இந்தஅறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ""பரந்த பயனுள்ள அமைதியை ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். இதற்காகப் பேச்சு நடத்த வேண்டும், எல்லா வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் என எமது அரசு நம்புகின்றது. பேச்சுக்குப் புலிகள் தயார் என்றால் நாளையே நாம் பேச்சை நடத்தலாம்.'' என்ற சாரப்பட வெளிவிவகார அமைச்சர் கூறியிருக்கின்றார். கட்…
-
- 2 replies
- 1.3k views
-
-
பருத்தித்துறை பல்லப்பை படைமுகாம் இடம்மாற்றம். வடமராட்சி பிரதேசத்தின் பாரிய ஆட்லறி மற்றும் மோட்டார் தளமாக விளங்கிவரும் வல்லிபுரக் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள பல்லப்பை படைமுகாமை மந்திகை மருத்துவமனைச் சுற்றாடலில் மாற்ற படைத்தரப்பு தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற படையினருக்கான விசேட கூட்டம் ஒன்றிலேயே பாதுகாப்புக் காரணங்களுக்காக இம்முகாமை இப்பகுதியிலிருந்து மாற்றவும் படை உயர் அதிகாரிகள் தீர்மானித்து இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் படைத்தரப்பு தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகதாகவும் மந்திகை வைத்தியசாலையையும் அதன் சுற்றாலையும் உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசமாக மாற்றவும் படைத்தரப்பு தீர…
-
- 2 replies
- 1.2k views
-
-
இரு அமெரிக்கப் பிரஜைகள் கைச்சாத்திட்ட அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை [29 - March - 2007] பி.இராமன் அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 (9/11) தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் அப்போது பதவி வகித்த ஜனாதிபதி சந்திரிகா அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷுக்கு அனுப்பிய செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "எமது நாட்டிலுள்ள துறைமுகங்கள் மற்றும் விமான ஓடுபாதைகள் ஆகிய அனைத்து வசதிகளையும் வழங்கத் தயார்" எனத் தெரிவித்திருந்தார். அல்-ஹைதா மற்றும் ஆப்கான் தலிபான் அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின்போது பயன்படுத்துவதற்காகவே இலங்கை வழங்குவதாகத் தெரிவித்த அந்த யோசனையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. 2002ஆம் ஆண்டு மார்ச…
-
- 0 replies
- 718 views
-
-
விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சுக்களை நடத்தாது: பிரதமர் ரட்னசிறீ விக்கிரநாயக்க [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 22:08 ஈழம்] [காவலூர் கவிதன்] நாளை பேச்சை ஆரம்பிக்கவும் அரசு தயாராக இருக்கிறது என்று சிறீலங்கா வெளிநாட்டமைச்சர் ரோஹித போகல்லகம தெரிவித்த மறுநாள், சிறீலங்கா பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்க, அந்த அறிவிப்பை மறுதலிக்கும் வகையில், கருத்து வெளியிட்டுள்ளார். உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரி எழுதிய கடிதத்திற்குப் பதலளித்துள்ள பிரதமர், பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் இணக்கம் காண சிறீலங்கா அரசு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். போர் முனையில் படைகள் பெற்றுள்ள வெற்றிகளை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்…
-
- 9 replies
- 1.7k views
-
-
ஓவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் நாடாளுமன்றத்தை கூட்டமுடியாது: சிறிலங்கா அரசு. சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலமை தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாட்டில் குண்டுகள் வெடிக்கும் ஒவ்வொரு சமயமும் நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியாது என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்கின்றது, இது முழுக்க அரசியல் நோக்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
கொக்கட்டிச்சோலை பகுதியை தாம் கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது http://www.yarl.com/forum3/index.php?showtopic=21337
-
- 18 replies
- 5.2k views
-
-
புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கும் உள்நாட்டுப் போர் [28 - March - 2007] இலங்கையின் சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் முதற்தடவையாக அரசாங்கப்படைகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்திருக்கிறார்கள். நாட்டின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும் விமானப்படையின் பிரதான தளத்தின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்ப பிரதிபலிப்புகளை வெளியிட்டிருக்கின்ற போதிலும், இப்போது உள்நாட்டுப்போர் புதியதொரு கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வடக்கு, கிழக்கில் முப்படைகளும் …
-
- 0 replies
- 953 views
-
-
விடுதலைப்புலிகள் விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியதன் மூலம் அதிரடித்தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்குள்ளது என்பதை அவர்கள் பறைசாற்றியுள்ளனர் என்று இந்தியாவின் முன்னாள் இராணுவத்தலைமை தளபதி ஜெனரல் வி.மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் இராணுவ விமான தளம் மீது முதன்முதலில் விமானத்தாக்குதலை நடத்தியுள்ள விடுதலைப்புலிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். புலிகள் போன்ற இயக்கங்கள் விமானப்படை வைத்திருப்பது என்பது ஆபத்தான முன்னேற்றமாகும். இந்தியாவுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். போராளிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்கு உள்ளது எ…
-
- 2 replies
- 1.4k views
-
-
அவலத்தின் ஊடாக ஓர் அரசியல் நகர்வும், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலும்! சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது, வான்புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடாத்திவிட்டு, பாதுகாப்பாக வன்னிப்படைத் தளத்திற்குத் திரும்பி விட்டதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்கள். சிறிலங்காவைப் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்தத் துணிகரத் தாக்குதல் குறித்து, உலகின் சகல ஊடகங்களும் முதன்மைச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. ஷதமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது| - என்று வெளிநாட்டு ஆய்வாளர்;களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மக்கள் வாழ்விடங்கள்மீது விமா…
-
- 0 replies
- 671 views
-