Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொலிஸாரின் அதிகாரங்களை படையினருக்கு வழங்குவதால் இராணுவ முகாம்கள் சித்திரவதைக் கூடங்களாக மாறும் அபாயம் ! ஆசிய மனித உரிமை ஆணைக்குழு எச்சரிக்கிறது பொலிஸாரின் சட்ட அதிகாரங்களை இராணுவத்தினருக்கும் வழங்கி ஜனாதி பதி அண்மையில் விடுத்த பிரகடனம், மீண்டும் 1980களில் இடம்பெற்றது போன்று படைமுகாம்களை சித்திரவதைக் கூடங்க ளாக்கப் போகிறது. இவ்வாறு எச்சரித்திருக்கிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு. மேற்படி சட்ட நடைமுறைப்படுத்தல் இலங்கை மிகுந்த நெருக்கடிக்கும் இடருக் கும் உள்ளாகிவரும் இச்சமயத்தில், இத்த கைய அதிகாரங்களை படையினருக்கும் வழங்கும் பின்னணியில், இவற்றால் பாதிக்கப்படுவோர் சட்டரீதியாக நிவா ரணம் பெறுவது மேலும் சாத்தியமற்ற தாகிவிடும். 2006ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி விடுக…

  2. பொருள்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள் யாழ். நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் நேற்று பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அத்தியாவசியப் பொருள் களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. வடக்கில் அடுத்துவரும் தினங் களில் யுத்த நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படலாம் என்று செய்தி கள் வெளியாகியதை அடுத்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற் படலாம் என்ற ஊகத்தில் மக்கள் அத்தியவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசி யப் பொருள்களின் விலைகள் திடீ ரென அதிகரித்தன. அத்தியவசியப் பொருள்கள் முடிவடைந்து விட்ட தாக சில வியாபார நிலையங்களில் தெரிவிக்கப்பட்டது. (அ8) நூல் வெளியீட்டு விழா திருமறைக் கலாமன்றத்தைச் …

  3. தமிழீழ வான்படை எமது தேசத்திற்கான ஒரு அங்கீகாரமாகும்: விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ வான்படையானது தமது தேசத்தின் முழுமையான கட்டமைப்பிற்கும் அதன் மீதான அனைத்துலகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து வெளியாகும் 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' என்ற ஆங்கில ஊடகத்திற்கு தொலைபேசியூடாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அரசியல், இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் புதிய எதிர்வுகூறல்களை ஏற்படுத்தியுள்ளது. எங்களிடம் நிலப்பரப்பு, நிர்வாகம், சட்ட…

    • 3 replies
    • 1.1k views
  4. சிறீலங்காவுக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்துக - மனித உரிமை அமைப்புகள் அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் கியூமன் ரைட்ஸ் வோச் மற்றும் அம்னிஸ்ரி இன்ரநசனல் அமைப்பு ஆகியன அமெரிக்க அரசாங்கத்தை சிறீலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகளையும், இராணுவ சாதனங்களையும் வழங்குவதை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன. சிறீலங்கா அரசு சிறுவர்களை படைக்கு இணைப்பதால் குற்றச்சாட்டப்பட்ட மற்றய நாடுகளுடன் சேர்த்து சிறீலங்காவிற்கான உதவிகளை மட்டுப்படுத்தப்படவேண்டும் என கோரியுள்ளன. இதேவேளை சிறுவர்களை படைக்கு இணைப்பதை தடுப்பதற்கு எதிரான 2007 சட்டத்தை அமெரிக்க அரசு செயற்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நாடுகளாக ஆப்கானிஸ்தான், புறூண்டி, சாட், கொலம்பியா…

    • 0 replies
    • 652 views
  5. 10 ஆயிரம் தொண்டர் படையினரை உருவாக்கும் முயற்சியில் சிறீலங்காப் படையினர் சிறீலங்காப் படைகளில் 10 தொண்டர் படையினரை இணைக்கும் முயற்சியில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான நேர்முகம் பரீட்சைகள் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. தொண்டர் படைக்கான ஆட்சேர்ப்புக்கள் அனைத்து படை முகாம்களில் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் இணைத்துக் கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. http://www.pathivu.com/

  6. இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது - பாரதீய ஜனதாக் கட்சி இந்தியா, சிறீலங்காவிற்கு ஆயுதம் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என, பாரதீய ஜனதாக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் செயலாளரும். நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இந்தக் கோரிக்கை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இலங்கைத் தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். http://www.pathivu.com/

    • 4 replies
    • 1.1k views
  7. அநுராதபுரத்தில் எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியது அநுராதபுர விமானப் படைத்தளத்தில் சிறீலங்கா வான்படையினருக்குச் சொந்தமான எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை முன்னிரவு 11.50 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வான்புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதலுக்குச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து வான்புலிகளின் விமானங்களைத் தாக்குவதற்காக அநுராதபுர விமானப் படைத்தளத்திலிருந்து எம்.ஜ 24 ரக யுத்த உலங்கு வானூர்தி புறப்பட்ட வேளை உலங்குவானூர்த்தி ஓடு பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியது. உலங்கு வானூர்திக்கு எவ்வகையான சேதவிபரங்கள் ஏற்பட்டது குறித்து சிறீலங்கா படைத…

  8. இனந்தெரியாத விமானங்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கொழும்பு நகரத்தில் மின்தடையும் சர்வதேச விமானநிலையமும் மூடப்பட்டுள்ளது. http://www.alertnet.org/thenews/newsdesk/COL109803.htm

  9. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளாகியும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்குக் கொண்டு வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேட்டார். சட்டசபையில், நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் பிரபாகரனை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்து 16 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் பிரபாகரனை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பிரபாகரனுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டும் 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள…

    • 17 replies
    • 4.1k views
  10. சென்னை: நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் கிடையாது. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி இன்று பேசினார். அவர் பேசுகையில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு தமிழகத்தைக் களமாகக் கொண்டு செயல்பட ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறி விட முடியாது. வெடிபொருள், இர…

  11. சிறீலங்கா மனித உரிமை மீறல்கள் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அறிக்கை. சிறீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசாரத்திற்கு, பிரித்தானியாவின் மூன்றாவது பெரும் கட்சியான லிபறல் டெமோகிறட்ஸ் என்றழைக்கப்படும் தாராண்மைவாத ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணக் கிறிக்கட் போட்டியில் அனைத்துலக மன்னிப்புச் சபை பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பிரசாரத்திற்கு எதிராக சிறீலங்கா அரசு கருத்து வெளியிட்டு…

    • 1 reply
    • 1.2k views
  12. புலிகளின் அமெரிக்க கிளை தலைவர் திடீர் கைது ஏப்ரல் 26, 2007 நியூயார்க்: விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்கக் கிளையின் தலைவராக கருதப்படும் கருணாநகரன் கந்தசாமி என்பவரை அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் அமெரிக்கப் பிரிவின் இயக்குநராக இருந்து வருகிறார் கந்தசாமி. நியூயார்க்கின் குயீன்ஸ் என்ற பகுதியில் புலிகள் அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார் கந்தசாமி. நிதி திரட்டுவது, வழக்குகளுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை கந்தசாமி கவனித்து வருகிறார். அமெரிக்க அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அதை தடை செய்துள்ளது. இந்த நிலையில், விடுதலைப் புலிக…

    • 8 replies
    • 2.6k views
  13. வத்திக்கான் தூதுவரின் கிழக்கு விஜயத்தின் பின்னணியில் சர்வதேசத்தின் சூழ்ச்சித் திட்டம்? பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரின் இலங்கைப் பிரதிநிதியான மரியா செனாரியோவின் கிழக்கு மாகாண விஜயத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் சர்வதேச ரீதியிலான பிரிவினை வாதத்திற்கு சார்பான சூழ்ச்சித் திட்டம் இருக்கலாமென சந்தேகத்தைக் கிளப்பும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் மனிதாபிமான ரீதியாக இவ்விஜயம் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மத ரீதியானதாக இருக்குமானால் அதனை எதிர்க்கின்றோம் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; இனம், மதம், மொழி பேதமின்றி மக்கள் மீது அன்பு…

  14. கட்டுநாயக்கா மீதான முதலாவது தாக்குதல் வழக்கில் மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை கட்டுநாயக்க விமான நிலையம் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமறு கொழும்பு மேல் நீதிமன்றம் மூவருக்கு நேற்று புதன்கிழமை அழைப்பாணை பிறப்பித்தது. புலிகளால் 2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இவ்வழக்கின் எதிரிகள் ஐவரில் ரட்ணசிங்கம் புஸ்பகுமார், விக்டர் அல்பிரட் டொமினிக், சுப்பிரமணியம் தவராசசிங்கம், நாகேந்திரம் நாகேந்திரகுமார் ஆகியோர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். ஐந்தாவது எதிரியான த. ஜெயலெட்சுமி தலைமறைவாகியிருக்கிறார் …

    • 1 reply
    • 1.7k views
  15. பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு பெரும் அநீதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக தமிழ், முஸ்லிம் மாணவர் தரப்பில் குற்றச் சாட்டுக்கள் கூறப்படுகிறதேயென அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து உயர்கல்வி பிரதியமைச்சர் மேலும் தகவல் தருகையில்; பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் அதிகாரம் ஒரு தனி நபரிடமே காணப்படுகிறது. அவர் தான் விரும்பியவாறு செயற்படுகிறார். பல்கலைக்கழக மாணவர் அனுமதி தொடர்பாக எத்தகைய முறைகேடுகளும் இல்லையென்றால் ஏன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி தொடர்பான விபரங்களை வெளியிட மறுக்கிறது? அந்த அடிப்படையில் எந்தப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்…

  16. கொழும்பில் நேற்றிரவு கடும் மின்னலால் நான்கு இடங்களில் தீ விபத்துகள் [26 - April - 2007] - கே.பி.மோகன் - கொழும்பில் நேற்று புதன்கிழமை இரவு மழையுடன் கூடிய கடும் மின்னல் தாக்குதலால் நான்கு இடங்களில் தீ விபத்துச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். வீடுகள் மூன்றிலும் கடையொன்றிலுமே இத்தத் திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன் தீயணைப்பு படையினர் உடன் அந்த இடங்களுக்குச் சென்று தீயை கட்டுப்பதுத்தியுள்ளனர். கொழும்பு புஞ்சி பொரளை, கொட்டாஞ்சேனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளிலேயே மின் ஒழுக்கு காரணமாக வீடுகளில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. பஞ்சிகாவத்தையில் கடையொன்று தீப் பற்றி எரிந்துள்ளது. இந்த நான்கு சம்பவங்களும் மழை பெய்து கொண…

  17. தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய தீர்வு யோசனையை முன்வைத்தால் புலிகளை பலவீனமடையச் செய்யலாம் [26 - April - 2007] -சோசலிச மக்கள் முன்னணி தெரிவிப்பு -டிட்டோகுகன்- இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைத்து விடுதலைப் புலிகளை அதனுள் சிக்கவைக்கும்போதே, அவர்களை ஆயுதங்கள் மூலமும் பலவீனமடையச் செய்ய முடியுமென சோசலிச மக்கள் முன்னணி சுட்டிக் காட்டுகிறது. லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை மக்கள் கட்சி உட்பட 5 கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் சோசலிச மக்கள் முன்னணி நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் விதாரண …

  18. 17 தன்னார்வ பணியாளர் படுகொலை விவகாரத்தில் ஐ.நா.வின் தலையீட்டுக்கு இடமளிக்க போவதில்லை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறுக்கீடு செய்யவோ அந்த விசாரணைகளை வேறொருவருக்கு ஒப்படைக்கவோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொள்ளுப்பிட்டி கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; தன்னார்வ நிறுவன ஊழியர்கள் (அக்ஷன்பாம்) 17 பேர் படுகொலை சம்பந்தப்பட்டமை தொடர்பான சுயாதீன விசாரணைகளுக்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு நிஸங்க உதலாபிட்டிய தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று …

  19. மறுக்கப்பட்ட உரிமைகளை தமிழருக்கு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை' [26 - April - 2007] * பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட வேண்டும் ஜே.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. அது அழித்தொழிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச, இன,மத, ரீதியாக நாட்டை துண்டாடும் நிபுணர்களின் யோசனைகளால் உண்மையான சமாதானத்தை அடைய முடியாதென்றும் தெரிவித்தார். "சமாதான முன்னெடுப்புக்கான வர்த்தக முயற்சி என்ற தலைப்பில் " வர்…

  20. ஜனாதிபதி, மங்கள சமரவீர நீண்ட நேரம் பேச்சுவார்த்தை -அமைச்சரவையில் மீண்டும் இணையும் சாத்தியம்? [26 - April - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா , ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 3 மணித்தியாலங்கள் நீடித்த இக்கலந்துரையாடலில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் மங்கள சமரவீர இச்சந்திப்பை அடுத்து மீண்டும் அமைச்சராவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரம…

  21. அடையாளம் காணப்படாத நிலையில் வவுனியா ஆஸ்பத்திரியில் 3 சடலங்கள் கோவில்குளம் வீதியில் சிவன்கோவிலுக்கு சற்று தொலைவில் கடந்த திங்கள் காலை கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம் சுமார் 25 இற்கும் 30 வயதிற்கும் உட்பட்டவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். சடலத்திற்கு உரிமை கோரி எவரும் வரவில்லை என வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை வவுனியா முதலாம் குறுக்குத் தெருவிலும், கண்டி வீதியிலும் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களிற்கும் எவரும் உரிமைகோரி வரவில்லை. வயோதிபர்களான இவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளனர். ஆனால் சடலங்கள் அனாதவரான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மூன்று சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்…

  22. [ராஜபக்‌ஷ சகோதரர்களை பாதுகாக்கும் சுவரொட்டிகள் இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்கள் தலைநகரில் ராஜபக்ஷ சகோதரர்களை பாதுகாப்பதற்கான சுவரொட்டிகளை ஒட்டி வருவதாகத் தெரிவித்த கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவர்கள் உண்மையிலேயே படை வீரர்களாக இருப்பார்களானால் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்காக கூஜா தூக்காமல் தேசத்தின் பாதுகாப்புக்காகப் பாடுபட முன்வருமாறு கோரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை அவர் குறிப்பிட்டார். லக்ஷ்மன் கிரியெல்ல தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது; "கடந்த சில தினங்களாக தலைநகரில் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷவை பா…

  23. மனிதநேயப் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் தலையிட ஐ.நா. செயலாளரிடம் கோரிக்கை மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் முறையீடு கொழும்பு, ஏப்.26 கிழக்கில் பணியாற்றும் மனிதநேய அமைப்புகளின் இணையத்தின் உறுப்பினர் களுக்கும் ஐ.நா. முகவர் அமைப்புகளின் அலுவலர்களுக்கும், கருணா தலைமையி லான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டி ருப்பதாகத் தெரிவித்து, இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு ஐ.நா. செய லாளர் நாயகம் பான் கீன் மூனைக் கோரி யிருக்கின்றது மனித உரிமைகளுக்கான ஆசிய மையம். மனிதநேயப் பணியாளர்களுக்கும், ஐ.நா. முகவர் அமைப்புகளின் அலுவலர்களுக் கும் ஏப்ரல் 17 ஆம் திகதியும், ஏப்ரல் 20 ஆம் திகதியும் அச்சுறுத்தல் விடுக்கும் "ஈ மெயில்' செய்திகள் இரண்டை கருண…

  24. கிளிநொச்சியில் பாரிய குண்டு வீச்சு Written by Ramanan - Apr 26, 2007 at 09:52 AM கிளிநொச்சி மாவட்டம் திருவையாற்றுப் பகுதி மீது இன்று காலை 7.00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் குண்டு வீச்சை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா வான்படையின் மூன்று தாக்குதல் வானூர்திகள் திருவையாற்றுப் பாடசாலையில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் 12ற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளன. இதன் காரணமாக வீடு ஒன்று முற்றாக அழிந்துள்ளதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் காரணமாக பொதுமக்களிற்கு சேதங்கள் எதுவும் ஏற்படாதபோதும் குறித்த பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது. சங்கதி

    • 4 replies
    • 1.7k views
  25. வெசாக் தினங்களில் புலிகள் தாக்கலாமாம்! மக்களை எச்சரிக்கிறார் இராணுவப் பேச்சாளர் கொழும்பு,ஏப்.26 வெசாக் தினங்களில் புலிகள் பொதுமக்கள் மீது தாக் குதல் நடத்தக்கூடும் என்றும் இது தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் இராணு வப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று எச்சரித்தார். புலிகள் கடந்த காலங்களில் பொதுமக்கள் மீது தாக் குதல்களை நடத்தியுள்ளனர். அதேபோல் புதுவருட நாட்களிலும் தாக்குதல் நடத்த முற்பட்டனர். மக்கள் விழிப்பாக இருந்ததனால் புலிக ளால் தாக்குதல் நடத்த முடியாமற்போனது. ஆனால் எதிர் வருகின்ற வெசாக் தினங்களில் மே மாதம் 1ஆம் 2ஆம் திகதி களில் கொழும்பில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவர். அவர்கள் மீது அநேகமாகப் புலிகள் தாக்குதல் நடத்த லாம். மக்கள் விழ…

    • 5 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.