Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை எண்ணை வளத்தை குறி வைக்கும் அமெரிக்கா கொழும்பு: இலங்கையில் அபரிமிதமாக உள்ள இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் குறி வைத்து, அந்த நாட்டுக்கு அமெரிக்க அரசு ரூ. 5.1 கோடி நிதியுதவியை அளித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் மற்றும் இலங்கை நிதித்துறை செயலாளர் ஜெயசுந்தரா ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் வளத்தை பெருக்கவும், அதைப் பாதுகாக்கவும், அதுதொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் இந்தி நிதி பயன்படுத்தப்படும். நிகழ்ச்சியில் ராபர்ட் பிளாக் பேசுகையில், இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வள ஆய்வுக்கு உதவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இங்கு இருக்கும் எரிவாயுவை முறையாக பயன்படுத்தினால், வெ…

  2. 15/03: இது புதுக்கதை... (?) திருச்சியில் பிடிபட்டவர் புலிகளின் தளபதி! திருச்சி: திருச்சியில் சமீபத்தில் கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் ராகுலன், விடுதலைப் புலிகள் அமைப்பின் மன்னார் மாவட்ட கடற்படைத் தளபதி என்பது தெரிய வந்துள்ளது. திருச்சியில் சமீபத்தில் அருள்சீலன் என்ற இலங்கைத் தமிழரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்க இந்தப் பணம் தனக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியில் தங்கியிருந்த ராகுலன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூரில் புலிகளுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த …

    • 0 replies
    • 875 views
  3. கரை ஒதுங்கிய ஆணின் சடலம். - பண்டார வன்னியன் Thursday, 15 March 2007 10:10 யாழ்ப்பாணம் தீவுப் பகுதியான புங்குடுதீவுக் கடற்கரைப் பகுதியில் கைகள் கட்டப்பட்டநிலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க இச் சடலம் 4,5 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டு உரைப்பையில் கட்டப்பட்டு இந்த உடலம் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. சங்கதி.கொம்

  4. மிக்27 ரக யுத்த விமான கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் - 600 மில்லியன் ரூபா ஊழல் இடம் பெற்றுள்ளது மிக்27 விமான கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளமையினால் அது குறித்து விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் , ஸ்ரீபதி சூரியாராச்சியும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு நேரடியாக விஜயம் செய்த இருவரும் யுத்த விமானங்கள் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து முறைப்பாட்டினை தெரிவித்ததுடன் அதற்கான சில ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவிக்கையில்…

  5. மட்டக்களப்பின் மனிதப் பேரவலம் [15 - March - 2007] இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே மூண்டிருக்கும் மோதல்களின் விளைவாக கடந்த வாரத்தில் இரு தினங்களில் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். தங்களின் உடைமைகள் சகலதையும் கைவிட்டு கையில் அகப்பட்டதை மாத்திரம் எடுத்துக் கொண்டு உடுத்த உடையுடன் ஓடி வந்திருக்கும் இந்த அப்பாவிகள் பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடி தோன்றியிருக்கிறது. கடந்த பல மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் மோதல்கள் மூண்ட வேளைகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இ…

  6. யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து புதிய ரக தற்கொலை அங்கி மீட்பு ஜறுநனநௌனயல ஆயசஉh 14 2007 10:45:43 யுஆ புஆவுஸ ஜயேககநடஸ யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் புதிய ரக அங்கியொன்றை கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்துஇ இராணுவத்தினரால் இந்த அங்கி மீட்கப்பட்டதாக அவர் கூறினார். தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வழமையான அங்கியுடன் ஒப்பிடுகையில் இது மாறுப்பட்டதாக இருக்கின்றதாகவும்இ இந்த அங்கியில் குண்டுகள் சிறிய பெல்டில் நிரப்பப்பட்டிருந்தாகவும் அவர் கூறினார்.

    • 6 replies
    • 2.6k views
  7. இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிக்கல பகுதியில் மூன்றாவது நாளாகவும் இலங்கை விமானப்படையினர்இ விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை நேற்றும்இ நேற்று முந்தினமும் இவ்வாறு இலங்கைப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில்இ விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை மட்டக்களப்பு நகருக்கு மேற்காக இடம்பெறுகின்ற மோதல்களால் இதுவரை சுமார் நாற்பதினாயிரம் பேர்வரை இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான அகதிகள் இடப்பெயர்வால் அங்கு ஏற்பட்…

    • 0 replies
    • 878 views
  8. சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் இருந்து பொது மக்களை கருணா குழுவினர் கடத்திச் செல்வதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவத்ததாவது: அரசியல் வேலைகள் தவிர்ந்த கருணா குழுவினரின் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பான மு…

    • 5 replies
    • 1.3k views
  9. - கொலை செய்ய கொண்டு சென்று 50 நாட்களின்பின்னர் விடுதலையான பிரித்தானிய தமிழன் தகவல். புதன்கிழமை 14 மார்ச் 2007 பா.சிவரஞ்சன் கொலை செய்ய 38 தமிழ் இளைஞர்கள் தயார் நிலையில் உள்ளனர் தேவை ஏற்படும்போது சிலர் கொண்டு சென்று கொல்லபட்டு வீசப்படுகின்றனர். இன்னும் 38 தமிழர்கள் அடைத்து வைக்கபட்டுள்ளனர். இலங்கை அரசின் விசேட பிரிவினரே இதை செய்கின்றனர். இவர்கள் விடுதலை செய்யபடுவார்களா என்று தெரியாது தடுத்து வைக்கபட்டிருக்கும் இடம் விபரிக்கமுடியாத பயங்கரமான குகைபோண்றது. இராணுவத்தினதும் பொலிசாரினதும் விசேட பாதுகாப்புகள் அந்த கட்டித்திற்கு இருக்கின்றது. ஒவ்வொரு தமிழனும் இவர்களை மீட்க போராடுங்கள் நான் இறந்துவிட்டதாகவே கருதி இருந்தேன் பிரித்தானிய உளவுத்துறையினதும் தமிழ் நண்பர்கள் சிலர…

  10. ஈ.பி.டி.பினரால் சந்தை குத்தகைகாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள சந்தை குத்தகைகாரார்கக்கு ஈ.பி.டி;பி.யினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக சந்தை உரிமையாளர்களின் வீடுகளுக்கு இராணுவம் பொலிசுடன் சென்று அவர்களை துப்பாக்கி முனையில் எச்சரித்து வருகின்றனர். குறிப்பிட சந்தைக் குத்தகையை விடவேண்டும் மற்றும் சந்தையில் குத்தகைப் பணம் அறவிடுவதை குறைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளதுடன், உடனடியாக சந்தைகளில் ஈ.பி.டி.பி யின் வேண்டுதளுக்கு அமைவாக சந்தைக்குத்தகைப் பணம் விற்பனையாளர்களிடம் இருந்து அறவிடப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாக விளம்பரப்பலகை போட வேண்டும் எனவும் எச்சரித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை மேற் கொள்ள தவறும் ச…

  11. வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம ஐ நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜறுநனநௌனயல ஆயசஉh 14 2007 10:43:00 யுஆ புஆவுஸ ஜஎசையமநளயசi.டமஸ சகல தரப்பிரனதும் யோசனைகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் இனப்பிரச்சினைகு தீர்வு காணும் என வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளிற்க்கான விஜயம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பன்கி மூனை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளனர். இதன் போது இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைகளிற்கு தீர்வுகாண்பதற்கும் எடுக்கப்படும் அரசியல் தீர்வுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐ.நா செயலாளருக்கு விளக்கியுள்ளார் மேலும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெ…

  12. சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறை மீது தொண்டர் நிறுவனம் குற்றச்சாட்டு கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறுவனமான அக்சன் எகென்ஸ் ஹங்கர் நிறுவனத்தின் பணியாளர்களின் படுகொலை தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் நீதிபதியின் உத்தரவுகளை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை உதாசீனம் செய்து வருவதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அந்த நிறுவனம் விடுத்துள்ள தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: எல்லா சாட்சியங்களும் விசாரிக்கப்பட வேண்டும், சட்டப்பூர்வமாகவும், பாதுகாப்பாகவும் அவைகள் நீதிமன்னறத்தில் சமர்ப்பிக்கப்பவும் வேண்டும். நாம் சிறிலங்காவின் சட்டங்களுடன் ஒத்துப்போகிறோம், குற்றப்புலனாய்வுத்துறையினர

  13. இடப்பெயர்வால் மட்டக்களப்பில் 23,000 மாணவர்களின் கல்வி பாதிப்பு: 108 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் இடப்பெயர்வுகளால் அங்கு இருபத்துமூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து இடம்பெயர நேர்ந்ததால் அந்தப் பகுதிகளில் 92 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அத்தோடு, இவ்வாறு இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்ற மக்கள், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதிகளில் மேலும் 18 பள்ளிக்கூடங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

    • 0 replies
    • 543 views
  14. இலங்கை கடற்படை சுட வேண்டிய அவசியம் இல்லை; வக்காலத்து வாங்கும் ஏ.கே.அந்தோணி டெல்லி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட வேண்டிய காரணமோ, அவசியமோ இல்லை என்று கூறியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து லோக்சபாவில் நேற்று தமிழக எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசியது. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. …

    • 17 replies
    • 3k views
  15. கடத்தப்பட்ட 7 உறுப்பினர்களும் உயிரிழந்து விட்டனர்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 15:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29, 30 ஆம் நாட்களில் கடத்தப்பட்ட 7 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் உயிரிழந்து விட்டதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது. இவர்கள் பொலநறுவ மாவட்டம் வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டிருந்தனர். இதனை இன்று புதன்கிழமை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களான தம்பிராசா வசந்தராசா சண்முகநாதன் சுஜேந்திரன் கைலாசபிள்ளை இரவீந்திரன் …

  16. யாழில் தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தல். மல்லாகப் பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து வெளியில் சென்ற இவர் இனம் தெரியாத ஆயுதாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் 22 அகவையுடைய அப்துல்கலாம் சுவைதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  17. 'மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் போராளிகள் தான்': வெ.இளங்குமரன் "மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் ஒரு வகையில் இனப்பற்றுக் கொண்ட போராளிகள் தான் அவர்கள் பேனா தூக்குகின்ற போராளிகள் நாங்கள் துப்பாக்கி தூக்குகின்ற போராளிகள்". கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளிநொச்சி தமிழ்ச் சங்க பணிமனையின் திறப்பு விழாவில் தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர் வெ. இளங்குமரன் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தனது சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறப்பாக, கொண்ட குறிக்கோளோடு அவற்றை கடைப்பிடிப்பதில் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து மற்றவர்களின் கருத்துக்களை விட தம் குறிக்கோளே முதன்மையானது எனக்கர…

  18. அமெரிக்கா - இலங்கை ஒப்பந்தத்தின் இரகசியம் [14 - March - 2007] ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஷ்ரீலங்காவுக்கும் இடையில் அண்மைக்காலமாக அதிகரித்து வந்துள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொடர்புகளை உறுதிசெய்யும் வகையில் இரண்டு நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேரடியான யுத்த உதவிகளை வழங்கும் ஒப்பந்தமாக இல்லாது ஷ்ரீலங்கா படையினருக்கு அவசரமாகத் தேவைப்படும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிப் பொருட்களையும் வழங்குவதாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அத்தியாவசிய வழங்குதல்களும், பரஸ்பர சேவையும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்த…

    • 3 replies
    • 1.7k views
  19. புலிகளிற்கு எதிராக ஆரம்பித்துள்ள படை முன்னர்வுகள் இன்னும் 3 வருடங்களிற்கு முகம் கொடுக்க வேண்டுமென அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது இராணுவத்தினர் விடுதலைப்புலிகளிற்கு எதிராக ஆரம்பித்துள்ள புதிய படை முன்னர்வுகள் இன்னும் 3 வருடங்களிற்கு முகம் கொடுக்க வேண்டுமென பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்குள் இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை துரத்தி விடுவார்கள் எனின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரை இடம்பெ ற்ற மோதல்களிற்கு அரசியல் தீர்வு மூலம் சமாதானத்தை கொண்டு வர முயற்சிகின்றனர் என அவ் அதிகாரி மேலும் தெரிவித்தனர். http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews …

  20. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கருணா குழுவினர்: அனைத்துலக மன்னிப்புச் சபை சிறிலங்காவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயற்பட்டு வரும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர், புதிதாக இடம்பெயர்ந்து வரும் மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்குள் நடமாடுவதுடன் மக்களையும் கடத்தி வருவதாக அம்னஸ்டி இன்டர்நசனல் எனப்படும் அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. கருணா குழுவினரின் நடவடிக்கைகளை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுப்பதற்கு அரசாங்கம் இயன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த வாரம் முதல் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளினால் மட்டக்களப்பு, தி…

  21. ஓமந்தையில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரின் பிறகேட் தலைமையகம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாக சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை இரவு 11 மணி தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது படை தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளாதகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  22. 5 ஆயிரம் மலையக இளைஞர்களை இணைக்கும் விடுதலைப் புலிகளின் திட்டம்: சிங்கள நாளேடு [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரிவுகளில் நிலவும் ஆட்பற்றாக்குறை காரணமாக மலையக இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ளும் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் கடற்புலிகள் பிரிவு ஆகியவற்றில் ஆட்பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் மலையகப் பகுதிகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களை அனுப்பி அதன் ஊடாக உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள விடுதலைப் புலிகள் வகுத்துள்ள த…

  23. மவ்பிம பத்திரிகையின் கணக்குகளை அரசாங்கம் முடக்கியுள்ளது விமான சேவைகள் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் டிரான் அலஸின் தலைமையின் கீழ் இயங்கிவரும் மவ்பிம பத்திரிகையின் கணக்குகளை அரசாங்கம் முடக்கியுள்ளது. மவ்பிம பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளமையினால், ஊடக அமைப்புக்கள் பல தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. மவ்பிம பத்திரிகையின் கணக்குகளை முடக்கியதற்கான காரணத்தை அரசாங்கம் கூறவில்லையெனவும், இப்பத்திரிகைக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைள் அனைத்தையும் கண்டிப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது

    • 0 replies
    • 661 views
  24. பல்குழல் எறிகணைத் தாக்குதலை உடன் நிறுத்துக: நோர்வேத் தூதுவரிடம் த.தே.கூ வலியுறுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கரைச் சந்தித்து மட்டக்களப்பு நிலைமைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர். சந்திப்பில் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் தமிழ் மக்கள் சந்தித்துள்ள அவலங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படையினால் கடந்த 5ம் நாள் தொடக்கம் படுவான்கரை மற்றும் எழுவான்கரை நோக்கித் தொடர்ச்சியாக ஏவப்படும் பல்குழல் எறிகணை வீச்சுக்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நோர்வேத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இன்றைய சந்திப்பின் போது மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்…

    • 0 replies
    • 732 views
  25. சிறீசண்முகா இந்து மகளிர் கல்லூரி காவலாளி கருணா கூலிக்குழுவால் தாக்கப்பட்டுள்ளார் திருமலை நகரில் உள்ள சிறீசண்முகா இந்து மகளீர் கல்லூரியின் இரவு நேரகாவலாளியை பாடசாலைக்கட்டத்திற்குள் நேற்று இரவு உட்புகுந்த கூலிக்குழு ஆயுததாரிகளால் பாடசாலைக்கட்டட கதவுகளை உடனடியாக திறக்கக்கோரி கூச்சலிட்டு திறக்க தாமதித்த காரணத்தால் அவர் அக்கூலிக்குழுவால் நையப்புடைக்கப்பட்டார். இதன்போது தாக்கிபடுகாயமடையச் செய்யப்பட்டவர் நாகரத்தினம் என தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.