ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக அடேல்? அண்மையில் காலமான விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசாங்க தரப்பிலிருந்து விடுதலைப்புலிகள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்திற்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பணியை அடேல் சிறப்பாக மேற்கொள்வாரென புலிகள் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. தமிழ் மக்களின் போராட்டத்துடனும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் நீண்டகால தொடர்புவைத்துள்ள அடேல், தமிழீழ விடுதலைப்புலிகள் …
-
- 13 replies
- 3.9k views
-
-
வீதி அபிவிருந்தி அதிகாரசபை ஊழியர்கள் மூவர் கடத்தல் - நால்வர் சுடப்பட்டு படுகாயம். வவுனியா மாவட்டம், உயிலங்குளம் பகுதியில் வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள் நால்வர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுப் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். தனியார் ஊர்தி ஒன்றில் குறித்த பணியாளர்கள் வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மகிழுந்து ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இவர்களின் ஊர்தியை வழிமறித்துள்ளனர். முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இவ்வூர்தியின் ஓட்டுனரை செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் ஆயுததாரிகளின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற நான்கு ஊழியர்கள் சுடப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டனர். ஏனைய மூவரும் கடத்திச்…
-
- 2 replies
- 1k views
-
-
நிதி வழங்கும் உலக நாடுகளை ஏமாற்றுகிறது சிறிலங்கா: இளந்திரையன் குற்றச்சாட்டு பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப் புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்முரசிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 646 views
-
-
அடுத்த கட்டமாக மட்டக்களப்பின் மேற்கு பக்கமாக தாக்குதல் நடவடிக்கை செவ்வாய் 23-01-2007 07:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] வாகரையில் முன்னெடுக்கப்பட்ட படையெடுப்பு,அடுத்த கட்டமாக தமிழீழ விடுடுதலைப்புலிகளின் ஆளுகைக்கு கீழுள்ள, மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு பீரதேசங்களை நோக்கி தொடுக்கப்படும் என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று ரொய்டர் செய்திச் சேவைக்கு செவ்வியளித்திருக்கும், சிறீலங்கா பாதுகாப்புத்துறை பேச்சாளர் அமைச்சர் கெஹெலலிய ரம்புக்வெல, வாகரைக்கு அடுத்ததாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழுள்ள தொப்பிக்கல் காட்டுப்புறத்தை நோக்ககி, வலிந்த படையெடுப்பை படையினர் தொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
- 1 reply
- 1.1k views
-
-
புதன் 24-01-2007 01:27 மணி தமிழீழம் [மோகன்] உடுப்பிட்டியில் இளைஞர் சுட்டுக்கொலை இன்று முற்பகல் 11 மணியளவில் வடமராச்சி உடுப்பிட்டி பகுதியில் இளைஞர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் இன்னமும் இனம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com
-
- 0 replies
- 772 views
-
-
கைது செய்யப்பட்ட 571 பேரின் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் திரட்டியுள்ளது வீரகேசரி நாளேடு சர்வதேச செஞ்சிலுவை குழுவானது பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்ட 571 பேர் தொடர்பான தகவல்களை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சேகரித்துள்ளது. அத்துடன் இக்குழு காணாமல் போனதாக அல்லது கைது செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட 334 பேர் தொடர்பிலும் விபரங்களைத் திரட்டியுள்ளது. மேலும் சிறுவர்களை படைகளில் சேர்ப்பது தொடர்பாக 199 முறைப்பாடுகளும், மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக 81 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறுமாத காலப்பகுதியில் யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலை, கந்தளாய், கிண்ணியா மற்றும்…
-
- 0 replies
- 892 views
-
-
-
காங்கேசன்துறைக்கு செல்ல இருந்த படைகளிற்கான வழங்கல்களை தடுக்க முயற்சி? http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20990
-
- 78 replies
- 17k views
-
-
நாட்டில் முழு அளவிலான போர் தொடங்கி விட்டது. சமாதானமென்பது இனி சாத்தியமற்றதென்ற நிலையில் போர் தீவிரமடையப் போகின்றது. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக அப்புறப்படுத்தப் போவதாக அரசும் படைத்தரப்பும் சூளுரைத்து வருகையில் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. வடக்கு- கிழக்கு மாகாணத்தை வெவ்வேறாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு தீட்டிய அன்றே, கிழக்கில் தமிழர் பலத்தை வெகுவாகக் குறைத்து விட வேண்டுமென்றும் திட்டமிடப்பட்டது. கிழக்கை தனியாகப் பிரித்து அங்கு புதிய மாகாண சபையொன்று அமைக்கப்படும் போது அந்த மாகாண நிர்வாகத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாதென்பதில் அரசு மிகவும் கவனமாயிருந்தது. கிழக்கில் தமிழ் பேசுவோரின் பலத்தை இழக்கச் செய்வதன் மூலமே அங்கு சிங்கள ஆதிக…
-
- 1 reply
- 1.6k views
-
-
சாவகச்சேரியில் குண்டுவெடிப்பு: 2 பொதுமக்கள் பலி- 10 பொதுமக்கள் படுகாயம். யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி சந்தையில் விற்பனை கொள்வனவுக்காக மக்கள் கூடிநின்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவ இடத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோர் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். -Puthinam-
-
- 11 replies
- 2.4k views
-
-
வாகரை வெற்றியை அடுத்து கெயஹலிய இறுமாப்பு உடன் பேச்சுக்கு வாருங்கள் இல்லையேல் சண்டைதான் புலிகளுக்கு அரசு எச்சரிக்கை கொழும்பு, ஜனவரி 23 "மோதல்களை நிறுத்தி பேச்சு மேசைக்குத் திரும்புவதற்கு புலிகள் விரைந்து உடன்பட வேண்டும். இல்லையேல் மேலும் மோசமான சண்டைக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்." இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது இலங்கை அரசு.வாகரையைக் கைப்பற்றிய இராணுவ வெற்றியை அடுத்து இலங்கைப் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, இறுமாப்புடன் இவ்வாறு அறிவித்தார். இத்தகவலை "ரோய்ட்டர்' செய்தி நிறுவனம் வெளியிட்டது. நைந்து போயுள்ள 2002 ஆம் ஆண்டின் யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் விடுதலைப் புலிகளின் கட்…
-
- 3 replies
- 2k views
-
-
ஐந்தாண்டுகள் பூர்த்தியாவதற்குள் போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்யவும் - ஜனாதிபதியிடம் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வேண்டுகோள். தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின்போது ஒன்றியத்தின் சார்பில் பிக்குமார்களான பெங்கமுவே நாலக தேரர், தம்பர அமில தேரர், ஓமாரே கஸ்ஸப்ப தேரர் மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர, விமல் வீரவன்ச எம்.பி., சிரேஷ்ட சட்டத்தரணியான எஸ்.எல்.குணசேகர போன்றோர் கலந்துகொண்டனர். இதன்போது, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் அரசின் எதிர்கால அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டதாக ஜனாதிபதி செயல…
-
- 21 replies
- 4.1k views
-
-
அன்பு உறவுகளே! இச்செய்தி முக்கியமாக லண்டன் கனடாக்காரர்களுக்கு பிரத்தியோகமான வேண்டுகோளாகும். தற்சமயம் எங்கள் நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு ஐக்கியநாடுகள் சபையே உலகநாடுகளிடம் விடுத்திருக்கும் வேண்டுகோளே இலங்கை அகதிகளிடம் கருணைகாட்டுங்கள் என்பதுதான். இதற்கு அவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? இவர்களால் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க கஸ்டமாக இருக்கிறது. குற்றசெயல்களில் முன்ணணியிலிருக்கிறார்கள். எம்மவர்கள் மீது அவர்களிடம் இருக்கும் ஆதாரம் தற்போது உலகவலைப்பின்னலாக நடக்கும் தொழில் வங்கிஅட்டைகள்,போலிஅரச ஆவணங்கள்தயாரித்தல், கோஸ்டி மோதல்கள் (இது சம்பந்தமாக கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவரொருவர் புலனாய்வுபணியகத்தில் தொழில்புரிவதாகவும் ஒரு தகவல். …
-
- 4 replies
- 2.2k views
-
-
செவ்வாய் 23-01-2007 13:41 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியாவில் 3 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள், 4 பேர் காயம் வவுனியாவில் வீதி அபிவிருத்தி சபை ஊழியர்கள் மீது இனம்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிபிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர் இதேவேளை வவுனியாவில் தனியார் வாகனம் ஒன்றில் பயணம் செய்த மூவர் காலை 8 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்கள். மகிளுர்தியில் சென்ற ஆயுததாரிகள் குறிப்பிட்ட வாகனங்தை தடுத்து நிறுத்தி அந்த வாகனத்தின் முஸ்லீம் வாகனசாரதியை விடுவித்தபின் வாகனத்தில் சீருடையணிந்த 7 பேரையும் கடத்த முயன்ற போது தப்பியோட எத்தனித்த 4 பேரும் காயங்களுக்கு உள்ளகியுள்ளதாகவும் ஏனைய மூவரையும் கடத்தில் சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை காயமடைந்தவர்கள் வவுனியா வ…
-
- 0 replies
- 782 views
-
-
வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, மீளக் குடியமர்த்தக்கூடியோரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை விரைந்து உடனடியாக சமர்ப்பிக்கும்படி யாழ்ப்பாணம் அரச அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலிகாமம் வடக்குப் பிரதேச விவசாயிகள் இருவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இப்படி உத்தரவு பிறப்பித்தது. வலிகாமம் வடக்கில் பெரும் நிலப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் பாரம்பரிய பூமியிலிருந்து விரட்ட…
-
- 0 replies
- 786 views
-
-
சிறிலங்கா அரசின் மோசடி நாடகம்! சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பலவிதமான பரப்புரைகளை மேற்கோண்டுவருகிறது. இந்தப் பரப்புரைகள் பொய்யும், மோசடியும் நிறைந்தவைகளாக காணப்படுகின்றன. ஆயினும் சில சர்வதேச ஊடகங்கள் சிறிலங்கா அரசின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு வருகின்றன. தற்பொழுது சிறிலங்கா அரசு மீண்டும் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. நேற்று (21.01.07) சிறிலங்கா படைகளினால் கைப்பற்றப்பட்ட 4 விடுதலைப்புலிகளின் உடல்களோடு, ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டதாகவும், அக் கடிதத்தில் விடுதலைப்புலிகள் தன்னை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாக எழுதப்பட்டிருப்பதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது. அத்துடன்…
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களை அழிப்பது தான் என்பதை சிங்கள் தேசம் மீண்டும் ஒரு முறை நடைமுறைப்படுத்தத்தொடங்கி விட்டது என்பது உறுதியாகியுள்ளது. இதன் வெளிப்பாட்டைத்தான் மன்னார் இலுப்பைக் கடவை படகுத் துறை கிராமத்தின் மீதான தாக்குதல் உணர்த்தி நிற்கின்றது. இத்தாக்குதலானது இன அழிப்பு நோக்கில் சிறிலங்கா பேரின வாதிகளால் நன்றாகத் திட்டமிட்டப்பட்டு மேற் கொள்ளப் பட்டுள்ளது. இத்தாக்குதல் மேற் கொள்ளப் படுவதற்கு முதல் நாள் அதாவது கடந்த ஜனவரி முதலாம் நாள் சிறிலங்காப் படைதுறைப் பேச்சாளர் ஒருவர் மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தளம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். என ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்திருந்தார். ஆனால் விடுதலைப் புலிகளின் தளங்கள் எவையும் மக்கள் கு…
-
- 0 replies
- 782 views
-
-
இன்று திங்கட்கிழமை முதல் 15000 க்கு மேற்பட்ட வடமராச்சிப்பகுதி மாணவர்கள் அண்மையில் கடத்தப்பட்ட ஹட்லிக்கல்லூரி, வேலாயுத மகாவித்தியாலய மாணவர்களை விடுவிக்கக் கோரி காலவரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டள்ளார்கள். ஹட்லிக்கல்லூரி மாணவன் பிரகலாதன், மற்றும் nஐகன் வேலாயுத மகாவித்தியாலய மாணவன் ஆகியோர் அண்மையில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டமை தெரிந்ததே. கடந்த ஒருவாரமாக மாணவர்கள் போராட்டங்கள் நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடமாராச்சி மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இம்மாணவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதவிடத்து அனைத்து அரசஅலுவலகங்களின் நடவடிக்கைகளும் முடக்கப்படும் எனவும் தெரிவி…
-
- 0 replies
- 673 views
-
-
விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நிறுத்தினால் அரசும் தாக்குதல்களை நிறுத்தும். மட்டக்களப்பு வாகரையை கைப்பற்றியதும் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றப் போவதாக அரசு நேற்று திங்கட்கிழமை கூறியிருந்தது. எனினும் விடுதலைப் புலிகள் சண்டையை நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பித்தால் அரசாங்கமும் சண்டையை நிறுத்தும். சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நேற்று திங்கட்கிழமை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடல் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் நேற்று முன்தினம் வடமராட்சி கடல் பரப்பில் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேகலிய ரம்புக்வெல மேலும் கூறியதாவது: தற்போது தொப்பிக்கலப் பகுதி தான் ஆ…
-
- 3 replies
- 1.1k views
-
-
கிழக்கிலிருந்து புலிகளை வெளியேற்றியது போர்நிறுத்த மீறலே: கண்காணிப்புக் குழு. விடுதலைப்புலிகளை கிழக்கில் இருந்து வெளியேற்றியது பெரும் போர்நிறுத்த மீறலாகும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இவ்வாறு தெரிவித்திருப்பதாகச் சர்வதேசச் செய்தி முகவர் நிறுவனம் ஒன்று கூறுகிறது. அரசாங்கம், விடுதலைப்புலிகள் ஆகிய இரண்டு தரப்புக்களும் பல தடவைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளன. கிழக்கில் இருந்து புலிகளை வெளி யேற்றியதும் அவற்றில் ஒன்றே. அந்த ஒப்பந்தம் காகிதத்தில் மட்டும் வெறுமனே உள்ளது எனவும் கண்காணிப்புக் குழு மேலும் தெரிவித்திருக்கிறது. பேச்சு மூலமான தீர்வுக்கு அரசு தனது பற்றுறுதியை நிரூபிக்க வேண்டும் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் பேச்சு மூலமான தீர்வில் அரசுக்குரிய…
-
- 0 replies
- 970 views
-
-
கிடைத்த ஒரு தகவலின்படி மட்டக்களப்பு கதிரவெளியையும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து விட்டதாம்! ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை! நாம் யுத்த நிறுத்ததுக்கு முன் 70% நிலப்பரப்பை கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் இன்று யுத்த நிறுத்த காலத்தில் .....?????????? ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்கத்தான் விளிப்பதைப் போல, நாமும் கடைசியில் வன்னியை சிங்களவன் அடிக்கத்தான் நாம் போராட முற்படப் போகிறோம் போலிருக்குது!!! வன்னியும் ........???????????????????
-
- 25 replies
- 7k views
-
-
துணை இராணுவக் குழுவினரின் முகாமிலிருந்து 5 சிறார்கள் தப்பினர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு பலவந்தமாக பயிற்சி கொடுக்கப்பட்ட 5 சிறார்கள் முகாமிலிருந்து தப்பி வந்துள்ளனர். முகாமிலிருந்து தப்பி வந்த இவர்கள், அனைத்துலக செஞ்சிலுவை சங்கக் குழுவினரால் சிறிலங்கா காவல்துறையிடனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலநறுவைப் பகுதியின் சிறிலங்கா உதவி காவல்துறை அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க தெரிவிக்கையில், இந்த 5 சிறார்களும் அடையாளம் தெரியாத பிரதேசம் ஒன்றில் உள்ள பயிற்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து தப்பிய சிறார்கள் வேறொருவரின் துணையுடன் அனைத்துலக செஞ்சிலுவை ச…
-
- 0 replies
- 669 views
-
-
[22 - January - 2007] [Font Size - A - A - A] உள்நாட்டுப் போரும் அரசியல் வன்முறைகளும் நிலவுகின்ற நாடுகளிலே தோன்றியிருக்கும் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடிகள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் பணிகளைக் கூடுதலான அளவுக்கு வேண்டி நிற்கின்ற இன்றைய காலகட்டத்திலே, துரதிர்ஷ்டவசமாக அந்த நிறுவனங்கள் முன்னென்றும் இல்லாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் அந்நிறுவனங்களின் பணியாளர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் பலவித இடர்பாடுகளுக்கு மத்தியில் செயற்பட வேண்டியிருக்கும் அதேவேளை, அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் வன்முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கெயர் இன்ரர் நாஷனல் (CARE Intern…
-
- 0 replies
- 776 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு யாழ். வலிகாமம் சுன்னாகத்தில் பலரும் பார்த்துக்கொண்டிருக்க பலாத்காரமாக சிறிலங்கா இராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்ட அங்கவீனமுற்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டானியல் சாந்தரூபன் (வயது 30) என்ற இந்த இளைஞர், பொய்க்கால் பூட்டி நடக்கும் அங்கவீனமுற்ற ஒருவர். இவரை இராணுவத்தினர் கடத்திச் சென்றபோது, அவரது பொய்க்கால் மற்றும் சில பொருட்கள் கைவிடப்பட்டன. அவரைக் கடத்திய இடத்தில், கடும் வெட்டுக் காயங்கள் மற்றும் சித்திரவதைக்கான அறிகுறிகளுடன் இவரது சடலம் மீண்டும் வீசப்பட்டிருந்தது. இது தவிர, மேலும் இருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினர் ஊரட…
-
- 0 replies
- 682 views
-
-
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு: 2 காவல்துறையினர் பலி- 2 பொதுமக்கள் பலி வவுனியா கல்முனை சந்தியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காவல் கடமையிலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து காவல் கடமையிலிருந்த காவல்துறையினர் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்துள்ள ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார். பிறிதொரு சம்பவத்தில் செட்டிக்குளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். -புதினம்
-
- 1 reply
- 680 views
-