Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணா ஒட்டுக் கூலிக்குழுவின் சிறுவர் துஷ்பிரயோகம் அம்பலம். சிறீலங்க அரச படைகளின் ஆதரவுடன் கருணா குழு எனப்படும் துணை ஆயுதக் குழு கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை படையணியில் சேர்த்த வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள சர்வதேச உறவுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது சர்வதேச உறவுகள் நிலையத்தின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தில் சிறுவர்களை படையணியில் சேர்க்கும் கருணா குழுவின் செயல்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா அரச படைகள் துணை புரிவதாகவும் சில சந்தர்ப்பங்களில் நேரடியாக சிறுவர்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகமும் அந்த அறிகையில் சுட்…

  2. வாகரையில் தொடரும் எறிகணைத் தாக்குதல்கள்: 4 பொதுமக்கள் பலி- 20 பேர் காயம் [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 15:06 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மகிந்தபுர மற்றும் கல்லாறு சிறிலங்கா படை முகாம்களிலிருந்து படையினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் வாகரைப் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்கால சம்பவங்களினால் இடம்பெயர்ந்து பம்மிவெட்டுவான் பாடசாலையில் தஞ்சமைடந்திருந்த பொதுமக்கள் மீது இன்று பிற்பகல் 1.40 மணியளவில் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலில…

  3. பிரித்தானியாவில் அண்மையில் உள்ளுர் அமைச்சு விடுத்த அறிவிப்பில் சிறீலங்காவை ஆபதில்லாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக அறியமுடிகிறது. எதிர்வரும் 12ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இவ்விடயம் 13ம் திகதி முதல் நடைமுறையில் வரலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.ஆபத்தில் இல்லாத பட்டியலில் நாடுகளில் இருந்து சிறீலங்காவை நீக்குவதானது அரசியல் தஞ்கம் கோரும், அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் எதிர்காலத்தை; தீர்மானிக்கும் என நம்பப்படுகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  4. விடுதலைப் புலிகள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு" - கனிமொழி இலங்கையில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்தார் கனிமொழி. தமிழக அரசியலில் மீண்டும் ஓர் பரபரப்பு. முதல்வர் கலைஞரின் மகளை, அவரது சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்தித்தோம். ஈழப் பிரச்னை தொடர்பாக பல விஷயங்களை நுனிப்புல் மேயாமல் அழகாகவும் அதேசமயம் ஆழமாகவும் அலசினார். எதையும் தெளிவாகப் பேசுகிறார். சற்று ஆத்திரமூட்டும் கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் தந்தது, கனிமொழியின் பக்குவத்தைக் காட்டியது. ராஜிவ் படுகொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்னையில் இருந்த அனுதாபம் போய், அங்கே பிரச்னை தலைதூக்கும்போத…

  5. 4 மிக ரக விமானங்கள் இலங்கை அரசு கொள்வனவு செய்ய இருக்கிறது இலங்கை அரசு எதிர்கால தேவைக்கு 4 MIG-27 ரக யுத்த விமானங்கள் உக்ரேயன நாட்டில் இருந்து வாங்க இருப்பதாக அரசாங்கள் பாதுகாப்பு குறித்து பேசவல்ல அமைச்சர் ஷெகலிய தெரிவித்தார். இலங்கையில் வடகிழக்கு பயங்கரவாத நடவெடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விமானங்கள் அவசிமாகின்றன ஏற்கனவே நான்கு விமானங்கள் தற்போது இந்நடவெடிக்கையில் ஈடுபடுத்தபடடுவருகிறது.இந்த வருட 2007 க்குரிய செலவு திட்டத்தில் 45% சதவீதம் 139 பில்லியன் ரூபாய்கள் பாதுகாப்பு செலவினங்களுக்கு பயன்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது -வீரகேசரி

  6. உலக நாடுகளின் படைப்பலப்படுத்தல்களை முக்கியமாக அதன் புவியியல் சார்புநிலைகள் தான் தீர்மானிக்கின்றன. பின்னர் புவியியல் அமைப்பு மற்றும் களத்தின் தன்மை கொண்டு வடிவமைக்கப்படும் படைக் கட்டமைப்புக்களே போரில் முன்னிலை வகிக்கின்றன. அதாவது சில நாடுகளில் தரைப்படை வலிமையுள்ளதாகவும், சிலவற்றில் கடற்படை வலுவுள்ளதாகவும், மேலும் சிலவற்றில் விமானப்படை வலுவுள்ளதாகவும் பேணப்படுகின்றன. பெரும்பகுதியான எல்லைகள் நிலப்பரப்பினால் சூழப்பட்ட ஜேர்மன் இரண்டாம் உலகப்போரின் போது தனது தரைப்படையையும், விமானப்படையையும் தான் அதிகளவில் பலப்படுத்தியது. கடற்படையை பதுங்கித்தாக்குதல் நடவடிக்கைக்கே பெருமளவில் பயன்படுத்தியது. இறுதியில் ஜேர்மனியின் தோல்விக்கான காரணிகளில் பலவீனமான அதன் கடற்படையும் சேர்ந்து கொண்…

  7. இராமாயண இதிகாசம் - ஆரிய, திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்று, தந்தை பெரியார் கூறி வந்தார். அதே கருத்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், ஈழத் தமிழர்களிடையே பரப்பி வருகிறது. இக்கருத்தை மய்யமாகக் கொண்டு தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான ‘புலிகளின் குரல்’, ‘இலங்கை மண்’ என்ற தொடர் நாடகத்தை - 53 வாரங்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் ஒலிபரப்பியது. கலை இலக்கியவாதியும், பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி எழுதி இயக்கிய இந்த நாடகத் தொடர், ஈழத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில பழமை விரும்பிகள், ராமாயணத்தின் பாதுகாவலர்கள் - இதற்கு எதிர்ப்புக் காட்டவும் தயங்கவில்லை. ஆனாலும், தமிழர் பண்பாட்டை சிதைத்த ஆரியத்தை அம்பலப்படுத்திய இந்த நாடகத்தைத் தொடர்ந்து பா…

    • 0 replies
    • 1k views
  8. கடந்த சில வாரங்களாக சிறிலங்கா படையினர் வாகைரையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏ15 பாதையை மூடி வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்களை பட்டினி போட்டும், தொடர்ச்சியான எறிகணை, விமானக் குண்டு வீச்சுக்களில் ஈடுபட்டும், அதே நேரம் மெதுமெதுமாகவ ஊடுருவுவதுமாக சிறிலங்கா படையினர் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். முகமாலை, கிளாலி போன்ற இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பேரழிவை அடுத்து, வட போர்முனையில் தன்னுடைய போர்திட்டத்தை சிறிலங்கா அரசு ஒத்தி வைத்துள்ளது. ஆயினும் வட போர்முனையில் ஏற்பட்ட தோல்வியை சமன் செய்யும் விதமாக, தனக்கு சாதகம் என்று கருதும் கிழக்குப் போர்முனையில் வெற்றி ஒன்றை பெறுவதற்கு சிறிலங்கா அரசு பெரும் ஆவலாக உள்ளது. இதன் மூலம…

  9. விடுதலைப்புலிகளுக்கும் அரசிற்கும் இணைத்தலைமை நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என யாழ் ஆயர் வேண்டுகோள். அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இணைத்தலைமை நாடுகள் அழுத்தங்களை பிரயொகிக்கவேண்டும் என யாழ்ப்பாண ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்கதூதர் ரொபட் ஓ பிளெக்கிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்தார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இதுவரைக்காலமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளி;ல் இணங்கிக்கொள்ளப்பட்ட விடயங்களை அரசாங்கம் உரிய முறையில் செயற்படுத்தவேண்டும். இந்தவிடயத்தில் இணைத்தலைமை நாடுகள் மென்மைப்போக்கை கலைத்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கவேண…

  10. உக்ரேனிடமிருந்து நான்கு மிக் 27 தாக்குதல் விமானங்கள் கொள்வனவு. ஸ்ரீலங்கா அரசாங்கம் உக்ரேய் நாட்டில் இருந்து மிக் 27 ரக மிகை ஒலி தாக்குதல் விமானங்கள் நான்கை கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புகவெல இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 9.8 மில்லியன் டொலர் பெறுமதியான விமானங்களை தமது அரசாங்கம் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக ஹெகலிய ரம்புவெல தெரிவித்துள்ளார். ஊக்ரெய் நாட்டில் இருந்து இந்த விமானங்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அந்த விமானங்களை இலங்கையை வந்தடைந்தவுடன் விடுதலைப்புலிகள் மீ…

  11. கொழும்பு புறநகர் பகுதியில் மர்ம வாயு கசிவு. கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள மஞ்சி பிஸ்கட் - றிற்ஸ்பரி சொக்லட் தொழிற்சாலைகளில் இன்று திடிரென ஏற்பட்ட எரிவாயு கசிவை தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடாக அப்பிரதேச மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா காவல்துறையினர் இவ் வாயுகசிவு ஏற்பட்ட காரணத்தை கண்டறிய ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது. www.pathivu.com

  12. சிங்கள காடையர்களால் தமிழ் - முஸ்லீம் சமூகங்களின் நிலங்கள் அபகரிப்பு பாலாவிப் பகுதியில், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான காணிகளை சிங்கள காடையர்கள் ஆக்கிரமித்து தற்போது குடியேற்றங்களை அமைத்து வருகின்றனர். இதற்கு சிறீலங்கா காவல்துறையினர் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கிவருவதாக முஸ்லீம் சமூக தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள். இதேவேளை இவ் ஆக்கிரமிப்புக்கெதிராக இன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக, ஜும்மா தொழுகையை தொடர்ந்து முஸ்லீம் மக்களால் பெரும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி: பதிவு.கொம் (http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&)

    • 0 replies
    • 850 views
  13. தலைவர் பிரபாகரன் 27112006"போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்துபோய்க் கிடக்கிறது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து கிடக்கிறது" இதற்கு பிறகு போர்நிறுத்த உடன்படிக்கையை பற்றி கதைப்பது நல்லதுக்கல்ல தமிழ் மக்களையும் முட்டால் ஆக்கிறது மாதிரியிருக்கு இளந்திரையன் 26112006ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். சு.ப.தமிழ்ச்செல்வன் 08122006போர்நிறுத்த உடன்படிக்கையை முற்றாக மீறி நடக்கும் சிறிலங்கா அரசின் செயற்பாட்டை போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஆதரவான நோர்வேக் குழுவினர்இ இலங்க…

    • 0 replies
    • 794 views
  14. வாகரையில் புலிகள் படையினர் மீண்டும் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன [Friday December 08 2006 09:57:55 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் நேற்றிரவு முதல் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வாகரையின் தென்மேற்க்கு பகுதியில் உள்ள கட்டு முறிப்பு பகுதியில் 5கிலோமீற்றர் தூரம் முன்னேறியுள்ளதாக புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தாம் பதில் தாக்குதல் நடத்திவருவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் . இன்று காலையில் அந்த பகுதியில் ஷெல் தாக்குதல் சத்தங்கள் கேட்டுகொண்டிருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

    • 12 replies
    • 4.2k views
  15. யுத்தநிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு செயலற்றதாக்கிவிட்டுள்ளது - சு.ப. தமிழ்ச்செல்வன். இலங்கை அரசினுடைய யுத்த வெறிப்போக்கையும் இனப்படுகொலை முயற்சியையும் தடுத்துநிறுத்த சர்வதேசசமூகம் முன்வரவேண்டுமென தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் நோர்வே தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவிலாளர்களிற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்றைய சந்திப்பில் நோர்வே அனுசரணையாளர்களிற்கு எமது தலைமைபீடத்தின் உறுதியான நிலைப்பாட்டையும் இன்றைய நெருக்குவார சந்தித்துள்ள எமது மக்களின் மனிதாபிமானத் தேவைகள் குறித்தும் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளோம். அத்தோடு நோர்வே அனுசரனைப் பணிகளை சிறிலங்கா அரசு அழுத்தங…

  16. நிபந்தனைகளில்லாமல் ஏ-9, ஏ-15 பாதைகளைத் திறக்க விடுதலைப் புலிகள் வேண்டுகோள். மனிதாபிமான அடிப்படையில் யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஏ-9 பாதையையும் வாகரைக்குச் செல்லும் ஏ-15 பாதையையும் நிபந்தனைகளின்றித் திறக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சென்றுள்ள இலங்கைக்கான நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமாதானத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிப் பேசவும் நடைமுறையில் உள்ள போர்நிறுத்த உடன்படிக்கையில் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் எத்தகைய கடப்பாட்டைக் கொண்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளவும் ஜோன் ஹன்சன் பௌயர் இலங்கைக்குப் பயணம் …

  17. இலங்கைக்கு உணவுப்பொருட்கள் அனுப்புவதற்காக இந்தியக் கப்பல்களை வழங்கவேண்டுமென்று பலஅறிஞர்களும் புத்திஜீவிகளும் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் கோரிக்கை விடுத்தவையலல்லோ. தன்ர பங்குக்கும் ஏதாவது செய்யவேண்டுமென்று நினைச்ச அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவா(ங்கு)னந்தா இந்தியாவுக்கு ஓடிப்போய் சாமான்களோட பெரிய கப்பலை என்னட்ட ஒப்படையுங்கோ நான்பத்திரமா கொண்டுபோய் குடாநாட்டு மக்களிட்ட சேர்க்கிறன் எண்டு கெஞ்சிக்கூத்தாடியிருக்கிறா

  18. போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு சிறீலங்கா அரசு விளக்கமளிக்கதேவையில்லை:-ரம்புக்வெல பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.2 வது சரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்திருந்தது இந்த விடயம் குறித்து அரசாங்கம் தமக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்திருந்தது இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டுள்ள…

  19. தமிழீழம் கிடைக்கும் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம். - கலைஞர்.கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று வியாழக்கிழமை நிறைவேறியது. முதல்வர் கருணாநிதி முன்மொழிந்த இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே. மணி இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறி முதல்வர் கருணாநிதி தாமே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இத் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது: கடந்த சில நாள்களுக்கு முன்பு டில்லி சென்றிருந்தபோது காங்கிர…

    • 6 replies
    • 2.5k views
  20. அதிகாலையில் ஆயுதக் குழுவைக் கண்டு அஞ்சி ஓடிய சிறுமி மீது துப்பாக்கிச் சூடு! யாழ். கல்வியங்காடு பகுதியில் சம்பவம் [Friday December 08 2006 06:45:41 AM GMT] [யாழ் வாணன்] அதிகாலை வீட்டின் பின்புறம் இயற் கைக் கடன் கழிக்கச் சென்ற சிறுமி ஒருத்தி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காய மடைந்தார். யாழ்ப்பாணம், கல்வியங்காடுப் பகுதியில் புதிய செம்மணி வீதியில் இந்தச் சம்பவம் நேற்று விடிகாலை 2 மணி யளவில் இடம்பெற்றது. இச் சூட்டில் காலில் காயமடைந்த சிறுமி யாழ். மருத் துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிகள், கத்திகள், பொல்லு களுடன் சுமார் 30 பேரடங்கிய கும்பல் ஒன்று இரவுவேளை அப்பகுதியில் நட மாடியது என்று கூறப்படுகிறது. குறிப…

  21. இலங்கை கடற்படைக்கு நாகபுரியிலிருந்து வெடிபொருள் ஏற்றிவந்த லாரி பிடிபட்டது மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிலிருந்து இலங்கை கடற்படைக்காக வெடிபொருள்கள் ஏற்றிச்சென்ற லாரி மதுரை மாவட்டம், மேலூரில் வியாழக்கிழமை பிடிபட்டது. நாகபுரியில் உள்ள "சோலார் எக்ஸ்புளோசிவ் லிமிடெட்' நிறுவனத்தினர் இலங்கை கடற்படையினருக்கு 40 பெட்டிகளில் அடைத்து அனுப்பிய வெடிபொருள்களுடன் ஒரு லாரி தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்றது. மேலூர் அருகே வியாழக்கிழமை வந்துகொண்டிருந்த அந்த லாரியை நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸôர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். தகவல் அறிந்து மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மாறன், மதுரை கியூ பிரிவு போலீல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் லாரியைப் பர…

    • 35 replies
    • 6.1k views
  22. Started by BLUE BIRD,

    இருபத்திஐந்து வருடத்துக்கு முன்பு புளட் அமைப்பின் உறுப்பினர்களாகிய இறைகுமாரன்,உமைகுமாரன் ஆகிய இருவரையும் பாலமோட்டை சிவம் மற்றும் சங்கதியாருடன் சேர்ந்து கொலை செய்த மாவலிராஜன் புலம்பெயர்ந்து வாழும் கனடியத்தமிழர்களின் புத்திக்கூர்மையான செயற்பாட்டால் அடயாளம் காணப்பட்டார் இவர் டி.பி.எஸ்.ஜெயராஜுக்கு அடுத்தபடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இ

    • 0 replies
    • 1.3k views
  23. கொழும்பில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: தமிழ் இளைஞர் பலி கொழும்பு மட்டக்குளி காக்கைதீவுப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. காக்கைதீவில் உள்ள கடற்படையினரது சோதனைச் சாவடியில் காவல் கடமையில் நின்ற மூன்று கடற்படையினர் இளைஞர்கள் இருவரை அழைத்து சோதனை நடத்தியதாகவும் அப்போது கடற்படையைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கியை இளைஞர் ஒருவர் பறிக்க முற்பட்ட போதே அவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் முகத்துவார காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்…

  24. வாகரையில் படையினரின் போக்குவரத்து கெடுபிடியால் நோயாளிகள் மூவர் உயிரிழப்பு வாகரையிலிருந்து மட்டக்களப்பிற்கான போக்குவரத்துப் பாதையில் சிறிலங்காப் படையினர் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதால் நோயாளர்கள் மூவர் கடந்த இரு வாரங்களில் உயிரிழந்துள்ளனர். குழந்தை உட்பட மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்தும், அப்பகுதியில் வாழ்ந்தும் வருகின்ற மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் வாகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவேண்டிய நிலை ஏற்பட்ட போதும் படையினரின் அனுமதிக் கெட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.