Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகை: துக்கநாளாக அனுசரிக்க ராமதாஸ் கோரிக்கை ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வருகிற 17ந் தேதி இந்தியாவுக்கு வரும் போது துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.சிங்கள அரசின் உணவுத் தடையினால் யாழ்ப்பாணத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு 6 லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் பசி, பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதாக செய்தி வெளிவந்திருக்கிறது. ராஜபக்சே இந்தியா வரும் நாளான 17.11.2006 தமிழகத்தில் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும். …

  2. சென்னை: தமிழர்களை அழித்து வரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அட்டூழியத்தை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சொந்த நாட்டு மக்களையே வதைக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு முற்றுகையிட்டு நெடுஞ்சாலையை மூடியுள்ளது வேதனைக்குரியது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் உணவு, மருந்து கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தமிழர் பகுதிகளில் முப்படைத் தாக்குதலை நடத்தி வருகிறது இலங்கை அரசு. இதனால் உணவுப் பொருட்களை செல்ல விடாமல் தடுப்பதாலும், இலங்கை அரசு தமிழ் இனப் படுகொலையை செய்து வருகிறது. இச் சூழ்நிலையில் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். பிரதமரை அவர் சந்திக்கும்போது இலங்கை அரசு செ…

  3. ஈழத் தமிழர் ஆதரவாளரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிசுக்கு 87 விழுக்காடு வாக்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான இல்லினாய்ஸ் 7 ஆம் மாவட்ட தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிஸ் 87 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர், டேனி டேவிசின் கிளிநொச்சி பயணம் தொடர்பில் விமர்சனம் செய்து பரப்புரை மேற்கொண்டார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் உறுப்பினர்களான டேனி டேவிஸ், டேனி எப்.கன்ட்ரெல் ஆகியோர் கிளிநொச்சிக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். -புதினம்- அவரின் வெற்றிக்கு எம் மக்களின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

    • 1 reply
    • 1.7k views
  4. கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், இளைஞர் நலம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இக்கட்சியின் தலைவரான தொண்டைமான் இலங்கை அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இப்பதவிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் தொண்டைமான் தேர்வானார். தற்போது தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் யோகராஜன் கூறுகையில், எங்களது தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் …

  5. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரத்தை சர்வஜன வாக்கெடுப்பே தீர்மானிக்கும் என்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார். வட, கிழக்கு மாகாண இணைப்பு செல்லுபடியற்றதென அக்டோபர் 16 இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பையடுத்து இந்த இரண்டு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வட, கிழக்கிலிருந்து அரசாங்கத்திற்கு பரவலாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன் அப்பிராந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபை அமர்வை பகிஷ்கரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேசமயம், நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அரசாங்கம் இதுவர…

  6. அமெரிக்க ஜனாநாயக கட்சியை சேர்ந்த கறுப்பினத்தவரான டனி டேவிஸ் அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில்87% வாக்குகளை பெற்று மாபெரும் சாதனையை படைதார் அவரின் எதிர் போட்டியாளரான குடியரசுக்கட்சியை சேர்ந்த கட்சிசன் டேவிசின் கிளிநொச்சி விஜயத்தை வைத்து பிரச்சாரம் செய்தும் மன்ணை கவ்வினார் எதிர் கட்சியய் சேர்ந்தவரின் மலின பிரச்சாரத்துக்கு எடுபடாத மக்கள்(எதிர் போட்டியாளரின் பிரச்சார இணையம் http://www.freewebs.com/hutchinsonforcongr...gress/ltte.htm) டேவிசுக்கு135,416 வாக்குகளை அள்ளி கொட்டினர் அவரின் எதிராளரான கட்சிசன் 20740 வாக்குகளை மட்டுமே பெற்றார் டேவிஸ் 2005 ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து புலிகளின் சிரேஸ்ட தலைவர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது ஆதாரம்-தமிழ் நெற் இ…

  7. ஈழத்தில் போர் இறக்குமதி! -சோலை ஈழப் போராளிகளுடன் பேச்சு வார்த்தை கூடாது. போர் தொடுத்து ஈழத்தை மீட்கவேண்டும் என்பது, சிங்கள இனவாதக் கட்சிகளின் கோரிக்கையாகும். அவர்களுடைய ஆதரவுடன்தான் ராஜபக்சே அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், சிம்மாசனத்தில் அமர்ந்த பின்னர்தான், போர்முனையில் ஈழப் போராளிகளை வெல்லமுடியாது என்பது சிங்கள அரசுக்குப் புரிந்தது. அந்தப் பாடத்தை சந்திரிகா அம்மையாரும் ஏற்கெனவே படித்துவிட்டார். ஈழப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று, சர்வதேச சமூகம் தொடர்ந்து நிர்ப்பந்தம் தருகிறது. பேசித் தீர்த்துக்கொள்க என்று, இந்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ராஜபக்சே அரசு அமைந்த பின்னர், சிங்கள இனவாதிகளின் கட்டளைகளை ஏற்று, ஈழப் ப…

  8. யாழில் குண்டுச் சத்தங்கள்? இன்று மாலை முதல் யாழ்.குடா குண்டுச் சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்களப் படை முகாம்களிலிருந்து உக்கிர ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்கிகள் இன்று மாலை முதல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி உக்கிர தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்i;ல.

  9. :arrow: திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலன் புலிகளின் குரலுக்கு வழங்கிய கருத்துப்பகிர்வு..

  10. ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டு ஏ-9 வீதியை திறப்பதனைவிட தற்போதே திறக்கலாம்: வஜிர அபயவர்த்தன ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டு ஏ-9 வீதியை திறப்பதனைவிட தற்போதே திறக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் அவர் கூறியுள்ளதாவது: இந்த நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சந்தேகமும், அவ நம்பிக்கையுமே இன்று பயங்கரவாதமாக மாறியுள்ளது. வடக்குகிழக்குப் பிரிப்பு தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. காரணம் இனப்பிரச்சினைக்கு அரசி…

    • 0 replies
    • 1.1k views
  11. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை ஐ.நா.வில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர பின்லாந்து முஸ்தீபு இலங்கையில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கின்றன. நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விடயத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு ஐரோப் பிய ஒன்றியத்தின் தலைமை நாடான பின்லாந்து திட்டமிடுகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இலங்கையின் பல பகுதிகளிலும் சமீப நாள்களாக கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல…

    • 6 replies
    • 2.6k views
  12. மனிதாபிமானத் திட்டங்களின் கீழான ஆஸி. விஸா விண்ணப்பங்கள் பெறுவதற்கு வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவுங்கள்!ஐ.நா. அகதிகள் அமைப்பிடம் அங்குள்ள தமிழ் கலாசாரக் கழகம் வேண்டுகோள் கொழும்பு,ஒக்.16 வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்காக ஆஸ்திரேலிய அரசினால் வழங்கப்படும் மனிதாபிமான "விஸா' திட்டத்திற்கு வடக்கு கிழக்கு மக்கள் விண்ணப்பிக்கும் வகையில் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாரக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இக்கழகம், அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்திற்கு வழங்கியுள்ள மகஜரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்காக ஆஸ்திரேலிய அ…

  13. திருக்கோவில் கல்முனைப் பகுதிகளில் 100 க்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒட்டுக்குழுவால் கடத்தல்.அம்பாறையில் திருக்கோவில் மற்றும் கல்முனைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துணை இராணுவக் குழுவினரால் வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் இந்த ஆட்கடத்தல் நடைபெற்று வருவதால் கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை வான்களில் ஆயுதங்கள் சகிதம் வருவோர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களையே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இரவு பகலென நேர காலமின்றி கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதிகளில் வெள்ளை வான்களில் வந்த துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டுள்…

  14. யாழ்ப்பாணத்துக்கு உணவு அனுப்ப இந்தியா விருப்பம் * தமிழ்நாட்டிலிருந்து குடாநாட்டு வர்த்தகர் மூலம் விநியோகத்தை மேற்கொள்ள ஆயத்தம் குடாநாட்டிலுள்ள 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினி அவலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அந்த மக்களுக்கு மிக அதிகளவில் தேவைப்படும் அரிசி, சீனி, குழந்தைகளுக்கான பால் மா உணவுப் பொருட்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்திருக்கிறது. அதுவும் யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் அருகிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து இந்த உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு வசதி செய்து கொடுக்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிர…

    • 9 replies
    • 2.5k views
  15. இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன்கேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார். சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அதுதான் ரம்புக்வெலவின் குத்துக்க ரணத்திற்குக் காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரி விற்கும் முயற்சி. அதாவ…

  16. யாழ் - தக்கவைக்கப் போராடும் சிங்களப்படை மாவிலாறு நீர் பிரச்சினையைக் கொண்டு தனது இராணுவ, அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முயற்சித்த அரசு இன்று பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராட்சி தலைமையில் 3,000 வீரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை 26 நாட்களாகியும் இன்றுவரை இலக்கை அடையவில்லை. போர்நிறுத்தத்தை தனக்கு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தனது நீண்ட கால இராணுவ நலன்களை எட்ட முற்பட்டுள்ளது அரசு. அதாவது தெரிவு செய்த நிலைகள் மீது படை நடவடிக்கைகளையும், விமானத்தாக்குதல்களையும் மேற்கொள்வது இவை ஒரு முழு அளவிலான போராக மாறி தனக்கு…

  17. யாழில் நிலைகொண்டுள்ள படையினர் விடுமுறையில் செல்ல முடியாது - அரசு உத்தரவு - பண்டார வன்னியன் Monday, 06 November 2006 15:38 யாழ் குடாநாட்டிலுள்ள சிறிலங்காப் படையினருக்கும் பொலிஸாருக்கும் இம் மாதம் விடுமுறையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாவீரர் நாள் முடியும் வரை படையினர் எவரும் விடுமுறையில் செல்ல முடியாது என யாழ் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. மாவீரர் நாளில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திலே விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அப்போ எல்லா ஆமிக்கும் நிரந்தர விடுமுறை கொடுக்க அரசு ஆசைப்படுகுது.

  18. இணைத் தலைமைகளின் கூட்டமும் பிரபாவின் மாவீரர் தின அறிவிப்பும் இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைமைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங் டன் நகரில் கூடி இலங்கை நிலைவரம் குறித்து ஆராயவிருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கடைசியாக செப்ரெம்பர் 12, 13 ஆம் திகதிகளில் முறை யாகக் கூடி இலங்கை நிலைவரம் குறித்து ஆராய்ந்திருந்தன. இலங்கையில் அமைதிப் பேச்சுக்களை உடனடியாக - அடுத்த மாதமான ஒக்ரோபர் முற்பகுதியில் - நடத்தும்படி இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகளான இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் அப்போது வற்புறுத்திக் கேட…

  19. யாழ். குடாநாட்டுக்கான ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும், 6 இலட்சம் மக்கள் யாழ். குடாநாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஒலப்ஸ் டொற்ரியர் தெரிவித்துள்ளார். "ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப் பேச்சுக்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், ஏ-9 பாதையை மூடியிருப்பதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை" என்றும் அவர் கூறினார். ஐரோப்பாவிலிருந…

    • 0 replies
    • 1.5k views
  20. விடுதலைப்புலிகள் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு விரைவில் முன்வருவரென்ற நம்பிக்கை அரசிடம் காணப்படுவதாக அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். அமைச்சர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்; ஜெனீவாப் பேச்சுக்கள் தோல்வியில் முடியவில்லையாயினும் கூட, மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு இப்பேச்சுவார்த்தை அடித்தளமிட்டுள்ளது. புலிகள் கூட அரசியல் தீர்வு குறித்து பேசினர். ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது அரசாங்கத்தின் சமாதானம் மீதான பற்றுதலை சர்வதேச சமூகம் நன்கு அறிந்துகொண்டது. நாங்கள் நவம்பர் மாதமும், ஜனவரியிலும் மற்றுமொரு சுற்றுப்பேச்சுக்கு தயாராகவிருந்தோம். எனினும், பேச்சுக்கான அடுத்த திகதி தீர்மானிக்கப்படாமலே நிறைவடைந்தது. இ…

    • 0 replies
    • 1.1k views
  21. தமிழ்நாடு அழுத்தங்களுக்கு பணியாத சிறந்த தலைவர் இந்தியாவில் இல்லை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கிடைக்கும் யுத்த ஆயுதங்கள் உபகரணங்கள் கடத்தி வரப்படுவது இந்து சமுத்திரத்தின் ஊடாகவே ஆகும். இவ்வாறு புலிகள் இயக்கத்தினரும் அவர்களின் ஆயுத வர்த்தகர்களும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினூடாகப் புலிகளின் பிரதேசங்களுக்குக் கொண்டு வருவதைத் தடை செய்வது ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் தனியாகச் செய்ய இயலாத காரியம் அல்ல. ஆயினும் இவ்வாறு புலிகளின் ஆயுதக் கடத்தல்களைத் தடுப்பதற்கான கடற்பிராந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவின் கடற்பிராந்திய பாதுகாப்பு உதவிகளும் அவசியமாக உள்ளன. ஆயினும், இவ்வாறு இந்தியாவின் கடற்பிராந்திய பாதுகாப்பு உதவி கிடைப்பதற்குத் தட…

  22. அட ராமா! யார் இந்தத் துரோகி? இலங்கையின் சிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் உலகத் தமிழர்களால் மதிக்கப்படும் ஒருவராவார். 2006 அக்டோபரில் வெளியான குமுதம் தீராநதி இதழில் அவர் அளித்த நேர்காணலில் இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்படவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி இருக்கிறார். அந்த நேர்காணலில் இதுவரை வெளிவராத பல செய்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். கேள்வி : இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது இலங்கைத் தமிழர்கள் ஆரவாரமாக அவர்களை வரவேற்றார்கள். ஆனால் விரைவிலேயே காட்சிகள் மாறின. இதற்கு என்ன காரணம்? வ.ஐ.ச. ஜெயபாலன் : அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் இருக்க. திரைமறைவு வேலைகளும், உலக அரசியல் சதிகளும் இதில் முக்கியப் பங்காற்றின. நிறையப் …

  23. தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்துக்கு மாத்திரம் சொந்தமில்லை என்கிறார் சங்கரி வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்காக உறுதியான தீர்வு காணப்படுவதை விடுதலைப் புலிகள் இயக்கம் விரும்பவில்லை என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு உறுதியான தீர்வு காணப்பட்டால் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தினதும் அது சார்ந்த ஏனைய புலிகள் இயக்க உறுப்பினர்களினதும் எதிர்காலச் செயற்பாடுகளில் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஷ்ரீலங்கா அரச தரப்பிற்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே கடந்த 28 ஆம், 29 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த…

  24. சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது ஷியா இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் துஜையில் நகரத்தில் 1982 ஆம் ஆண்டு, 148 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இராக்கிய முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனுக்கு பாக்தாத்தில் இருக்கின்ற நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு உறவு முறையில் சகோதரரான பர்சான் அல் திக்ரிதி மற்றும் இராக்கின் முன்னாள் தலைமை நீதிபதியான அவாத் ஹமீத் அல் பந்தர் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை அதிபரான தாஹா யாசின் ரமதானுக்கு ஆயுட் தண்டனையும், இதர மூவருக்கு 15 ஆண்டு கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் பாத் கட்சியினை சேர்ந்த அதிகாரியான மொஹமது அசாவி அலி என்பவர் விடுத…

  25. புலிகளின் விமானம் மீண்டும் பறந்தது? சிறீ லங்கா பாதுகாப்பு தரப்பின் செய்தி! Home › News & Events › MOD News › Last modified on: 11/6/2006 6:04:26 PM A mysterious aircraft detected in Mannar Sky A mysterious aircraft was detected by the Air Force radars flying in the Mannar sky yesterday. The police source who had observed the presence of the suspicious aircraft informed the matter to Sri Lanka Air Force authorities around 5p.m. Sri Lanka Air Force Radars located at in Vavuniya also reported the detection. The Air Force authorities conducting further investigation to the matter. Earlier, Sri Lanka Navy also reported the presence of suspi…

    • 1 reply
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.