Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று வரும் சிங்களக் காவல்துறையினரை உடனே திருப்பி அனுப்புக: இந்திய அரசுக்கு இராமதாஸ் வேண்டுகோள் [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 13:51 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள சிங்களக் காவல்துறையினரை சிறிலங்காவுக்கு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் போர் மேகம் திரண்டிருக்கிறது. நோர்வே நாட்டின் முன்முயற்சியால் நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையை இலங்கை அரசு திட்டமிட்டு குலைத்துப் போட்டு விட்டது. பன்னாட்டுக் கண்காணிப்பு குழுவினரின் எச்சரிக்கையையும் ம…

  2. 2002ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் இல்லாமல் போய் விடுதலைப்புலிகள் சுதந்திரப் போரை ஆரம்பித்துள்ளனர். இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் மேற்கொண்ட தாக்குதலே இதற்கு காரணம். போர் தொடங்கி விட்டதாகவும் தாங்கள் தயாராக உள்ளேம் என திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில். அரசாங்கமே போரை தொடங்கியது. எமது பிரதேசத்திற்குள் இராணுவம் துழையும் பட்சத்தில் நாங்கள் திருப்பித்தாக்குவதாக முடிவு செய்துள்ளோம். 50 ஆயிரம் விவசாயிகளிற்கு நீர் இல்லாமையே தாங்களின் தாக்குதற்கு காரணம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 1 reply
    • 1.1k views
  3. மாவிலாறு அணை பிரச்சினை: பாலசிங்கத்துடன் எரிக்சொல்ஹெய்ம் ஆலோசனை [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 08:30 ஈழம்] [ச.விமலராஜா] மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சனை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்துப் பேசியுள்ளார். லண்டனில் கடந்த வியாழக்கிழமை இச்சந்திப்பு நடந்துள்ளது. இச்சந்திப்பின் போது கண்காணிப்புக் குழுவினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்துள்ள கெடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மீதான பொருளாதாரத் தடைகளை செயற்படுத்தியும் விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தியும் வரும் சிறிலங்கா அரசாங்கமே தற்போதைய நிலைமைகளுக்கு காரணம் என்ற…

  4. இராணுவ லெப்டினனும் தமிழ்ப் பெண் டாக்டரும் ஒன்றாக இருந்தபோது கைது அநுராதபுரம் நகரத்திலுள்ள விடுமுறை விடுதி ஒன்றில் சிங்கள இனத்தைச் சேர்ந்த இராணுவ லெப்டினன் ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் ஒன்றாகத் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் அநுராதபுரம் பொலிஸ் தரப்பு கடந்த 26 ஆம் திகதி அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததைத் தொடர்ந்து நீதிபதி வசந்த ஜினதாச அவர்களை 31 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். மேற்படி சிங்கள இராணுவ லெப்டினனையும் தமிழ் பெண் டாக்டரையும் ஆஜர்செய்த பொலிஸ் தரப்பு அவர்கள் இருவரும் பயங்கரவாத நடவட…

    • 0 replies
    • 1.1k views
  5. மோதலுக்கு உண்மையான காரணம் தண்ணீர் அல்ல' [02 - August - 2006] [Font Size - A - A - A] திருகோணமலையில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலிற்கான உண்மையான காரணம் நீராக இருக்காது என யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். வடகிழக்கில் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மோதல்களை சுட்டிக்காட்டியுள்ள ஹென்றிக்சன் நீரே உண்மையான காரணமாக இருந்தால் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது என குறிப்பிட்டுள்ளார். கடற் புலிகளின் இலக்கந்தை தளம் நீரிற்காக தாக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.thinakkural.com/news/2006/8/2/i...ws_page7655.htm

    • 2 replies
    • 1.3k views
  6. புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 07:55 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் பிரகடனப்படுத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், மாவிலாறு அணைக்கட்டு விடயத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் யுத்தத்தை பிரகடனப்படுத்தவில்லை என்றார். "நீர் பிரச்சனைக்காக நாம் யுத்தத்துக்குச் செல்லவில்லை. மனிதாபிமான பிரச்சனைக்காக இதை மேற்கொண்டுள்ளோம். யுத்த நிறுத்தத்திலிருந்து நாம் விலகுவதாக இருந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளபடியாக 14 நாள் முன் அறிவிப்பை நாம் அளிப்போம்" என்றார் கேகலிய ரம்புக்வெல. சேருநுவெர ராஜ மகா விகார…

    • 3 replies
    • 1.1k views
  7. இழப்புக்களை மூடிமறைக்க நேரடியாக கொழும்பு கொண்டுசெல்லப்படும் காயமடைந்த படையினர் - பாண்டியன் Tuesday, 01 August 2006 20:11 திருகோணமலை கடற்படைத் தளம் மீதான உக்கிர ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைக்கும் நோக்குடன் படுகாயமடைந்த படையினரை நேரடியாக கொழும்பிற்கு கொண்டுசெல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. கடற்படையினர் தரப்பில் 30 பேரளவில் படுகாயமடைந்ததாக படைத்தரப்பு அறிவித்திருந்தது. ஆனால் இவர்களில் அறுவர் மாத்திரமே திருமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். மற்றைய காயமடைந்த படையினர்; இரு தடவைகளில் உலங்குவானூர்திகள் மூலமும், மருத்துவக் காவு வண்டிகள் மூலமும் நேரடியாகக் கொழும்பிற்குக் கொண்டு…

    • 2 replies
    • 1.6k views
  8. மேலாதிக்கச் செருக்கோடு மேற்கொள்ளப்படும் செயற்பாடு திருகோணமலை மாவட்டம் மாவிலாறு எல்லைப் புறப் பிரதேசத்தில் இலங்கை அரசுப்படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் தற்போதைய மோதல்கள் முழு அளவிலான யுத்தமாக விரிவடையாது எனத் தாம் நம்புகின்றார் என்று யுத்த நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸன் தெரிவித் திருக்கின்றார் யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்க கண்காணிப்பாளர்கள் பார்த்திருக்க விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் முனைப் புடன் மும்முனை நகர்வுக்கான பெரும் இராணுவ நடவடிக் கையை விரிவான ஏற்பாடுகளோடு அரசுப் படைகள் முன் னெடுக்கின்றன. விடாது வான் வழித் தாக்குதல்கள் நடக் கின்றன. விமானக் குண்டு வீச்சுக…

  9. ஈச்சிலம்பற்று, வெருகல் பகுதிகளில் விமானக்குண்டு வீச்சு , ஷெல் தாக்குதல் இருவர் காயம் ; இராணுவம் முன்னேறவில்லை என்கின்றனர் புலிகள் வீரகேசரி நாளேடு மாவிலாறு பகுதியை சூழவுள்ள ஈச்சிலம்பற்று, வெருகல் பகுதிகளில் விமானப்படையினரது குண்டு வீச்சு விமானங்கள் நேற்றும் குண் டுத் தாக்குதல்களை மேற்கொண்டன. நேற்றுக் காலை 8.30 மணி முதல் நடைபெற்ற இந்த விமானக் குண்டு வீச்சில் இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மரங்கள் பலவும் முறிந்து விழுந்துள்ளன. இதனைவிட இப்பகுதிகளை நோக்கி படையினர் கடும் ஷெல் தாக்குதல்களையும் நேற்று மேற்கொண்டுள்ளனர். கல்லாறு இராணுவ முகாமிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. படையினர் விமானக் குண்டு வீச்சையும் ஷெல் தாக்கு…

  10. செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 23:59 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருமலை கடற்படைத் தளம் மீதான ஆட்டிலறித் தாக்குதலையடுத்து இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கை அவசர அவசரமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாடியுள்ளார். முன்கூட்டியே நிரல்படுத்தப்படாதவகையில் அவசர அழைப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச, லெபனானில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளிற் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீட்பதில் இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்ததோடு, இன்று விடுதலைப்புலிகளால் திருக்கோணமலை கடற்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆட்லறித் தாக்குதல் அதனால் எழுந்துள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து இந்தியப் பிரதமருக்கு அறியத் தந்ததாகவும் தெரியவருகிறது. …

  11. மாவிலாறை நோக்கிய படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல் திருகோணமலை மாவிலாறு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். கல்லாறிலிருந்து இருமுனைகளில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் பெருமெடுப்பில் படையினர் நகர்வை தொடங்கியுள்ளனர். மங்கிபிரிட்ஜ் தளத்திலிருந்து தரைப்படையினர் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்த, விமானப்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக விமானங்கள் தாக்குதல்களை நடத்த தரைவழியாக படையினர் தமது வலிந்த தாக்குதல் நகர்வை தொடங்கினர். மாவிலாறு விடுதலைப் புலிகளின் முன்னரங்கப்பகுதி நோக்கிய நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப…

  12. கண்காணிப்புக்குழுவில் இருந்து சுவீடனும் வெளியேறுமென அறிவிப்பு - பண்டார வன்னியன் Tuesday, 01 August 2006 09:31 யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து செம்ரெம்பர் முதலாம் நாளிற்கு முன்பாக தமது நாட்டுப் பிரதிநிதிகளை திரும்பப் பெறப்போவதாக சுவிடன் அரசு உத்தியோக பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீதான தடை அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளை வெளியேற்றுமாறு விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். http://sankathi.com/content/view/4155/26/

  13. திருமலைக் கடற்படைத் தளம் மீதான ஆட்லறித் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள சிறீலங்கா அரசு [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 23:04 ஈழம்] [தாயக செய்தியாளர்] வட-கிழக்குப் போரரங்கிற்கான பிரதான போக்குவரத்து மற்றும் விநியோகத் தளமாகவும் திருமலைப் பிரதேசத்திற்கான பாதுகாப்பிற்கான இதயநாடியாகவும் விளங்கிய திருமலைக் கடற்படைத் தளத்தின் மீதான ஆட்டிலறித் தாக்குதல் சிறீலங்காப் படைத்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள

  14. வவுனியாவில் ஒட்டுப்படையினரால் பெண் சுட்டுக்கொலை. வவுனியா வேப்பங்குளப் பகுதியில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து தாக்குதலாளிகளால் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நகரப் பகுதியில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. வனியா தெற்று இலுப்பைக் குளப் பகுதியில் சிறீலங்கா துணைக் குழுவினர் நடத்திய தாக்குதலில் குடும்பப் பெண் பலியாகியுள்ளார். நள்ளிரவைக் கடந்து இன்று அதிகாலை இலுப்பைக்குளம் கோவிற்குளம் பகுதிகளுக்கு உள்ள வீடுகளுக்கு உட்புகுந்த துணைக்குழுவினர் பெருமளவு சொத்துக்களை களவாடியுள்ளனர். துணைக்குழுவினர் சூறையாடலை தடுத்து நிறுத்த முயன்ற குடும்பப் பெண்ணை கோரமான முறையில் சுட்டுக்கொன்றுள்ளன…

    • 1 reply
    • 1.7k views
  15. போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு: வைகோ [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 20:25 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு பக்க பலமாக இருப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் ம.தி.மு.க கட்சி விழா ஒன்றில் நேற்று திங்கட்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் போராடி வருகிற நிலையில், தற்போது அங்கும் மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர் மூண்டால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தாய்த் தமிழகத்தையே திரட்டுவோம் என்றார் வைகோ. http://www.eelampage.com/?cn=27929

    • 2 replies
    • 1.4k views
  16. மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் 7 இராணுவ அதிகாரிகள் பலி! சிறீலங்கா படையினர் நடத்திய ஒப்பிரேசன் மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் கொல்லபட்ட 20 இராணுவத்தினரில் 7 பேர் அதிகாரிகள் என சிறீலங்கா படைத் தலைமையகம் உறுதி செய்துள்ளது. ஒரு மேஜர் தர அதிகாரியும் ஒரு கப்டன் தர அதிகாரியும் 5 கோப்பிரல் தர அதிகாரிகளும் ஏனையவர்கள் சாதாரண படையினர் எனவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 6 replies
    • 1.8k views
  17. சிறுப்பிட்டி சங்கக் கடை கவலரன் தீக்கிரை. கரவெட்டி இமையாணன் பகுதியைச் சோந்த கௌரூபன் படு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறுப்பிட்டி சங்கக் கடை சந்தியில் இருந்த இராணுவக காவலரன் இனம் தெரியாதவர்களினால் தீயிடப்பட்ட கொழுத்தப் பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இராணுவத்தினர் குறிப்பிட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை பொது மக்கள் கண்டு கொண்டதைத் தொடாந்து இராணுவத்தினர் குறிப்பிட்ட காவலரனுக்கு கடந்த இரண்டு நாட்களாக வருவதில்லை இத்தகைய நிலமையில குறிப்பிட்ட இராணுவ காவலரன் தீயிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலையைத் தொடர்ந்து பாரிய அளவில் பொது மக்கள் ஆத்திரமுற்று இருப்பதுடன் பதட்டமான நிலமையும் அப்பகுதியில் காணப்படுகின்றது. http…

  18. கிளைமோர் வைத்து ஈ.பி.டி.பினர் பொதுமக்களிடம் அகப்பட்டனர். யாழ்ப்பாணம் அரியாலை கனகரெட்னம் வீதியில் கிளைமோர் வைத்த ஈ.பி.டிபி யினர் பொது மகக்ளிடம் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்கள். கடந்த வியாழக்கிழமை நண்பகல் நேரம் இராணுவப் பொலிஸ் பாதுகாப்புடன் தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இருவர் கனகரெட்னம் வீதியில் உள்ள சங்கக் கடை மற்றும் தனியார் கடைக்கு அண்மையாக உள்ள அரச மரத்தில் கிளைமேரைப் பொருத்திவிட்டுச் சென்றுள்ளார்கள். அதனைக் கண்னுற்ற அப்பகுதி மக்கள் திரண்டு சத்தமிட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் வைத்த கிளைமோரை வைத்த ஈ.பி.டி.பி.யினர் பொது மக்கள் முன்னிலையில் எடுத்துச் சென்றுள்ளார்கள். இன்று யாழ்ப்…

  19. மும்முனைத் தாக்குதல் முறியடிப்பு: 6 படையினர் பலி! 3 போராளிகள் வீரச்சாவு. திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பகுதியை நோக்கி முன்ன…

  20. திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ஊர்தி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதில் 18 படையினர் கொல்லப்பட்டிருக்காலாமென ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாகப் பயணித்த படையினரின் ஊர்தியே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும், வீதியோரக் குண்டோ அல்லது கண்ணிவெடியோ இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெ

    • 3 replies
    • 1.8k views
  21. களுத்துறையில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறி எரிகிறது. தென்னிலங்கை களுத்துறை பகுதியில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியுள்ளது. இன்று நள்ளிரவு 11:30 மணிக்கு களஞ்சியம் வெடித்து சிதறி எரிகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. பதிவு.கொம்

    • 4 replies
    • 2.3k views
  22. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 11 ஆம் திகதி அமெரிக்கா விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 11 ஆம் திகதி வெள் ளிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்கவில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார். சுமார் மூன்று வார காலங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில உத்தியோகபூர்வமான சந்திப்புக்களையும் மேற்கொள்ளவிருக்கின் றார் . ஜனாதிபதியுடன் அமை ச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கலாக சுமார் 100பேரை இக்குழுவினர் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கையி லிருந்து புறப்படவிருப்பதுடன் ஜனாதிபதி 10 ஆம் திகதி காலை அமெரிக்கா புறப்படவிருப்பத…

    • 0 replies
    • 1.4k views
  23. MISSION WATER SHED படை நடவடிக்கை முறியடிப்பு: 15 படையினர் பலி! 50 மேற்பட்டோர் படுகாயம். திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பக…

  24. சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்தை முறித்துக் கொண்டு போரை தொடங்கி விட்டது- எழிலன். இன்று காலை திருமலையில் சிறிலங்கா படையினர் மேற் கொண்ட படை நடவடிக்கை மூலம் சிறி லங்கா அரசு போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு போரை தொடங்கி விட்டதாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி முன்கூட்டி அறிவித்த பின்னரே யுத்த நிறுத்தத்தில் இருந்து விலக முடியும் ஆனால் சிறிலங்கா அரசு எந்த அறிவித்தலும் இல்லாமல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படை நகர்வுகளை மேற்கொண்டதன் மூலம் யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு விட்டது என்றார். http://www.pathivu.com/in…

  25. மாவிலாறு அணையை திறக்காமல் கொழும்புக்கு திரும்பப் போவதில்லை - ஹெல உறுமய சூளுரை [30 - July - 2006] [Font Size - A - A - A] மாவிலாறு அணைக்கட்டை திறந்து கிராமவாசிகளுக்கு மீண்டும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளாமல் அப் பகுதிக்குச் சென்றிருக்கும் தமது கட்சி உறுப்பினர்கள் கொழும்புக்கு திரும்பப் போவதில்லையென ஜாதிக ஹெல உறுமய சூளுரைத்துள்ளது. ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான ஓமல்பே சோபித தேரரினால் இதற்கான அறிவித்தல் நேற்று சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. மாவில் ஆற்றுக்கால்வாயை விடுதலைப் புலிகள் வழிமறித்து 9 நாட்கள் கடந்து விட்டது. இதனால் சேருநுவர பிரதேசத்திலுள்ள 30 ஆயிரம் ஏக்கர்களுக்கு அதிகமான விளைச்சல் நிலம் நாசமடைந்துள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கவென …

    • 13 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.