ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
கிளைமோர் வைத்து ஈ.பி.டி.பினர் பொதுமக்களிடம் அகப்பட்டனர். யாழ்ப்பாணம் அரியாலை கனகரெட்னம் வீதியில் கிளைமோர் வைத்த ஈ.பி.டிபி யினர் பொது மகக்ளிடம் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்கள். கடந்த வியாழக்கிழமை நண்பகல் நேரம் இராணுவப் பொலிஸ் பாதுகாப்புடன் தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இருவர் கனகரெட்னம் வீதியில் உள்ள சங்கக் கடை மற்றும் தனியார் கடைக்கு அண்மையாக உள்ள அரச மரத்தில் கிளைமேரைப் பொருத்திவிட்டுச் சென்றுள்ளார்கள். அதனைக் கண்னுற்ற அப்பகுதி மக்கள் திரண்டு சத்தமிட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் வைத்த கிளைமோரை வைத்த ஈ.பி.டி.பி.யினர் பொது மக்கள் முன்னிலையில் எடுத்துச் சென்றுள்ளார்கள். இன்று யாழ்ப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
2 ஆம் இணைப்பு) திருமலை கடற்படைத் தளம் மீது எறிகணைத் தாக்குதல்- டோராப்படகு தாக்கியழிப்பு: 8 கடற்படையினர் பலி [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 14:52 ஈழம்] [புதினம் நிருபர்] திருகோணமலை நகரில் உள்ள சிறிலங்கா கடற்படை தலைமையக தளம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணிமுதல் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையினரின் டோராப்படகு மீது விடுதலைப் புலிகளின் ஐந்து தாக்குதல் படகுகள் நடத்திய தாக்குதலில் டோராப் படகு முற்றாக அழிந்துள்ளது. இதில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடற்படைத் தலைமையகத்துக்குள் 36 எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின…
-
- 44 replies
- 7.9k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 11 ஆம் திகதி அமெரிக்கா விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 11 ஆம் திகதி வெள் ளிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்கவில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார். சுமார் மூன்று வார காலங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில உத்தியோகபூர்வமான சந்திப்புக்களையும் மேற்கொள்ளவிருக்கின் றார் . ஜனாதிபதியுடன் அமை ச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கலாக சுமார் 100பேரை இக்குழுவினர் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கையி லிருந்து புறப்படவிருப்பதுடன் ஜனாதிபதி 10 ஆம் திகதி காலை அமெரிக்கா புறப்படவிருப்பத…
-
- 0 replies
- 1.4k views
-
-
களுத்துறையில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறி எரிகிறது. தென்னிலங்கை களுத்துறை பகுதியில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியுள்ளது. இன்று நள்ளிரவு 11:30 மணிக்கு களஞ்சியம் வெடித்து சிதறி எரிகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. பதிவு.கொம்
-
- 4 replies
- 2.3k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ஊர்தி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதில் 18 படையினர் கொல்லப்பட்டிருக்காலாமென ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாகப் பயணித்த படையினரின் ஊர்தியே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும், வீதியோரக் குண்டோ அல்லது கண்ணிவெடியோ இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெ
-
- 3 replies
- 1.8k views
-
-
:arrow: திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலன் புலிகளின் குரலுக்கு வழங்கிய கருத்துப்பகிர்வு..
-
- 25 replies
- 8.7k views
-
-
MISSION WATER SHED படை நடவடிக்கை முறியடிப்பு: 15 படையினர் பலி! 50 மேற்பட்டோர் படுகாயம். திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பக…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்தை முறித்துக் கொண்டு போரை தொடங்கி விட்டது- எழிலன். இன்று காலை திருமலையில் சிறிலங்கா படையினர் மேற் கொண்ட படை நடவடிக்கை மூலம் சிறி லங்கா அரசு போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு போரை தொடங்கி விட்டதாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி முன்கூட்டி அறிவித்த பின்னரே யுத்த நிறுத்தத்தில் இருந்து விலக முடியும் ஆனால் சிறிலங்கா அரசு எந்த அறிவித்தலும் இல்லாமல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படை நகர்வுகளை மேற்கொண்டதன் மூலம் யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு விட்டது என்றார். http://www.pathivu.com/in…
-
- 0 replies
- 1.2k views
-
-
எல்லைக் கோட்டைக் கடக்க முடியாத அளவுக்கு புலிகளின் வியூகங்கள் பதில் தாக்குதல்களும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க எல்லைக்கோட்டைக் கடந்து, ஒரு அங்குலம் கூட சிறீலங்கா படைகள் முன்னேற முடியாத அளவிற்கு, போராளிகளின் பாதுகாப்பு வியூகங்களும், பதிலடி தாக்குதல்கள் அமைந்திருப்பதாக திருமலை தகவல்கள் கூறுகின்றன. மாவிலாறு அணைக்கட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் சிறீலங்கா படையினர் நிலையெடுத் திருப்பதாக, கடந்த இரண்டு நாட்களாக அரசாங்கம் அறிவித்து வருகின்ற போதும், தொடர்ந்து பழைய நிலைகளிலேயே சிறீலங்கா படைகள் இருப்பதாக, சுயாதீனமாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் கூறுகின்றன. மாவிலாறு அணைக்கட்டிற்கும், சிறீலங்கா படைகள் நிலைகொண்டுள்ள கல்லாறு பகுதிக்கு மத்தியில், ஐந்து கிலோ…
-
- 0 replies
- 969 views
-
-
மும்முனைத் தாக்குதல் முறியடிப்பு: 6 படையினர் பலி! 3 போராளிகள் வீரச்சாவு. திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பகுதியை நோக்கி முன்ன…
-
- 8 replies
- 3k views
-
-
மாவிலாறு கால்வாயை 24 மணித்தியா லங்களுக்குள் திறந்து விடுவோமென அரசு நேற்றுமுன்தினம் அப்பகுதி மக்களுக்கு உறுதி யளித்தித்திருந்தது. 24 மணித்தியாலக் கெடு நேற்றுமாலையுடன் முடிவடைந்தது. இது தொடர்பாக கேட்டபோதே அமைச்சர் கெஹே லிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித் தார். இதேவேளை, அப்பகுதியில் காணப்படும் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ந்தும் விமா னத் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும் வாசிக்க........... http://www.uthayan.com/pages/news/today/01.htm :P :P
-
- 2 replies
- 1.4k views
-
-
மாவிலாறை நோக்கிய படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல் திருகோணமலை மாவிலாறு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். கல்லாறிலிருந்து இருமுனைகளில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் பெருமெடுப்பில் படையினர் நகர்வை தொடங்கியுள்ளனர். மங்கிபிரிட்ஜ் தளத்திலிருந்து தரைப்படையினர் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்த, விமானப்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக விமானங்கள் தாக்குதல்களை நடத்த தரைவழியாக படையினர் தமது வலிந்த தாக்குதல் நகர்வை தொடங்கினர். மாவிலாறு விடுதலைப் புலிகளின் முன்னரங்கப்பகுதி நோக்கிய நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப…
-
- 45 replies
- 6.1k views
-
-
நாகர்கோவிலிருந்து சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல் [திங்கட்கிழமை, 31 யூலை 2006, 06:50 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ் மக்கள் மீது சிறிலங்காப் படையினர் போரைத் தொடக்கி விட்டதன் வெளிப்பாடாக இன்று திங்கட்கிழமை நாகர்கோவிலில் இருந்து செறிவான எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். நாகர்கோவில் படைத்தளப் பகுதியிலிருந்து படையினர் இன்று காலை 4 மணிமுதல் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு பகுதிகள் மீது படையினர் விமானத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஐந்தாம் நாளான இன்று காலை நாகர்கோவிலில் இருந்து படைத்தரப்பு செறிவான எறிகணை மற்றும் ஆட்டிலெற…
-
- 1 reply
- 879 views
-
-
இராணுவ நகர்வு மூலம் மாவிலாறை திறக்க முயன்றால் பெரும் போர் மூழும்: சி.எழிலன் எச்சரிக்கை [திங்கட்கிழமை, 31 யூலை 2006, 07:09 ஈழம்] [திருமலை நிருபர்] மக்களின் உயிர்வாழ்வுக்கான கோரிக்கைகளை நிராகரித்து இராணுவ நகர்வு மூலம் மாவிலாறை திறக்க முயன்றால் பெரும்போர் மூழும் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். மாவிலாறை நோக்கி சிறிலங்கா படைத்தரப்பு முன்னேறியிருப்பதாக அரச தரப்பு வெளியிட்டுள்ள செய்திகள் தொடர்பாக "புதினம்" இணையத்தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாவிலாறுக்கும் சிங்களப்பகுதியான கல்லாறுக்கும் இடையில் ஐந்து கிலோ மீற்றர் தொலைவு இருக்கின்றது. கல்லாறுக்கு தெற்…
-
- 0 replies
- 913 views
-
-
எடை போடுவதில் தவறிழைத்ததால் எதிர்கொண்ட அனுபவங்கள் இலங்கையில் நமது பிராந்திய வல்லாதிக்க நாடான இந்தியாவின் நேரடித் தலையீடு என்ற அத்தியாயம் முடிவுற்று ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகி விட்டது. அந்த நேரடித் தலையீட் டுக்கு வழி செய்த இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி நேற்றுமுன்தினத்துடன் 19 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. இந்நிலையில், அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட வரலாற் றுப் புறச்சூழலை ஒரு தடவை சிந்தனையில் மீட்டுப் பார்ப்பது இன்றைய அரசியல் நிலைவரங்களையும் ஓரளவுக்கு எடை போடுவதற்கு உதவக் கூடும். இலங்கை விடயத்தில் இந்திய இராஜதந்திரம் அப்போது அடிசறுக்கித் தோற்றுப் போனமைக்கு இரண்டு தனிநபர் களின் ஆளுமைகளையும், திறமைகளையும், குணவியல்பு களையும் எடைபோடுவதில் இந்தியத் தலைமைக…
-
- 0 replies
- 957 views
-
-
மாவிலாறை கைப்பற்ற நந்தா மல்லவராச்சி தலைமையில் படைகள்: கேகலிய ரம்புக்வெல [திங்கட்கிழமை, 31 யூலை 2006, 05:51 ஈழம்] [காவலூர் கவிதன்] திருகோணமலை சேருநுவர பிரதேசத்திலுள்ள கல்லாறு சிலங்கா இராணுவ முகாமிலிருந்து தரைமார்க்கமாக படைகளை நகர்த்தி, மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன், மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி தலைமையில் படைகள் தயார்படுத்தப்படுகின்றன. மாவிலாறு பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் தமது படைகள் தற்போது நிலைகொண்டிருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, திங்கட்கிழமை அதிகாலை, தமது படைகள் தரைமார்க்கமாக நகரத் தீர்மானித்திருப்பதாகவும் கருத்துக் கூறினார். அத்துடன், தற்போது ஈச்சிலம்பற்று பகுதி கிராமங்க…
-
- 0 replies
- 966 views
-
-
விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை கண்காணிப்புப் பணி இடைநிறுத்தம்: கண்காணிப்புக் குழு [திங்கட்கிழமை, 31 யூலை 2006, 05:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தமது கண்காணிப்புப் பணியை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது. விமானத் தாக்குதல்கள் மற்றும் ஏனைய படை நகர்வுகளுக்கும் தாக்குதல்களுக்கும் மத்தியில் கண்காணிப்பாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளமையினாலேயே இவ்வாறானதொரு முடிவை கண்காணிப்புக் குழு எடுத்துள்ளது என்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொஃப்பினூர் ஓமர்சன் கொழும்பு நாளேடு ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இருதரப்பிற்கும் இடைய…
-
- 0 replies
- 880 views
-
-
ஞாயிறு 30-07௨006 22:27 மணி தமிழீழம் [நிருபர் மகான்] வீரச்சாவடைந்த போராளிகளை நினைவுகூர்ந்து இன்றும் நாளையும் தமிழர் தாயகத்தில் துக்க முன்னெடுப்பு. மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களில் சிறீலங்கா வான்படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த பேராளிகளை நினைவுகூர்ந்து தமிழர் தாயகப் பகுதியில் முழு அளவிலான துக்க முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதிகள், வர்த்த நிலையங்கள், செயலகங்களில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு சோக கீதங்கள் ஒலிக்கப்படுகின்றன. நாளை தினமும் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளையும் துக்க முன்னெடுப்புக்கள் கடைப்பிடிக்கப்படவுள்ளது. நன்றி-பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 30-07-2006 20:41 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] திருமலையில் படைநகர்வு ஆரம்பம் உக்கிர மோதல்கள் புலிகளால் முறியடிப்பு. திருமலை ஈச்சிலம்பற்று மாவியாற்றைக் கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்கும் படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று பகல் வான்படையினரின் உதவியுடன் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளைப் போட கல்லாறுப் பகுதியிலிருந்து மாவிலாறு பகுதியை நோக்கி பாரிய படை நகர்வை சிறீலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளால் படையினரின் நகர்வு நோக்கியும் இராணுவ முகாங்கள் நோக்கியும் மூர்க்கமான எறிகணைத் தாக்குதி படையினரின் படையினரின் படைநகர்வை சூனியப் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் முறியடி…
-
- 4 replies
- 1.9k views
-
-
மாவிலாறு அணையை திறக்காமல் கொழும்புக்கு திரும்பப் போவதில்லை - ஹெல உறுமய சூளுரை [30 - July - 2006] [Font Size - A - A - A] மாவிலாறு அணைக்கட்டை திறந்து கிராமவாசிகளுக்கு மீண்டும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளாமல் அப் பகுதிக்குச் சென்றிருக்கும் தமது கட்சி உறுப்பினர்கள் கொழும்புக்கு திரும்பப் போவதில்லையென ஜாதிக ஹெல உறுமய சூளுரைத்துள்ளது. ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான ஓமல்பே சோபித தேரரினால் இதற்கான அறிவித்தல் நேற்று சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. மாவில் ஆற்றுக்கால்வாயை விடுதலைப் புலிகள் வழிமறித்து 9 நாட்கள் கடந்து விட்டது. இதனால் சேருநுவர பிரதேசத்திலுள்ள 30 ஆயிரம் ஏக்கர்களுக்கு அதிகமான விளைச்சல் நிலம் நாசமடைந்துள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கவென …
-
- 13 replies
- 3.2k views
-
-
புலிகள் யாழ் குடாநாட்டை கைப்பற்ற எந்த நேரமும் தாக்குதலை தொடுக்கலாம்-கொழும்பு நாளோடு. திருமலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மற்றும் தேனகத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் என்பற்றை அடுத்து விடுதலைப் புலிகள் எந்தநேரமும் யாழ் குடாநாட்டை கைப்பற்றும் தாக்குதலை தொடுக்கலாம் என சிறி லங்கா படைத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறி லங்கா படையினரின் தாக்குதல்களில் இதுவரை 16 விடுதலைப் புலிகள் வீரச் சாவடைந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் மிகவும் மோசமாக இருக்கும் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளின கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எல்லை மீறி படையினர் நுழைந்தால் பதில் தாக்குதல்-ஐ.இளந் திரையன். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சிறிலங்காபடையினர் தரை வழியாக முன்னேறி தாக்குதல் நடத்தினால் அதனை போர்ப்பிரகடனமாகவே கருத வேண்டியிருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந் திரையன் தெரிவித்தார். அதேநேரம், முன்னேறி தாக்குதல் நடத்தும்படையினரை விரட்டுவதற்கான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய களநிலைவரம் தொடர்பாக கொழும்பு தமிழ் நாளோட்டிற்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல: சரத் பொன்சேகா [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 09:44 ஈழம்] [ச.விமலராஜா] 7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலைமையகத் தாக்குதலில் உயிர் தப்பிய சரத் பொன்சேகா சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பியுள்ளார். கொழும்பில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிறிலங்கா இராணுவத்தின் தற்போதையை நிலைமைகள், தொடரும் பல்வேறு தாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசாங்க ஊடகமான சண்டே ஓப்சர்வருக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: கேள்…
-
- 5 replies
- 1.6k views
-
-
கொபி அனானின் சிறப்பு தூதுவராக சந்திரிகா? ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானின் சிறப்பு தூதுவர் பொறுப்பை பெறுவதில் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திலிருந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு இது தொடர்பிலான கருத்து கேட்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தை மகிந்தவிடம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒப்படைத்துள்ளார். சந்திரிகாவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சந்திரிகாவின் நியமனம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதுதான் அவரது பணி குறித்த முழு விவரங்களும் வெளியாகும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்…
-
- 0 replies
- 956 views
-
-
துணை இராணுவ குழுக்களின் நடவடிக்கைகளால் துயரில் மூழ்கிக் கிடக்கும் அம்பாறை [30 - July - 2006] [Font Size - A - A - A] -மங்களன்- கிழக்கில் இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் துணை ஆயுத கும்பல்களினதும் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அங்குள்ள மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் அதன் பேச்சாளர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இத்தகைய ஆயுத குழுக்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு ஊடக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தே குறித்த பிரதேசங்களில் நிகழும் சம்பவங்கள் இதற்கு எத…
-
- 0 replies
- 798 views
-