Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடத்தல் நோக்கத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கபடவுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுகின்றது. இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவட…

  2. பாராளுமன்ற உறுப்பினர் 10 ஆயிரம் ரூபா பிணையில் விடுவிப்பு நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஷ்டித்ததாக கூறி கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் 10 ஆயிரம் ரூபா பிணையில் இன்று (13) விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆஜராகிய நிலையில் அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேசும் நீதிமன்ற…

    • 2 replies
    • 265 views
  3. சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டவருக்கு அச்சுறுத்தல் By VISHNU 14 OCT, 2022 | 03:26 PM கரைச்சி நிருபர் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் கிளிநொச்சி கிளையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கிளிநொச்சி திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி தர்மராசா என்பவரே சட்டவிரோத மணல் அகழ்வோரால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக இம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். கடந்த…

  4. வடக்கு – கிழக்கு தவிர்ந்த நாட்டின் அனைத்து மாட்டங்களிலும் மஹிந்த தலைமையில் கூட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கூட்டம் நாவலப்பிட்டி நகரில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு தவிர்ந்த நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அடுத்த தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடர் நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1304849

    • 1 reply
    • 240 views
  5. காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைகிறது – எரிக் சொல்ஹெய்ம் காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்துள்ள சொல்ஹெய்மிடம் ஆங்கில ஊடகமொன்று மின்னஞ்சலில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் மண்சரிவு மற்றும் தீவிர வானிலை அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் காலநிலை மாற்றத்தை கையாள்வது பசுமையான வேலைகளை உருவாக்குவதற்கும் அனைத்து இலங்கையர்களையும் ஒரு ஒழுக்கமான நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு கொண்டு …

    • 11 replies
    • 540 views
  6. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நாய் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வல்வெட்டித்துறைக்குச் சென்றிருக்கின்றார். அங்கு வளர்ப்பு நாயொன்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயைக் கண்டதும் குரைத்ததுடன் அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது. நாய் உயிரிழப்பு அதன்போது இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நாய் உயிரிழந்து…

  7. இலங்கையின் பொருளாதார நெருக்கடி - செஞ்சிலுவை அதிகாரியின் எச்சரிக்கை என்ன? By RAJEEBAN 14 OCT, 2022 | 05:28 PM இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவு கடன்வாங்குதல் குறைந்தளவு உணவை உண்ணுதல் நாளாந்த உணவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் அலெக்ஸாண்டர் மத்யூ தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் இலங்கை குறித்த அறிக்கைகள் ஏற்கனவே வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இலங்கையின் நலிவடைந்த மக்கள் எவ்வாறு விரக்தி நிலையை நோக்கி தள்ளப்படுகின்றனர் என்பதை நேரடியாக தெரிவிக்கும்…

  8. ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிப்பு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகாதமைக்கான நியாயமான காரணத்தை பாதுகாப்பு தரப்பு முன்வைக்கத் தவறியதையடுத்து, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்தத…

  9. மஹிந்த மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது – லொகான் ரத்வத்த மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார். பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவரை வீட்டுக்கு போகுமாறு மக்கள் பணிக்கவில்லை. அவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினைய…

  10. திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்க முடியாது - பனைசார் உற்பத்தியாளர்கள் By VISHNU 14 OCT, 2022 | 02:58 PM யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் வடிசாலையை, ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய, முழுமையான நிதியை தாம் வழங்குவதாகவும், பனைசார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவது தொடர்பில், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 13 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தனர். திக்கம் வடிசாலையை, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்த, அரசியல் காரணங்கள் தடையாக இருந்தமையால், அங்கிருந்த …

  11. “எனது மகன் எனக்கு வேண்டாம்" என கடிதம் எழுதி மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்! By VISHNU 11 OCT, 2022 | 01:13 PM "எனது மகன் எனக்கு வேண்டாம்" என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி " எனது மகன் எனக்கு வேண்டாம்" என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி, தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து பொலிஸ…

  12. யாழ். கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் By Vishnu 14 Oct, 2022 | 11:59 AM யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொல் பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்றிட்டம் யாழ்.கோட்டை பகுதியில் இன்று (14) வெள்ளி காலை 7.30 மணியளவில் ஆரம்பித்தது. இதன் மூலம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகப் பிறழ்வான நடவக்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. …

  13. யாழில் 111 கைக்குண்டுகள் மீட்பு எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள காணியை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர். இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்றைய தினம் காலை 6மணி முதல் யாழ். மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் …

  14. யாழ்நகரத்தில் கட்டடமொன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு ; 10 இளைஞர்கள் தடுத்து வைத்து விசாரணை By T. SARANYA 14 OCT, 2022 | 11:04 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியை சேர்ந்த மிராஜ் என அழைக்கப்படும் 31 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அருகில் உள்ள விருந்தினர் விடுதி பணியாளர்கள் 10 பேரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில்…

  15. 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளன – சுகாதார அமைச்சு நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின் சுவாச நோய்களுக்காக வாங்கப்பட்ட சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கை கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் பாவிக்கும் பழக்கம் ஏற்பட்டதென்றும் அதன் காரணமாக அனைத்து சுவாச நோய்களும் குறைந்துவிட்டன என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/…

  16. அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை! அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போதே, 2ஆம் திகதி எதிர்ப்பில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1304807

  17. வெடுக்குநாறி மலை தொடர்பான வழக்கில் இருந்து ஆலயம் நிர்வாகம் விடுதலை! வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை ஆயர்படுத்துமாறு வவுனியா நீதவான் பொலிஸார் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக…

  18. காணொளிகளை காண்பித்து 7 வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை யாழில் கைது! ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7 வயதான மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து , மது போதையில் மகளை வன்புணர்ந்தார் என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டியினால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளன…

  19. எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் ! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரோடு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டும் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சர்வதேச பருவநிலை தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பு மிக்கது என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும் பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலை தொடர்பான தலைமைத்துவத்திற்கான தொ…

  20. தேர்தல் நிதி தொடர்பான புதிய விதிமுறைகள் விரைவில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலில் செலவிடும் பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகளவான பணத்தை செலவழித்து விருப்புரிமைகளை பெற்றுக்கொள்வதன் காரணமாக இந்த புதிய சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் செலுத்தியுள்ளார். . 1977 தேர்தலில், செலவு செய்யக்கூடிய பணம் மட்டுப்படுத்தப்பட்டது மற்றும் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட விருப்பு வாக்கு முறையின் கீழ், சில வேட்பாளர்கள் ஒரு தேர்தலுக்காக 20 முதல் 50…

  21. ரஷ்யா தொடர்பில் இலங்கை எடுத்துள்ள தீர்மானம் உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இலங்கை உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை…

    • 0 replies
    • 615 views
  22. இலங்கையின் வளர்ச்சி கணிப்புகளை தரமிறக்குவதாக IMF அறிவிப்பு! சர்வதேச நாணய நிதியம் 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வளர்ச்சி கணிப்புகளை தரமிறக்குவதாக அறிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்ட அண்மைய அறிக்கைகளின்படி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுருங்குவதை சர்வதேச நாணய நிதியம் அவதானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிப்பது குறித்து கவனம் செலுத்தும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் சர்வதேச நாணய நிதியமும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023ல் 3 வீதத்தால் அதிகரிக்கும் எ…

  23. கொழும்பு – தாமரை கோபுரத்திற்கான மொத்த செலவு குறித்த விபரம் கொழும்பு – தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பகிர்ந்துகொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக் கோபுரத் திட்டத்தின் செலவு விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்கள், தாமரை கோபுரத்தின் டிசம்பர் 31 வரையிலான காலத்துக்குரிய மொத்த செலவை உள்ளடக்கியுள்ளது. அந்த தகவல்களுக்கமைய, 113,600,000 அமெரிக்க டொலர்கள் கட்டுமான செலவினங்களுக்காக செலவிடப்பட்டுள்ளன. …

  24. 75வது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு ‘ஒன்றாக எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் 75வது சுதந்திரத் தினக் கொண்டாட்டங்கள் காலி முகத்திடல் மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. சுதந்திர தின விழா, சைக்கிள் சவாரி, பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள், வரலாற்று மற்றும் அரிய புத்தகக் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையப்படுத்தி, குறைந்த வருமானம் பெறும் குட…

  25. சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிக்க முயலும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா எச்சரிக்கை! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்ரேலியா எச்சரித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவுஸ்ரேலியாவின் எல்லை பொலிஸ் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற்கொள்ளையர், பயங்கரவாதம் மற்றும் மக்கள் கடத்தல் போன்ற நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.