Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலம்பெயர் இலங்கையர்களை... சந்தித்தார், ரணில். பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1300128

  2. சார்ள்ஸ் மன்னரை... சந்தித்தார், ஜனாதிபதி ரணில்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்குச் சென்றிருந்தபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். https://athavannews.com/2022/1300120

    • 10 replies
    • 809 views
  3. தேசியத் தலைவர்... பிரபாகரனின், வீட்டு காணியில்... சிவாஜிலிங்கம் சிரமதானம்! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீடு அமைந்திருந்த காணியினை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் ஊர் மக்கள் இணைந்து சிரமதானம் மூலம் துப்பரவு பணிகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டுள்ளது. காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப் பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. பற்றைகளினால் டெங்கு நுளம்பு…

  4. பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனா செயற்படவில்லை- பாலித கோஹன By RAJEEBAN 20 SEP, 2022 | 12:37 PM பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனா செயற்படவில்லை என தெரிவித்துள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் கப்பல்களை கையாள்வதற்கு விசேட கொள்கை அவசியமில்லை என தெரிவித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு கப்பல்களை கையாள்வதில் புதிய அணுகுமுறை ஒருங்கிணைப்பு அவசியம் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்து வரும் நிலையிலேயே சீனாவிற்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார் டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள…

  5. இந்தியா எங்கள் சகோதரன் சகோதரி - சீனா எங்களின் நெருங்கிய நண்பன் என மகிந்த தெரிவிப்பார் - மிலிந்த மொராகொட By RAJEEBAN 20 SEP, 2022 | 12:41 PM முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு சகோதரர்களிற்கு இடையிலான உறவை போன்றது என தெரிவிப்பார் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் ஆனால் இந்தியா எங்களின் சகோதரன் சகோதரி போன்றது என மகிந்த ராஜபக்ச தெரிவிப்பார் என இந்தியாவிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் மிகமிக நெருங்கிய நண்பன் ஆனால் இந்தியா எங்கள் சகோதரன் சகோதரி என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எப்போதும் தெரிவிப…

  6. திருமணம் செய்வதாக இலங்கை பெண்களை ஏமாற்றி நிதிமோசடி செய்த நைஜீரிய ஆசாமி கைது 20 SEP, 2022 | 12:28 PM போலி அடையாளங்களை காண்பித்து இலங்கைப் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த குறித்த நைஜீரியப் பிரஜை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த சந்தேகநபர் சமூக ஊடகங்கள் ஊடாக ஐரோப்பாவில் வசிக்கும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் போன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளி…

  7. மத ஸ்தலங்களுக்காக நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் இல்லை - காஞ்சன விஜேசேகர By T. SARANYA 20 SEP, 2022 | 02:14 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் கிடையாது. மத தலங்கள் தமது மாதாந்த மின்கட்டணத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்ள வேண்டும். மத தலங்களுக்கு மின்கட்டணத்தின் ஊடாக நிவாரணம் வழங்கும் தீர்மானத்தை எமது அமைச்சால் எடுக்க முடியாது. நிதியமைச்சு நிவாரணம் வழங்க தீர்மானித்தால் அதனை செயற்படுத்த தயார் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பிரதிசபாநாயகர் தலைமையில் …

  8. தோட்டப்புறங்களில் இதுவரை 4258 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது - பிரசன்ன ரணதுங்க By T. SARANYA 20 SEP, 2022 | 02:05 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) தோட்டப்புறங்களில் வாழும் குடும்பங்களுக்கு இந்திய உதவி திட்டத்தின் கீழ் இதுவரை 4,258 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்திருக்கின்றன. இன்னும் 1,461 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன என நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (20) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹின் குமாரி விஜேரத்னவினால் கேட்கப்பட்டடிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர…

  9. முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் கசிப்புடன் கைது By DIGITAL DESK 5 20 SEP, 2022 | 01:36 PM பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற உத்தியோகஸ்தர் கசிப்பினை உடைமையில் வைத்திருப்பதாக யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டதுடன் , அவரிடம் இருந்து ஒரு தொகை கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/a…

  10. சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தோட்டப்பகுதி மக்கள் - வேலுகுமார் By T. SARANYA 20 SEP, 2022 | 02:20 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந்து நீர் சுரண்டப்பட்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் தோட்டப் பகுதி மக்களும், அங்குள்ள பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (20) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்று…

  11. திருக்கோணேஸ்வரத்தில் அத்துமீறிய செயற்பாடுகள்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சம்பந்தன் வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற அத்துமீறிய செயற்பாடுகள் மற்றும் திருகோணமலை மாவட்ட எல்லைகளை மாற்றுவதற்கான முயற்சிகளை சுட்டிக்காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். பல தலைமுறைகளாகவும் நூற்றாண்டுகளாகவும் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங…

  12. ”சர்வதேச நாடுகள் தமிழர்களை ஏமாற்றுகின்றன” சர்வதேச நாடுகள் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தமிழர்களின் விடையங்களை பயன்படுத்துகின்றன என்று மிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இதன்படி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடக்காயாக பயன்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன் வைத்துள்ளார். வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தம…

  13. உணவுப் பொருட்களின், விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில்... முதல் 5 இடங்களில் இலங்கை..! 2022ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கையும் இடம்பெற்றுள்ளது 53 நாடுகளில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம், உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில், இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 90.9 சதவீதமாக பத்து மடங்கு அதிகரித்து…

  14. @பெருமாள் தியாகதீபம் திலீபனின்... நினைவேந்தலை, எழுச்சியாக... முன்னெடுக்க தீர்மானம்- வேலன் சுவாமிகள்! தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்தார். தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக நல்லை ஆதீனத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இந்த நினைவேந்தலை மக்கள் எழுச்சியாக புரட்சியாக முன்னெடுக்கும் விதமாக நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில தியாக தீபம் நினைவேந்தலினை ஒழுங்கு செய்ய 15 பேர்கொண…

  15. இலங்கை அரசாங்கம்... குற்றமிழைத்துள்ளது: ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான... மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு. இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் சர்வதேச மனித உரிமைகள் பாரதூரமான மீறலுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பாக வாழும் உரிமை கருத்துச் சுதந்திரம் மற்றும் பயனுள்ள தீர்வுக்கான உரிமை ஆகியவற்றை மீறியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் வெளிப்படையாகப் பேசும் ஊடகவியலாளர் ஒருவர் மீதான துணிச்சலான தாக்குதலுக்க…

  16. மாபியாக்களை... கட்டுப்படுத்துவதற்கு, எதிர்காலத்தில்... கடுமையான நடவடிக்கை – வியாழேந்திரன். மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட்டுப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக,வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன அலுவலகத்தில் விவசாய துறைக்கான தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் வர்த்தக,வாணிபத்துற…

  17. வெளி நாட்டுக்கு செல்லும் பெண்களை... விபச்சாரிகளாக்கும், கடத்தல்காரர்கள் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை. ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக பெண்களை அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய பதினெட்டு நாடுகளுக்கு விசேட புலனாய்வுக் குழுக்களை அனுப்ப ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி புலனாய்வு சேவை, குடிவரவுத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகார…

  18. எதிர்காலத்தில்... இன்னும் கூடுதலான பிரச்சினைகளை, சந்திக்க நேரிடும் – சபாநாயகர் நாட்டில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அழுத்தங்கள் தற்காலிகமாக தணிந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி ஹபரகடவில் இடம்பெற்ற சமய வைபவம் ஒன்றில் உரையாற்றிய சபாநாயகர், இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால், மகா சங்கத்தினரும் அரசாங்கமும் ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “விகாரைகள் உட்பட அனைவருக்கும் மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குடிநீர் கட்டணமும் மூன்று மடங்கு உயர…

  19. இலங்கை அரசாங்கம் குற்றமிழைத்தது- பத்திரிகையாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு By RAJEEBAN 19 SEP, 2022 | 09:31 PM இலங்கை சிரியா மெக்சிக்கோ ஆகிய நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்த தனது தீர்ப்பில் நிரந்தர மக்கள்தீர்ப்பாயம் ,அரசாங்கம் தனது செயற்பாடுகள் மற்றும் புறக்கணிப்புகளினால் வாழ்வதற்கான உரிமை கருத்துச்சுதந்திரம் மற்றும் அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாமை ஆகியவற்றிற்கான சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவற்றை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. ht…

  20. திலீபனின், நினைவேந்தலை மேற்கொள்வதற்கு... பொதுக் கட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது! தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேரைக் கொண்ட பொதுக் கட்டமைப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த (சனிக்கிழமை)நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. கடந்த கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஏழு பேர் கொண்ட பொதுக் கட்டமைப்…

  21. தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பனாமுறவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பனாமுற காவல்துறை பிரிவில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல தங்க நெக்லஸ் கொள்ளைகள் தொடர்பிலான விசாரணையை அடுத்து இந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பிரகாரம் கல்தோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த குரகல சோதனைச் சாவடியில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டவராவார். அவருக்கு வயது 32. இந்த காவல்துறை உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கு…

  22. துஸ்பிரயோக கூடாரமாக மாறும் யாழ் கோட்டை பகுதி! 1 மணி நேரம் முன் Pavan யாழ் நகரில் உள்ள கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபடுவதாக யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இது குறித்து மேலும் கூட்டத்தில் தெரிவிக்கையில், முனியப்பர் ஆலயத்திற்கு பின்பாகவும் கோட்டைக்கு வெளிப்புறத்திலும் உள்ள பகுதிகளிலும் பல பாடசாலை சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். காதலர்கள் என்ற போர்வையில் அங்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர். கண்காணிப்பு நடவடிக்கை அதேவேளை, பண்ணைப் பாலத்தின் கீழ் பகுதியிலும் இது போன்று சிறுமிகள் துஸ…

  23. உலகில்... உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இலங்கை 4ஆவது இடத்தில்…! செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 90.9 சதவீதமாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உணவுப் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரி…

  24. இலங்கைக்கு... கடன் வழங்குவதில், சீனாவைவிட... இந்தியா முன்னிலையில் உள்ளதாக, தெரிவிப்பு. இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இந்த வருடத்தின் நான்கு மாதங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன் தொகை 968 மில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு சீனா 947 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. https://athavannews.com/2022/1299787

    • 25 replies
    • 1.4k views
  25. நாட்டில்... தேசிய துக்க தினம், பிரகடனம். பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (திங்கட்கிழமை) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளதோடு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1299695

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.