Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், நகைகளைத் தேடி யாழ். இருபாலையில் அகழ்வு By DIGITAL DESK 5 17 SEP, 2022 | 10:59 AM யாழ்ப்பாணம், இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த அகழ்வுப் பணி இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது . இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ…

  2. சிறுவர் வியாபாரம், சிறுவர்களை யாசகத்திற்கு பயன்படுத்தலை கட்டுப்படுத்துவது அனைவரினதும் கூட்டுப்பொறுப்பு By DIGITAL DESK 5 17 SEP, 2022 | 12:05 PM சிறுவர் வியாபாரம் மற்றும் சிறுவர்களை யாசகத்திற்கு பயன்படுத்தலை கட்டுப்படுத்துவதற்கான துறைசார் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை (16) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் சிறுவர்களைப் பயன்படுத்தி யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, பதிவில்லாத விடுதிகளை கண்காணித்து சட்டநடவடிக்கையெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பொது…

  3. வவுனியாவில் ஆசிரியரை தாக்க முயற்சி ; மாணவர் காயம் By T. SARANYA 17 SEP, 2022 | 11:58 AM (கே.பி.சதீஸ்) வவுனியாவில் நேற்று இரவு தனியார் கல்வி நிலையத்தில் ஆசிரியர் ஒருவரைத் தாக்க முற்பட்ட மாணவர்களினால் ஆசிரியருக்கு அருகில் நின்ற மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தலையில் காயமடைந்த குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (16) மாலை வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் அங்கு நின்ற மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டனர். இதை அங்கு நின்ற ஆசிரியர் அவதானித்துள்ளதுடன் தனது கல்வி நிலையத்துடன் தொடர்பு…

  4. மட்டக்களப்பில் வெடிபொருட்கள் மீட்பு By DIGITAL DESK 5 17 SEP, 2022 | 11:33 AM மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கடற்கரையில் வெடிப்பொருட்கள் சிலவற்றை நேற்று வெள்ளிக்கிழமை (16) மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே யுத்த காலத்தின் போது காளிகோயில் வீதி கதிரவெளி கடற்கரையில் விடுதலைப்புலிகளின் கடற்படை முகாம் அமைந்திருந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், மகசின் கூடுகள் மற்றும் வெடிப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளனர். கைக்குண்டு-01, பரா-01, கண்ணிவெடி01, 50 மி.மி ரக தோட்டாக்கள், தோட்டக்கள் போடும் பட்டி -100, 750 தோட்டக்கள், ரி - 56 ரக துப்பாக்கி ரவைக்…

  5. யாழ்ப்பாணத்தில்... விடுதலைப் புலிகளின், புதையலை தேடி... அகழ்வுப்பணி ஆரம்பம் !! யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரியிருந்தனர். நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று சனிக்கிழமை புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்துள்ளதாகவும், அகழ்வு பணிகளுக்காக க…

  6. இலங்கை மாணவர்கள்... 7 பேர் மீட்கப் பட்டுள்ளனர் – உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி. கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ரஷ்யப் படையினரால் கார்கிவ் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகளை விடுவித்த பின்னர் உக்ரேனியப் படைகளால் இலங்கையர்கள், குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 7 இலங்கையர்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2022/1299570

  7. இலங்கைக்கு... மேலும், 3.5 மில்லியன் டொலர் உதவி ! இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே கடந்த மே 20 ஆம் திகதியன்று 3 மில்லியன் டொலர்களை ஜப்பான், இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக வழங்கியிருந்தது இந்தநிலையில், நேற்று வழங்கப்பட்ட 3.5 மில்லியன் டொலர்களையும் சேர்த்து 6.5 மில்லியன் டொலர்களை ஜப்பான், இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த உதவிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம்,ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படுகின்றன. இதேவேளை இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்குவதற்கு இந்த உதவி பங்களிக்கும் என ஜப்பான் அரசாங்க…

  8. நாட்டில், இடம்பெறும் கைதுகள் யாவும்... சட்ட பூர்வமாக இடம் பெறுகின்றது – ஜனாதிபதி. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நான் தீர்வை காணவேண்டும் என விரும்புகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடங்களுக்கு வழங்கியுள்ள பேட்டியிலே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அரசாங்க இல்லங்களை எரிப்பதன் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியின் இல்லத்தை ஆக்கிரமித்தவர்கள் அல்லது எனது வீட்டை எரித்தவர்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை கண்டிருக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தை நாடுகங்கள் என நானே தெரிவித்தேன் இத…

  9. குருந்தூர் மலை பகுதியில்... விவசாய நிலங்கள், ஆக்கிரமிப்பு – சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம். குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அப்பகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டுள்ளார். இதன்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்ட சார்ள்ஸ் எம்.பி. புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரித்துள்ளனர் எனவும், இதன…

  10. சட்ட விரோத மின்சாரத்தை... நீண்ட காலமாக பெற்று வந்த, மூவருக்கு பிணை! சட்டவிரோத மின்சாரத்தை நீண்டகாலமாக பெற்று வந்த மூவர் கைதாகி பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நீண்டகாலமாக மின்சார மின்மானியில் நுட்பமாக மாற்றம் செய்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்று வந்த மூவர் அடையாளம் காணப்பட்டு கொழும்பில் இருந்து வந்த மின்சார சபை புலனாய்வு பிரிவினரால் கைது (வியாழக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் கைதான மூவரும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சான்று பொருளான மின்மானியுடன் இன்று (வெள்ளிக்கிழமை) கல்முனை நீதிவான் …

  11. பெருந்தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு அவர்களது பூர்வீகத்துடனோ, இன அடையாளத்துடனோ தொடர்புபட்டதல்ல - ஐ.நா விசேட அறிக்கையாளருக்கு இலங்கை அரசாங்கம் பதில் By T YUWARAJ 16 SEP, 2022 | 10:03 PM (நா.தனுஜா) இலங்கையில் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் இனரீதியான பரிமாணத்தைக் கொண்டிருப்பதனை அவதானிக்கமுடிவதாக ஐ.நா விசேட அறிக்கையாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் 54 ஆவது பந்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறையைச்சேர்ந்த சிங்கள சமூகம் உள்ளடங்கலாக அனைத்து இன சமூகங்களினதும் வாழ்க்கைத்தரத்தை மேலும் மேம்படுத்தமுடியும் என்பது குறித்து நாம் அறிந்திருக்கின்றோம். இருப்பினும் இத…

  12. நாட்டின் பெரும்பான்மையான மக்களின் என்னை ஆதரிக்கின்றனர் – ஜனாதிபதி By RAJEEBAN 17 SEP, 2022 | 08:55 AM நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நான் தீர்வை காணவேண்டும் என விரும்புகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஏபிசியின் வெளிநாட்டு செய்தியாளருக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தை நாடுகங்கள் என நானே சரியான விடயங்களை தெரிவித்தேன்,இதன் காரணமாகவே என்னை ஆதரிப்பது குறித்து நம்பிக்கை காணப்படுகின்றது எனகுறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே என்மீது நம்பிக்கையுள்ளது நான் செய்துமுடிப்பேன் என்ற நம்பிக்கை காண…

  13. நாட்டில் ஜனநாயகம் இல்லாமைக்கான பிரதான காரணி அரசியல் கட்சிகளே - மஹிந்த தேசப்பிரிய By DIGITAL DESK 5 16 SEP, 2022 | 09:44 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் இன்று நூறு சதவீதம் ஜனநாயகம் இல்லை. அரசியல் கட்சிகளுக்குள் உள்ளக ஜனநாயகம் இன்மையே இதற்கான பிரதான காரணியாகும். அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வரம்பற்ற அதிகாரம் காணப்படுகின்றமை இதில் பெரும்பங்கினை வகிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , சிறந்த அறிவுள்ள இளைஞர்கள் காணப்படுகின்ற போதிலும், அவர்களுக்கு வா…

  14. ஜனாதிபதி ரணிலின் அரசியல் தந்திரம் பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - நாலக கொடஹேவா By T YUWARAJ 16 SEP, 2022 | 10:10 PM (இராஜதுரை ஹஷான்) சுதந்திர மக்கள் காங்கிரசின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளமை பொய்யானது. ஆளும் தரப்பில் மிகுதியாகவுள்ள உறுப்பினர்களை பாதுகாக்க அவர் கவனம் செலுத்த வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தந்திரம் பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப…

  15. கொழும்பில் வீடுடைத்து திருடும் 2 பேர் கைது ; நகைகள், பொருட்கள் உள்ளிட்டவை மீட்பு By T. SARANYA 16 SEP, 2022 | 02:28 PM (எம்.எப்.எம்.பஸீர்) கொள்ளுபிட்டி, பம்பலபிட்டி, வெள்ளவத்தை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளை அச்சுறுத்தி வந்த, வீடுடைத்து திருடும் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை, கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஐ.ஆர்.சி. எனப்படும் நாட்டில் குற்றவாளியாக ஏற்கனவே பதிவுப் பட்டியலில் இருக்கும் நபர் ஒருவர் உட்பட இருவரையே இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் கூறினர். சந்தேக நபர்களிடமிருந்து உருக்கப்பட்ட 20 பவுன் தங்கம், 24 கரட் தங்க முலாம் பூசிய புராதன பெறுமதி மிக்க தட்டு,ஒட்டகத்தின் உ…

  16. இலங்கையில் 4 பேர் கொண்ட குடும்பத்தின் நாளொன்றுக்கு உணவு தேவைக்கு 2,500 ரூபா ! நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நாளாந்த உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக, குறைந்து 2,500 ரூபா செலவாவதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்க ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு, உணவு தேவைக்காக நாளாந்தம் 4,000 ரூபா செலவாவதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார். 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 27,000 பேர் கடும் போசாக்கு குறைப்பாட்டுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 27,000 சிறார்கள் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

  17. நெதர்லாந்து மற்றும் சவூதிக்கான புதிய தூதுவர்கள்! வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை இன்று (16) கையளித்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 2 வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராக பொனி ஓர்பாக் (Bonnie Horbach) மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவராக காலித்ஹமூட் நஸார் அல்தஸான் அல்கஹ்தானி (Kahalid Hamoud Nasser Aldasan Alkahtani ) ஆகியோர் புதிதாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=165700

  18. “நெருக்கடியான நேரங்களிலும், அவற்றுக்கு ஏற்றவிதமாக நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் திறன் எங்களிடம் உள்ளது” இலங்கையின் தற்போதைய நெருக்கடியான பொருளாதாரப் பின்னணியின் போதும், கடந்த ஜூலை மாதம் நாட்டின் வர்த்தக இருப்பானது வியக்கத்தக்க விதத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த சாதனைப் புள்ளிவிபரம், இறக்குமதிச் செலவுகளில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதையும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆடைத் துறையின் தொடர்ச்சியான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த வாரம் Shippers’ Academyஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில், கூட்டு ஆடை சங்கங்களின் மன்றத்தின் (JAAF) செயலாளர் நாயகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுந…

  19. முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) அழைப்பாணை வௌியிட்டுள்ளது. அருட்தந்தை சிறில் காமினி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஏசுதாசன் நடேசன் ஆகியோர் தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் கவனக்குறைவு தொடர்பான தனிப்பட்ட மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=1656…

  20. யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் தடம்புரள்வு : கரையோர ரயில் சேவை பாதிப்பு By Digital Desk 5 16 Sep, 2022 | 11:05 AM யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த அதிவிரைவு குளிரூட்டப்பட்ட ரயில் நேற்றிரவு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தடம்புரண்டுள்ளது. இதனால் கொழும்பில் கரையோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ரயில் பாதை பாரியளவில் உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடம்புரண்ட ரயிலை மீண்டும் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்…

  21. இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படாததையும் உறுதி செய்வோம் - ஜனாதிபதி ரணில் By Digital Desk 5 16 Sep, 2022 | 10:27 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் யுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும் தற்போது நாம் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அதற்கமைய வடக்கு மற்றும் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் பாதிக்கும் முறுகல் நிலை உருவாவதை நாம் விரும்பவில்லை. எந்தவொரு அதிகாரப் …

  22. இறுக்கமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானமொன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியே தீர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர் ஆற்றிய உரையை வரவேற்கின்றோம். அதேவேளை, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே வெளியிடப்பட்டி…

  23. நினைவேந்தல்களில் முரண்பட்டு... விடுதலைப் போராட்டத்தை, கொச்சைப் படுத்தாதீர்கள் – மாணவர் ஒன்றியம். விடுதலை போராட்ட வரலாற்றையும் உலக அரங்கில் கொச்சைப்படுத்தும் விதமான கீழ்த்தர விடயங்களை தவிர்த்து நம்போராட்ட வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள நாம் அதை இழிவுபடுத்த வேண்டாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,1987ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 15ம் திகதி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் அடங்கிய முக்கிய ஐந்து அம்ச கோர…

  24. யாழ்.பல்கலைக்கழகத்தில்... மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான, நிலையம் திறந்துவைப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையம் நேற்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் எதிர்பார்ப்புகளினை பூர்த்தி செய்வதற்காகவும், இந்நிலையம்…

  25. கட்டணம் செலுத்தாத... நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு, நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை! நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை 3 மில்லியன் ரூபாய் வரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு நீர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.