ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
கொக்கைன் வர்த்தகம் ; பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 6 பேர் கைது மன்னாரில் கைது By VISHNU 19 OCT, 2022 | 12:18 PM (எம்.வை.எம்.சியாம்) கொக்கைன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் மன்னார்-நுரைச்சோலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு களில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது கடந்த திங்கட்கிழமை கொக்கைன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நுரைச்சோலை பொலிஸ்…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
முலைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! By DIGITAL DESK 5 19 OCT, 2022 | 12:09 PM (எம்.வை.எம்.சியாம்) முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மல்லாவி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனிச்சாமிகுளம் பிரதேசத்தில் மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் எனவும் மல்லாவி பிரதேச…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
நவாலியில் பெண்ணுடன் தவறான உறவை பேணியவர், அப்பெண்ணின் மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் கைது! 19 OCT, 2022 | 11:15 AM குடும்ப பெண்ணொருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபர், அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருடன் 41 வயதான நபர் ஒருவர் தவறான உறவினை பேணி வந்துள்ளார் எனவும், இந்ந்நிலையில் அப்பெண்ணின் 13 வயதான சிறுமியையும் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. அது தொடர்பில் அறிந்த , அயலவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு …
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
துபாயில் பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் இலங்கை பெண்கள் Vhg அக்டோபர் 18, 2022 சட்டவிரோதமாக பெண்களை துபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் கொழும்பு ஆமர் வீதியில் பிரதேசத்தில் இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது. மோசடியில் சிக்கி நாடு திரும்பிய பெண் வழங்கிய தகவல் ஆமர் வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மோசடியில் சிக்கி, துபாய் சென்று, அங்கு விபத்துக்கு உள்ளாகி அங்கவீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய பெண்ணொருவர் வழங்கிய தகவல்களை அடுத்து இது தெரியவந்துள்ளது. ஆமர் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தான் சகல தரப்பினருக்கும் அறிவித்துள்ள போதிலும் இதுவைரை எவ்வித நடவ…
-
- 0 replies
- 258 views
-
-
காலைவார முற்படும் கட்சிகளுடன் கூட்டு பயணத்துக்கு இனி தயாரில்லை – மொட்டு கட்சி அறிவிப்பு! ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி தொடர்பில் இன்னும் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கட்சி செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கென கொள்கையொன்று உள்ளது. அந்த கொள்கையின் அடிப்படையில் தங்களது பயணம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதாரக் கொள்கையுடன் உடன்படக்கூடிய கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம் என குறிப்பிட்ட அவர், காலைவார முற்படும் கட்சிகளுடன் கூட்டு பயணத்துக்கு இனி தயா…
-
- 0 replies
- 166 views
-
-
கோட்டா தலைமையிலான அரசு கவிழ்வதற்கான சூழ்ச்சித் திட்டத்தை பஸிலே முன்னெடுத்தார் – விமல்! ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் டலஸ் அணியுடன் அடுத்த வாரம் பேச்சு நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அவசியமான அரசியல் கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இதற்கான நகர்வு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கவிழ்வதற்கு தாங்கள் சூழ்ச்சி செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். பஸிலே அதற்கான சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தார் எனவும் விமல் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1305702
-
- 0 replies
- 233 views
-
-
தீவகங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு என பேசப்படும் நிலையில் இந்திய துணைத்தூதுவர் நெடுந்தீவு விஜயம்! யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன் போது, கல்வி, பொது உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நெடுந்தீவு பிரதேச செயலர் மற்றும் அரச அதிகாரிகளுடன் சிவில் சமூக உறுப்பினர்களுடன் இந்திய துணைத் தூதுவர் கலந்துரையாடினார். நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர், இந்திய புலமைப்பரிசில் பற்றி விளக்கமளித்ததோடு அங்கு மாணவர்களுக்கு பணப்பரிசுகளையும் வழங்கிவைத்தார். தீவகப்பகுதிகளில் சீன நாட்டினு…
-
- 0 replies
- 560 views
-
-
பலாலியில் 13 ஏக்கரை விடுவித்து, யாழில் 1,617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை!! வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கு பலாலி அந்தோணிபுரம் பகுதியில் காணப்படும் 13 ஏக்கர் அரச காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக இணைக்கப்பட்டுள்ள இ. இளங்கோவனின் பங்கேற்புடன் பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலையே அவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த 13 ஏக்கர் காணி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்றன. அவற்றினை விடுவிக்க பலாலி இராணுவ தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இறுதி முடிவு தேசிய பாதுகாப…
-
- 0 replies
- 212 views
-
-
50 வீதமான குடும்பங்கள் தங்களது உணவில் இறைச்சி, மீன்களை கைவிட்டுள்ளன! இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன முன்னெடுத்திருந்த ஆய்வின் நிறைவிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நோயாளர்களும் குறைந்தளவிலான மருந்துகளையே பயன்படுத்தி வருகின்றமையும் குறித்த ஆய்வின் ஊடாக தெரியவந்துள்ளது. டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 2022ஆம் ஆண்டு 200 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக வீழ்ச்சியடைந்த நிலையில் உணவு பொருட்களின் விலை 50 வீதத்தாலும், ஏன…
-
- 0 replies
- 157 views
-
-
இலங்கையின் நிதி நெருக்கடி நம்பகதன்மை மிக்க நிதிதிட்டத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது- உலக வங்கி அதிகாரி By RAJEEBAN 18 OCT, 2022 | 02:53 PM இலங்கையின் நிதி நெருக்கடி நம்பகதன்மை மிக்க நிதிதிட்டத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது என உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் பாரிஸ் ஹடாட் ஜெர்வோஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நெருக்கடியின் போதும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதனை வீணடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கொவிட்பெருந்தொற்று நிலைமை உருவாகும் வரை இலங்கை மோசமான வறுமையை இல்லாதொழிக்கும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ப…
-
- 4 replies
- 287 views
- 1 follower
-
-
நாட்டில் இரு புதிய நுளம்பு இனங்கள் அடையாளம் ! 17 OCT, 2022 | 01:15 PM இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) பூச்சியியல் திணைக்களத்தினால் இலங்கையில் இரண்டு புதிய நுளம்பு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குலெக்ஸ் சின்டெலஸ் (Culex sintellus ) மற்றும் குலெக்ஸ் நியாயின்ஃபுலா (Culex niyainfula ) ஆகிய இரு நுளம்பு இனங்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்தார். பொதுவாக தாய்லாந்து மற்றும் இந்தியாவில் காணப்படும் குலெக்ஸ் சின்டெலஸ் (Culex sintellus ), இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நுளம்பு இனம…
-
- 1 reply
- 362 views
- 1 follower
-
-
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் By VISHNU 18 OCT, 2022 | 08:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த மின்சக்தி வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் காலை முதல் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாத பிரதி வாதங்களை முன்வைத்து வந்தனர். இந்த சட்ட மூலத்துக்கு எதிராகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் கருத்து தெரிவித்திருந்தனர். இறுதியில் சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள்…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
யாழில் வேலை வாய்ப்புக்காக 19ஆயிரம் இளையோர் காத்திருப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ் மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க,மகேசன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சனையானது தேசிய மட்ட வேலையில பிரச்சினைகளை பார்க்க அதிக உயர்வாக காணப்படுகின்றது, 21 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தில் வேலை யற்றவர்களாக உள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த தகவல் தெரிவிக்கின்றன யாழில் கடந்த வருடம் 7.5 வீதமாக காணப…
-
- 1 reply
- 155 views
-
-
தரமற்ற எரிபொருள் இறக்குமதி : தங்கையை காண்பித்து அக்காவை மணம் முடிப்பதற்கு ஒப்பானது என்கிறார் கபீர் ஹசீம் By DIGITAL DESK 5 18 OCT, 2022 | 04:30 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்) எரிபொருள் விலைமனுக்கோரல் மற்றும் இறக்குமதியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்தோம். பெறுகையின் போது தரமான எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகிறது, ஆனால் தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது தங்கையை காண்பித்து அக்காவை மணம் முடித்து கொடுப்பதற்கு ஒப்பானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செ…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள் வெளியாகும் - கல்வி அமைச்சர் By DIGITAL DESK 5 18 OCT, 2022 | 05:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) வாய்மூல விடை க்கான நேரத்தின் போது இரத்தினபுரி மாவட்ட எம்,பி காமினி வலேகொட எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். காமினி வலேகொட எம்.பி. தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாத நிலையில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதால் பெ…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
நீச்சல் தடாகத்தில் இருந்து வெளிநாட்டவர் சடலமாக மீட்பு By T. SARANYA 18 OCT, 2022 | 02:27 PM வாதுவையில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் இருநு்து வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரே இன்று (18) காலை இவ்வாறு ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (17) மாலை ஹோட்டலுக்கு வருகை தந்த 43 வயதான குறித்த வெளிநாட்டவர் இன்று காலை நீச்சல் தடாகத்தில் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesa…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த சபையின் உறுப்பினர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள், தமிழ் கட்சிகள் மற்றும் நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த…
-
- 4 replies
- 635 views
- 1 follower
-
-
இலங்கை அரச தொலைகாட்சி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் மின்சாரம் துண்டிப்பு! இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று இன்று ( திங்கட்கிழமை) காலை துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல மில்லியன் ரூபா வரையில் மின்கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், அதனை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை…
-
- 1 reply
- 160 views
-
-
திலினி பிரியமாலியிடம் வைப்பிலிட்டவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்! நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரிடம் பணத்தினை வைப்பிலிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுவரை கிடைத்த தகவலின்படி, அவர் ஏமாற்றிய தொகை 300 முதல் 500 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் நடிகைகள், பலம் வாய்ந்த வர்த்தகர்கள், மதத் தலைவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் திலினியின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. திலினி பிரியமாலி, பாதுகாப்புப் படை…
-
- 0 replies
- 171 views
-
-
இலங்கை கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல்..! சீனக் கப்பலொன்று நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுதினம் இலங்கை கடலுக்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காக இந்தக் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இடிபாடுகள் அகற்றப்படும் வரை இந்தக் கப்பல் இலங்கைப் பெருங்கடலில் பல மாதங்கள் இருக்கும் என்றும் அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். இதேவேளை, கப்பலில் தீப்பற்றியதையடுத்து சிதறிய 1700 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு நீர்கொழும்பு, பமுனுகமவிற்கு அருகில் உள்ள கழிவு சேமிப்பு முற்றத்தில…
-
- 0 replies
- 206 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்தனர்! தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்று (திங்கட்கிழமை) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். அதன் போது, நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் வடமாகாண ஆளுநருக்கு விளக்கமளித்தார். கோமகன் விளக்கமளிக்கையில், 10 தொடக்கம் 26 ஆண்டுகள் சிறைச்சாலைகளில் 46 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர்.அவர்களை விரைவாக விடுவிப்பதற்கு ஆவணை செய்ய வேண்டும். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேருக்கு வழக்கு நடைபெறுகின்ற நிலையில் 24 பேர் தண்டனை வழங்க…
-
- 0 replies
- 140 views
-
-
எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு. நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பொருளாதார மீட்சி, பசுமையான அபிவிருத்திகள் மற்றும் அரசியல் சீர்திர…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கை கடன் நெருக்கடி: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் வங்கதேசம் - கை கொடுக்குமா சீனா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHEHAN SEMASINGHE/TWITTER படக்குறிப்பு, ஷேஹான் சேமசிங்க இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் வில்லியம் ருஸ், பெரிஸ் சங்கத்தின் இணை தலைவர் இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் தற்போது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. கடனை பெற்றுக் கொண்ட பல நாடுகளிடம், இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை வ…
-
- 9 replies
- 440 views
- 1 follower
-
-
இலங்கையில் சீன இராணுவத்தின் அதிக பிரசன்னம் - தமிழ்நாடு கவலை By Rajeeban 17 Oct, 2022 | 10:51 AM - கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர் - இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அயல்நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை…
-
- 4 replies
- 357 views
-
-
யாழ்.வல்லையில் 3 பெண்களிடம் 10 பவுண் நகை வழிப்பறிக் கொள்ளை ! By NANTHINI 12 OCT, 2022 | 12:26 PM மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறிக் கொள்ளையிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வல்லைவெளிப் பகுதியூடாக செவ்வாய்க்கிழமை (ஒக் 11) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறி கொள்ளையர்கள், அந்தப் பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர்கள் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி உட்பட சுமார் 8 பவுண் நகைகளை வழிப்பறி செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதேவேளை இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்று ஒரு சில மணிநேரத்தில், வல்லைவெளிப் பகுதியூடாக மோட்டார் சைக்க…
-
- 1 reply
- 327 views
- 1 follower
-