ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
யாழில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபா தண்டம் யாழ்ப்பாணத்தில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கும்,சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கும் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மூன்று வர்த்தகர்களும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நேற்று நடாத்தப்பட்டது.இதன் போதே பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்கள் சிக்கியுள்ளனர். https://newuthayan.c…
-
- 3 replies
- 293 views
-
-
நாட்டைப் பற்றி சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைய வேண்டும் - இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா தேரர் நிலையான பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது எனவும், அதற்கு சர்வகட்சி ஆட்சி மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகாதலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை தேரரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று (04) பிற்பகல் இராஜகிரிய, கலபலுவாவ, கோதம தபோவன விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க …
-
- 1 reply
- 227 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், கட்சி பேதங்களை மறந்து ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியமையே கோத்தாபய ராஜபக்ஷ் செய்த தவறு என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க உரை காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நா…
-
- 1 reply
- 341 views
-
-
வருகிறார் கோட்டா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்தவாரம் வியாழக்கிழமை (11) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கான வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் அதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் இலங்கைக்கு வந்தவுடன் எங்கு தங்கப்போகின்றார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையாம், அது குறித்து தனது சகோதரர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும், அவருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தித்தருமாறும் முன்னாள் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், முன்னாள் ஜனா…
-
- 1 reply
- 662 views
-
-
ஜனாதிபதி இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியை சந்திக்கவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 3 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-இன்று-ஐக்கிய-மக்கள்-சக்தியுடன்-சந்திப்பு/175-301758
-
- 2 replies
- 199 views
-
-
சீரற்ற காலநிலை காரணமாக... 5 பேர், உயிரிழந்துள்ளனர் – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட விழிப்புணர்வு பிரிவின் பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சீரற்ற காலநிலையினால் 65 பிரதேச செயலகப் பகுதிகள…
-
- 0 replies
- 146 views
-
-
"கோட்டா கோகம" போராட்ட களத்தில் காணப்படும், சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது. காலி முகத்திடல் கோட்டா கோகம போராட்டகளத்தில் காணப்படும் சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது என சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த கூடாரங்கள் அகற்றப்படாது எனவும் அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1293740
-
- 2 replies
- 376 views
-
-
கோட்டாவைக் கைது செய்யுமாறு... வலியுறுத்தி, யாழில் சுவரொட்டிகள்! இலங்கையை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய தமிழனப் படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய் என்ற தொணியில் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை ஊழல்வாதிகளாக வெளிப்படுத்தும் சித்திரத்துடன் தென்னிலங்கை போராட்ட களங்கள் அமைந்திருந்த நிலையில், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை அவர்கள் தமிழினப்படுகொலையாளிகள் என்பதனை இந்தச் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1293756
-
- 7 replies
- 567 views
-
-
ஜோசப் ஸ்டாலின் கைது - ஐநா கவலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன். ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் - தண்டிக்ககூடாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/132844
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் வங்கிகளில் பல இலட்சங்கள் கடன் பெற்று சூரிய சக்தி மின் உற்பத்தில் ஈடுப்பட்டு வருகின்ற பொது மக்களுக்கு இலங்கை மின்சார சபை அவர்கள் உற்பத்தி செய்கின்ற அலகுகளுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கவில்லை என்றும் இதனால் வங்கிளை கடனை பெற்ற பொது மக்களை மாதாந்த கடன் தவணைப் பணத்தை செலுத்துமாறு நாளாந்தம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சூரிய சக்தி மின் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் வங்கிகளில் கடனை பெற்ற போது மாதாந்தம் சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் என எதிர்பார்த்த வருமானத்தை நம்பி மாதாந்த தவணைப் பணத்தை தீர்மானித்ததாகவும் ஆனால் இலங்கை மின்சார சபையின் கொடுப்பனவு மூன்று மாதங்களுக்கு மேல் தாமதம…
-
- 2 replies
- 288 views
- 1 follower
-
-
தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாமையால் மக்கள் பெரும் அசௌகரியம் தனியார் பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை சேவையில் ஈடுபடாமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அகில இலங்கை தனியார் பஸ்கள் நேற்று 4 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. ஒரு பஸ்ஸிற்கு 40 லீற்றர் டீசல் மட்டுமே விநியோகம் செய்வது முற்றிலும் போதாது என தெரிவித்து மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனால் அரச பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுகின்றன. அரச பஸ்கள் போதியளவு சேவையில் ஈடுபடாமையால் மக்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இன்றையதினம் அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் வீதிகளில் பஸ்களுக்காக காத்திர…
-
- 1 reply
- 209 views
-
-
காலத்தைக் கடத்தும்... அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு, கூட்டமைப்பினரும் ஒத்துழைப்பு- உறவுகள். இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு மீண்டும் துணைபுரிவதாகவே அமைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியார் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றங்களுக்கு காரணமானவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது, ஒற்றையாட்சி அரசாங்கத்த…
-
- 0 replies
- 186 views
-
-
யாழ் பழைய பூங்கா காணியை பொலிஸாருக்கு வழங்கத் துடிக்கும் ஆளுநர் August 5, 2022 யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் 5 பரப்பு காணியை பொலிசாரின் பயன்பாட்டிற்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அனுப்பிய கடிதம் தொடர்பில் பதிலளித்துள்ள மாவட்ட அரச அதிபர் பழைய பூங்காப் பகுதியானது ஓர் நம்புக்கை நிதியப் பொறுப்பிற்கு உட்பட்ட பகுதியாகும் எனவே அப் பிரதேசத்தில் இருந்து நிலம் வழங்க முடியாது எனப் பதிலளித்துள்ளார். https://newuthayan.com/961-2/
-
- 2 replies
- 248 views
-
-
இடைக்கால வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு! kugenAugust 5, 2022 செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு -செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் தெரிவித்த…
-
- 0 replies
- 160 views
-
-
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைகின்றன! கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. பருப்பு, சீனி , கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.600 ஆக இருந்த பருப்பு மொத்த விலை ரூ.410 ஆகவும், ரூ.330 ஆக இருந்த சீனியின் மொத்த விலை ரூ.270 ஆகவும், ரூ.215 ஆக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை ரூ.150 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 600 ரூபாவாக இருந்த வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாகவும், 1900 ரூபாவாக இருந்த மிளகாய் விலை 1300 ஆகவும் குற…
-
- 0 replies
- 78 views
-
-
கடந்த 2 மாதங்களில்... சுமார் 20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின! இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று(வியாழக்கிழமை) வரை 20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ள இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். https…
-
- 1 reply
- 216 views
-
-
தனிஸ் அலியின்... விளக்கமறியல், நீடிக்கப் பட்டது! தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஸ் அலியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலைக்குள் கைபேசி பயன்படுத்திய குற்றத்திற்காகவே மேலும் 14 நாட்கள் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1293614
-
- 0 replies
- 174 views
-
-
ஞானசார தேரரின், அறிக்கையினை... குப்பையில் போட வேண்டும் – ஹக்கீம்! பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான செயலணி அறிக்கையை குப்பை கூடையில் போடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews…
-
- 0 replies
- 310 views
-
-
சந்தேக நபர்களை கைது செய்ய... பொதுமக்களின் உதவியினை, நாடிய பொலிஸார்! மே 10ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். இதற்கமைய, சந்தேக நபர்கள் தொடர்பில் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கோரியுள்ளது. https://athavannews.com/2022/1293620
-
- 0 replies
- 130 views
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு... முழு வசதியையும், பாதுகாப்பையும்... வழங்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் இலங்கை பிரஜை என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறு…
-
- 8 replies
- 961 views
-
-
இங்கிலாந்திற்கு... விளையாட சென்ற, இரண்டு இலங்கையர்கள் மாயம்! 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்திற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை ஒருவரும் ஜூடோ அணியின் முகாமையாளர் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பர்மிங்ஹாம் மெடோபொலிடன் பொலிஸார் மற்றும் இலங்கை ஒலிம்பிக் குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அணியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2022/1293382
-
- 12 replies
- 1.2k views
-
-
“கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு வெள்ளிக்கிழமை (5 ஆம் திகதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் அதிகாரிகளால் பொது அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் போராட்டப் பகுதிகளி…
-
- 10 replies
- 1.2k views
-
-
நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறை – கல்கிசை இடையே இரவு நேர ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட் டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் சேவை ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீளவும் கொழும்புக்கு ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முன்னர் இரவு தபால் சாதாரண தொடருந்து சேவையாக நடத்தப்பட்ட இந்தச் சேவையில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இணைத்து வடக்குக்கான சேவையாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை – கல்கிசை இரவுநேர ரயில்சேவை ஆரம்பம் (newuthayan.com)
-
- 2 replies
- 383 views
-
-
கைது வேட்டை தொடர்ந்தால்... பெரும் போராட்டம், வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(4) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “புதிய அரசு மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எழ…
-
- 5 replies
- 436 views
-
-
யாழ்ப்பாணம் வல்லை பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - கார் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்லை பாலத்தில் இன்று 04 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் பெய்து வரும் மழை காரணமாக குறித்த பாலத்தில் வழுக்கும் தன்மை காணப்பட்டமையால் பாலத்தில் பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதியதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய கார் பாலத்தில் இருந்து விழுந்த போதிலும் சாரதி காயங்கள்…
-
- 0 replies
- 268 views
-