Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆடை தொழிற்சாலைகளை, மூடவேண்டிய நிலை! பொருளாதார நெருக்கடிகாரணமாக ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளதோடு, ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி, போன்றவற்றினால் ஆடை உற்பத்தி துறையானது பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் மற்றும் மின்சார நெருடிக்கடியினால் உரிய நேரத்தில் தங்களது உற்பத்திகளை வழங்க முடியாது போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேசத்திடமிருந்து இலங்கை பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தக வலய சேவையாளர்களின், த…

  2. 20 இற்கும் மேற்பட்ட... நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தாவ உள்ளதாக... தகவல்? புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளது. அத்துடன், ஆளுங்கட்சி பக்கம் உள்ள ஒரு குழு எதிரணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க, அலவத்துவல, அஜித் மன்னப்பெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோன்று ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஜி.எல…

  3. இந்நாட்டை... பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக... தற்போது பணங்களை வாரி வழங்கி வருகின்றன – மொட்டு கட்சி! போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே, தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள், இந்த சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையை தோல்வி கண்ட நாடாக மாற்றுவதற்கு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் சாகர காரியவசம் தெரி…

    • 6 replies
    • 570 views
  4. வெள்ளிக்கிழமை விடுமுறை... என்ற, சுற்றறிக்கை இரத்து. விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக... அரசாங்க ஊழியர்களுக்கு, வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை... உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2022/1293246

  5. சரியான முறையில்... இலங்கைக்கு பணம் அனுப்பினால், மேலும் 02 நன்மைகள் – மனுஷ வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சட்டப்பூர்வமாக பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையிலான இரு யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் யோசனைகளுக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ள பணத்தின் அடிப்படையில் புதிய கடமையற்ற கொடுப்பனவை அறிமுகப்படுத்துவது ஒரு ஆலோசனையாகும். புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இலங்கையர்களால் சட்டரீதியாக அனுப்பப்படும் பணத்தின் 50 வீதத்திற்கு சமமான பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அ…

  6. ஊழல் குற்றச்சாட்டில் இருந்து, விடுதலை: இன்று பதவியேற்கின்றார் நிமல் ! மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (02) மீண்டும் பதவியேற்கவுள்ளார். சமீபத்தில் ஜப்பானில் உள்ள தாய்ஸ் நிறுவனத்திடம் அவர், லஞ்சம் வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை கடந்த 6ஆம் திகதி இராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்…

  7. ரணில் விக்கிரமசிங்கவுடன்... பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு, தயார் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தமிழ் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, இராமநாதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் பேசுவதற்கு தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்…

  8. 22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு, அமைச்சரவை அனுமதி. உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்திற்கு அதிக பலத்தினை வழங்கும் வகையில் குறித்த அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1293203

  9. இலங்கைக்கு கஞ்சாவைக் கடத்திய படகு நடுக்கடலில் மூழ்கியதா ?: தொடர்ச்சியாக கரையொதுங்கும் கஞ்சா மூடைகள்: (லெம்பேட்) பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அடுத்தடுத்து கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்குவது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி சென்ற போது நடுக்கடலில் படகு மூழ்கியதில் படகில் இருந்த கஞ்சா மூட்டைகள் கடலில் விழுந்து கரை ஒதுங்கி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று முதலாம் திகதி திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கிய 96 கிலோ கஞ்சாவை இந்திய கடலோர பொலிஸார் பறிமுதல் செய்து போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இலங்கைக்கு மிக அருகாமையில…

  10. மக்கள் போராட்டங்களின் பின்னர் கரை ஒதுங்கிவரும் சடலங்களால் கொழும்பில் அச்ச நிலை ( எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக கரை ஒதுங்கும் அடையாளம் தெரியாத சடலங்களால் அச்ச நிலை உருவாகியுள்ளது. கொழும்பு நகரில் காலி முகத்திடலை மையப்படுத்தி பாரிய மக்கள் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் திகதி இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து அப்போராட்டங்கள் அடக்கு முறைமை ஊடாக கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக பரவாலக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான பின்னணியில், வெள்ளவத்தை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கரை ஒதுங்கிய சடலங்கள் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் திகதி வெள்ளவத்தை …

  11. இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரிப்பு http://www.samakalam.com/wp-content/uploads/2022/08/tourist-e1659345573273.jpg நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன் இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேச…

  12. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு... முழு வசதியையும், பாதுகாப்பையும்... வழங்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் இலங்கை பிரஜை என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறு…

  13. சீன கப்பல், இலங்கைக்கு: தீவிர கண்காணிப்பில்... இந்திய கடற்படை! ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் கப்பல் (யுவான் வாங் – 5) இம்மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் த…

  14. இளைஞர்களை உசுப்பேற்றி அம்பாறையில் வாக்குகளை பிரித்தவரை இப்போது காணவில்லை ? கூட்டமைப்பு எப்போதும் மக்களுடன் பயணிக்கும் : கலையரசன் MP By Sayanolipavan ஜனநாயகத்தின் பால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பயணித்து கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவு படுத்தும் கலந்துரையாடல்கள் வட கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெ…

  15. ரணிலின் அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்றது எம்.றொசாந்த் இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வ கட்சி அரசொன்றை அமைத்து முன்னோக்கி செல்வதன் ஊடாகவே சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்…

  16. கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை," என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். "அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை." என்றார் கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 அன்று தப்பியோடி தனது பதவியில் இருந்து விலகினார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கோட்டாபய-நாடு-திரும்புவதற்கு-உகந்த-நேரமல்ல-ரணில்/150-301454

  17. தேசிய ஒருமித்த அரசாங்கம், அமைக்கப்பட வேண்டுமானால்... எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடாது – முன்னாள் சபாநாயகர். குறுகிய காலத்திற்கு நாடாளுமன்றத்தில் தேசிய இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பின்வரிசை உறுப்பினர்களை ஈடுபடுத்துமாறு பொறுப்பானவர்களுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிகழ்வொன்றில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் சகோதரத்துவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என கூறியுள்ளார். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய க…

  18. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரையில்... எந்தவொரு அழைப்பும், விடுக்கப்படவில்லை – சம்பிக்க ரணவக்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கடிதம் ஒன்றை அனுப்பிய போதிலும், அதில் சர்வகட்சி அரசாங்கம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார். ஜனாதிபதியின் கடிதம் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தின் கீழ் இளைஞர்களை கைது செய்வதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப…

  19. அனைத்து மக்களையும்... பாதுகாப்பதே, எங்கள் நோக்கம் – பிரதமர் நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். சகல பிரஜைகளையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பர் என தெரிவித்தார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் முடிவுக்கு தாங்களும் கொள்கையளவில் உடன்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து முயற்சிகள…

  20. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஐவர் நுவரெலியாவில் கைது! கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியா, களுகலை – பொனஸ்டா பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருள்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிராகவே இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு நுவரெலியா நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார், அங்கு மேலும…

    • 1 reply
    • 262 views
  21. சீனாவின் உளவுத்துறை கப்பல் குறித்து ராதா கருத்து! சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கை வருவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் (31) இன்று ஊடக அறிக்கை ஒன்று வெளியிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தற்பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. குறிப்பாக அத்தியவசிய பொருட்களின் …

  22. ஜனாதிபதி பதவியை இதனால் தான் ஏற்றுக் கொண்டேன்! அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய பாதையில் பயணிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நேற்று (30) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் ப…

    • 3 replies
    • 415 views
  23. அமைதி இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது மோசடி, விரயம், ஊழல் போன்றவற்றைக் குறைத்தல் உள்ளிட்ட சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான விடயங்களை ஏற்படுத்தாமல் நெருக்கடிக்குள் சென்ற நாடு என்பதற்கு இலங்கையே உதாரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலாவில் இடம்பெறும் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை ஒன்றை ஆற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். அமைதிக்கான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான சர்வத…

  24. அதிகாரத்தை, அரச கட்டிடங்களை கைப்பற்ற வன்முறை, ஜனநாயகவிரோத வழிமுறைகளை பயன்படுத்தும் கட்சிகள், குழுக்கள் தடை செய்யப்படலாம் - அரச அதிகாரி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அல்லது அரச கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு வன்முறை ஜனநாயகவிரோத வழிமுறைகளை பின்பற்றும் எந்த குழுவும் அரசியல் கட்சியும் அமைப்;பும் தடை செய்யப்படலாம் என சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக மீண்டுமொரு முறை 9 ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு சில குழுக்கள் திட்டமிட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே தடை குறித்து தீவிரமாக ஆராயப்படுகின்றது. அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு ஆக்கிரமிப்பதற்கான சேதப்படுத்துவதற்கான முயற்சிகள் பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்…

  25. எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல் வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் டோக்கன் முறை போன்றவை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது என்றும் அன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற நெரிசல் ஏற்படக்கூடிய வகையில் ஒன்று கூட வேண்டாம் என்றும் வலுச்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அன்றைய தினம் முதல் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர கியூஆர் முறைமை அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, சட்ட விரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை 0742…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.