ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
வேட்புமனுக்களை... ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, நாளை முன்னெடுப்பு புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதன்படி, எதிர்வரும் 20ம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 140 views
-
-
இலங்கையில்... அவசரகாலச் சட்டம் அமுல்! பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவசரகாலச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1291408
-
- 8 replies
- 488 views
- 1 follower
-
-
ஜனாதிபதித் தெரிவு ; டலஸ் - சஜித் முன்வைக்கும் விடயங்கள் (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து உருவாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடத்திற்காக 4 பிரதான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவ்வாறு களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தமது தீர்மானம் குறித்து கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் இணைந்து வரலாற்றில் முதன் முறையாக ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என்ப…
-
- 0 replies
- 235 views
-
-
இலவசக் கல்வி, சுகாதாரத்திற்கான அரச உதவிகளை குறைக்குமாறு சர்வதேச நாணயநிதியம் நிபந்தனை விதிக்கலாம் - பாலித கோஹன எந்த அரசாங்கம் பதவியேற்றாலும் அது சீனாவுடன் நல்லுறவை பேணும் - இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் அதிகளவு பங்களிப்பினை வழங்கவேண்டும் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார். கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும் சர்வதேச நாணயநிதியம் இன்னமும் ஆரம்பகட்ட இணக்கப்பாட்டிற்கு வரவில்லை இலங்கைக்கு அதிகளவு கடன் வழங்கியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தக்கூடிய திட்டமொன்றை முன்வைக்கவேண்டும் என கோரப்படுகின்றன என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பா…
-
- 1 reply
- 243 views
-
-
’அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு போட்டியிடுகின்றனர்’ - சித்தார்த்தன் தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியில் இருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் நேற்று (16) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 33ஆவது வீரமக்கள் தினத்தில் கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய மக்களை பொறுத்த மட்டில் இந்த பொருளாதார கஷ்டம் என்பது புது விடயமல்ல. இது ஏற்கனவே எமது மக்கள் அனுபவித்த விடயம். எங்களுடைய மக்கள் நீண்ட க…
-
- 5 replies
- 454 views
-
-
இலங்கை திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி! நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பவுள்ளார். ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அது, அவருக்கும், அவரது மனைவிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு மாதத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.samakalam.com/இலங்கை-திரும்புகிறார்…
-
- 32 replies
- 1.9k views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? - அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம்தான் புதிய அதிபரைத் தேர்வு செய்யப்போகிறது. ஆனால் அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற தெளிவான முடிவு கிடைக்காத நி…
-
- 5 replies
- 495 views
- 1 follower
-
-
பொருளாதாரத் தடைகளால்... ரஷ்யாவை, மண்டியிட வைக்க முடியாது – பதில் ஜனாதிபதி ரணில். ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஒருபோதும் ரஷ்யா மண்டியிடாது என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யா உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மோதல் காரணமாக முழு உலகையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது எனவே உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்…
-
- 6 replies
- 476 views
- 1 follower
-
-
காலி முகத்திடலில், போராட்டம் தொடங்கி... இன்றோடு 100 நாட்கள் நிறைவு. கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது. இதேவேளை, போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வும் நேற்று இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது. இதன்போது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. https://athavannews.com/2022/1291362
-
- 10 replies
- 786 views
- 1 follower
-
-
தமிழர்களின் கருத்துக்களுக்கு... செவிசாய்க்கும் தலைவருக்கே, ஆதரவு – விக்கி தமிழ் சமூகத்தின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் தலைவருக்கே ஆதரவு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். சுதந்திரத்தின் பின்னரும் தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். 30 வருடங்களுக்கு மேலாக நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு மக்கள் போராட்டத்தின் பின்னராவது தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஆகவே தாம் புதிய ஜனா…
-
- 54 replies
- 2.5k views
-
-
பொதுமக்களை... ஒடுக்கும் இராணுவ அதிகாரிகளையே, அரசாங்கம் நம்பியுள்ளது – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு பொதுமக்களை ஒடுக்கும் இராணுவ அதிகாரிகளையே அரசாங்கம் நம்பியுள்ளது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. போராட்டக்கார்களுடன் கலந்துரையாடிய இராணுவ அதிகாரி பணி இடை நீக்கப்பட்டமை தொடர்பாக கொழும்பில் நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மக்களை அடக்கும் அதிகாரிகளே அரசாங்கத்திற்கு தேவை என்பதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தின் முன்பாக க…
-
- 1 reply
- 555 views
-
-
ரணில் விக்கிரமசிங்க... 140 வாக்குகளைப் பெறுவார் – ஐக்கிய தேசியக் கட்சி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் இடம்பெறும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 140 வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்தார். பொருளாதார மந்தநிலையில் உள்ள நாட்டிற்கு தேவையான கொள்கைகள் குறித்து ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கொண்டுள்ள அரசியல் அனுபவத்திற்காக அவருக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடைக்கும் என நம்புவதாக…
-
- 3 replies
- 273 views
-
-
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு... வலுவான கொள்கை தேவை – சர்வதேச நாணய நிதியம் வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் போருடன், உலக உணவு மற்றும் பொருட்களின் விலைகள் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், நிதி நிலைமைகள் எதிர்பார்த்ததை விட இறுக்கமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர் . இதேவேளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை தே…
-
- 0 replies
- 187 views
-
-
அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக... எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட, டலஸ் அழகப்பெரும முடிவு. அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வரலாறாக மாறியுள்ள மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது பிரதான இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் தானும் களமிறங்கவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை டலஸ் அழகப்பெருமவை கொண்டு வருவதில் முனைப்பு காட்டினாலும் கட்சியின் பொதுச்செயலாளர் ரணில் விக்ரமசிங்க…
-
- 0 replies
- 226 views
-
-
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விலகியதாக நாடாளுமன்றம் அறிவித்தது! July 16, 2022 இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 14ஆம் திகதி முதல் விலகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் ஜனாதிபதியை தெரிவு செய…
-
- 0 replies
- 315 views
-
-
இலங்கை நெருக்கடி: ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம்; தீவிரமடையுமா தணியுமா? - கள நிலவரம் எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து... 16 ஜூலை 2022, 03:21 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பிறகு போராட்டக்காரர்களின் பார்வை அதிபரின் பொறுப்புகளை ஏற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க மீது திரும்பியிருக்கிறது. "கோட்டாபய ராஜபக்ஷவைவிட ரணில் விக்கிரமசிங்க மிகவும் கவனமாக உத்திகளை வகுத்துச் செயல்படக்கூடியவர் என்பதால் அதற்கேற்றபடி போராட்டத்தை நாங்கள் நடத்த வேண்டியிருக்கிறது" என்கிறார் காலி முகத்திடல்…
-
- 2 replies
- 712 views
- 1 follower
-
-
இலங்கையில் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய மிக விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கப்பெற இந்தியா ஆதரவு (நா.தனுஜா) இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கின்றது. அதேவேளை ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றுக்கு அமைவாக சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை …
-
- 7 replies
- 542 views
- 1 follower
-
-
ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட்டால் 19 ஆம் திகதி அறிவிப்பு ! பலர் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு ! பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க இன்றைய சபை அமர்வில் சில முக்கிய விடயங்களை அறிவித்தார். அதன்படி, பாராளுமன்றத்திலுள்ள எந்தவொரு உறுப்பினருக்கும் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும். வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த சந்தர்ப்பத்தில் சபை அமர்வில் கலந்து கொண்டிருக்க வேண்டியது அ…
-
- 0 replies
- 297 views
-
-
அறிமுகமாகிறது எரிபொருள் ’பாஸ்’ வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் எனவும் அதற்கமைய ஒரு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் ஒரு வாகனம் பதிவு செய்யப்படவுள்ளதுடன், வாகனத்தின் சேஸ் எண் மற்றும் ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று …
-
- 4 replies
- 495 views
-
-
அரசியலமைப்புக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது – அஸ்கிரி பீடம் அரசியலமைப்புக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளையும் அமைதியான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டின் நன்மை கருத்தி பல தடவைகள் விடயங்களை முன்வைத்த போதும் அவதானம் செலுத்தப்படவில்லை எனவும் இதன் காரணமாக நாடு நாளுக்கு நாள் பேரழிவு நிலையை நோக்கி நகர்வதாகவும் பதிவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் அமைதியின்மையை மீண்டும் பாதிக்கும் அனைத்து காரணிகள் குறித்தும் அவதானம் செலுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர…
-
- 0 replies
- 174 views
-
-
இலங்கையில் பெற்றோலின் விலையை தற்போதுள்ள விலையில் இருந்து 110 ரூபாவால் குறைக்க முடியும் உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித இதனைத் தெரிவித்தார். உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை நாளொன்றுக்கு முன்னர் நூற்று நாற்பத்தைந்து டொலர்களாக இருந்த நிலையில் இன்று அதன் விலை 104 டொலர்களாக குறைந்துள்ளதாகவும் இதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து வரிகளையும் வசூலித்ததன் பின்னர், 92 ஒக்டே…
-
- 3 replies
- 213 views
- 1 follower
-
-
ரஞ்சன் ராமநாயக்கவின் துரிதப்படுத்துமாறு... பதில் ஜனாதிபதி ரணில், நீதியமைச்சருக்கு... அறிவுறுத்தல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய பதில் ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த செயன்முறை அவசரமாக எடுக்கப்படவுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் இரு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://athava…
-
- 9 replies
- 463 views
-
-
ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும்.. அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க இதுவரை தனது வேட்புமனுவை அறிவிக்காவிட்டாலும், நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டியில் அவர் களமிறங்குவார் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தால், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைய முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ள…
-
- 10 replies
- 616 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை, விரைவில் அறிவிப்போம் – விமல் வீரவன்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக அறிவித்துக்கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான அவர்களின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஒவ்வொருவருடனும் கலந்துரையாடப்படும் என வீரவன்ச கூறினார். அதன்படி ஒவ்வொரு வேட்பாளர்களின் தனிப்பட்ட திட்டத்தை பரிசீலித்து இறுதியாக ஒருவர் அறிவிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்…
-
- 0 replies
- 281 views
-
-
பாராளுமன்றத்தின்.. விசேட அமர்வு, இன்று பாராளுமன்றம் இன்று ( சனிக்கிழமை ) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். மேலும் ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது இதேவேளை நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன . இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் வ…
-
- 0 replies
- 213 views
-