ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்! நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் …
-
- 11 replies
- 409 views
- 1 follower
-
-
விசா பிரச்சினையால் இலங்கை வீரர்களின் ஆசிய கராத்தே கனவு கலைந்தது! சீனாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேற்று (02) புறப்படவிருந்த இலங்கை கராத்தே விளையாட்டு வீரர்கள் விசா பிரச்சினையை எதிர்கொண்டனர் இதனால், அவர்களால் திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, திட்டமிடப்பட்ட விமான நேரம் இருந்தபோதிலும் விளையாட்டு வீரர்களுக்கு விசாக்கள் கிடைக்கவில்லை. இதன் விளைவாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த அணியினர் மன உளைச்சலை எதிர் கொண்டனர். 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் செப்டம்பர் 5 முதல் 7 வரை சீனாவில் நடைபெற உள்ளது. இதில் 29 இலங்கை விளையாட்டு வீரர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெ…
-
- 0 replies
- 123 views
-
-
ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம்! சிக்கிய துப்பாக்கிதாரி. பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, ஊடகவியலாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார். இக் கொலைத் திட்டம், கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445853
-
- 0 replies
- 96 views
-
-
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி September 3, 2025 11:29 am வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்…
-
- 0 replies
- 84 views
-
-
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர் 03 Sep, 2025 | 11:00 AM நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இணைந்து கச்சத்தீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவ சொந்தங்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற…
-
- 3 replies
- 383 views
- 1 follower
-
-
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல் 03 September 2025 எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசா…
-
- 0 replies
- 80 views
-
-
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்! அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகளாக சில நீதிபதிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராகவே, நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான அனுபவத்தையும், தகுதியையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நீண்ட காலத்துக்கு முன்னரே பெற்றிருந்த போதிலும், தற்போது திடீரென இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத…
-
- 0 replies
- 103 views
-
-
2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித! லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் Wildlife Photographer of the Year (WPY) போட்டியில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்ன மீண்டும் ஒரு விருதை வென்று இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளார். “வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் ஆஸ்கார் விருதுகள்” என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியில், அவர் இரண்டு தடவைகள் வெற்றி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 61 ஆண்டுகால WPY வரலாற்றில் இது ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. 1965 முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டிக்கு, இந்த ஆண்டு மட்டும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் …
-
- 0 replies
- 118 views
-
-
ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு! எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (02) கூடிய கட்சியின் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல தெரிவித்தார். இந்த மாத இறுதியில் நிகழ்வு மீண்டும் திட்டமிடப்படும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் கட்சி குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.c…
-
- 0 replies
- 268 views
-
-
02 Sep, 2025 | 06:16 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் நிலைமை இராணுவ அதிகாரிகளுக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்காலத்தில் ஏற்படலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு நிபந்தனையற்ற வகையில் நாங்கள் முன்னிலையாவோம். இந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணு…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
02 Sep, 2025 | 05:29 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் போது நாட்டை பாதுகாத்த படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம் ஒன்று இடம்பெறவுள்தாக தெரியவருகிறது. அரசாங்கம் அதற்கு இடமளிக்கக்கூடாது என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். இந்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (2) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தா்ர. இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் இந்த மாதம் இடம்பெற இருக்கிறது. மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்றுக்கொடுப்பதற்கு வெள்ளையர்களு்கு முடியுமா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது. நாங்கள் கால்நடைகளின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த…
-
-
- 2 replies
- 156 views
- 1 follower
-
-
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்…
-
-
- 3 replies
- 321 views
-
-
02 Sep, 2025 | 04:06 PM வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்று செவ்வாய்க்கிழமை (2) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடகாலம் பூர்த்தியாவதை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை தொடக்கிவைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு, இன்று காலை புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு, நண்பகல் 1 மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்தார். மிக நீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பி…
-
- 1 reply
- 155 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 02 Sep, 2025 | 03:16 PM 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், 307,951 பேர் பரீட்சைக்கு தோற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களில் 901 விசேட தேவையுடைய மாணவர்களும் அடங்குவர். அவர்களில் 12 பேர் பிரெய்லி ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தினார்கள். பரீட்சை முடிவுகளை உடனடியாக வெளியிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சைகள் திணைக்களம் எடுக்கும் எனவும், தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு போதுமான நேர…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 02 Sep, 2025 | 03:07 PM இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களை பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு அளிக்கும் வகையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 077 777 1954 எனும் புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முறைப்பாடு செயல்முறையை விரைவாகவும் வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/224025
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
02 Sep, 2025 | 02:59 PM காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மன்னாருக்கு வருகை தந்து பொது அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியபோதும் எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (2) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், காற்றாலை, கனிம மணல் விடயம் தொடர்பா…
-
-
- 1 reply
- 133 views
- 1 follower
-
-
Published By: Vishnu 02 Sep, 2025 | 03:20 AM ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல்இ துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். அவரினால் கடந்த ஆட்சியா…
-
- 2 replies
- 166 views
- 1 follower
-
-
நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு! நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுற…
-
- 0 replies
- 116 views
-
-
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை! ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன வசதியாக இந்த நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சு கூறியுள்ளது. இந்த திட்டத்திற்காக 1,395 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 15 மாத காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே கேள்வி விலை மனு கோரல் அழைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியது. https://atha…
-
- 0 replies
- 117 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா 02 Sep, 2025 | 10:12 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களை எடுத்துக்காட்டி, அவர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களை விமர்சித்தார். இதன்போது, தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை, இலங்கை தலைவர்களுக்கு இல்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமட் மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் ஹப்யரி…
-
- 0 replies
- 109 views
-
-
மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு எஸ்.ஆர்.லெம்பேட் இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான N.கெஸ்ரோன் , K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட போட்டியானது சீனாவில் இம் மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப் போட்டி “ U16 Tainyu Li…
-
- 0 replies
- 96 views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் , இந்நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி வாழ்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திய படையினர் மீண்டும் வேட்டையாடப்படுகின்றனர். புலிகள் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பிரிவினைவாத கருத்தியல் இன்னும் முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுக…
-
- 1 reply
- 162 views
-
-
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எழுதிய சுயசரிதை புத்தகம், பிரித்தானியாவில் Amazon விற்பனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் எனும் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடை சட்டங்களை மீறும் எனவும், தடைக்குட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது குற்றமாக கருதப்படும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Amazonக்கு அறிவித்திருந்தது. பிரித்தானிய சட்டத்தின்படி, இத்தகைய மீறலுக்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். Amazon பிரிட்டன் கிளை, சர்வதேச உண…
-
- 0 replies
- 89 views
-
-
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்…
-
- 0 replies
- 74 views
-
-
7 மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது! adminSeptember 2, 2025 இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் காவற்துறை திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 காவற்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்க…
-
- 0 replies
- 68 views
-