Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள் July 12, 2022 யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் யாழ்மாவட்ட செயலகத்திடம் வெதுப்பக உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் , தாம் எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏதுவாக நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு தீர்வாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு மேற்கொ…

  2. நேற்று, நள்ளிரவு முதல்... வி.ஐ.பி. டெர்மினல் சேவையில் இருந்து... அதிகாரிகள் விலகல் ! தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. டெர்மினல் முனையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சேவையில் இருந்து விலகியுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குகாரணமான முன்னாள் அரசியல்வாதிகள் விஐபி டெர்மினல் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என ஊகிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் கடமைகளில் இருந்…

    • 3 replies
    • 391 views
  3. இராஜினாமா கடிதத்தில், கையொப்பமிட்டார் கோட்டா ! இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் பிபிசி ஊடகத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லை என்றும் அருகில் உள்ள நாடொன்றில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார். இருப்பினும் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் அதனை மறுத்திருந்த சபாநாயகர், தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டதாகவும் ஜனாதிபதி நாட்டில் இருப்பதாகவும் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே…

  4. அலரி மாளிகைக்குள் மோதல் – பெண் உட்பட 10 பேர் காயம்! அலரி மாளிகைக்குள் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சையின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1290824

  5. ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த... பெறுமதிமிக்க ஆவணங்கள், அழிக்கப்பட்டுள்ளன: ரணில் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் அரசியலமைப்பின் ஊடாக மக்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பின்படி செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியில் அமர்ந்து இந்த வே…

  6. ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர்... மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, பிரதமரிடம் சட்டமா அதிபர் விளக்கம்! ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருக்கும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் கருத்து பிரதமரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சட்டமா அதிபரிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து சட்டமா அதிபரின் கருத்து பிரதமரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்த சபாநாயகர், அதன்பின்னர் தான் தவறுதலாக தெரிவ…

  7. கட்டுநாயக்க விமான நிலையத்தில், போராட்டம் – திருப்பி அனுப்பப்பட்ட பசில்! முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து அவர் திரும்பிச் செல்ல நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த த…

  8. டுபாய்க்கான... விமானங்கள், தற்காலிகமாக இடைநிறுத்தம்! இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் Fly Dubai நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. டுபாய்க்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் ஜூலை 10ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரத்து செய்யப்பட்ட விமானங்களின் பற்றுச்சீட்டு மற்றும் பணம் என்பன பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1290833

  9. கொழும்பு வருகின்றன எரிபொருள் கப்பல்கள் இந்த வாரத்தில், மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (11) தெரிவித்தார். அதற்கமைய, நாளை (12) முதல் 15ஆம் திகதிக்கு இடையில் டீசல் கப்பலும், இம்மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதிக்கு இடையில் கனரக எண்ணெய்க் கப்பலும், இம்மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிக்கு இடையில் மசகு எண்ணெய்க் கப்பலும் வந்து சேரும் என்றார். தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் மூலமே இவ்விடயத்தை அவர் அறிவித்திருந்தார். இலங்கை மத்திய வங்கி மற்றும் மற்றும் நிதி அமைச்சின் உதவியுடன் லங்கா ஐ.ஓ.சி.க்கு கடந்த வெள்ளிக்கிழமை முழுமையான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டி…

  10. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். "நீங்கள் பதிவிட்ட டுவிட்டரே எனது வீடு தீக்கிரையாகக் காரணம்" இன்று (11) திங்கட்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரவூப் ஹக்கீமை கடுமையாகச் சாடியுள்ளார். இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஆற்றிய உரையின் போதும் இதனை குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, சர்வகட்சி ஆட்சியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. …

  11. நாளைய, கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு.... போராட்டக் காரர்கள் சிலரையும், அழைத்துப் பேசுவதற்கு தீர்மானம்? இன்றைய தினம்(11) மிக முக்கிய கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன்போது நாளைய தினத்திற்கும் கட்சித்தலைவர்களின் மற்றுமொரு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்துக்கு போராட்டக்காரர்கள் சிலரையும் அழைத்துப் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி வாக்கெடுப்பினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 225 நாடாளுமன்…

  12. (எம்.மனோசித்ரா) பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கிலேயே பிரதமர் பதவியை பொறுப்பெடுத்தேன். ஆனால் இன்று எனது இல்லம் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. எனது பெரும் சொத்தான 2,500க்கும் அதிகமான நூல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனியார் ஊடகமொன்றின் செயற்பாடுகளினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாகவே நான் பிரதமர் பதவியை ஏற்றேன். உண்மையில் அது பொருளாதாரத்தைக் கொண்டு செல்ல மு…

  13. பாதுகாப்புத் தலைவர்களைச் சந்தித்த பிறகு கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறுகிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு... வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை 9 போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் இருந்த ராஜபக்சே, காலையில் முப்படைத் தளபதிகளைச் சந்தித்துவிட்டு இன்று நாட்டை விட்டு வெளியேறினார். ஜூலை 13-ம் தேதி அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்கிறார், அதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக காலத்திற்கு அதிபராக பதவியேற்கிறார். (ஜமிலா ஹுசைன்) https://www.dailymirror.lk/top_story/GR-leaves-the-country-after-meeting-defence-leaders/155-240856

  14. இலங்கை நெருக்கடி: 'தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம்' - போராட்டக்காரர்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனாதிபதி பதவி விலக தயார் என்ற அறிவிப்பை விடுப்பதை விடுத்து, பிரதமரும் பதவி விலக வேண்டும் என கொழும்பு மாளிகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். தான் முன்பு கூறியதை போன்றே, எதிர்வரும் 13ம் தேதி பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை தெரிவித்தது. இந்த நிலையில், பிரதமரும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றன…

  15. சுமந்திரன்... பிரதமர் பதவியை பெறுவதாயின், தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வாராயின், அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். அவரால் அது முடியாதுபோனால், சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். ஆகவே ஜனா…

  16. தாய் நாட்டைப் பாதுகாக்க... நாங்கள், தயாராக இருக்கிறோம் – சஜித் தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், நாட்டை ஸ்திரப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆணை முடிந்துவிட்டது. இந்த அழகிய தாய்நாட்டை அழிக்க அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். நாட்டை ஸ்திரப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஜனாதிபதி மற்…

  17. அனைத்து... அமைச்சரவை அமைச்சர்களும், இராஜினாமா செய்ய முடிவு – விஜயதாச ராஜபக்ஷ. அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். அனைத்து அமைச்சர்களும் இணைந்து சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1290719

  18. நாட்டின், பொருளாதார நெருக்கடிகளுக்கு.. கொரோனாவே காரணம் – சபாநாயகர். ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிநாடுட்டு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “கோவிட் தொற்றுநோய் நாட்டில் பொருளாதார ரீதியாக பேரழிவை உருவாக்கியுள்ளது, என்றும் எங்கள் பணத்தை தடுப்பூசிகளுக்காக செலவிட வேண்டியிருந்தது,” எனவும் அவர் அந்த ஊடகத்துக்கு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1290712

  19. ஜனாதிபதியின்... இராஜினாமா கடிதத்தை, நாளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சபாநாயகர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார். எவ்வாறாயினும் எதிர்வரும் அரசாங்க விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பாக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில இறுதித் தீர்மானங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பி…

  20. தென்னிலங்கை அரசியல் குழப்பங்கள் மக்கள் நலச் செயற்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது - டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கையில் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்களும் , அரசியல் மாற்றங்களும், எமது மக்கள் நலச் செயற்பாடுகளில் எந்தவிதமான மாற்றத்தினையும் ஏற்படுத்தாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான யாழ். ராணி புகையிரத சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்பிக்கப்பட்டது. அது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்ற…

    • 4 replies
    • 499 views
  21. இலங்கை நெருக்கடி: 'பதவி விலக தயார்' - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தல் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தான் முன்பு அறிவித்ததை போன்று பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். பிரதமர் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டது. ஜனாதிபதி மாளிகையை அண்மித்து நேற்று ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே, ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டன. எனினும், இந்த தகவல் உண்மைக்கு ப…

  22. போராட்டக்காரர்களுக்கு... உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில், துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படவில்லை – இராணுவம் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளிகள் தொடர்பான உண்மைகளை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தடுப்பு உத்தியாக வானத்தை நோக்கியும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும் பிரதான வாயிலின் பக்கவாட்டு சுவரிலும் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சனிக்…

  23. "யாழ் ராணி" என்ற பெயரில்... விசேட ரயில் சேவை, இன்று யாழிலிருந்து... கிளிநொச்சிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ் ராணி என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச பணியாளர்கள், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது. இதன்படி, காங்கேசன் துறையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் யாழ் ராணி புகையிரதம் காலை 8.11 இக்கு முறிகண்டியை அடையும் என்றும் அங்கிருந்து மீண்டும், காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் புகையிரதம், காலை 11.20 இக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் பிற்பகல் 2 மணி…

    • 9 replies
    • 749 views
  24. இந்தியா... தனது படைகளை, இலங்கைக்கு அனுப்புவதாக... வெளியான செய்திகள் குறித்து விளக்கம்! இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பகுதியில் தெரிவித்துள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்று கூறியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந…

  25. சஜித் அல்லது டலஸ்... ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்! கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் எவ்வித பிளவுகளும் இன்றி இருவரில் ஒருவரை நியமிப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை நுகேகொடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் இல்லத்தில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.