Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்னிலங்கை அரசியல் குழப்பங்கள் மக்கள் நலச் செயற்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது - டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கையில் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்களும் , அரசியல் மாற்றங்களும், எமது மக்கள் நலச் செயற்பாடுகளில் எந்தவிதமான மாற்றத்தினையும் ஏற்படுத்தாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான யாழ். ராணி புகையிரத சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்பிக்கப்பட்டது. அது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்ற…

    • 4 replies
    • 499 views
  2. இலங்கை நெருக்கடி: 'தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம்' - போராட்டக்காரர்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனாதிபதி பதவி விலக தயார் என்ற அறிவிப்பை விடுப்பதை விடுத்து, பிரதமரும் பதவி விலக வேண்டும் என கொழும்பு மாளிகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். தான் முன்பு கூறியதை போன்றே, எதிர்வரும் 13ம் தேதி பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை தெரிவித்தது. இந்த நிலையில், பிரதமரும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றன…

  3. நாட்டின், பொருளாதார நெருக்கடிகளுக்கு.. கொரோனாவே காரணம் – சபாநாயகர். ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிநாடுட்டு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “கோவிட் தொற்றுநோய் நாட்டில் பொருளாதார ரீதியாக பேரழிவை உருவாக்கியுள்ளது, என்றும் எங்கள் பணத்தை தடுப்பூசிகளுக்காக செலவிட வேண்டியிருந்தது,” எனவும் அவர் அந்த ஊடகத்துக்கு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1290712

  4. தாய் நாட்டைப் பாதுகாக்க... நாங்கள், தயாராக இருக்கிறோம் – சஜித் தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், நாட்டை ஸ்திரப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆணை முடிந்துவிட்டது. இந்த அழகிய தாய்நாட்டை அழிக்க அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். நாட்டை ஸ்திரப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஜனாதிபதி மற்…

  5. அனைத்து... அமைச்சரவை அமைச்சர்களும், இராஜினாமா செய்ய முடிவு – விஜயதாச ராஜபக்ஷ. அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். அனைத்து அமைச்சர்களும் இணைந்து சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1290719

  6. ஜனாதிபதியின்... இராஜினாமா கடிதத்தை, நாளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சபாநாயகர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார். எவ்வாறாயினும் எதிர்வரும் அரசாங்க விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பாக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில இறுதித் தீர்மானங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பி…

  7. ரணிலின், வீட்டுக்கு... தீ வைப்பு. கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1290526

  8. இலங்கை மக்களுக்கு... வழங்கப்படும் ஆதரவை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்! இலங்கையின் அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. அமைதியான, ஜனநாயக மற்றும் ஒழுங்கான மாற்றத்திற்கு ஒத்துழைக்கவும் கவனம் செலுத்தவும் அனைத்து தரப்பினருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண வழிவகை செய்து இயல்பு நிலைக்குத் திரும்புவது அனைத்துக் கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையின் சனத்தொகைக்கான தனது ஆதரவை மேலும…

  9. இலங்கை நெருக்கடி: 'பதவி விலக தயார்' - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தல் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தான் முன்பு அறிவித்ததை போன்று பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். பிரதமர் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டது. ஜனாதிபதி மாளிகையை அண்மித்து நேற்று ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே, ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டன. எனினும், இந்த தகவல் உண்மைக்கு ப…

  10. இலங்கைக்கு... தொடர்ந்தும், ஆதரவாக இருப்போம் – இந்தியா இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும், இப்போது அகதிகள் நெருக்கடி இல்லை என்றும் கூறினார். தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருவதாகவும் அடுத்த நடவடிக்கை தொடர்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டார். “நாங்கள் இலங்கைக்கு ஆதரவாக இருந்து வருகிறோம், உதவி செய்ய முயல்கிறோம், எப்பொழுதும் உதவி செய்து வருகிறோம்” என அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். h…

  11. போராட்டக்காரர்களுக்கு... உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில், துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படவில்லை – இராணுவம் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளிகள் தொடர்பான உண்மைகளை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தடுப்பு உத்தியாக வானத்தை நோக்கியும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும் பிரதான வாயிலின் பக்கவாட்டு சுவரிலும் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சனிக்…

  12. விசேட, கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று – புதிய ஜனாதிபதி தெரிவு குறித்து, ஆராய்வு! நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபாய ராஜபக்ஷ விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உடன்பாடுகள் எட்டப்…

  13. பதில் ஜனாதிபதி, இடைக்கால ஜனாதிபதி தெரிவு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் பதவி விலகல், பதில் ஜனாதிபதி மற்றும் இடைக்கால ஜனாதிபதி தெரிவினை தாமதப்படுத்தாது துரிதமாக செயற்படுத்தும் பொறுப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு உண்டு. கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த சகல கட்சி தலைவர்களும் பொது இணக்கப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே பொருளாதாரம்,அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். ஜனாதிபத…

  14. நாட்டு மக்களிடம் முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள் ! நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அமைதியான முறையிலும் அரசியலமைப்பின் பிரகாரம் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள இத்தருணத்தில், நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/131182

  15. இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 ஜூலை 2022, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலையில் இருந்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த மாளிகையை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள…

  16. ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரத்தியேக கட்டிடம் ஒன்றில் இந்த பதுங்கு குழி இருக்கின்றது எனவும் இந்த பதுங்கு குழிக்குள் வெவ்வேறு அலுமாரி கதவுகள் ஊடாகவே உற்பிரவேசிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த பதுங்கு குழிக்குள் பிரமாண்ட பாரம் தூக்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதுங்கு குழியில் அடிப்பகுதியில் மிகவும் இரகசிய அறை ஒன்று அமைக்கப…

    • 12 replies
    • 997 views
  17. இராணுவத்தினரால் இரகசியமாக பாதுகாக்கப்படும் ஜனாதிபதி! வெளியான தகவல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து இராணுவத்தினரால் இரகசியமாக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோட்டாபய ராஜபக்ச எங்கிருக்கின்றார் என்பது தெரியவராத நிலையில், அவர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும்,இராணுவப் பிரிவினால் பாதுகாக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊ…

  18. யாழ். நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் 09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமான…

  19. ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து மீட்கப்பட்ட பணம் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டதாக தகவல் July 10, 2022 கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நேற்று முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மாளிகைக்குள் இருந்த பெருந்தொகை பணத்தை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பணம் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த பின்னர் நில நிலைமையை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். https://www.ilakku.org/the-money-recovered-fr…

  20. இலங்கை நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் - சர்வதேச நாணயநிதியம் இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கின்றோம்அது சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான திட்டம் தொடர்பில் இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கும் என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் இலங்கையின் நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை தொடர திட்டமிட்டுள்ளதாகவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் காணப்படும் பொருளாதார நெருக்கடி பொதுமக்களின் மீது ஏற்படும் தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் குறிப்ப…

  21. போராட்டத்தின் வெற்றி : பதவி விலகிய முக்கிய அமைச்சர்கள் ! பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலக தயார் என அறிவித்துள்ள நிலையில் சில முக்கிய அமைச்சர்களும் தமது இராஜினாமாவை அறிவித்துள்ளனர். அதன்படி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் வழங்கிய உரத்தை இன்று (10) பெற்றுக்கொண்டதன் பின்னர், இராஜினாமா செய்வேன் என மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். இதேநேரம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவதாக அறிவித்த பந்துல கு…

  22. ஐஓசி எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பித்தது! Samakalam July 10 லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலைமை காரணமாக வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை லங்கா ஐஓசி நிறுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் விநியோகத்தை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. -(3) http://www.samakalam.com/ஐஓசி-எரிபொருள்-விநியோகத்/

  23. கோட்டாபய பதவி விலகுவதாக அறிவிப்பு- தீர்வை பெற விரைவாக செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்து July 10, 2022 ஜனாதிபதி தனது இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, நீண்ட கால தீர்வைப் பெறுவதற்கு விரைவாகச் செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. எந்தவொரு புதிய அரசாங்கமும் “நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய மற்றும் இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்துவதற்கு விரைவாக செயல்பட வேண்டும்” என அமெரிக்கா மேலும் கூறியுள்ளது. https://www.ilakku.org/us-urges-sl-leaders-to-work-quickly-to-address-discontent/

  24. கொழும்பு ஆர்ப்பாட்டம்: வைத்தியசாலையில் 55 பேர் அனுமதி, ஒருவர் கவலைக்கிடம். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் ஒருவர் பொலிஸ் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை 4 ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1290543

  25. இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கும் பிரித்தானியா இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவுகளினூடாக அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், அமைதியான ஆர்ப்பாட்டமும், கருத்து சுதந்திரமும் இலங்கையின் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அமைதியான போராட்டங்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.