ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அமெரிக்காவின் தடைகளினால்... இலங்கைக்கு, பாதிப்பில்லை – ஜூலி சங் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுடன் இலங்கை எவ்வாறு இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்குவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய்…
-
- 1 reply
- 247 views
-
-
எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக.... கரி, உற்பத்தி முன்னெடுப்பு! எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனம் கரி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட மரத்துண்டுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கரியை உற்பத்தி செய்யுமாறு இதற்கு முன்னர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அரச மரக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார். ஒரு கிலோ 130 ரூபாய் என்ற விலையில் கரியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1290204
-
- 0 replies
- 151 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த... 3 நிறுவனங்கள் தம்மிக்கவுக்கு..! – விசேட வர்த்தமானி வெளியீடு. பாதுகாப்பு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்த சில நிறுவனங்கள் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான, அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி ரக்னா லங்கா நிறுவனம் செலந்திவ முதலீட்டு நிறுவனம் மற்றும் ஹொட்டல் டெவலப்பர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் என்பன அமைச்சர் தம்மிக்க பெரேரா தலைமையிலான முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. https://athavannews.com/2022/1290176
-
- 0 replies
- 190 views
-
-
தனியார் நிறுவனங்கள்... டொலர் செலுத்தி, எரிபொருளை பெற்றுக் கொள்ள.. முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்! அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி… https://ceypetco.gov.lk/usd-consumer-online-registration/ https://athavannews.com/2022/1290175
-
- 1 reply
- 182 views
-
-
எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மோதல்: இளைஞன் உயிரிழப்பு – மூவர் காயம்! காலியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்தோடு, மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி -மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்…
-
- 1 reply
- 186 views
-
-
பொருளாதார நெருக்கடி காரணமாக... வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு? நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் காணப்படும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வைத்தியர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும…
-
- 2 replies
- 191 views
-
-
இலங்கைக்கு... உதவும் எண்ணம், எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர். இலங்கைக்கு உதவும் வகையில் மிலேனியம் செலஞ்ச் கோர்ப்பரேஷன் நிறுவனத்திடம் (எம்.சி.சி.) இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கனவே குறித்த திட்டத்தை இலங்கைக்கு வழங்கியபோதும் அதனை ஏற்றுக்கொள்ளாமை ஏமாற்றமளித்தது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தூதர் ஜூலி சுங் கூறியுள்ளார். எதிர்காலத்தில் எப்போதாவது இந்த நிதியுதவி திட்டம் இலங்கைக்கு வழங்கப்படலாம் என்றும் எனினும் தற்போதைக்கு எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1290131
-
- 1 reply
- 319 views
-
-
கொழும்பில்... பௌத்த பிக்குகள் குழு, ஆர்ப்பாட்டம். கொழும்பு – புறக்கோட்டையில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு இதன்போது பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் இன்று சைக்கிள் அணிவகுப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வகட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த சைக்கிள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. நுகேகொட மேம்பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் அணிவகுப்பு கொழும்பில் உள்ள பொது நூலகத்திற்கு அருகில் நிறைவடைந்தது. அதன் பின்னர் பொது ஒன்று…
-
- 0 replies
- 224 views
-
-
மக்களின்... போராட்டத்தினை முடக்கும் நோக்கில், அவசரகால சட்டத்தினை... அமுல்படுத்த தயாராகின்றது அரசாங்கம்? நாட்டில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவியை விலகுமாறு கோரி நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் கூடி இதுகுறித்து ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்பவில்லை எனவும் கூறப்படுகி…
-
- 0 replies
- 300 views
-
-
8,9´ம் திகதிகளில் ... போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு- கொழும்பில் உச்சக் கட்ட பாதுகாப்பு! கொழும்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நாளை (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. அதேநேரம், 9ஆம் திகதியும் கோட்டா கோ கம போராட்டக்காரர்களுடன் இணைந்து எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் பேரணியை ஆரம்பித்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை செல்ல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரண…
-
- 9 replies
- 566 views
-
-
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு... மின்சார வாகன இறக்குமதிக்கான, உரிமம்! புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர்களின் பெறுமதிக்கு அமைய மின்சார வாகன இறக்குமதிக்கான உரிமங்களை வழங்குவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. குறித்த பணியாளர்கள் அனுப்பும் டொலரின் பெறுமதிக்கு அமைய அவர்களுக்கு எவ்வாறான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்ட ரீதியாக பணம் அனுப்பும் அனைவருக்கும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகி…
-
- 14 replies
- 1k views
- 1 follower
-
-
போதைப் பொருள் கடத்தலில்.. ஈடுபட்டு வரும், 80 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை! பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் 80 பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து சேர்ப்போர் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவினரால் இதுதொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த 80 பேரில் பலரும் நாட்டினை விட்டு வெளியேறி தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்தநிலையில் இவர்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து சேர்ப்போர…
-
- 1 reply
- 279 views
-
-
தமிழ்நாடு... மாநில பொலிஸார், இலங்கைக்கு... ஒரு கோடியே நாற்பது இலட்சம், இந்திய ரூபாய் நிதியுதவி! தமிழ்நாடு மாநில பொலிஸார் இலங்கை மக்களுக்காக ஒரு கோடியே நாற்பது இலட்சம் இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். தமிழக பொலிஸ் தலைமையகத்தின் டி.ஜி.பி சைலேந்திரபாபு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அண்மையில் இந்த நிதி கள் செய்தி வெ உதவி தொகையை கையளித்திருந்தார். மேலும் இந்திய பாதுகாப்பு சேவைகள் சங்கமும் ஆறு கோடியே அறுபத்து மூன்று இலட்சம் இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2022/1290068
-
- 1 reply
- 133 views
-
-
கொழும்பில்... 9ஆம் திகதி, பாரிய போராட்டம் – உணவு விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு! 35 SHARES 1.2k VIEWS Share on FacebookShare on Twitter கொழும்பில் எதிர்வரும் 9ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி நாளை மறுதினம் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெமுடுக்கப்படவுள்ள நி…
-
- 1 reply
- 286 views
-
-
பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்! பத்தரமுல்லை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் இன்று (07) அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த தாயை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க அங்கிருந்தவர்கள் நடவடிக்கை எடுத்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=163161
-
- 0 replies
- 384 views
-
-
PreviousNext இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அதிரிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனபடி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 100 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சட்டரீதியான கையிருப்பு விகிதத்தை நிலவும் 4.00% அளவிலேயே பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள…
-
- 0 replies
- 319 views
-
-
மலையகத்தில் உணவுபாதுகாப்பு நிலை மிகவும் மோசமான நிலையில் - புதிய அறிக்கையில் உலக உணவு திட்டம் இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என உலக உணவுதிட்டம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொருளாதார உணவு நெருக்கடியின் சுமையை இலங்கை மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள உலக உணவுதிட்டம் பத்தில் மூன்றுவீடு உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் தனது அறிக்;கையில் தெரிவித்துள்ளது. 6.2 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர் இதில் 65,600 மக்கள் மிகமோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் எனவும் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது. 2022 ஆண்டு ஜூன் மாதம் உணவுப்பணவீக்கம் 57.4 வீதமாக …
-
- 0 replies
- 155 views
-
-
IMFன் முன்மொழிவுக்கு அமைய புதிய வரவு செலவுத் திட்டம்! July 7, 2022 இலங்கையில் கடனை நிலை நிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் புதிய வரவு- செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டியிடம் தெரிவித்துள்ளார். வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர்-ஹம்டியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் …
-
- 0 replies
- 319 views
-
-
”140,000 ஆவிகள் ஜனாதிபதியை துரத்துகின்றன”: கோவிந்தன் கருணாகரம் எம்.பி! 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 140,000 தமிழரின் ஆவிகளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை துரத்துகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே ஆகும். இவர் ஜனாதிபதியாக வந்தக் காலத்தில் எடுத்த முட்டாள்தனமான முடிவுகளினால் நாடு இந்தளவுக்கு சென்றுள்ளது. 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்த…
-
- 0 replies
- 307 views
-
-
இறுதிக் கிரியைகளைக்கூட நடத்த முடியாத நிலைமை! இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இறுதிக்கிரியைகள், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படாமையால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மரண சடங்குகளுக்கான பணிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் கவிந்து பனாகொட தெரிவித்தார். இந்நிலை தொடருமானால், எதிர்வரும் நாட்களில் வீடுகளிலும் வைத்தியசாலைகளிலும் சடலங்கள் நிரம்பிக் கிடக்கக்கூடும் என கவிந்து பனாகொட சுட்டிக்காட்டினார். இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறையினால் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்வதிலும் பின்னர் வீடுகளுக்கு …
-
- 0 replies
- 418 views
-
-
போராட்டக்காரர்கள்.. மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே. பொது இணக்கப்பாடு! காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பாக போராட்டத்தை வெற்றிக் கொள்ளும் இணக்கப்பாடு என்ற பெயரில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஒன்றிணைந்த பொதுமாநாட்டின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி 4 அம்சங்களுடன் போராட்டக்காரர்கள் தரப்பில் ஒருமித்த கருத்து முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா சுதந்திர கட…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கைக்கு... பெரும், "செக்" வைத்த இந்தியா. இலங்கைக்கு மற்றுமொரு கடனை வழங்குவதில் இந்தியா தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியா முன்கூட்டியே பணத்தை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடன் வழங்க மறுப்பு சமகாலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளுக்காக 3.5 பில்லியன் டொலர் கடன் எல்லைகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்நிலையில் மேலும் இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து பரிசீல…
-
- 0 replies
- 213 views
-
-
மக்கள்... பொலிஸாரை, தாக்க நேரிடும் - முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் பாரிய குற்ற அலைகள் உருவாகியுள்ளதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் இத்தகைய நெருக்கடியை கையாள போதுமான பொலிஸ் அதிகாரிகள் இருந்தாலும், உயரடுக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர். தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 102 views
-
-
வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில்... இலங்கை மத்திய வங்கி, வெளியிட்டுள்ள அறிவிப்பு. நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை அதிரிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நாணயக் கொள்கை நிலைப்பாட்டை கடுமையாக்குவது அவசியம் என்று கருதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 215 views
-
-
இல்லை, முடியாது என்ற கதை எம்மிடம் இல்லை தமக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணிக்கோ "இல்லை, முடியாது " என்ற கதைக்கு இடமில்லை என்றும், எந்த தருணத்திலும் மக்களுக்கான தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (06) தெரிவித்தார். நாட்டில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு இருக்கும் தருவாயில் டொலர் தட்டுப்பாடே இதற்கு காரணமென பலரது கருத்தாக இருப்பினும், உண்மையான காரணம் என்னவெனில், அதற்கான தகவல் தரவுகளை களஞ்சியப்படுவதிலுள்ள சிக்கலே எனவும், தெரிந்து கொண்டே இதற்கு மேலும் மக்களுக்கு பொய்யுரைக்காமல் தற்போதுள்ள செயல்முறைகளை சரிவர செயற்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்…
-
- 0 replies
- 227 views
-