Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாடசாலைகளிலிருந்து... மாணவர்கள், இடைவிலகும் அபாயம்... அதிகரித்துள்ளதாக கவலை. தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தற்போதைய எரிபொ…

  2. இலங்கையில்... ஆடைத் தொழிற்சாலைகள், மூடப்படும் அபாயம். இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தடை காரணமாக இவ்வாறு ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் ஐ.ஓ.சீ நிறுவனத்திடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொண்ட போதிலும், சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகின்றது. அத்துடன், ஆடைத் தொழிற்…

  3. உங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் தருகிறோம்! | யானைவெடி போட்டு விரட்டுவோம்- உளப்பனே சுமங்கல தேரர்! இக்காணொளியில் பேசிய தேரர்களுள் ஒருவரான உலப்பனை சுமங்கள தேரரை உலப்பனை சோபித தேரர் என்று தவறுதலாக உச்சரித்துள்ளேன்! தவறுக்கு மன்னிக்கவும்!

    • 2 replies
    • 501 views
  4. உலை எண்ணெய் குறைகின்றதாக அறிவிப்பு மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் 2 மின் பிறப்பாக்கிகளுக்கும், 4 நாட்களுக்கு மாத்திரமே உலை எண்ணெய் போதமானதாக உள்ளது. அத்துடன், மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையத்துக்கு 2 நாட்களுக்கு அவசியமான உலை எண்ணெய்யே கையிருப்பில் உள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (R) …

    • 0 replies
    • 456 views
  5. இன்று நீங்கள் எரிபொருளைப் பெறக்கூடிய எரிவாயு நிரப்பு நிலையங்கள் இன்று (02) எரிபொருள் பெறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை லங்கா ஐஓசி வெளியிட்டுள்ளது. இதன்படி https://thinakkural.lk/article/188527

    • 0 replies
    • 156 views
  6. எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஐஓசி நிறுவனத்தின் அறிவிப்பு டீசல் மற்றும் பெற்றோலுடன் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூலை 13 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் மற்றும் 29 முதல் 31 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/ne…

    • 0 replies
    • 175 views
  7. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் இதே வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றும் என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/ne…

    • 0 replies
    • 238 views
  8. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது July 2, 2022 யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், COVID தொற்று காரணமாக மீண்டும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இதனிடையே, யாழ்ப்பாணம் விமான நிலைய…

  9. இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளை வழங்க தயார் - இலங்கைக்கான ஓமான் தூதுவர் தெரிவிப்பு இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என்று இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சஈத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார். வலுசக்தி, காஸ், எரிபொருள், முதலீடு, தொழில்வாய்ப்பு ஆகிய துறைகளில் இருதரப்பிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்சமயம் ஓமானில் 25 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் திறன் அடிப்படையிலான தொழில் வாய்ப்புக்களுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்குமாறு ஜனாதிபதி ஓமான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார். http…

  10. ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது - கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் இலங்கையில், புறத்தாக்கங்களினால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது. பெருந்தொற்றின் போதும், சுமார் கடந்த 70 ஆண்டுகளாகவும் நாம் செய்தததைப் போன்றே, இந்த நெருக்கடி நேரத்திலும் கனேடியர்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளனர் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் தெரிவித்தார். இதனோடு தொடர்புட்ட வகையில் கனடா இலங்கையின் மீளிணக்கச் செயன்முறைக்கு ஆதரவளிப்பதுடன், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் சமூகங்களாகிய ய…

    • 2 replies
    • 216 views
  11. ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகா…

  12. நிஷாந்தன் மீது வாள்வெட்டு July 1, 2022 தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காத்திருந்தபோது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை தொடர்பிலும் நான் அண்மையில் கருத்து தெரிவ…

  13. லொறியில்... பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள், விபத்தில் காயம் – 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி! கலேன்பிதுனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது லொறியின் பின் பகுதி இடிந்து விழுந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது லொறியில் 37 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பிரதேசவாசிகள் காயமடைந்த மாணவர்களை கலேன்பிதுனுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தின்போது மாணவர் ஒரு…

  14. எரிபொருள் நெருக்கடி குறித்து... பிரதமர் ரணில் தலைமையில் ஆராய்வு! எரிபொருள் பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால், இதன்போது பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில், 90 சதவீதமானவை தற்போது மூடப்பட்டுள்ளன. கையிருப்பில் உள்ள எரிபொருளை, அத்தியாவசிய சேவைகளுக்கு விநியோகிப்பதற்காக, எஞ்சியுள்ள 10 சதவீத நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், நேற்றைய கலந்துரையாடலில…

  15. குறைந்த வருமானம் பெறும்... குடும்பங்களுக்கு, 10,000 ரூபாய் நிவாரணம் : அரசாங்கம். நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 7,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த தீ…

  16. நாட்டின் தேசிய பாதுகாப்பு... தற்போது, பூஜ்ஜியமாகிவிட்டது – மைத்திரி குற்றச்சாட்டு. நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நாட்டில் பதிவாகிய குற்றச் செயல்கள், தேசிய பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்றார். மேலும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே ஆளும்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக இருந்தது என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் இவ்விடயத்தில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார். அமைதியான முறையில் போராட்டத…

  17. இலங்கை: “பிச்சை எடுத்து உண்ணும் நிலையில் நாடு” - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சஜித் பிரேமதாச இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (01/07/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். "திருடர்களான இந்த ஆட்சியாளர்களோடு எந்த விதமான டீலும் அரசியலும் எனக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டதாவும் கூறியுள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, "தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்…

  18. கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருப்போருக்கு அமைச்சர் தம்மிக்க விசேட அறிவிப்பு! எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை திறக்கவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ”வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்வோரின் நலன் கருதி, ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் நிலையங்களை பல இடங்களில் தற்போது நாம் திறந்துள்ளோம். எதிர்வரும் திங்கட்கிழமை முதல், மாத்தறை, வவுனியா, கண்டி போன்ற பகுதிகளில் இந்த நிலையங்களை திறக்கவுள்ளோம். எனவே, தூர பிரதேசங்களில் இருந்து பத்தரமுல்லைக்கு எவரும் வரவேண்டி…

    • 2 replies
    • 280 views
  19. கல்முனையில் தமிழ் பிரதேச அரச காணியை அத்துமீறி அபகரிக்கும் முயற்சி ! பொது மக்கள் ஆர்ப்பாட்டம்! Sayanolipavan ( காரைதீவு சகா) கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணியை தனியார் ஒருவர் அத்துமீறி நுழைந்து கட்டுமான வேலைகளை செய்து அபகரிக்கும் முயற்சியை கண்டித்து நேற்று (29) புதன்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். குறித்த அரச காணியில் தனியார் ஒருவர் தனக்கு உரிமை கோரி கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆர்ப்பாட்டத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தற்காலிகமாக கட்டிடம் அமைக்கும் பணியை நிறுத்தியதுடன் நீதிமன்றத்துக்கு குறித்த விடயத்தினை எடுத்து செல்வதாகக் கூறியதை தொடர்ந்து …

  20. யாழ் மாநகர சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் விடுத்துள்ளார். திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது மக்களை பாதிக்கின்ற அளவிற்கு யாழ்ப்பாண மாநகர சபையினுடைய செயற்பாடுகளையும் பாதித்திருக்கின்றது. இதனால் யாழ் மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம…

  21. அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் யாழ் - கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக தற்போதைய நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார். அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர். துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் …

  22. காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்துநிறுத்தியது ஏன் - இராணுவம் விளக்கம் துடுப்பாட்ட வீரர்களின் கவனம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டனர் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிசாந்த பிரேமரட்ண தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றவில்லை அவர்களது ஆர்ப்பாட்டத்தை தடுத்துநிறுத்தினோம் என குறிப்பிட்டுள்ள அவர் துடுப்பாட்ட வீரர்களின் கவனம் பாதிக்கப்படும் என்பதாலேயே ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை கையில்; வைத்திருந்தனர் அதன் காரணமாக துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும் நிலை காணப்பட்டது இதன் காரணமாக அவர்களை அகற்றுவதற்கான …

  23. இந்தியாவிடமிருந்து... பெறப்படும் "40 மில்லியன் அமெரிக்க டொலர்" கடனில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல். இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை துறைமுக அதிகாரசபை பூர்வாங்க வேலைகளைச் செய்துள்ளதாகவும், எக்ஸிம் வங்கி வழங்கும் நிதி வசதியைப் பயன்படுத்தி எஞ்சிய பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் ஆங்கில ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆராய இந்திய தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகரின் அறிக்க…

  24. தற்போதைய சூழலில்... இலங்கைக்கு, உதவ முடியாது – ஜப்பான். இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தபோதே இந்த விடயம் குறித்து தெரிவித்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, ஜப்பான் இந்த நேரத்தில் நாட்டுக்கு உதவாது என்றும் அவர் இதன்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1289152

  25. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக... தபால் திணைக்களத்திற்கு, 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு! தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் 400 வெளிநாட்டு தபால் பொதிகள் தேங்கியுள்ளன. இதனால் தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக தபால் சேவை தற்போது செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரமே இயங்கும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.