ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் குறித்த பாடசாலைகள் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை மூடப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏனைய கிராமப்புற பாடசாலைகள் வழமைப்போன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.newswire.lk/wp-content/uploads/2022/06/Screenshot…
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழில்... தனது பிரத்தியேகப் பணத்தை, முதலீடு செய்து... "ஒருநாள் கடவுச்சீட்டு" சேவையை, ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா. கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார். தற்போது கடவ…
-
- 8 replies
- 601 views
- 1 follower
-
-
இந்தியாவிலிருந்து... பொருட்களை கொண்டு வருவதற்கு, நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் – டக்ளஸ் இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வரயிருக்கும் 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையல்தான் அந்த…
-
- 8 replies
- 483 views
-
-
வெளிநாடுகளுக்கு... அனுப்பப்பட்ட, இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை! நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர் தொழில் வாய்ப்பின்றி அனாதரவான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில் வாய்ப்பை இலகுவாக தேடிக்கொள்ளக் கூடிய வெளிநாடு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்று எண்ணும் இளைஞர், யுவதிகள் அந்நாட்டை நோக்கி செல்கின்றனர். இப்படி சென்ற பலர் பல மாதங்களாக தொழில் வாய்ப்பு கிடைக்காது பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொழில் கிடைக்காது, அல்லல் படும் இளைஞர்கள். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாப…
-
- 3 replies
- 300 views
-
-
ஒரு நாளில் கடவுச்சீட்டை பெற அரிய சந்தர்ப்பம்! ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். (பின்னிணைப்பு - June 28, 2022 11:46 am) யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு - குடியகல்வு அலுவலகம் ஒன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (27) தெரண தொலைக்காட்சியில் ஒளிபர…
-
- 2 replies
- 401 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு, விசுவமடு... பகுதிக்கு, ஜப்பானிய தூதுவர் விஜயம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுபகுதியில் அமைந்துள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவுவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த 2021 ஆண்டு வழங்கிப்பட்டது. அதன் பயன்பாட்டை பார்வையிடுவதற்காக ஜப்பான் நாட்டு தூதுவர் இன்றையதினம் நேரில் சென்றிருந்தார். https://athavannews.com/2022/1288841
-
- 2 replies
- 228 views
-
-
வீட்டுப் பிரசவங்களின்... எண்ணிக்கை, அதிகரிப்பு! கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு செல்வதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். நிக்கவெரட்டிய, புறக்கோட்டை, மோதர உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், குடும்ப சுகாதார ஊழியர்களின் உதவியுடன் பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டதால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலமுடன் இருப்பதாக அரச குடும்ப சுகா…
-
- 0 replies
- 174 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிகளிற்கு பாதுகாப்பு சபை ஆதரவளிக்காது - பிரிட்டன் பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி அமைச்சிற்கு இலங்கை மனித உரிமை முன்னுரிமை நாடுகளில் ஒன்று என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அமைச்சர் விக்கிபோர்ட் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிக்கு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் ஆதரவு கிடைக்காது என மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி இணையமைச்சர…
-
- 1 reply
- 199 views
-
-
புத்தரின் சிலையை நிறுவத் தடை செய்தவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (எம்.நியூட்டன்) குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 13 ஆம் திகதி குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அந்த செயற்பாடு போராட்டம் மூலம் தடுக்…
-
- 1 reply
- 158 views
-
-
இந்திய உதவிகளின் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் நோக்கம் உள்ளதா? - லக்ஷ்மன் கிரியெல்ல (எம்.மனோசித்ரா) இந்திய அரசாங்கத்தின் நிதி உதவிகளின் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் நோக்கமே காணப்படுகிறது. அவ்வாறு திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதனை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னைய காலங்களில் இந்திய பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்தால் , எ…
-
- 0 replies
- 137 views
-
-
எரிபொருள் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் இருவர் இன்று ரஷ்யா விஜயம் (எம்.மனோசித்ரா) எரிபொருள் இறக்குமதியில் எரிநோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று திங்கட்கிழமை இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளனர். அத்தோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு கட்டார் ஜனாதிபதியிடமிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதே வேளை நீண்ட நாட்களாக எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிப்பதற்காக இன்று திங்கட்கிழமை முதல் இராணுவம் உட்பட பாதுகாப்புபடையினர் ஊடாக டோக்கன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வர…
-
- 11 replies
- 768 views
-
-
யாழ். காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் ! யாழ்ப்பாணம், காரைநகரில் கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் ஜே/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம் அமைக்கவென அளவீடு செய்யும் முயற்சி 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதனை அடுத்து அங்கு கூடிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் எதிர்ப்பினால் காணி அளவீட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/130384
-
- 0 replies
- 128 views
-
-
மூன்று பகுதிகளால் வாகரைப் பிரதேச செயலக நிலங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன - ஜனா By Shana வாகரைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிலங்களை மூன்று பகுதிகளால் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற மாவட்டத்தின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்பட வேண்டும். அரசுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோணிதாண்டமடு பிரதேசத்தின் ஒரு …
-
- 0 replies
- 297 views
-
-
நாட்டில்... அரிசி தட்டுப்பாடு, ஏற்படாது... என அறிவிப்பு! நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி வரை 47 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாடு, சம்பா, வெள்ளை அரிசி உள்ளிட்ட 25 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக அரிசி விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/128…
-
- 2 replies
- 257 views
-
-
வழமை போன்று... அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், எரிபொருளை விநியோகம் செய்வதாக... அறிவித்தது Lanka IOC! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டோக்கன் பெற்ற போதிலும், மறு அறிவித்தல் வரும் வரை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார். மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்பு கிடைத்தவுடன், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு அதன் இருப்பு குறித்து தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொரு…
-
- 0 replies
- 243 views
-
-
பிறப்பு, திருமணம், இறப்பு... மற்றும் காணிச் சான்றிதழ்களை, வழங்கும் நடவடிக்கை மட்டுப் படுத்தப்பட்டது! பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்குவதை பதிவாளர் நாயகம் திணைக்களம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் பிரிவுகளினால் வழங்கப்படும் சேவைகள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சேவைகள் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், திணைக்களத்தின் பத்தரமுல்ல, குருநாகல், கண்டி, மாத்தறை ஆகிய பிரதேச செயலகங்களின் மாவட்ட …
-
- 0 replies
- 133 views
-
-
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், ரயில், துறைமுகம், முப்படையினர் ஆகிய அடையாளம் காணப்பட்ட சில பிரிவினர் மாத்திரம், அத்தியாவசிய சேவையில் வகைப்படுத்தப்ப…
-
- 1 reply
- 219 views
- 1 follower
-
-
இலங்கை: வடபகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி.. ஈழத் தமிழ் மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்குப் பகுதியை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி நடப்பதாக ஈழத் தமிழர்களின் மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் முகமது ஆலம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் முகமது ஆலம் கூறியதாவது: இலங்கையில் மீனவர்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டம் அமைப்பது தொடர்பாக இந்திய குழு ஒன்று ஆய்வு செய்துவிட்டு திரும்பி உள்ளது. இலங்கைக்கான எரிபொருட்களை இந்தியா வழங்கக் கூடிய நிலையில் இல்லை. ஆனால் இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் வகையில் இந…
-
- 1 reply
- 229 views
-
-
இலங்கையின்... ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு, உதவ தீர்மானித்தது சீனா! சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா முன்வந்துள்ளது. சீனாவின் யுவான், சிச்சுவான், பீஜிங் ஆகிய மாகாணங்களில் இலங்கை ஏற்றுமதி பொருட்களுக்கான காட்சியகங்களை நிறுவுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள், இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹோனாவிடம் உறுதியளித்துள்ளனர். இந்த விற்பனை காட்சியகங்களை நடத்துவதற்கான செலவை சீனாவின் அந்தந்த மாகாணங்கள் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது தயாரிப்புகளுக்கான சீன சந்தையை அணுகுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பால…
-
- 1 reply
- 221 views
-
-
நாட்டில்... தற்போது போதியளவு மருந்து, கையிருப்பு இல்லை – அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை! நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசன்ன கொலம்பகே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை என்று தெர…
-
- 3 replies
- 302 views
-
-
யாழில் சிறுமி கடத்தல் விவகாரம் ; இருவர் கைது யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த சிறுமி, கிளிநொச்சி பகுதியில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரினால் மீட்கப்பட்டு , கிளிநொச்சி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தமது முறைப்பாட…
-
- 0 replies
- 404 views
-
-
எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட பொய்யான தகவல்களே நெருக்கடிக்குக் காரணம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (நா.தனுஜா) எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடுவதைவிடுத்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொய்யான நம்பிக்கை பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் கடுமையாச் சாடியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலி…
-
- 1 reply
- 241 views
-
-
மின் கட்டண திருத்தம், தொடர்பான பரிந்துரைகள்... வெளியாகின! மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாயினை முன்மொழிந்திருந்தது. அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் கட்டணத்தை 2 ரூபா 50 சதங்களாலும் அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதேவேளை, 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட நிலையான கட்டணத்தை ஆயிரத்து 100 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை மு…
-
- 0 replies
- 171 views
-
-
சிங்கள மக்களின் பொறுமைக்கு... எல்லை உண்டு – கூட்டமைப்பினரை, பகிரங்கமாக எச்சரித்தார் சரத் வீரசேகர. இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனின் கட்சி எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கோணகல கிராமத்தில் 54 சிங்களவ…
-
- 23 replies
- 1.3k views
- 2 followers
-
-
முல்லைத்தீவில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகம் - ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கைது Vhg ஜூன் 24, 2022 முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆசிரியரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன் போதே, ம…
-
- 47 replies
- 3.1k views
- 2 followers
-