ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
யாழில்... இளைஞன், திடீர் மரணம் – எரிபொருள் நிரப்பு நிலையத்தில்... தாக்குதலுக்கு இலக்கானமையே, காரணம் என குற்றச்சாட்டு! யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்த இளைஞனும், அவரது நண்பரும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று இருந்தனர். அதன் போது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இருவர…
-
- 0 replies
- 130 views
-
-
எரிபொருளுக்காக காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள் - வடமாகாண ஆளுநர் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி இருக்கிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதால் அதனைப் பெறுவதற்காக நோய் நிலமை உள்ளவர்களும் எரிபொருளுக்காக மணிக்கணக்காக காத்திருக்கின்ற நிலைமையை நான் உணர்கிறேன். ஆகவே இயன்றவரை எரிபொருளு…
-
- 10 replies
- 545 views
- 1 follower
-
-
இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் - இந்திய வெளியுறவுச் செயலர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை முறியடிப்பதற்கு நெருங்கிய நண்பன் என்ற ரீதியில் இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் வினய் க்வாத்ரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாடு கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய இந்திய அரசாங்கம் கடன் திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. அதற்கமைய இதுவரையில் சுமார் 3.5 பில்லியன் டொலர் உதவிகளை இந்தியா , இலங்கைக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 202 views
-
-
நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது (எம்.எம்.சில்வெஸ்டர்) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கடந்த 4 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு வகையான மரக்கறிகளுடன் மாத்திரமே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் ரேணுகா லியனகே தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இது செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரியான செயலாகவே அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், "த…
-
- 0 replies
- 219 views
-
-
யாழில்... 8 ஆவது சர்வதேச, யோகா தின நிகழ்வுகள்! 8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 65 ஆவது சுதந்திர தின ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களுடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பமாகிய 8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ் இந்திய துணைத்தூதுவரின் வரவேற்புரை இடம்பெற்றது. இதனையடுத்து யோகா பயிற்சியும், நிகழ்வின் இறுதியில் யோகா பயிற்சியில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.…
-
- 12 replies
- 592 views
-
-
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன் Posted on June 20, 2022 by நிலையவள் 5 0 இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஜனாதிபதியினை சந்தித்த போது, வடக்கு- கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியினை செய்வதற்காக…
-
- 15 replies
- 1.1k views
-
-
33 இலட்சம் குடும்பங்களுக்கு... இம்மாதம் முதல், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு. பொருளாதார நெருக்கடியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கான நிதியை உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு 6 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1288208
-
- 1 reply
- 155 views
-
-
யாழ்ப்பாணத்தில் சீரற்ற எரிபொருள் வழங்கல் காரணமாக வைத்திய சேவை முடங்கும் ஆபத்து எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இதை அனைவரும் உணரத் தலைப்பட்டுள்ளனர். ஆனாலும் சில குறுகிய நோக்கம் உள்ள, மனிதநேயம் அற்ற சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை உருவாக்கி வைத்தியசாலை ஊழியர்கள் எரி பொருள் பெறுவதை தடுப்பதன் மூலம் இன்பம் காண்கின்றனர். இருப்பினும் சுகாதார அமைச்சு வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும் முகமாக ஒவ்வொரு …
-
- 0 replies
- 287 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம் - காரணம் என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், போராட்டங்களும் நாளுக்கு நாள் வேறுபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டம் நேற்றோடு 75 வது நாளை எட்டியது. சுமார் ஒரு மாத காலம் போராட்டம் வலுப் பெற்ற நிலையில், மே மாதம் 9 ஆம் தேதி போராட்டம் வன்முறையாக மாற்றம் பெற்றது. அலரிமாளிகையில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பின…
-
- 0 replies
- 456 views
- 1 follower
-
-
தமிழகத்தில் இருந்து... உதவிப் பொருட்களை ஏற்றிய, மற்றுமொரு கப்பல்... இலங்கைக்கு வருகை! இந்தியாவின் தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் நேற்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தை நோக்கி புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பலில் 14,712 டன் அரிசி, 250 டன் பால் பவுடர் மற்றும் 38 அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக முதலமைச்சரின் பணிப்புரையின் பேரில் இந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களின் முதல் தொகு…
-
- 0 replies
- 301 views
-
-
மண்ணெண்ணெயின் விலை, சடுதியாக... அதிகரிக்கப்படுகின்றது? இந்த மாத இறுதிக்குள் மண்ணெண்ணெய் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகின்றது. இருப்பினும் அந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 283 ரூபாய் வரையிலான நட்டத்தைச் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. அவ்வாறு நட்டம் ஏற்படுவதைத் தடுப்பதாக இருந்தால் மண்ணெண்ணெய்யின் விலையை லீற்றருக்கு 370 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் குறைந்த வருமானம…
-
- 0 replies
- 324 views
-
-
வாகனங்களின், இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய... எரிபொருளை வழங்க திட்டம்! அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3, 4,5, 6 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்…
-
- 0 replies
- 192 views
-
-
மக்களின் ஆர்ப்பாட்டங்களை... புத்துயிர் பெறச் செய்வதற்கு, தயார் – அநுர அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்த அமைச்சரவைக்கு தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்கும் உரிமை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களைப் பற்றி எவ்வித கவலையும் அற்ற அரசாங்கமே தற்போது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்திய…
-
- 0 replies
- 196 views
-
-
வியாழேந்திரனின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது! மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியிலுள்ள காணி ஒன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று (21) இவர்களை கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்தனர். வந்தாறு மூலை பிரதேசத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் காணியை பிரித்து விற்பனை செய்யப்பட்டு அதில் மக்கள் குடியேறியுள்ளனர். இந்த…
-
- 6 replies
- 515 views
- 1 follower
-
-
பிணை முறிக்கான கட்டணங்களை செலுத்தாமையால் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வங்கியொன்று வழக்குத் தாக்கல் பிணை முறிக்கான கட்டணங்களை செலுத்தாமையால் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வங்கியொன்று வழக்குத் தாக்கல் செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்காக இலங்கை முதல் தடவை தனது வெளிநாட்டு கடன்களை செலுத்த தவறியுள்ள நிலையிலேயே ஹமில்டன் ரிசேர்வ் வங்கி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இலங்கையின் சர்வதேச பிணைமுறியில் 250 மில்லியன் டொலர்களைக் கொண்டுள்ள ஹமில்டல் ரிசேர்வ் வங்கி 25 ஆம் திகதி வட்டி உட்பட முழுமையான தொகையை இலங்கை செலுத்த வேண்டும் என கோரி நேற்று வழக்குதாக்கல் செய்துள்ளது. செயின்ட் கிட்ஸ் நெவிசினை தலைமையகமாக க…
-
- 4 replies
- 328 views
- 1 follower
-
-
21ஆவது திருத்தச் சட்டத்திற்கு... அமைச்சரவை அனுமதி – இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள், நாடாளுமன்றுக்குள் பிரவேசிக்க முடியாது! அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்தல், கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் மேற்பார்வை குழுக்களை ஸ்தாபித்தல், மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்க…
-
- 3 replies
- 323 views
-
-
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்ட போது கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ததை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சத்தியக் கடிதம் ஒன்றின் மூலம் உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான ஆவணங்களை சமர்பிக்கவில்லை அன்றைய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் செயற்பட்ட விதம் காரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த முடியாமல் போனது எனக் கூறி, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்த போது ரட்ணஜீவன…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: ரணில் விக்ரமசிங்க பொருளாதார சரிவிலிருந்து மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் திட்டங்களாக அறிவித்தவை என்னென்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 24 நிமிடங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை தற்போது தாம் எதிர்நோக்கி வருவதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன் 22) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரம் முழுமையான சரிவைச் சந்தித்துள்ளதாகவும், அதுதான் இன்று இலங்கை…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
ரணிலின், வீட்டிற்கு முன்பாக.. போராட்டம் – பொலிஸார் குவிப்பு! கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக முன்பாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டம் காரணமாக சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1288110
-
- 1 reply
- 182 views
-
-
தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினரானார்! வர்த்தகர் தம்மிக்க பெரேரா சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது, அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் இராஜினாமவை தொடர்ந்து வெற்றிடமாகிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டில் ஆசனத்திற்கே தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, பொருளாதார விடயம் தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. -(3) http://www.samakalam.com…
-
- 0 replies
- 302 views
-
-
எரிபொருள் நெருக்கடி: இன்று மட்டும் கூடும், நாடாளுமன்றம் – எதிர்க்கட்சி புறக்கணிப்பு எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வார நாடாளுமன்ற அமர்வை இன்று (புதன்கிழமை) மாத்திரம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றம் இந்த வாரம் நேற்றிலிருந்து 24 ஆம் திகதி வரை கூடும் என முன்னைய நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவ…
-
- 0 replies
- 118 views
-
-
பொருளாதார நிலமைகள்... குறித்து ஆராய, நாளை இலங்கைக்கு வருகின்றது... இந்திய உயர்மட்ட குழு ! பாரத பிரதமரின் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு நாளை இலங்கை வரவுள்ளது. விசேட விமானம் மூலம் நாளை இலங்கைக்கு வரவுள்ள குறித்த குழுவினர், மேலதிக பொருளாதார உதவிகளை மேற்கொள்வதற்காக இங்குள்ள நிலைமைகளை மதிப்பிடவுள்ளனர். மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு இலங்கைத் தூதுவரை …
-
- 0 replies
- 176 views
-
-
நாட்டை மீட்டெடுக்க... திட்டம் இல்லை என்றால், நாடாளுமன்றத்தை மூடுங்கள் – விமல், தயாசிறி கோரிக்கை நாட்டை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்றால் நாடாளுமன்றத்தை மூட வேண்டும் என ஆளும் கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டார். இதுவரையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசியே நெருக்கடியை தீர்க்க முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த அரசாங்கம் சர்வகட்சி கட்சி அரசாங்கம் அல்ல என்பதனால் தேசிய சபையை உருவாக்கி, அதன் மூலம் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டார். இதேவேளை…
-
- 0 replies
- 273 views
-
-
ஜே.வி.பி.யை இணைத்து.. சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, சஜித் திட்டம் -வாசுதேவ நாணயக்கார. ஜே.வி.பி.யை இணைத்துக்கொண்டு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சுயேச்சைக் கட்சிகளின் 11 தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதியும் பிரதமரும் பிளவுபட்டால் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வாசுதேவ நாணயக்கார, “ஜனாதிபதியும் பிரதமரும் தற்போதைக்கு பிளவுபடவில்லை. பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரணிலின் பதவி பறிபோகும் என்ற வதந்தி…
-
- 0 replies
- 116 views
-
-
நெருக்கடியில் இருந்து... கோட்டா, நாட்டை மீட்டெடுப்பார் – பிறந்தநாள் வாழ்த்தில் மஹிந்த. நெருக்கடியில் இருந்து ஜனாதிபதி நாட்டை மீட்டெடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் ருவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது வாழ்வின் மற்றொரு வருடத்தில் அடியெடுத்து வைக்கும்போது அனைத்திற்கும் நல்வாழ்த்துக்கள். அவரது இருப்பு எப்போதும் பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது. மேலும் நெருக்கடியிலிருந்து இந்த நாட்டை அவர் மீட்டெடுப்பார் என்பதி…
-
- 6 replies
- 566 views
-