ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
கோட்டா கோ கம நூலகத்திலருந்து... கிளிநொச்சி மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! காலி முகத்திடல், கோட்டா கோகம போராட்டக்களத்தில் உருவாக்கப்பட்ட நூலகத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி முற்போக்கு சிந்தனை இளைஞர்களின் ஒழுங்குபடுத்தலில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கோட்டா கோகம போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், போராட்டக்களத்தில் உருவாக்கப்பட்ட நூலகத்திற்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை கையளிப்பதற்காக கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். யாழிலிருந்து கிளிநொச்சிக்கு புகையிரதத்தில் விஜயம் ம…
-
- 0 replies
- 230 views
-
-
மின் கட்டண திருத்தம்: 30 முதல் 60 யுனிட் பயன்படுத்துவோருக்கு... உயர்வு இல்லை! மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் இந்த நட்டத்தை இலங்கை மின்சார சபையால் தாங்க முடியாது என தெரிவித்தார். அதன்படி, மின் கட்டணத்தை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார். மின்கட்டண உயர்வுக்கான வழிமுறைகள் குறித்து அடுத்த சில நாட்களில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 30 முதல் 60 யுனிட் பயன்படுத்தும் குறைந…
-
- 0 replies
- 124 views
-
-
21 குறித்து... அரசாங்கத்தின் நிலைப்பாடு – பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்... ஜனாதிபதியுடன் சந்திப்பு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேநேரம், 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் இன்று வினவுவதற்கு அரசாங்கக் குழுவொன்று தயாராகி வ…
-
- 0 replies
- 229 views
-
-
21வது திருத்தச் சட்டமூலம், இன்று மீண்டும்... அமைச்சரவையில்! அமைச்சரவையில் பல தடவைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அங்கீகாரம் வழங்கப்படாத 21வது திருத்தச் சட்டமூலம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்தால் அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைபு வர்த்தமானியில் வெளியிடப்படும். வரைவில் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு இன்று மீண்டும் அமைச்சரவையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்படுகின்றது. இதேவேளை, 21ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச விடயங்கள் தொடர்பான மார்ச் 12 இயக்கத்தின் தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1287658
-
- 0 replies
- 110 views
-
-
அரசாங்க அலுவலகங்களில்... மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு, சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்! அரசாங்க அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்று நிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. குறைந்தளவான ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய சேவைக்கு அழைக்கப்படுகின்ற நாட்களில் சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்களது பணிநாள், தனிப்பட்ட விடுமுறையில் க…
-
- 0 replies
- 94 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின், பிரதிநிதிகள் குழு... இலங்கைக்கு விஜயம்! சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு வரவுள்ளது. இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதனைத்தொடர்ந்து, இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் அண்மையில் இணையவழியில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வரவுள்ளனர். இந்த விஜயத்தின்போது, ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1287646
-
- 0 replies
- 403 views
-
-
இன்று முதல்... மின்வெட்டு அமுலாகும் நேரத்தில், மாற்றம்! நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் சுழற்சிமுறையில் இரண்டரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேர மின்வெட்டு சுழற்சிமுறையில் அமுலாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1287653
-
- 0 replies
- 147 views
-
-
கல்வியங்காட்டு... எரிபொருள் நிரப்பு நிலையத்தில், குழப்பம்! யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு சந்தை தொகுதியுடன் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று பெட்ரோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய அதிகம் அதிகாலை முதல் பெட்ரோலுக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிமான நீண்ட வரிசையில் மக்கள் வாகனங்களுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவிலையே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் தாங்கி வந்திருந்தது. அதனை க.பொ.த.சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு வழங்குமாறு தமக்கு அறிவுறுத்தல் கிடைத்ததாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். இ…
-
- 0 replies
- 345 views
-
-
பீரிஸின்.... உருவப் பொம்மை எரித்து, யாழ்ப்பாணத்தில் போராட்டம் ! வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டம் இடம்பெற்றது. அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறி அதற்கு எதிராக நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஜ.நா.அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். அதன் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அமைச்சரின் உருவ பொம…
-
- 0 replies
- 267 views
-
-
சப்புகஸ்கந்த, எண்ணை சுத்திகரிப்பு நிலையம்... 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம்? சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலை நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்காவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதால், அநாவசியமாக எரிபொருள் சேகரிப்ப…
-
- 3 replies
- 307 views
-
-
சட்ட விரோதமாக... குடியேற முயற்சித்த, 41 இலங்கையர்கள்... நாடு திரும்பினர் – 37 பேருக்கு பிணை. அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள்,அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிக்கும் 16 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் மற்றும் 35 பெரியவர்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட அவுஸ்ரேலியப் படை வீரர்கள் அடங்கிய விமானத்தில், கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு குறித்த 41 பேரும் நாடு கடத்தப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் ந…
-
- 1 reply
- 268 views
-
-
அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் - ராஜித சேனாரத்ன ! kugenJune 19, 2022 அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். ஜனாதிபதியும், பிரதமரும் தற்போதைய நிலையில் தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதே தற்போது உள்ள ஒரே தீர்வு எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது, அவர்களின் தொழிற்துறைக்கு ஏற்படுத்தப்படும் இழுக்காகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்…
-
- 0 replies
- 199 views
-
-
எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு அருகில் ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்த ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்த உத்தரவு எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஏற்படும் குழப்பநிலையை கட்டுப்படுத்த ஆகக்குறைந்தளவு பலத்தை பயன்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாரிற்கு அறிவுறுத்தியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிலையங்களில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கே ஆகக்குறைந்தளவு பலத்தை பயன்படுத்துமாறு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற பகுதிகளில் சட்டமொழுங்கை பேணுவதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமையை கட்டுப்…
-
- 1 reply
- 158 views
-
-
பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் பேரவையின் 50வது கூட்டத் தொடரில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜூன் 13, 2022 அன்று சபையில் கூறியதானது, தமிழ்மக்களுக்கு எதிராக சிறிலங்காவினால் இழைக்கப்பட்ட கொடுங்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதைத் தவிர்ப்பதற்காக, சபையை தவறாக வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை எச்சரித்துள்ளது. தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியதை மறைக்க, சிறிலங்கா தனது த…
-
- 0 replies
- 131 views
-
-
மக்கள் ஆணையுடன்... ஆட்சியமைக்க தயார் என, சஜித் பிரேமதாச அறிவிப்பு. ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சியை ஏற்க தமது கட்சி தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறியமை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய அவர், எந்த தவறும் செய்யாத 22 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் எந்தவொரு நிதியுதவியும் அவர்கள் வழங்கப் போவதில்லை என்றும் சஜித் பிர…
-
- 0 replies
- 152 views
-
-
பொருளாதார நெருக்கடி : சீனாவுடன், பேச்சுவார்த்தைகளை... மீண்டும் ஆரம்பிக்கின்றது அரசாங்கம். இந்த வாரத்தில் இருந்து சர்வதேச உதவியுடன் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகின்றது. அதன் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது என தெரிவிக்கப்படுகின்றது. பேச்சுவார்த்தைக்கு சீனா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் அடுத்த சில நாட்களில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உறுதியான ஏற்பாட்டை இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் வரை சீ…
-
- 0 replies
- 135 views
-
-
ஜனாதிபதி கோட்டா... மற்றும் ஆளும் கட்சியின், இணக்கப்பாட்டுக்கு பின்னர்... அமைச்சரவைக்கு வருகின்றது 21ஆவது திருத்தம் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியின் இணக்கப்பாட்டுக்கு பின்னர், அமைச்சரவை அங்கீகாரத்திற்காக நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர் பீரிஸ் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பிய …
-
- 0 replies
- 164 views
-
-
முன்னுரிமை அடிப்படையில்... எரிபொருள் விநியோகம் – அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முச்சக்கர வண்டிகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள், அலுவலக பணியாளர்கள் போக்குவரத்து வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. அத்தோடு கொள்கலன் போக்குவரத்து வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைந்து செயற்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த வேலைத்திட்டம் தொட…
-
- 0 replies
- 147 views
-
-
20ஆம் திகதி இலங்கை வருகின்றது... சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு ! சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1287544
-
- 0 replies
- 104 views
-
-
20ஆம் முதல் 24ஆம் திகதி வரையில்... கல்வி நடவடிக்கைகளை, முன்னெடுத்துச் செல்வது தொடர்பான... ஆலோசனைக் கோவை வெளியானது எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் சூம் தொழில்நுட்பம் ஊடாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, இந்த ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மேல் மாகாணத்தில் கொழும்பு வலயம், அதனை அண்மித்த நகரங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களில் உள்ள பிரதான நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் குறித்த நாட்களில் பாடசாலைகளை நடத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 117 views
-
-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தென்மராட்சி சிவில் அமைப்பின் பிரதிநிதி க.அருந்தவபாலன் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தார். இவ் ஊடக சந்திப்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம், குரலற்றவர்களின் குரல் அமைப்பு, அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு அழைப்பு விட…
-
- 2 replies
- 246 views
-
-
நாட்டின் போக்கை... திருத்தியமைக்க வேண்டும், அதற்கு... ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சம்பிக்க. தெளிவான திட்டம் இல்லாத நாட்டின் போக்கை திருத்தியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனவும், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது பிரதமரின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதும், பொதுமக்களுக்கு விடயங்களை விளக்குவதும், நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதும் இன்றியமையாதது என்றும் கூறினார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என கேட்டுக…
-
- 2 replies
- 266 views
-
-
காங்கேசன்துறை துறைமுகம் வழியாக... இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு, அனுமதித்தால்... ஒரு இரவிலேயே தீர்வு – டக்ளஸ் தேவானந்தா எரிபொருள், சீமெந்து, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு அனுமதித்தால் ஒரு இரவிலேயே தீர்வு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கேட்டுள்ளார்கள். வட மாகாணத்தில் இருக்கக்கூடிய…
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது – கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் யாழில் தெரிவிப்பு நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவை கருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டா கோ கம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது என கோட்டா கோ கம போராட்டகாரர்கள் தெரிவித்தனர். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய கோட்டா கோ கம போராட்டகாரர்கள் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நூல்களை கொண்டு வந்திருக்கின்றோம். நாட்டை ஆட்சி செய்த மோசமான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவும் தவறான…
-
- 1 reply
- 342 views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, விமான நிலையத்தை பார்வையிட்டார். இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாகவும் அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்திற்கு திரும்ப முடியும் என்றும் கூறினார். athavannews.com
-
- 0 replies
- 287 views
-