Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விறகு பயன்படுத்தும்... இலங்கைப் பெண்களின், ஆயுட்காலம் அதிகம் – சரத் வீரசேகர நவீன மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தைவிட விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில், தனிமனித ஆயுட்காலம் சராசரியாக 80 மற்றும் 85 ஆண்டுகள் ஆகும். எரிவாயு கொள்வனவு செய்ய சிரமப்படும், விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சரா…

    • 45 replies
    • 2.3k views
  2. ரயில் கட்டணங்கள்... அதிகரிப்பு குறித்து, பந்துல விளக்கம்! ரயில் கட்டணங்கள் தொடர்பாக கொள்கையொன்றை வகுக்க வேண்டுமெனவும் பேருந்து கட்டணத்தில் பாதியையாவது ரயிலுக்கு அறவிட வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேரத்தில் அதிவேக ரயிலை இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிபொருளுக்காக மட்டும் 1.3 மில்லியன் ரூபாய் செலவாகும் என அமைச்சர் தெரிவித்தார். 500 ஆசனங்களுக்கு ஒரு பயணியிடம் இருந்து 2000 ரூபாய் அறவிடப்பட்டாலும் 1 மில்லியன் ரூபாய் பெறப்படுவதா…

  3. சுதந்திரக் கட்சியின்... மத்திய செயற்குழு கூட்டம் – நிமல் மற்றும் மஹிந்த அமரவீர பங்கேற்கவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது. கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசாங்க அமைச்சர்களாக பதவியேற்ற நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. எவ்வாறாயினும், கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு இந்தக் கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய அரசாங்கத்தில் அ…

  4. தமிழக அரசின்... அன்பளிப்பு உலர் உணவு பொதிகள், காத்தான்குடியில் வழங்கிவைப்பு! இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலப் பிரிவில் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர் தலைமையில் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது பிரதேச செயலகத்தின் கிராம உத்தியேமாகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.யறூப் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு உலர் உணவுப்பொதிகளையும் வழங்கிவைத்துள்ளனர். காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 18 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வறுமைக் கோட்டி…

    • 1 reply
    • 324 views
  5. 200% அதிகரிக்கப்பட்ட... பொருட்களின் விலை : ஜனாதிபதி மீது, எதிர்க்கட்சி சாடல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் 200 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பொருட்களின் மீதான கட்டுப்பாட்டு விலைகளை விதித்து கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் வர்த்தமானி ஜனாதிபதியால் இரத்துச் செய்யப்பட்டமையே இதற்கு காரணம் என்றார். அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முடிவுகளே தற்போதைய பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டினார். …

  6. சர்வதேச நாணய நிதியத்தின், தலைவருடன் பேசினார்... பிரதமர் ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். தொலைபேசி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து ஊழியர் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்ய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இலங்கைக்கும் ஊழியர் மட்டத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் முடிவிலேயே நிதி உறவுப் பேச்சுக்கள் தங்கியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். …

  7. நிதி நெருக்கடி: பசிலின் திட்டங்களுக்கு... நிதி வழங்குவதை நிறுத்த, அமைச்சரவை தீர்மானம் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது வரவு செலவுத் திட்டத்தில் 2022ஆம் ஆண்டு முன்மொழிந்த பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதை வேறுபடுத்துவதற்கு அல்லது முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி திட்டங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்…

  8. கைது செய்வதை... தடுக்குமாறு கோரி, ஜோன்ஸ்டன் ரிட் மனு தாக்கல் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். வைகாசி 9 ஆம் திகதி கொழும்பில் பதிவாகியிருந்த அமைதியின்மை தொடர்பான வழக்கின் சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார். இதனை அடுத்து சி.ஐ.டியினர் கடந்த ஒரு வாரமாக அவரை வலைவீசி தேடிவருகின்ற போதும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் க…

  9. எரிவாயு விநியோகம், இடம் பெறாது – வரிசையில்... காத்திருக்க வேண்டாம்: லிட்ரோ நாட்டில் இன்று (புதன்கிழமை) லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாதென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் இன்று விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. https://athavannews.com/2022/1285936

  10. பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட... குறை மதிப்பீட்டு பிரேரணை மீதான, விவாதம் இன்று! அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் பிரதமரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. 695 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தக் கூடுதல் மதிப்பீடு நேற்று பொது நிதி தொடர்பான குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் தலைமையில் இந்த நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது. துணை மதிப்பீட்டில் உள்ள 695 பில்லியன் ரூபாயில் 395 பில்லியன் மீள் செலவினமாகவும் 300 பில்லியன் மூலதனச் செலவினமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. …

  11. யாழிலுள்ள... பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் இல்லை யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேவேளை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இன்று(7) இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் எரிபொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்த கேட்டதையடுத்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்றைய தி…

  12. 'கோ ஹோம் கோட்டா' என்பதை பலர் தற்போது மறந்து விட்டனர் - சபையில் சஜித் ஆதங்கம் (இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்களினால் கடந்த இரண்டரை வருட காலத்தில் நாடு எதிர்கொண்ட நெருக்கடி நிலைமையினை நினைவில் வைத்து பிரதமர் நெருக்கடிகளை மீள்திருத்த வேண்டும். அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களை நாட்டு மக்கள் மறக்கவில்லை. கோ ஹோம் கோட்டா என்பதை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ சபையில் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிர்மாணிப்பு கட்டுமான தொழிற்துறையினர்,சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால் மேலும் பாதிக்கப்பட…

    • 2 replies
    • 317 views
  13. 35வீதம் குறைவாக... ரஷ்யாவிடம் இருந்து, எரிபொருளை வாங்குமாறு... வாசு வலியுறுத்து! உலக சந்தையின் சாதாரண விலையை விட 35வீதம் குறைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் எரிபொருளை கொள்வனவு செய்வதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எரிபொருளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தயார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எரிசக்தி அமைச்சிடம் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், அந்த கோரிக்கைக்கு அமைச்சு இதுவரை ப…

    • 1 reply
    • 281 views
  14. ரணில், பதவியேற்பதற்கு... சில மணி நேரங்களுக்கு முன்னர், ஜனாதிபதி... என்னை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார்: சரத் பிரதமர் பதவியை ரணில் ஏற்றுக்கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி என்னை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “பெரும்பாலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளித்தால் மட்டுமே நான் பிரதமர் பதவியை ஏற்பேன் என்று ஜனாதிபதியிடம் கூறினேன். எனவே, அவர் பிரதமராக வருவதற்கு வழிவகுத்த பெருமையை ரணில் விக்ரமசிங்க எனக்கு வழங்க வேண்டும். தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள 50வீத நாடாளுமன்ற…

  15. இலங்கையில்... பலரும், வேலை இழக்கும் அபாயம் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றமை காரணமாக எதிர்காலத்தில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குரிய போதிய வருமானம் இல்லாததால் இந்த நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டின் பல துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1285920

  16. இலங்கையில் ரூ.1,500 விலையில் கிடைத்த யூரியா ரூ.42,500 ஆனது: நெல் விளைச்சல் என்ன ஆகும்? யூ.எல்.மப்ரூக் பிபிசி தமிழுக்காக 26 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவானதே - தற்போதைய சிறுபோகத்தில் கிடைக்கும் என, விவசாய திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதனால் மக்களின் பிரதான உணவுப…

  17. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விசேட உரை: "நாட்டுக்கு மிக கடுமையான மூன்று வாரங்கள்" 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் உரையில் வெளியான முக்கியமான 20 விடயங்களை சுருக்கமாக தொகுத்து வழங்குகின்றோம். 01.எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகமானது, எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு மிக சிரமமானது. 02. இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு மாத்திரம் 500 மில்லியன் டாலர்கள் எரிபொருளுக்காக செலவிட வேண்டியுள்ளது. 03.எரிபொருள் விலை அதிகரிக்…

  18. கடற்படை முகாமுக்காக காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது கே .குமணன் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள "கோட்டாபய கடற்படை கப்பல் ' என்னும் கடற்படை முகாமுக்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு இன்று (07) நில அளவை திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ள 617 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் நில அளவை திணைக்களத்தினரின் ஒத்துழைப்போடு அளவீடு செய்து காணி சுவீகரிப்புக்கு கடற…

    • 1 reply
    • 231 views
  19. தமிழ்நாடு முதல்வரிடம்... நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு, முக்கிய வேண்டுகோள்! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியாளர்களை நாடு கடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ப்ரிவெல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி தொடர்பாக இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாடு கல்முனை தனியார் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற போது பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்டவாறு கூறினர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியிலும் எமக்காக குரல் கொடுத்…

  20. ஆயுதம் தாங்கிய படையினரை... நாடு முழுவதும், கடமையில் ஈடுபடுத்துமாறு... ஜனாதிபதி உத்தரவு. நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40 ஆவது அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். https://athavannews.com/2022/1285862

  21. 2019 ஆண்டுவரை இருந்த, வரிவிதிப்பு முறையை... மீள ஆரம்பிக்கவுள்ளதாக, பிரதமர் சபையில் தெரிவிப்பு! 2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையாலேயே நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், இதனை மீளவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” எமக்குத் தேவையான உணவின் பெரும்பான்மையானவற்றை நாம் தேசிய ரீதியாக உற்பத்தி செய்கிறோம். எஞ்சியத் தொகையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஒரு வருடத்திற்கு…

  22. கொழும்பு துறைமுக நகர... முதலீட்டாளர்களுக்கு, 40 வருட வரிச் சலுகை – அமைச்சரவை அங்கீகாரம்! கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 40 வருடங்கள் வரை வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களை கவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத்திற்கு பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடு ஒரு பில்லியன் டொலர்கள் என்பதுடன், இலங்கையில் ஒரு திட்டத்திற்காக பெறப்பட்ட அதிகூடிய வெளிநாட்டு முதலீடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://a…

    • 1 reply
    • 155 views
  23. அரசியலமைப்பின்... 21வது திருத்தம் – அனைவரினதும், ஆதரவைப் பெறுவது கடினம்: பந்துல அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து அடுத்த வாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அங்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1285805

  24. எரிபொருள்- எரிவாயுவை... அடுத்த 3 வாரங்களுக்கு, சிக்கனமாக பயன்படுத்துமாறு... பிரதமர் ரணில் மக்களிடம் கோரிக்கை! நாட்டில் அடுத்த மூன்று வாரங்களுக்கு எரிவாயு- எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்பதால், பொது மக்கள் இவற்றை மிகுந்த சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”நாடு தற்போது முகம்கொடுக்கும் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். இதிலிருந்து மீற வழமையான செயற்பாடுகளில் இருந்து நாம் புதுமையாக சிந்திக்க வேண்டும். இதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் நாம் எதிர்ப்ப…

  25. 10 மில்லியன் ரூபாய் பிணையில்... அஜித் நிவாட் கப்ரால், விடுதலை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபாய் சரீர பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் திருத்தப்பட்ட முறைப்பாட்டினை தாக்கல் செய்வதற்கும் தினியாவல பாலித தேரருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனத்திற்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சரவையின் அனுமதியின்றி இவ்வாறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.