ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
369 பொருட்களை... புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய, இறக்குமதி செய்ய அனுமதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் முதல் குறித்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் விதிமுறைகள் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவற்றின் தேவையை கருத்திற்கொண்டு நாட்டிற்கு கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணியை பாதுக…
-
- 0 replies
- 216 views
-
-
புதிய அரசாங்கத்தில்... அமைச்சர்களாக பதவியேற்ற: இரண்டுபேரை நீக்கி, மைத்திரி நடவடிக்கை ! அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரை நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி அவர்கள் கட்சிக்குள் வகித்திருந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் ஊடக அறிக்கை இன்று (01) வெளியிட்டுள்ளது. அரசாங்கம் எடுக்கும் சாதகமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாத்திரமே மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அதனை மீறி அரசாங்கத்தில் பதவி ஏற்றால் கட்சியின் சகல பதவிகளில் இருந்த…
-
- 0 replies
- 210 views
-
-
பொதுத் தேர்தல் ஊடாகவே... பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு- அநுர பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாகவே, நாட்டின் அரசியல்- பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியும் என்று ஜே.வி.பி.யின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பு துறைமுக நகரங்கள் 45ஐ செய்யும் அளவுக்கு நாட்டில் கடன்சுமை ஏற்பட்டுள்ளது. எடுத்தக்கடனுக்கான வட்டியையும் நாம் செலுத்த வேண்டும். இதற்காக மேலும் கடனைப்பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவையணைத்துக்கும் டொலர் அவசியமாகும். அரசாங்கம் இன்று அனைத்து செயற்பாடுகளையு…
-
- 0 replies
- 147 views
-
-
மருந்துகள்... மற்றும் அத்தியாவசிய சத்திர சிகிச்சை உபகரணங்களை, நன்கொடையாக வழங்கும் சீனா ! 28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திர சிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. இவற்றை இரண்டு தனித்தனி தொகுதியாக நன்கொடையாக வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இதேவேளை ஜோர்தான் மற்றும் மலேசியாவில் உள்ள ஒரு அமைப்பு இலங்கைக்கு மருந்துகளை வழங்க முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு நாட்டில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை வழங்க சுவிட்சர்லாந்தில் உள்ள பௌத்த அறக்கட்டளை அமைப்பும் முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்…
-
- 0 replies
- 105 views
-
-
இலங்கையை... விட்டு வெளியேறும், பெருமளவிலான மக்கள் ! கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் கடந்த நாட்களாக பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்தோடு வெளிநாட்டு கல்விக்காக மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகரித்தமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளொன்றுக்கு நூறுகணக்கானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணத்தை மேற்கொண்டுவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள நுழைவு முனையம் அவ்வளவு பரபரப்பாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 141 views
-
-
21வது திருத்தச் சட்டம் – ஜனாதிபதி... அமைச்சுக்களை வகிக்க முடியாது, உள்ளிட்ட 5 யோசனைகளை முன்வைத்தது எதிர்க்கட்சி! நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, குறித்த யோசனைகள் பின்வருமாறு… ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது என்ற 19வது திருத்தத்தின் விதிகளை அரசியலமைப்பில் இணைத்தல். சட்ட சபையின் பரிந்துரையின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநருக்கு மேலதிகமாக நாணயச் சபையின் ஏனைய உறுப்பினர்களை நியமித்தல். தேசிய முன்னுரிமைகள் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தை ஒரு சுயாதீன ஆணையமாக நியமித்து அதன் உறுப்பினர்களை சட்ட மேலவையின் பரிந…
-
- 6 replies
- 535 views
-
-
ஆயிஷாவைக் கொலை செய்ததாக... சந்தேகநபர், வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது! பண்டாரகம – அதுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின்மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் மரணம் தொடர்பாக பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை விசாரணைகள் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன. இந்தப் பரிசோதனையில் சிறுமி பாலியல் பலா…
-
- 6 replies
- 868 views
- 1 follower
-
-
வெளி நாட்டவர்களுக்கு... ‘கோல்டன் பரடைஸ் விசா’ என்ற, நீண்ட கால வீசா – புதிய திட்டம் ஆரம்பம். நாட்டிற்குள் அந்நிய செலாவணியை கொண்டுவரும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் திட்டத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘கோல்டன் பரடைஸ் விசா’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு இணைய வழி ஊடாக விசா வழங்கப்படவுள்ளது. அதன்படி மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு விசா வழங்கப்படவுள்ளது. இவ்வாறு வைப்பிலிட்ட பணத்தில் 50 ஆயிரம் டொலரை ஒரு வருடத்திற்கு பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மீதமுள…
-
- 0 replies
- 199 views
-
-
இலங்கை முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம் 31 மே 2022 பட மூலாதாரம்,DUMINDA SILVA'S FACEBOOK மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயற்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அது தொடர்பிலான சட்ட ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு சட்ட மாஅதிபருக்க…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
21 ஆவது திருத்தத்தை... சீர்குலைக்கும் நடவடிக்கையில், பசில் தரப்பு! 21 ஆவது திருத்தத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நாடாளுமன்றில் வலியுறுத்த பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர். பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ள அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். 21ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இதுவரை ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிந்தக மாயதுன்ன, சரத் வீரசேகர மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் பேசியுள்ளனர். அத்தோடு பொருளாதார குறைகளை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம…
-
- 0 replies
- 328 views
-
-
டொலர் தட்டுப்பாடு – ஹஜ் கடமையை நிறைவேற்ற, மக்காவுக்கு செல்லாதிருக்க தீர்மானம்! முஸ்லிம்கள் இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்குச் செல்லாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேசிய ஹஜ் குழு, ஹஜ் சுற்றுலா அமைப்பு மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு 1,585 இலங்கையர்களுக்கு ஹஜ் யாத்திரையில் பங்குக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் டொலர்கள் தட…
-
- 0 replies
- 170 views
-
-
திருத்தி அமைக்கப்பட்ட, வரிகள் தொடர்பான... முழு விபரம் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு வரிகளை திருத்தியமைக்க அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது. அதன் மூலம் பெறுமதி சேர் வரியை 8 வீதத்தில் இருந்து 12 வீதமாகவும் தொலைத்தொடர்பு வரியை 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனிநபர் வருமான வரிச் சலுகையை மூன்று மில்லியன் ரூபாவில் இருந்து 1.8 மில்லியன் ரூபாய் வரை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதன் மூலம் இது நடைமுறைப்படுத்தப்ப…
-
- 0 replies
- 284 views
-
-
போராட்டங்கள் மீதான தாக்குதல் – மஹிந்த குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (புதன்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ அமைதிப் போராட்டங்களின் மீது கடந்த 09ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் …
-
- 0 replies
- 73 views
-
-
புதிய இராணுவத் தளபதி, கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது கடமைகளை இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று முற்பகல் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் ஜனாதிபதி நியமன கடிதத்தை கையளித்திருந்தார். அதற்கமைய இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக விளங்கிய விக்கும் லியனகே இராணுவ தளபதியாக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். https://athavannews.com/2022/1284814
-
- 0 replies
- 233 views
-
-
50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்... இன்று விநியோகம்! நாட்டில் இன்றைய தினமும் (புதன்கிழமை) 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/20…
-
- 0 replies
- 229 views
-
-
8 நாட்களுக்கு பின்னர்... வழமைக்கு திரும்புகிறது, சமையல் எரிவாயு விநியோகம்! நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்கள் லிட்ரோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்…
-
- 2 replies
- 224 views
-
-
“நாட்டுக்காக மகிந்தவை நீக்கும் வாழ்வின் கடினமான முடிவை எடுத்தேன்” - கோட்டாபய May 31, 2022 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவாகுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (30.05.22) நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், அந்த கடினமான தீர்மானத்தை நாட்டுக்காகவே தான் எடுத்ததாகவும், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு தான் தயார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தன்னு…
-
- 8 replies
- 808 views
-
-
அமெரிக்காவில் இருந்து... இலங்கைக்கு அனுப்பப்பட்ட, மருந்துகள்... 12 நாட்களாக விமான நிலையத்தில் தேக்கம் ! அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த பணிப்புரை விடுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை நாட்டை வந்தடைந்து 12 நாட்கள் கடந்துள்ள போதும், அவற்றை கட்டுநாயக்கவில் இருந்து விடுவிப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையிலே, குறித்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை…
-
- 1 reply
- 283 views
-
-
அரசாங்கத்தின்... வருவாயை அதிகரிக்க, சில சட்டங்களில் திருத்தம் : பிரதமர் எடுத்த தீர்மானம் ! அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க சில சட்டங்களில் திருத்தம் செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார். அதன்படி 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்கஉள்நாட்டு வருவாய் சட்டம், 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க டெலிகாம் லெவி சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர அவர் தீர்மானித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட. விதிப்பனவுச் சட்டம், 1988 ஆம் ஆம் ஆண்டு 40 ஆவது இலக்க நிதி மேலாண்மைச் சட்டதின் 2003 இன் 3 ஆம் இலக்கத்தை மாற்ற முன்மொழிந்துள்ளார். இதேவேளை 695 பில்லியனுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வ…
-
- 1 reply
- 283 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: வரி வீதத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது பிரதமர் அலுவலகம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 8 சதவீதமாக காணப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (வாட்) 12 சதவீதம் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 11.25 சதவீதமாக காணப்பட்ட தொலைத்தொடர்பு வரியை 15 சதவீதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை பிரதமர் அலுவலகம் இன்று, மே 31 வெளியிட்டது. பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை சொல்வது என்ன? …
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
துமிந்த சில்வாவிற்கு... ஜனாதிபதியால், வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி... இடைக்கால தடை உத்தரவு ! துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பை வழங்கியிருந்தார். https://athavanne…
-
- 1 reply
- 397 views
-
-
பாதுகாப்புப் படைகளின்... பிரதானியாக, சவேந்திர சில்வா! பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை முதல் அமுலாகும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் 24வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். அதன்படி லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று நாளை புதன்கிழமை அவர் தனது புதிய பதவியை பொறுப்பேற்கிறார். https://athavannews.com/2022/1284771
-
- 0 replies
- 514 views
-
-
இருதய சத்திர சிகிச்சைகள்... நிறுத்தப்படும், அபாயம்! எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோத்தபாய ரணசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருதய சத்திரசிகிச்சைகளுக்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். சராசரியாக, வைத்தியசாலைகளுக்கு நாளாந்தம் நான்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்ற போதிலும் இவை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து இதய நோயாளிகளுக்கும் தேவை…
-
- 0 replies
- 265 views
-
-
இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை Getty ImagesCopyright: Getty Images தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமுன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தொகையை செலுத்தத் தவற…
-
- 4 replies
- 368 views
- 1 follower
-
-
ஆயிஷாவின் மரணத்திற்கு... நீதி கோரி, 8 மாவட்டங்களில் நாளை போராட்டம்! சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மன்னார் பஜார் பகுதியில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு -கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்க…
-
- 2 replies
- 266 views
-