ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்! adminAugust 28, 2025 ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க பயணம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு ப…
-
-
- 8 replies
- 466 views
- 1 follower
-
-
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆலோசனை. ! ? தலைமறைவாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவினை வழங்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. கொழும்பு பிரதான நீதிவானிடம் நேற்று (26) இந்த மனுவைத் தாக்கல் செய்த இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, ராஜித சேனாரத்னவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ராஜித சேனா…
-
- 0 replies
- 170 views
-
-
27 Aug, 2025 | 04:13 PM பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் (HDP) உறுப்பினர்கள் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை பிரதமர் ஹரிணி சந்தித்தார். இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதாரம், சட்டங்கள், அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் பங்களிப்பு எடுத்துக்காட்டப்பட்டது. இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சட்டவாக்கத்தின் பலம் மற்ற…
-
- 1 reply
- 166 views
-
-
யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல். நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்குவதற்கான, நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. பாதுகாப்பு அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒவ்வொரு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இலங்கை இராணுவ…
-
-
- 2 replies
- 254 views
-
-
27 Aug, 2025 | 05:43 PM இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் வீதிக்கு குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் திருத்தப்பட்டு மீள் பயன்பாட்டுக்காக இன்று (27) கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த இரண்டு பேருந்துகளும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட விருந்தினர்களால் நாடா வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு மீள கையளிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை போக்குவரத்து சபை களஞ்சியத்தால் பழுது பார்க்கப்பட்ட இந்த இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் யாழ்ப்பாணம் – கொழும்பு சேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சிறீபவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபை துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர…
-
- 0 replies
- 154 views
-
-
Published By: Vishnu 27 Aug, 2025 | 07:24 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 169 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 158 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 35வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செம்மணி-சித்துபாத்தி புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 101 views
-
-
நெல்லியடியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பணம் கொள்ளை ; 10 சந்தேகநபர்கள் கைது 27 Aug, 2025 | 11:10 AM வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (26) 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் நெல்லியடி பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணயதாள்கள் உள்ளிட்ட பணத்தினையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதையறிந்து, இந்த விடயம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு …
-
- 3 replies
- 367 views
- 1 follower
-
-
முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு ! இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் நால்வரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை கடந்த 19.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பாக ஐனாதிபத…
-
- 0 replies
- 102 views
-
-
மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்! adminAugust 27, 2025 யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து , அராலி சந்தி , மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று , இரவு மண்டைதீவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன. மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் …
-
- 0 replies
- 84 views
-
-
ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். “அவரது இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது. பிணை வழங்கப்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு செல்லலாம். தேசிய வைத்தியசாலையில் காத்தி…
-
- 0 replies
- 316 views
-
-
தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! ஆட்சேபனையின் ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் சமர்ப்பிப்பு! adminAugust 27, 2025 வலி. வடக்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் உறுப்பினரான தன்னை கடிதம் மூலம் கட்சியின் பொது செயலாளர் இடைநிறுத்தியமையை சவாலுக்கு உட்படுத்தி யாழ் . மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடை…
-
- 0 replies
- 135 views
-
-
பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்! adminAugust 27, 2025 பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலை மென்று , பொது இடத்தில் துப்பிய குற்றச்சாட்டில் , அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையான வியாபாரி தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று 5ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://globaltamilnews.net/2025/219638/
-
- 0 replies
- 123 views
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி. சிகிச்சை முடிந்ததும் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதிவா…
-
- 0 replies
- 70 views
-
-
26 Aug, 2025 | 04:47 PM வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச மைதானம் அமைக்கப்படுவதற்கு தற்போது சில எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதை அவதானித்துள்ளோம். வடக்கில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதற்காக பலரும் நீண்ட காலமாக முயற்சி செய்கின்றனர். அதற்காக பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மண்டைதீவை தெரிவு செய்தனர். வடமாகாண சபை…
-
-
- 5 replies
- 370 views
-
-
26 Aug, 2025 | 04:41 PM யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளது. காரைநகரை சேர்ந்த யோகநாதன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு வேளைகள் பால் தர கூடிய மாடே படுகொலை செய்யப்பட்டுள்ளது. மாடு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிமையாளரினால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை மாடுகளை களவாடி இறைச்சியாக்கும் சட்டவிரோத கும்பல் பசுமாட்டை தடம் வைத்து பிடிக்க முற்பட்ட வேளையே மாடு உயிரிழந்த நிலையில், மாட்டின் உடலத்தை சம்பவ இடத்தில் இருந்து…
-
- 0 replies
- 192 views
-
-
26 Aug, 2025 | 08:45 PM நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான இன்றைய தினம் (ஓகஸ்ட் 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார். அகழ்வு தளத்தை பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் குழந்தைகளினுடையது என சந்தேகிக்கப்படக்கூடிய எலும்புகளை கண்டுள்ளனர், எவ்வாறெனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இது…
-
- 0 replies
- 189 views
-
-
26 Aug, 2025 | 07:24 PM (துரைநாயகம் சஞ்சீவன்) சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை (26) பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மாகாண மேல் நீதிமன்ற அனுமதியுடன் மேலதிக நடவடிக்கைக்காக குறித்த வழக்கானது செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் உத்திதேச பட்ஜட் ஒன்று தாக்கல் செ…
-
- 2 replies
- 164 views
- 1 follower
-
-
ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க. ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவ…
-
- 2 replies
- 258 views
-
-
சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு! சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்து, அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைச் சபையின் உறுப்பினர்களாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடி முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு எதிர்த் தரப்புக்கு அழைப்ப…
-
- 0 replies
- 198 views
-
-
அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு 26 Aug, 2025 | 10:27 AM வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…
-
- 0 replies
- 120 views
-
-
ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர் 26 August 2025 தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகம், திறன்கள், தொழில்துறைகள்) ஜகத் வீரசிங்கவிடம், எமது செய்தி சேவை வினவிய போது, ”மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று தெரிவித்தார். அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச் ச…
-
- 0 replies
- 124 views
-
-
கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன, கூடுதலாக, எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தய…
-
- 0 replies
- 93 views
-
-
நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியல் தொடர்பாக நான்கு விளக்கக் காணொலிகளை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் விளக்கத்தை களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறைத்தலைவர் மனோஜ் ஜிந்தாச வழங்கியுள்ளார். மத மற்றும் நல்லிணக்கக் கண்ணோட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஓமரே புண்யசிறிதேரர் வழங்கியுள்ளார். சட்ட விளக்கத்தை மூத்த சட்டக்கல்வியலாளர் பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா வழங்கியுள்ளார். அதேநேரம் ஊடக மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன வழங்கியுள்ளார். https://ne…
-
- 0 replies
- 124 views
-
-
108 தம்பதியினருக்கு இலவச திருமணம்! adminAugust 25, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 தம்பதியினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது . தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்க…
-
-
- 6 replies
- 868 views
- 1 follower
-
-
25 AUG, 2025 | 04:48 PM (எம்.நியூட்டன்) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், அதனை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஐ.நா பிரதிநிதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செம்மணியின் தடயங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயலால், நீதிக்கான சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அத்த…
-
- 6 replies
- 357 views
- 1 follower
-