Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 27 Aug, 2025 | 05:43 PM இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் வீதிக்கு குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் திருத்தப்பட்டு மீள் பயன்பாட்டுக்காக இன்று (27) கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த இரண்டு பேருந்துகளும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட விருந்தினர்களால் நாடா வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு மீள கையளிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை போக்குவரத்து சபை களஞ்சியத்தால் பழுது பார்க்கப்பட்ட இந்த இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் யாழ்ப்பாணம் – கொழும்பு சேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சிறீபவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபை துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர…

  2. Published By: Vishnu 27 Aug, 2025 | 07:24 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 169 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 158 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 35வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செம்மணி-சித்துபாத்தி புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு | Virakesari.lk

  3. முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு ! இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் நால்வரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை கடந்த 19.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பாக ஐனாதிபத…

  4. மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்! adminAugust 27, 2025 யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து , அராலி சந்தி , மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று , இரவு மண்டைதீவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன. மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் …

  5. ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். “அவரது இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது. பிணை வழங்கப்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு செல்லலாம். தேசிய வைத்தியசாலையில் காத்தி…

  6. தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! ஆட்சேபனையின் ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் சமர்ப்பிப்பு! adminAugust 27, 2025 வலி. வடக்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் உறுப்பினரான தன்னை கடிதம் மூலம் கட்சியின் பொது செயலாளர் இடைநிறுத்தியமையை சவாலுக்கு உட்படுத்தி யாழ் . மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடை…

  7. பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்! adminAugust 27, 2025 பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலை மென்று , பொது இடத்தில் துப்பிய குற்றச்சாட்டில் , அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையான வியாபாரி தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று 5ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://globaltamilnews.net/2025/219638/

  8. முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி. சிகிச்சை முடிந்ததும் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதிவா…

  9. 26 Aug, 2025 | 04:47 PM வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச மைதானம் அமைக்கப்படுவதற்கு தற்போது சில எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதை அவதானித்துள்ளோம். வடக்கில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதற்காக பலரும் நீண்ட காலமாக முயற்சி செய்கின்றனர். அதற்காக பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மண்டைதீவை தெரிவு செய்தனர். வடமாகாண சபை…

  10. ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க. ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவ…

    • 2 replies
    • 258 views
  11. Home > செய்திகள் > குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் Friday, July 11, 2025 செய்திகள் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பி…

  12. 26 Aug, 2025 | 04:41 PM யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளது. காரைநகரை சேர்ந்த யோகநாதன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு வேளைகள் பால் தர கூடிய மாடே படுகொலை செய்யப்பட்டுள்ளது. மாடு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிமையாளரினால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை மாடுகளை களவாடி இறைச்சியாக்கும் சட்டவிரோத கும்பல் பசுமாட்டை தடம் வைத்து பிடிக்க முற்பட்ட வேளையே மாடு உயிரிழந்த நிலையில், மாட்டின் உடலத்தை சம்பவ இடத்தில் இருந்து…

  13. 26 Aug, 2025 | 08:45 PM நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான இன்றைய தினம் (ஓகஸ்ட் 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார். அகழ்வு தளத்தை பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் குழந்தைகளினுடையது என சந்தேகிக்கப்படக்கூடிய எலும்புகளை கண்டுள்ளனர், எவ்வாறெனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இது…

  14. சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு! சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்து, அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைச் சபையின் உறுப்பினர்களாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடி முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு எதிர்த் தரப்புக்கு அழைப்ப…

  15. அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு 26 Aug, 2025 | 10:27 AM வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

  16. ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர் 26 August 2025 தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகம், திறன்கள், தொழில்துறைகள்) ஜகத் வீரசிங்கவிடம், எமது செய்தி சேவை வினவிய போது, ”மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று தெரிவித்தார். அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச் ச…

  17. கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன, கூடுதலாக, எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தய…

  18. நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியல் தொடர்பாக நான்கு விளக்கக் காணொலிகளை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் விளக்கத்தை களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறைத்தலைவர் மனோஜ் ஜிந்தாச வழங்கியுள்ளார். மத மற்றும் நல்லிணக்கக் கண்ணோட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஓமரே புண்யசிறிதேரர் வழங்கியுள்ளார். சட்ட விளக்கத்தை மூத்த சட்டக்கல்வியலாளர் பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா வழங்கியுள்ளார். அதேநேரம் ஊடக மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன வழங்கியுள்ளார். https://ne…

  19. Published By: DIGITAL DESK 3 25 AUG, 2025 | 01:59 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2022-இல் நாடு மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் விக்கிரமசிங்க என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவை நிரூபிக்கப்பட்டாலும், ஐரோப்பிய தரங்களி…

  20. வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்! adminAugust 25, 2025 மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது. குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாவிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவன…

  21. பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது August 25, 2025 4:49 pm மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்ளான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன, முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடி…

  22. வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு 2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (25) அறிவித்துள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இன்று அழைக…

  23. Published By: VISHNU 25 AUG, 2025 | 08:37 PM செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில், பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் 33ஆவது நாளான திங்கட்கிழமை (25) மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் ஆரம்பமானது. இன்றைய தினம், ஏற்கனவே இருந்த அகழ்வு தளங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (26) பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 150 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவை முற்றாக அகழ…

  24. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக, 30 துப்பாக்கிகள் மீட்பு! யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ ஏ ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2…

  25. 22 AUG, 2025 | 04:17 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) “மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் மலையக தமிழ் மக்கள் என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.