ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
ஜனாதிபதிக்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை: மீண்டும், ஆளும்தரப்பு... வாக்கெடுப்பில் வெற்றி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகைக்காக நிலையிறக் கட்டளையை இடைநிறுத்துவதா இல்லையா என்பதை கண்டறிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது. ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார். இதற்கு சபை முதலவர் தினேஷ் குணவர்தன கடும் அதிருப்தியை வெளியிட்ட நிலையில் நிலையிறக் கட்டளையை இடைநிறுத்துவது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு எதிராக... பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன் ஆகியோர் வாக்களித்தனர். அந்தவகையில்…
-
- 2 replies
- 208 views
-
-
இப்போது... நான், எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று... எனக்குத் தெரியவில்லை – ரணில் நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இப்போது தான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் என்னால் பங்கேற்க முடியாது ஆளும் கட்சியின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. இன்று நாடாளுமன…
-
- 4 replies
- 346 views
-
-
அஜித் ராஜபக்ச... பிரதி சபாநாயகராக, தெரிவு இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் கிடைத்தன. இதேவேளை செல்லுபடியற்ற வாக்குகள் 25 பதிவாகியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். வாக்கெடுப்பு இடம்பெற்றால் சுதந்திரக் கட்சியினர் வாக்கு சீட்டில் குறுக்கு கோடிட்டு பதிவு செய்வார்கள் என மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282289
-
- 0 replies
- 134 views
-
-
முன்னாள் பிரதமர் மஹிந்த, மற்றும் நாமல்... நாடாளுமன்றத்திற்கு, சமூகமளிக்கவில்லை. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை. பிரதி சபாநாயகர் தெரிவிற்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்றுவருகின்ற நிலையில் அவர்கள் சமூகமளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டது. கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற பதற்றநிலையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282278
-
- 0 replies
- 111 views
-
-
ஏழு, நாடாளுமன்ற உறுப்பினர்களை... விசாரிக்க, பொலிஸார் திட்டம் காலி முகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேர் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கட்டாயமாக வாக்குமூலம் பதிவு செ…
-
- 0 replies
- 129 views
-
-
யாழில்... முள்ளிவாய்க்கால் கஞ்சி, வழங்கும் நிகழ்வு! தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வீதியால் பயணித்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. https://athavannews.com/2022/1282301
-
- 0 replies
- 166 views
-
-
கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் கலவரம் – இதுவரையில் 664 பேர் கைது! கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக இதுவரையில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இது தொடர்பாக 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப…
-
- 0 replies
- 147 views
-
-
பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான... மக்கள் பேரணி திருகோணமலையில், ஆரம்பம்! இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி நேற்று (திங்கட்கிழமை) திருகோணமலையை வந்தடைந்தது. அதனைந்தொடர்ந்து இன்றைய தினம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்த குறித்த பேரணி திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குறித்த பேரணி திருகோணமலையிலிருந்து ஆரம்பமாகி நிலாவெளி,குச்சவெளி, புல்மோட்டை ஊடாக தென்னமரவாடியை சென்றடைந்து அங்கிருந்து வவுனியா ஊடாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. அத்துடன் போரணியின் ஆரம்பத…
-
- 0 replies
- 127 views
-
-
பொதுஜன பெரமுன – பிரதமர் ரணிலுக்கு, இடையில்... வெடித்தது மோதல் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முதலாவது பனிப்போர் தற்போது ஆரம்பித்துள்ளது. ஒரு நாளை வீணடிப்பதைத் தவிர்க்க, ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை குறித்த பதவிக்காக பொதுஜன பெரமுன மும்மொழிந்துள்ள நிலையில் தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது. இதேவேளை நாடாளுமன்றில் இன்று பலரும் வாக்கெடுப்பை நடத்தாமல் கட்சித் தலைவர்கள் கூடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்…
-
- 0 replies
- 132 views
-
-
நாடாளுமன்ற வளாகத்திற்குள்... அந்நியர்கள் குழுவொன்று, பிரவேசித்துள்ளது – சன்ன ஜயசுமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தொலைபேசியில் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் சிலர் நாடாளுமன்றுக்குள் வருவதற்கு பயப்படுவதாகவும் எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு அவர்கள் குறித்து விசாரணைகளை …
-
- 2 replies
- 231 views
-
-
பிரதி சபாநாயகர் பதவிக்கான... வாக்கெடுப்புக்கு, "9 மில்லியன் ரூபாய்" செலவாகும் – விமல் பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்ப்பு தெரிவித்ததுடன், பணத்தை வீண் விரயம் செய்யாமல் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். தேர்தலை நடத்துவதற்கு சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டன. அதன்படி, ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்தார். இதனையடுத்து, பணம் மற்றும் நேரத்தை வீணடிப்பதை விடுத்த…
-
- 0 replies
- 155 views
-
-
ஜனாதிபதிக்கு... எதிரான, பிரேரணை: அவசரமாக... விவாதத்திற்கு, எடுத்துக் கொள்ள தீர்மானம் ! ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1282223
-
- 0 replies
- 168 views
-
-
தற்போதைய ஆட்சியில்... ஐக்கிய மக்கள் சக்தி, எந்தப் பதவியையும்... ஏற்காது – சஜித் பிரேமதாச ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்…
-
- 0 replies
- 121 views
-
-
பிரதி சபாநாயகர் பதவிக்கு... இருவரின் பெயர்கள், முன்மொழிவு! நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டுள்ளன. பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை ஆதரித்தார். இதேவேளை, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்ததுடன், பண்டார பிரேரணையை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, தற்போது வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. https://athavannews.com/2022/1282230
-
- 0 replies
- 135 views
-
-
ரஞ்சித் சியம்பலபிட்டியவின்... இராஜினாமா, ஏற்றுக் கொள்ளப்பட்டது – சபாநாயகர் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரமபமாகிய நிலையிலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1282226
-
- 0 replies
- 126 views
-
-
வடக்கு, கிழக்கு... இணைந்த தாயகத்திலே, தமிழ் மக்களுக்கான உரிமையை... வழங்க வேண்டும் – அரியநேத்திரன் வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கும் புதிய பிரதமருக்கும் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எற்பாட்டில் இடம்பெறும் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பேரணியின் இரண்டாம் நாள் மட்டக்களப்பில் ஆரம்பித்த வேளையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் நடத்திய இனப்படுகொலைக்க…
-
- 0 replies
- 87 views
-
-
புதிய அரசாங்கத்திற்கு... ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டில், மாற்றமில்லை – தேசிய மக்கள் சக்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பல டீல்களுடன் அரசாங்கத்தை அமைக்கும் இந்த செயற்பாட்டை எதிர்ப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எனவே அரசாங்கத்திலோ அல்லது அதன் வேலைத்திட்டங்களிலோ தாங்கள் ஒரு தரப்பினராக இருக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அமரசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 21 வது திருத்தம் போன்ற முற்போக்கான நடவடிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவினை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 96 views
-
-
கல்முனை நகரில்... முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி, வழங்கும் நிகழ்வு! முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பினை மேற்கொள்ளும் முகமாக கல்முனை நகரில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. கல்முனை மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், முன்னாள் மாகாணசபை…
-
- 0 replies
- 103 views
-
-
புதிய அரசாங்கத்தில், அமைச்சுப் பதவி : மைத்திரியை சந்திக்கின்றார்... பிரதமர் ரணில் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் அமைச்சுப் பதவிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியும் கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பல உறுப்பினர்கள் நேற்று பிரதமருடன் கலந்துரையாடியுள்ளனர். பிரதமருக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து புதிய அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பது குறித்து முடி…
-
- 0 replies
- 142 views
-
-
காலி முகத்திடல் தாக்குதல்: அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் கைது! முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1282178
-
- 0 replies
- 127 views
-
-
நாடளாவிய ரீதியில்... நாளை முதல் மூன்று நாட்களுக்கு, தொடர் போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! மக்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இப்போது ஜனாதிபதியின் விலகல் அரசாங்கத்தால் பேசப்படுகிறது, எனவே இந்த அநியாயமான கைதுக்கு எதிராக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் என்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். கைது செய்யக்கூட…
-
- 0 replies
- 186 views
-
-
பொல்துவ சந்தியிலிருந்து... நாடாளுமன்ற வீதிக்கு, பூட்டு! பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான முதலாவது அமர்வும் இதுவாகும். இந்த நிலையில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1282177
-
- 0 replies
- 149 views
-
-
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் – ஜோன்ஸ்டன் மற்றும் தேசபந்து உள்ளிட்ட... 22 பேரை கைது செய்யுமாறு உத்தரவு! காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு எதிரே நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக சாட்சியங்கள் ஏதும் இருப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கவனத்திற்கொண்டதன் பின்ன…
-
- 0 replies
- 129 views
-
-
ஒரு நாள், சேவையின் கீழ்... கடவுச்சீட்டு விநியோகம் குறித்த, அறிவிப்பு! கடவுச்சீட்டுக்களை ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்காக www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் க…
-
- 0 replies
- 128 views
-
-
பிரதமராக... ரணில் பதவியேற்றதன் பின்னர், முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று! பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே முக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரும…
-
- 0 replies
- 99 views
-