ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
கல்முனை நகரில்... முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி, வழங்கும் நிகழ்வு! முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பினை மேற்கொள்ளும் முகமாக கல்முனை நகரில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. கல்முனை மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், முன்னாள் மாகாணசபை…
-
- 0 replies
- 103 views
-
-
புதிய அரசாங்கத்தில், அமைச்சுப் பதவி : மைத்திரியை சந்திக்கின்றார்... பிரதமர் ரணில் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் அமைச்சுப் பதவிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியும் கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பல உறுப்பினர்கள் நேற்று பிரதமருடன் கலந்துரையாடியுள்ளனர். பிரதமருக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து புதிய அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பது குறித்து முடி…
-
- 0 replies
- 142 views
-
-
காலி முகத்திடல் தாக்குதல்: அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் கைது! முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1282178
-
- 0 replies
- 127 views
-
-
நாடளாவிய ரீதியில்... நாளை முதல் மூன்று நாட்களுக்கு, தொடர் போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! மக்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இப்போது ஜனாதிபதியின் விலகல் அரசாங்கத்தால் பேசப்படுகிறது, எனவே இந்த அநியாயமான கைதுக்கு எதிராக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் என்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். கைது செய்யக்கூட…
-
- 0 replies
- 186 views
-
-
பொல்துவ சந்தியிலிருந்து... நாடாளுமன்ற வீதிக்கு, பூட்டு! பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான முதலாவது அமர்வும் இதுவாகும். இந்த நிலையில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1282177
-
- 0 replies
- 149 views
-
-
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் – ஜோன்ஸ்டன் மற்றும் தேசபந்து உள்ளிட்ட... 22 பேரை கைது செய்யுமாறு உத்தரவு! காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு எதிரே நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக சாட்சியங்கள் ஏதும் இருப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கவனத்திற்கொண்டதன் பின்ன…
-
- 0 replies
- 129 views
-
-
ஒரு நாள், சேவையின் கீழ்... கடவுச்சீட்டு விநியோகம் குறித்த, அறிவிப்பு! கடவுச்சீட்டுக்களை ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்காக www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் க…
-
- 0 replies
- 128 views
-
-
பிரதமராக... ரணில் பதவியேற்றதன் பின்னர், முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று! பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே முக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரும…
-
- 0 replies
- 99 views
-
-
வடக்கு உள்ளிட்ட... நாட்டின் பல இடங்களில், தொடர் மழைக்கு வாய்ப்பு! நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதால் நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும்…
-
- 0 replies
- 92 views
-
-
தமிழர்களுக்கான... தீர்வை, வென்றெடுக்க... புதிய பிரதமருடன், பேசுவோம் – சம்பந்தன். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்குவது என்பது இதன் அர்த்தம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் வகையிலும் அரசாங்கம் முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார…
-
- 12 replies
- 965 views
-
-
ஐந்து பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். நெருக்கடியான சூழ்நிலையில் விதிவிலக்கான தலைமைத்துவம் தேவை எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில், சிறந்த தலைவர் ஒருவர் நாட்டை முன்னெடுத்து செல்ல முன்வரவில்லையென்றால் எமது கட்சி மீதுள்ள மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். “சிறப்பு தலைமை தேவை ஒரு சாதாரண சூழ்நிலையில் அல்ல, ஒரு நெருக்கடியிலேயே வேண்டும். நெருக்கடி ஏற்படும் போது, அதற்கான தீர்வை வழங்க முன்வர வேண்டும். தற்போதைய சூழ்நிலையை ச…
-
- 13 replies
- 663 views
-
-
மட்டக்களப்பு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் அங்குள்ள செங்கலடி பேருந்து நிலையத்தில் கோட்டா கோ ஹோம் கம கூடாரம் அமைத்துத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். April 14, 2022 மட்டக்களப்பு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம்; அரசியல் முறையைக் கவிழ்ப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து செங்கலடி சந்திவரை சென்று அங்கு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்…
-
- 6 replies
- 1k views
-
-
நடமாடும், பொலிஸ் ரோந்துப் பணியை... அதிகரிக்குமாறு பணிப்புரை – துப்பாக்கிச் சூடு.. நடத்தவும் அனுமதி! நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும் வன்முறைச் செயல்களில் ஈடுபடவும் மக்கள் தூண்டப்பட்டு வருவதாக புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. எனவே குறிப்பிட்ட இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எ…
-
- 2 replies
- 276 views
-
-
எதிர்க் கட்சித் தலைவராக... மஹிந்த? – ராஜித, வெளியிட்ட முக்கிய தகவல்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இதுவரை கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு ரணில் அழைக்கவில்லை என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். கட்சிகளுடன் சம்பிரதாயமான வெளிப்படையான கலந்துரையாடலுக்குப் பின்னர் முறையான உடன்படிக்கைக்கு அமைவா…
-
- 3 replies
- 357 views
-
-
இலங்கை நெருக்கடி: ரணில் விக்ரமசிங்க அரசின் பொருளாதார முன்னேற்ற திட்டங்களுக்கு முக்கிய கட்சிகள் ஆதரவு 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமைக்கு முதலில் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டாலும், தற்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களில் சிலர், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்திற்கு... ஆதரவு – சஜித் அணியினர், தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முற்போக்கான தீர்மானத்திற்கே ஆதரவு என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அத்தோடு புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன்... டீல் பேச புதிய அரசாங்கம் முற்பட்டால் ஆதரவை மீளப்பெற்றுக் கொள்வோம் என்றும் எச்சரித்துள்ளது. https://athavannews.com/2022/1282111
-
- 0 replies
- 164 views
-
-
இருதய நோயாளர்களுக்கு... தேவையான, மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு... கடும் தட்டுப்பாடு இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையில் சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு பிரதமர் அலுவலகத்தில் நேற்று கூடியிருந்தது. இதன்போதே சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகர…
-
- 0 replies
- 139 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியின்... பிரதி சபாநாயகர் வேட்பாளருக்கு, வாக்களிக்க தீர்மானம் – ஜீவன் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சபாநாயகர் வேட்பாளர் ரோஹிணி கவிரத்னவிற்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மத்திய குழுவின் முடிவிற்கமைய ரோஹிணி கவிரத்னவிற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1282127
-
- 0 replies
- 117 views
-
-
பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள... விசேட குழுக்களின் அறிக்கைகள்... கையளிக்கப்படுகின்றன அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரம் மற்றும் பெற்றோலியம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன குறித்து அந்த குழுக்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்…
-
- 0 replies
- 127 views
-
-
புதிய அமைச்சரவைக்கான... எஞ்சிய நியமனங்கள், 18ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படக் கூடும்? 18 பேர் கொண்ட புதிய அமைச்சரவைக்கான எஞ்சிய நியமனங்கள் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படக் கூடும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு ஏற்கனவே மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய புதிய கல்வி அமைச்சராக கலாநிதி சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், விவசாய அமைச்சராக அனுர பிரியதர்ஷன யாப்பாவும், சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேள…
-
- 0 replies
- 85 views
-
-
வன்முறைகளினால்.. வீடு மற்றும் உடமைகளை இழந்த, அனைவருக்கும்... நீதி வழங்குவதே எனது முதல் பணி – பிரசன்ன அண்மைய வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதன்மையான பணி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அனைத்து தகவல்களையும் பெற்று சந்தேகநபர்களை சட்டத்தின் மு…
-
- 0 replies
- 101 views
-
-
கோட்டா கோ கமவிற்கு... வந்த குண்டர்களை, தடுக்க வேண்டாமென... பாதுகாப்பு அமைச்சே... பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத் அலரிமாளிகையில் இருந்து கொழும்பு கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே பணிப்புரை விடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருக்கும்போதே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் அர்த்தமில்லை எனவும், அவரை பதவி நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் முன்னாள்…
-
- 0 replies
- 68 views
-
-
புதிய அரசாங்கத்தில்... நிதியமைச்சர் பதவியை, ஏற்கப் போவதில்லை – அலி சப்ரி புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்தவாரம் இடமபெற்ற ஆளும்கட்சி கூடத்தில் அவர் இதனைத் தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் ஆனால் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1281997
-
- 4 replies
- 443 views
-
-
மேலும்... 16 அமைச்சர்கள், இன்று பதவிப் பிரமாணம்? புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில் மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இம்முறை அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பல சுயேச்சை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட…
-
- 2 replies
- 425 views
-
-
இலங்கை நெருக்கடி: 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா இணக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இன்றைய (மே 16)இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) 65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், "இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், ஆண்டுதோறும் 40 கோடி அமெரிக்க டாலருக்கு இலங்கை உரங்களை இறக்குமதி செய்துவந்தது…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-