ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு! ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்போதே பிரதமர் பதவி தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டதாக சிங்கள ஊடகமொ…
-
- 48 replies
- 2.2k views
- 2 followers
-
-
பிரதி சபாநாயகர் பதவிக்கு... பரிந்துரை செய்யப்படுகின்றார், ரோஹிணி கவிரத்ன! பிரதி சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவின் பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281877
-
- 1 reply
- 264 views
-
-
ராஜபக்ச இல்லாத ஆட்சியையே... மக்கள் கோருகின்றனர் – பிரதமர் ரணிலுக்கு, சஜித் பதில் கடிதம் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார். ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் பிரதமருக்கு நினைவூட்டியுள்ளார். இதேவேளை புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் பொருளாதாரம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு புதிய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் என பிரதமரிடம் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews…
-
- 3 replies
- 322 views
- 1 follower
-
-
வர்த்தகர்களுக்கு எதிராக... கடுமையான, சட்ட நடவடிக்கை – விடுக்கப்பட்டது எச்சரிக்கை சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய தனி உரிமையாளராக இருந்தால் ஒரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் தனியார் நிறுவனம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரிசியை அதிக விலைக்கு விற்பன…
-
- 0 replies
- 218 views
-
-
இலங்கைக்கு... உதவிகளை வழங்க முன்வந்தது, நியூசிலாந்து இலங்கைக்கு உதவிகளை வழங்க நியூசிலாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கமைய, நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக 5 இலட்சம் நியுசிலாந்து டொலர்களை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் சிறுபோக பயிர்ச் செய்கைக்காக, 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியாவினால் இலங்கைக்கு வழங்…
-
- 0 replies
- 149 views
-
-
தளர்த்தப்பட்டிருந்த... ஊரடங்கு உத்தரவு, மீண்டும் அமுலானது! இலங்கையில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த 9ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர். கொழும்பு அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தித்து ஆதரவு தெரிவித்ததன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இவ்வ…
-
- 0 replies
- 194 views
-
-
புதிய அமைச்சரவை... 20 அமைச்சர்களுடன், மட்டுப்படுத்தப் படவுள்ளதாக தகவல்? பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனமாக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கமைய புதிய அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இடம்பெறவுள்ளனர். மேலும், ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு உறுதியளித்துள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர…
-
- 0 replies
- 98 views
-
-
9ஆம் திகதி இடம்பெற்ற... வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், இதுவரை 90 பேர் கைது! நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று வரை 75 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 பேர் நீர்கொழும்பிலும், 17 பேர் பொலன்னறுவையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இதே சம்பவம் தொடர்பில் கம்பஹாவைச் சேர்ந்த 09 சந்தேக நபர்களும், அனுராதபுரத்தைச் சேர்ந்த 04 சந்தேக நபர்களும் இன்று கைது செய்யப்ப…
-
- 0 replies
- 121 views
-
-
பிரதமர் ரணில்... சஜித் பிரேமதாசவுக்கு, கடிதம்! புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறும் அவர் கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டோம் என சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1281834
-
- 1 reply
- 275 views
-
-
இன்று இலங்கை வருகின்றது... 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் ! 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் கடனுதவியின் கீழ் இந்த எரிபொருள் இலங்கைக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. https:/…
-
- 7 replies
- 487 views
-
-
மஹிந்தவின் அடுத்த திட்டம் அம்பலமானது! எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர்கள் கோரலாம் என்று கூறப்படுகின்றது. புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிப் பக்கத்தில் சுயாதீன அணியாக இருந்து புதிய பிரதமரை ஆதரிப்பதற்கே சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சரவையில் பதவிகளை வகித்தாலும் அவர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக இருந்தே பதவிகளை வகிக்கவு…
-
- 5 replies
- 531 views
-
-
இலங்கைக்கு... நிதி உதவிகளை வழங்கும், சர்வதேச மன்றம் ஒன்றை... உருவாக்குமாறு பரிந்துரை! இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் இதன்போது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதே இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. https://athavannews…
-
- 5 replies
- 454 views
-
-
மூன்று வேளை... உணவு கிடைப்பதை, உறுதி செய்வேன் என்கின்றார்... பிரதமர் ரணில் ! நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிற்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியாக ஆறாவது முறையாகும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். பதவியேற்ற பின்னர் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். மேலும் நிதி உதவிக்காக உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், இனிமேல் உணவு நெருக்கடி இலங்கையில் இருக்காது என்ற…
-
- 9 replies
- 551 views
-
-
ரணில் தலைமையிலான... புதிய அரசாங்கத்துடன், இணைந்து.... பணியாற்ற தயார் – இந்தியா ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகத்தின் ருவிட்டர் பதிவில், “இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது“ எ…
-
- 16 replies
- 1.1k views
-
-
“ரணிலுடன் இணைந்து கூத்தடிக்க முடியாது” "ரணில் விக்ரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். "ரணில் விக்ரமசிங்க இந்நாட்டில் 5 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர். இம்முறை 6 ஆவது தடவையாகவும் பதவியேற்றுள்ளார். எனினும், எந்தவொருமுறையும் தனது பதவி காலத்தை அவர் முழுமையாக பூர்த்தி செய்தது கிடையாது. கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவ…
-
- 3 replies
- 348 views
-
-
நான்கு அமைச்சர்கள்... இன்று, பதவியேற்கவுள்ளதாக தகவல். நான்கு அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகளே வழங்கப்படம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகாரம், காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சு, தினேஷ் குணவர்தன கல்வி, பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சை கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1281830
-
- 10 replies
- 680 views
-
-
எம்.பி.க்களின் பாதுகாப்பு, கடுமையாக்கப் பட்டது; ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும்... 6 பேர் இணைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதிகபட்சமாக 6 பொலிஸ் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தலா இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைத…
-
- 0 replies
- 124 views
-
-
ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை மாற்றத் தயார்! (வீடியோ) ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை மாற்றத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிபிசி உலக சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ´´நாட்டில் பஞ்சம் இருக்காது என்றும்´´, "பொருளாதார நிலைமையின் தீவிரத்தை முதலில் நாம் பார்க்க வேண்டும். அது பற்றிய முழுமையான கணக்கு யாரிடமும் இல்லை." "முதன்முறையாக ஒரு மருத்துவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போல் உள்ளது. எங்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக எனக்குத் தெரியும். சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பு கொள…
-
- 1 reply
- 238 views
-
-
கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது! இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (14) முற்பகல் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அரசியல் ஒழுங்குகள் வித்தியாசமான முறையில் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. முக்கியமாக இலங்கையின் பொருளாதாரம் மீளுமா உள்ளிட்ட முக்கியமான கேள்விகள் மக்கள் மத்தியில்…
-
- 0 replies
- 141 views
-
-
பதவியேற்க மாட்டோம் - அரசை வீழ்த்த உதவவும் மாட்டோம்! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது. ஆனால், அந்த அரசை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம். பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச தீர்வுகளை காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம். தமது அரசில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம். ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க அவரா…
-
- 0 replies
- 155 views
-
-
பிரதமரின் அடுத்த காய் நகர்த்தல் ஆரம்பம்! ஐக்கிய தேசியக் கட்சியின் முன்வரிசை தலைவர்களில் 5 பேரை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிப்பதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 5 பேரை பதவி விலக செய்து, அவர்களுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் நிலையில், பிரதமராக பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடியாது என்ற காரணத்தினால், அமைச…
-
- 0 replies
- 118 views
-
-
வெசாக் தினத்தை முன்னிட்டு... 244 சிறைக் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு! வெசாக் தினத்தை முன்னிட்டு 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது மன்னிப்பு வழங்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார். அபராதம் செலுத்த தவறியமைக்காக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்கள், 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். https://athavannews.com/2022/1281848
-
- 0 replies
- 137 views
-
-
வவுனியாவில்... முள்ளிவாய்க்கால் கஞ்சி, வழங்கி வைப்பு முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது . வவுனியா ஆலடி பிள்ளையார் கோவிலடியில் இடம்பெற்ற நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இதேவேளை பொது மக்கள் மற்றும் வீதியால் சென்றோருக்கும் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281841
-
- 0 replies
- 178 views
-
-
பிரதி சபாநாயகரின், நியமனம் தொடர்பில்.... பிரதமரின் கருத்து அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ( சனிக்கிழமை ) பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் பிரதமர் இதனைத் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் . https://athavannews.com/2022/1281838
-
- 0 replies
- 227 views
-
-
நவாலியில்... முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், அனுஷ்டிப்பு. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று ( சனிக்கிழமை ) அனுஷ்டிக்கப்பட்டது. நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபியில் காலை 9.30 மணியளவில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் இலங்கை விமானப் படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கும் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர் . யாழ்ப்பாணம் – நவாலி புன…
-
- 0 replies
- 193 views
-