ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம் 01 Nov, 2025 | 05:23 PM முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட…
-
- 4 replies
- 397 views
- 1 follower
-
-
01 Nov, 2025 | 12:34 PM இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுப் புறப்பட்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO, வெள்ளிக்கிழமை (31) மேற்குக் கடலில் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் மற்றும் கடற்படை விமான நடவடிக்கைகள் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதைகள் செலுத்திய பின்னர் பயிற்சி முடிவடைந்தது. மேலும், இத்தகைய உத்தியோகபூர்வ வருகைகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு…
-
- 1 reply
- 163 views
- 1 follower
-
-
க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! 25 Oct, 2025 | 10:51 AM 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம், அவர்களின் தனிப்பட்ட தபால் முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது…
-
- 1 reply
- 177 views
- 1 follower
-
-
01 Nov, 2025 | 04:30 PM சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழமை (01) யாழ்ப்பாண நகரப் பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம், பட்டலந்தை வதை முகாம் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், ஏனைய புதைகுழி விவகாரம் போன்றவற்றுக்கு உடனடி விசாரணைகளையும், நீதியையும் வேண்டி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, "அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு, செம்மணியை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து, மீண்டும் மீண்டும் அடக்குமுறைகள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அனைத்து தேசிய இன…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
பிள்ளையானை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு.! Vhg அக்டோபர் 31, 2025 இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை இன்று(31.10.2025) நடைபெற்றது. அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார். இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துவருகிறது. எனினும், கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ…
-
- 0 replies
- 199 views
-
-
வெற்றிலை துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு adminNovember 1, 2025 யாழ்ப்பாணத்தில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அச்செழு பகுதியை சேர்ந்த மேசன் தொழிலாளியான சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை வெளியில் மழை பெய்து கொண்டிருந்தமையால் , மேல் மாடியில் இருந்து கீழே வெற்றிலையை துப்ப முயன்ற வேளை கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். https://globaltamilne…
-
- 0 replies
- 160 views
-
-
Published By: Vishnu 01 Nov, 2025 | 02:27 AM பின்தங்கிய சமூகங்களுக்கும் முக்கிய சமூக, பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 90 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சு கைச்சாத்திட்டுள்ளது. பின்தங்கிய பிரதேசங்களுக்கான சுமார் 500 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்றவாறானதும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நேயமான வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும். அத்தோடு இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீ…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள். நேற்று முன்தினம் (2025.10.30) வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, கிறிஷாந்த ,லக்மால்,தர்ஷன் ஆகியவர்களினால் நடாத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையினால் கொற்றாவத்தை பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் காலை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை (30) அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவது தொடர்பாக விஷேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் பாராட்டபட வேண்டியது. Vadali Media News & media website
-
- 0 replies
- 162 views
-
-
யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது வெள்ளி, 31 அக்டோபர் 2025 05:05 AM யாழ் மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாநகர சபையின் முன்னைய கட்டிடத்திற்கு கிழக்கு பக்கமாக இருந்த வாசலுக்கு எதிராக ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடமும் மாநகர சபையின் அலுவலகமாக இருந்தது. அது ஒர…
-
- 1 reply
- 207 views
-
-
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர். இ…
-
-
- 11 replies
- 583 views
-
-
30 Oct, 2025 | 06:01 PM (எம்.மனோசித்ரா) 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியிலான தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அரச நிறுவனங்களின் பங்களிப்புக்கு அப்பால், பரந்த பொதுமக்களின் பங்கேற்புடன…
-
- 3 replies
- 228 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல். ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார். இது நாட்டில் உள்ள விசேட மருத்துவர்களின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது. அமைச்சர் ஜெயதிஸ்ஸ, சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அந்த சந்திப்பின் போது தான் இந்தக் கோரிக்கையை…
-
- 2 replies
- 143 views
- 1 follower
-
-
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை! பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது. ஒக்டோபர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பில்கள் விற்பனையாளர்கள் ஷொப்பிங் பைகள் விலையைக் குறிப்பிடுவதை CAA கட்டாயமாக்கியது. அந்த வர்த்தமானியில், அடர்த்தி குறைந்த பொலித்தீன், அடர்த்தி குறைந்த நேர்த்தியான பொலித்தீன் ஆகியவற்றில் உற்பத்தி பொருட்களை இலவசமாக வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலித்தீன் பைக்கான விலை வியாபார நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நவம்பர…
-
- 2 replies
- 139 views
- 1 follower
-
-
31 Oct, 2025 | 06:35 PM வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாக…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி? பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கம் விற்பனை என்ற போர்வையில் பணம் மோசடி செய்ததாக கானா தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவுக்கு தங்கம் வழங்குவதாகக் கூறி குறித்த சந்தேக நபர்கள் 2 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த பணத்தைப் பெற்ற பின்னர், சந்…
-
-
- 16 replies
- 895 views
- 2 followers
-
-
31 Oct, 2025 | 04:47 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை (30) இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப ந…
-
- 0 replies
- 133 views
-
-
இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு! இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பில் வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15 முதல் அமலுக்கு வந்த இந்தத் தேவையை மீளப் பெற்றுள்ளதாகக் கூறியது. புதிய உத்தரவின்படி, அனைத்து ETA மற்றும் விசா வழங்கும் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்போதுள்ள நடைமுறைகளின் கீழ் தொடர்ந்து செயல்படும். எனவே பயணிகள் அக்டோபர் 15 க்கு முன்பு இருந்த அதே செயல்முறையின் கீழ் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ht…
-
- 0 replies
- 111 views
-
-
31 Oct, 2025 | 03:36 PM “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர…
-
- 0 replies
- 54 views
- 1 follower
-
-
Published By: Priyatharshan 31 Oct, 2025 | 03:52 PM ( வீ.பிரியதர்சன் ) வடக்கில் யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தி முதலீடு , தொழில் முனைவோர் மற்றும் பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் முகாமைத்துவக் கழகம் “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ஐ ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்குடனும் முயற்சியுடனும் முகாமைத்துவக் கழகம் “வடக்கு முதலீட்டு மாநாடு 2026” அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நட…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு வெள்ளி, 31 அக்டோபர் 2025 04:30 AM யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு , மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு , பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்ப பணிகளை மேற்கொண்டார். அதனை அடுத்து , குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதி , வலசை பறவைகள் வந்து தங்க…
-
- 0 replies
- 117 views
-
-
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! October 31, 2025 8:49 am சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,…
-
- 0 replies
- 115 views
-
-
கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்… October 31, 2025 ”மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் கோரியிருக்கின்றோம் எனவும் கூறினார். மா…
-
- 0 replies
- 108 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை! 31 Oct, 2025 | 11:38 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெவில் வன்னியாராச்சியை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்…
-
- 0 replies
- 103 views
-
-
தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா? 31 October 2025 தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது. Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாத…
-
- 0 replies
- 149 views
-
-
30 Oct, 2025 | 05:10 PM இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது. தேவேந்திர மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆறு மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, கப்பல் காணாமல் போயுள்ளது, மேலும் கப்பலையும் அதி…
-
-
- 14 replies
- 659 views
- 2 followers
-