ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
நாடாளுமன்ற உறுப்பினர்களை... துன்புறுத்த முயற்சித்ததாலேயே, ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் -பிரசன்ன நாடாளுமன்றத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி அவர்களை துன்புறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முயற்சித்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ந…
-
- 0 replies
- 192 views
-
-
நாடாளுமன்றத்திற்கு அருகில்... ஆர்ப்பாட்டங்களை நடத்த, தடை விதிக்குமாறு... பொலிஸ் கோரிக்கை – நீதிமன்றம் நிராகரிப்பு! நாடாளுமன்றத்திற்கு அருகில் இந்த வாரம் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுக்க உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களைத் தடுக்குமாறு பொலிஸாரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலங்கம பொலிஸாரினால் இந்த தடுப்பு உத்தரவுக்கான கோரிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற நுழைவு வீதிக…
-
- 0 replies
- 139 views
-
-
யாழில்.. "123 மில்லியன் ரூபாய் பெறுமதியான", கஞ்சா மீட்பு – சந்தேக நபர் கைது! யாழ்.கடற்பரப்பில் இன்றைய தினம்(புதன்கிழமை) அதிகாலை 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். யாழ்.கடற்பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது படகில் 15 சாக்குகளில் 225 பொதிகளில் சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர். அதனை அடுத்து படகோட்டியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினையும…
-
- 2 replies
- 303 views
-
-
ஆர்ப்பாட்டம் செய்வதற்கான... உரிமையை, சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை... கைது செய்ய முடியாது – சட்டத்தரணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது. அரசாங்கம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதப்படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், “போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் செய்திகள் உள்ளன. போராட்டம் நடத்தும் உரிமையை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துபவர்களை கைது செய்ய …
-
- 2 replies
- 451 views
-
-
மஹிந்த ராஜபக்ச... பதவி விலகவுள்ளதாக, வெளியான செய்தி குறித்து... அரசாங்கம் விளக்கம்! மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது, நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், அப்படியான எந்த முடிவும் இல்லை என்றும் நாட்டின் பொருளாதாரம், மக்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் …
-
- 1 reply
- 198 views
-
-
நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம் – போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது! நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர். எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் “நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்போம்…” என்ற பதாகைகளை ஏந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போராட்டக்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1280049
-
- 0 replies
- 134 views
-
-
அனுரவுக்கு எதிராக... சட்ட நடவடிக்கை, எடுக்கப்படும்: பிரதமர் அலுவலகம் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார். பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6…
-
- 1 reply
- 154 views
-
-
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்... வீழ்ச்சியடைவதற்கு, இடமளிக்கக்கூடாது – ரணில் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு சில சந்தர்ப்பங்களில் வரிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும், அதனைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1280023
-
- 0 replies
- 105 views
-
-
இலங்கையின் கையிருப்பில்... "50 மில்லியன் டொலர்" கூட, இல்லை – அதிர்ச்சி தகவலினை, வெளியிட்டது அரசாங்கம்! நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் காணப்பட்டதாகவும், தற்போது பயன்படுத்தக்கூடிய வகையில் அந்த தொகை 50 மில்லியன் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வரி வருமானத்தை எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் நிதி…
-
- 3 replies
- 215 views
- 1 follower
-
-
பலாலி விமான நிலையத்தினை... மிக விரைவில், திறக்க வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்! பலாலி விமானத்தளத்தை மிக விரைவில் திறக்க வேண்டும் என்பதுடன் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையினை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழக அரசினால் தரப்படும் அத்தியாவசிய பொரு…
-
- 0 replies
- 130 views
-
-
வரலாற்றுத் தவறுகளே... நெருக்கடிக்கு, காரணம் – நாடளுமன்றில் நிதி அமைச்சர். தற்போது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் செய்த வரலாற்றுத் தவறுகளே காரணம் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வரி குறைப்பு, பொருத்தமான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நடாதமை மற்றும் கடன் மறுசீரமைப்பில் தாமதம் என்பனவே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார். எனவே தற்போதைய நெருக்கடியை இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 ஆண்டுகள் வரை இழுத்தடிப்பதா என்பதை அரசியல்வாதிகளே முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலை குறித்து உரையாற்றிய நிதியமைச்சர் அலி சப்ரி, கடந்த ஆண்டின் செலவினமான…
-
- 3 replies
- 224 views
-
-
நாடாளுமன்றில்... பெரும்பான்மை யாருக்கு? முதலாவது வாக்கெடுப்பு நாளை !!! பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை (05) இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி காலத்தில் நாடாளுமன்றத்தில் எவருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை தீர்மானிக்கும் முதல் வாக்கெடுப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை தனது இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1279995
-
- 1 reply
- 126 views
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின், விற்பனை விலை... 370 ரூபாயாக பதிவு! இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இன்று (புதன்கிழமை) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதன்படி, இலங்கை வங்கி – ரூ. 366.00 மக்கள் வங்கி – ரூ. 359.99 சம்பத் வங்கி – ரூ. 370.00 வணிக வங்கி – ரூ. 370.00 என்.டி.பி. – ரூ. 370.00 அமானா வங்கி – ரூ. 360.00. https://athavannews.com/2022/1279970
-
- 0 replies
- 119 views
-
-
தற்போது... பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப் பொருட்கள், எதிர்காலத்தில் முற்றாக இல்லாதுபோகும் – அலி சப்ரி நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப்பொருட்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சற்றுமுன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்ட…
-
- 0 replies
- 165 views
-
-
2009ல் தலையில் தூக்கி வைத்து பாற்சோறு கொடுத்து கொண்டாடியவர்களே இன்று போராட்டம் நடத்தி தூற்றும் நிலை - கோ.கருணாகரம் By Shana 2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வீதியெங்கும் பாற்சோறு கொடுத்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று அதே வீதிகளில் 2009ல் கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக கோசமிட்டுப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த உலகத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் அதிகமாகப் போற்றப்பட்ட, மிக மிக இழிவாகத் தூற்றப்பட்ட தலைவர் கோட்டபாயவாகத் தான் இருப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக…
-
- 0 replies
- 206 views
-
-
நாடாளுமன்ற வளாகத்தில்... இரும்பு குழாய்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பு வேலி! நாடாளுமன்றத்தை சுற்றி இன்று (புதன்கிழமை) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாடாளுமன்ற வளாகத்தில் குழாய்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் இம்மாதம் முதல் முறையாக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ராஜித சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1279927
-
- 0 replies
- 278 views
-
-
கோட்டாவிற்கு எதிரான... எந்த பிரேரணைக்கும், ஆதரவில்லை – வாசுதேவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் வாசுதேவ நாணயக்காரவின் கருத்தைப் போன்றே கருத்து வெளியிட்டிருந்தார். முன்னதாக தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்…
-
- 11 replies
- 607 views
-
-
களுவன்கேணி... கடற்கரையோரப் பகுதியில், காணப்படும் பெறுமதியான மரங்கள், கண்டல் தாவரங்கள் எரியூட்டப்பட்டன! மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கடற்கரையோரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு காணப்படும் பழமையான பெறுமதியான மரங்கள், கண்டல் தாவரங்கள் என்பன எரியூட்டப்பட்டு கட்டிடங்கள் அமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் இணைந்து குறித்த காடழிப்பு நடவடிக்கை மற்றும் அனுமதி இல்லாமல் கட்டடங்களை அமைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் மற்றும் பிரதேச இளைஞர்கள்…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கை நெருக்கடி: எந்த தேர்தலையும் நடத்தும் சூழல் தற்போது இல்லை - அரசாங்கம் அறிவிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் - கோப்புப்படம் (இன்றைய (மே 4) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) நாட்டில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை என, இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாள…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
காலி முகத்திடல் வீதிக்கு... புதிய பெயரை சூட்டிய, போராட்டக் காரர்கள்! ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலுக்கு போராட்டக்காரர்கள் புதிய பெயரை சூட்டியுள்ளனர். அதன்படி, குறித்த வீதிக்கு இலஞ்ச வீதியென (Bribe road) போராட்டக்காரர்கள் பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கனவே, காலிமுகத்திடலில் “கோட்டா கோ கம“ எனும் பெயரிலான கிராமத்தை உருவாக்கியுள்ள போராட்டக்காரர்கள், அங்கு கூடாரமிட்டு 26ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279906
-
- 0 replies
- 330 views
-
-
இசைப்பிரியாவுக்கும்... நீதிகோரி, காலி முகத்திடலில்... போராட்டம் !! காலி முகத்திடலில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவுக்கு நீதி கோரிய பதாதைகள்கட்சிப்படுத்தப்பட்டன. அந்தவகையில் ராஜபக்ஷ… அவர்களின் இரத்தம் உங்கள் கைகளில் உள்ளது என சிங்கள மொழியில் பதாகை அமைக்கப்பட்டிருந்தது. தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்திகளை வழங்கிவந்த அவர், 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் மௌனிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavann…
-
- 4 replies
- 472 views
-
-
பெரும்பான்மை உறுப்பினர்களின்... ஆதரவு உண்டு – நம்பிக்கையில், மஹிந்த ! பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதனால் தமக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெறுவேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் ஆளும்தரப்பு பெரும்பான்மை யை இழந்த நிலையில், இன்று விசேட உரையாற்றி பிரதமர் பதவி விலகவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் தனது இராஜினாமாவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்போவதில்லை என்றும் ஆனால் பல விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை வெளியேறுமாறு கோரினால், பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்…
-
- 0 replies
- 130 views
-
-
விசேட... கட்சித் தலைவர்கள், கூட்டம் இன்று – நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் பிரதி சபாநாயகர் பதவி குறித்து ஆராய்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 9.15க்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகர் பதவி மற்றும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. அத்தோடு, இந்த வார நாடாளுமன்ற அமர்வின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் இம்தியாஸ் பாகீர் மாகரின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 114 views
-
-
பெரும்பான்மையை நிருபிப்பவர்களுக்கு... பதவியை, வழங்குவாரா மஹிந்த? – பிரதமர் இன்று விசேட உரை! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். பெரும்பான்மையை நிருபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் அறிவிப்பாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை தடுப்பதற்காக, புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் தான் பதவி விலகப் போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்ட…
-
- 0 replies
- 145 views
-
-
அவசர மானியமாக... சீனாவிடமிருந்து, மேலும் 300 மில்லியன் யுவான்! அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் நிதியை அவசர மானியமாக சீனா வழங்கவுள்ளது. அவசரமாக மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதற்கமைய, நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பதற்கு சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் அவசர மானிய தொகை சுமார் 500 மில்லியன் யுவானாக அதிகரிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1279887
-
- 0 replies
- 149 views
-