Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எந்தவொரு, வன்முறையையும்... மன்னிக்கமாட்டோம் – குண்டர்களால் தாக்கப்பட்ட பாதிரியார்கள் அலரிமாளிகைக்கு அருகிலுள்ள மைனா கோ கம என்ற இடத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்த இரண்டு கிறிஸ்தவ பாதிரியார்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த கைகலப்பில் அவர்களுடன் பௌத்த பிக்கு ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தாங்கள் எப்போதும் சமாதானம், இன நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிற்பதாகவும், எந்தவொரு வன்முறையையும் மன்னிக்கமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து இலங்கையர்களிடையே நிலையான அமைதி மற்றும் ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் இரண்டு பாதிரியார்களும் மீண்டும் வலியுறு…

    • 6 replies
    • 828 views
  2. அவசரமாக... ரணிலை, சந்தித்து... பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது... கொழும்பு அரசியல்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இந்த நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2022/1281496

  3. ஊரடங்கு கடுமையாகிறது – துப்பாக்கிச் சூடும் நடத்தப்படக்கூடும் என, பொலிஸார் எச்சரிக்கை! நாட்டில் இன்றிரவு(புதன்கிழமை) ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மக்கள் அநாவசியமாக ஒன்றுகூட தடை விதிக்கப்படுவதோடு, தேவையேற்படின் துப்பாக்கி சூடு நடத்துமாறும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் எனவும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸ் எச்சரித்துள்ளது. கொள்ளை அல்லது வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டால், அந்நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத…

  4. மஹிந்தவின்... மெதமுலன இல்லமும், தீக்கிரை. மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது. ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர். https://athavannews.com/2022/1280952

  5. அரசின்... பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து, விலகிக் கொள்கிறோம் – "உல‌மா" க‌ட்சியின் த‌லைவ‌ர், முபாற‌க் அப்துல் ம‌ஜீத் எமது கட்சி பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் செய்து கொண்ட‌ புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்திலிருந்து வெளியேறி சுயாதீன‌மாக‌ செய‌ற்ப‌டும் என்ப‌தை மீண்டும் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) அறிவித்துக்கொள்கிறது என‌ அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச நீண்ட‌ கால‌ அர‌சிய‌ல் அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ராக‌ இருந்த‌ போதும் த‌ன‌து அருகில் க‌ள்வ‌ர்க‌ளையும், கொள்ளைய‌ர்க‌ளையும் வைத்துக்கொண்டிருந்த‌தால் நாடு அத‌ள‌ பாதாள‌த்தில் விழுந்து விட்ட‌து. க‌ட‌ந்த‌ நல்லா…

  6. நாட்டில் குவிக்கப்பட்டுள்ள, இராணுவம் தொடர்பாக... அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கவலை ! நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. அத்தோடு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை நாட்டில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்தும் கவலையடைவதாக இராஜாங்க திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டக்காரர்களுக்கு…

  7. அனைத்து இனத்தவரும்... ஒன்றிணைந்தாலே, இந்த போராட்டம் வெற்றியடையும் – விமலசார தேரர். இந்த சூழ்நிலையில் வடகிழக்கில் வசிக்கும்... மூவினத்தவரும், ஒற்றுமையாக இருப்போம் என வடக்கு முதன்மை சங்கநாயக்க தேரர் பூஜ்ய சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் தெரிவித்தார். நாட்டுநிலமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அரசுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் ஒரு மாதத்திற்கும் மேலாக அகிம்சை ரீதியான போராட்டம் இடம்பெற்றுவந்தது. அதனை பொருட்படுத்தாத அரசாங்க ஆதரவாளர்கள் அவர்களை தாக்கி அவர்களது போராட்டத்தை குழப்பியமையாலேயே நாட்டில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில்…

    • 1 reply
    • 399 views
  8. சிங்கள மக்களுடன்... நல்லுறவை, வலுப்படுத்துவதன் மூலமே... பிரச்சினைகளை, தீர்க்க முடியும் – டக்ளஸ் தேவானந்தா. தென்னிலங்கயைில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுக்கு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,உங்களின் உணர்வுகளையும் அதில் இருக்கின்ற நியாயங்களையும் நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம். அதற்கு மதிப்பளிக்கின்றோம்.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு ஏற்பட்ட…

    • 2 replies
    • 394 views
  9. ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே.... பிரதமர் பதவியை, சஜித் ஏற்பார் – லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அது குறித்து விவாதிக்கப்படும் என கூறியுள்ளார். அத்தோடு, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி உடனடியாக பதவி விலக …

    • 1 reply
    • 158 views
  10. இலங்கையில் இந்திய இராணுவம்; இந்தியா மறுப்பு இலங்கையின் தற்போதையை நிலையை கட்டுப்படுத்துவதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்கு வரவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இலங்கைக்கு தனது இராணுவத்தை இந்தியா அனுப்பவில்லை என்றும் அவ்வாறு அனுப்பாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், உள்நாட்டு அமைதியின்மைக்கு மத்தியில் இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகல்களை நிராகரிப்பதாக ட்வீட் செய்துள்ளது. இவ்வாறான போலியான செய்திகள், இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. “இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்…

    • 3 replies
    • 294 views
  11. அலரிமாளிகை சம்பவத்துடன், தொடர்புடையவர்களை... அடுத்த சில மணித்தியாலங்களில்... கைது செய்ய வேண்டும் – சாலிய பீரிஸ் அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறான கைதுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிலர் வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் நாட்டை விட்டுத் த…

  12. பொது இடத்தில்... ஒன்று கூடினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை! பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் உரையாற்றிய பொலிஸார், நாட்டில் கடந்த 6ஆம் திகதி முதல் அவசரகாலச் சட்டமும் நேற்று முன்தினம் முதல் நாளை காலை வரை ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்தக் காலப்பகுதியில் மைதானம், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் ஒன்றுகூடுவது சட்டவிரேதமாகும் என தெரிவித்த பொலிஸார், எனவே... பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். https://athavannews.com/2022/128…

  13. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் குண்டர்கள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இன்றைய தினமும் நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், நடைமுறையில் இரு…

  14. சஜித் பிரதமரானால்... அவரை, ஆதரிக்கத் தயார் – சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் உள்ள சுயேச்சைக் குழுவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தாம் பிரதமர் பதவியை ஏற்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281393

    • 1 reply
    • 117 views
  15. நாட்டின் பொருளாதார நிலைமை... மேலும் மோசமாகும் – மத்தியவங்கி ஆளுநர் எச்சரிக்கை. அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நெருக்கடிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காவிட்டால், பதவி விலகுவேன் என்றும் கூறியுள்ளார். தற்போதைய நிலைமை தொடர்ந்தால், நாளாந்தம் 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். https://atha…

  16. அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில்.... ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் – பாதுகாப்புச் செயலாளர். அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தேவையேற்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் குறி…

  17. பிரச்சினைகளை ஏற்படுத்தி... இன முறுகலை தூண்டி விட்டது, முட்டாள்தனமானது – செல்வம் மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் நீதி. பிரச்சினைகளை ஏற்படுத்தி இன முறுகலை தூண்டி விட்டு இழப்புக்களை சந்தித்த பின்பு தமது பதவிகளை ராஜினாமா செய்வது என்பது முட்டாள்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. சிங்கள தேசத்தில் போராட்ட வடிவில் பல விடயங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்சவின் ஆரம்ப பிரச்சினையே இன்று பாரிய அளவி…

  18. பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை... முடிவுக்குக் கொண்டுவர, தொழிற் சங்கங்கள் தீர்மானம்! நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றுடன் (புதன்கிழமை) முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281462

  19. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள, அதிகாரங்களுக்கு அமைய... பல அமைச்சகங்களுக்கு செயலாளர்கள் நியமனம். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளுக்கு மூன்று செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு – ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சு – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், நிதி அமைச்சகம் – கே.எம் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தற்போது வரை அந்த அமைச்சுக்களில் செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://atha…

  20. பொதுத் தேர்தல் இடம்பெறும் வரை... இடைக்கால அரசாங்கத்தை, பொறுப்பேற்க தயார் – அனுர பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பதவியில் இருக்கும் வரை நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவாது என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “கோட்டா கோ கம“ போராட்டத்தை தவிர்த்து ஏனைய பகுதிகளில் இடம்பெறும் வன்முறை, கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல் கு…

    • 1 reply
    • 127 views
  21. மஹிந்த மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்டவர்களை.... கைது செய்யுமாறு, சட்டத்தரணிகள் குழு முறைப்பாடு. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கமல் விஜேசிறி, துசித குணசேகர, ராஜித லக்மால் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் ஆகியோரை குற்றவியல் அச்சுறுத்தல், குண்டர்களுக்கு உதவி செய்தல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 486 மற்றும் 102 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது ச…

  22. பொதுமக்களை... குழப்பமடையச் செய்யும், எந்தவொரு தரக்குறைவான... செயலிலும் முப்படையினர், ஈடுபட மாட்டார்கள் – சவேந்திர சில்வா பொதுமக்களை குழப்பமடையச் செய்யும் எந்தவொரு தரக்குறைவான செயலிலும் முப்படையினர் ஈடுபட மாட்டார்கள் என பாதுகாப்பு படைகளின் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழ…

    • 2 replies
    • 291 views
  23. கொழும்பின்... பல இடங்களிலும், இராணுவ வாகனங்கள்! கொழும்பின் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அத்தோடு, சோதனைச்சாவடிகளிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281279

  24. இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர். (இன்றைய (மே 11) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, 'தினக்குரல்' நாளிதழ் செய்தி வெ…

  25. இலங்கையில் அலுவல்பூர்வ ராணுவ ஆட்சி வரும் சூழ்நிலை இருக்கிறதா? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போரை கண்டால், துப்பாக்கி சூடு நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த உத்தரவானது, ராணுவ ஆட்சியை நோக்கி நகரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி குறித்து ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் கருத்துத் தெரிவிக்கின்றார். பிபிசி தமிழ் ஃபேஸ்புக் நேரலைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''இலங்கையைப் பொருத்த வரை ராணுவ ஆட்சிக்கான வாய்ப்பு மிகக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.