ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், கப்ராலுக்கு... வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பு ! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இன்று வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது. மத்திய வங்கியின் ஆளுநராக 2006 ஜூலை 01 ஆம் திகதி முதல் 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி இமாத் ஷா சுபைரிக்கு, 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 133 views
-
-
ஜனாதிபதி செயலக கட்டடத்தில்... ‘Go Home Gota’..! – 10ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 10ஆவது நாளாகவும் தொடர்கிறது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர். அத்தோடு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக போரா…
-
- 2 replies
- 320 views
-
-
எரிபொருளின் விலை... மீண்டும், அதிகரிப்பு. லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 35 ரூபாயினாலும் டீசல் லீட்டர் ஒன்றின் விலையினை 75 ரூபாயினாலும் அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 338 ரூபாய்க்கும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 367 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 289 ரூபாய்க்கும் ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 327 ரூபாய்க்கும் பிரிமியம் 295 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அற…
-
- 0 replies
- 196 views
-
-
புதிய அமைச்சரவை.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று காலை பதவியேற்றுள்ளது. 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது. இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் மீன்பிடி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை. சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித உள்ளிட்டோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனம் வழங்கடவில்லை இருப்பினும் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரான காஞ்சன விஜேசே…
-
- 6 replies
- 436 views
- 1 follower
-
-
கோட்டா அரசே... வீட்டுக்குப் போ – யாழில், தீப்பந்த போராட்டம்! ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பண்ணைக் கடற்கரையில் நேற்று இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த இந்த தீப்பந்த போராட்டம், பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றது. குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் எங…
-
- 3 replies
- 526 views
-
-
சுயாதீனமாக செயற்படுவதாக... அறிவித்த 41 உறுப்பினர்களும், தனித்து அமர தீர்மானம் ! நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள 41 உறுப்பினர்களும் சபையில் தனித்தனியாக அமரவுள்ளனர். இந்த தீர்மானம் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறித்த உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. சுதந்திரக் கட்சியின் 13 உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிய 10 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுமே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அத்தோடு சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பொதுஜன பெரமுனவின் உறுப்ப…
-
- 0 replies
- 118 views
-
-
எவரையும் நம்பமுடியாது, அனைவரும் ஒன்றிணைந்து... நாட்டை பலப்படுத்த பேராயர் அழைப்பு நாட்டில் தற்போது ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது எனவும் இதன் காரணமாக இனிமேலும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அதிகாரத்தில் உள்ளவர்கள் மாத்திரமின்றி, அதிகாரம் அற்றவர்கள் கூட ஊழல்வாதிகளாக காணப்படுவதால் 74 ஆண்டுகளுக்குள் அழகிய தாய் நாடு சீரழிந்துவிட்டது என்றும் அவர் கவலை வெளியிட்டார். இந்நிலையில் ஊழலால் சீரழிந்துள்ள தாய் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பலத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பேராயர் அழைப்பு விடுத்துள்ளார். பொய்களைக் கூறி ஏமாற்றுதல், நேர்மையற்ற தன்மையின…
-
- 0 replies
- 143 views
-
-
தேர்தல், அரசியலமைப்பில் மாற்றம்... நெருக்கடிக்கு, தீர்வாக அமையாது – ரணில் அவசரமாக தேர்தலுக்கு செல்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் பிரதமர் கூறியுள்ளார். அத்தோடு அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதானாலும் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் தமக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என முன்னாள் பிரதமர் தனிப்பட்ட சந்திப்பொன்றில் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1277056
-
- 0 replies
- 119 views
-
-
அலி சப்ரி, தலைமையிலான குழு... சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு! இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணிமாகியிருந்தனர். இந்த பயணத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை எதிர்வரும் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை வெ…
-
- 0 replies
- 229 views
-
-
மின்வெட்டு... அமுல்படுத்தப்படும், நேரத்தில் மாற்றம் நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று 3 மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது. இந்தநிலையிலேயே மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்தநிலையில், A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 8 மணி …
-
- 0 replies
- 144 views
-
-
மக்களின் உணர்வுகளுக்கு... ஜனாதிபதி மதிப்பளிப்பதாக, தெரியவில்லை – செந்தில் தொண்டமான்! மக்களின் உணர்வுகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாக தெரியவில்லை என்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தனைப் பிரச்சினைகளுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளாரென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “10 நாட்களாக காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒரு பொதுவான நோக்கத்திற்காகவே தொடர்ந்தும் அனைவரும் போராடி வருகின்றனர். நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு பாரிய தட்டுப…
-
- 0 replies
- 134 views
-
-
தமிழ் தேசிய கீதம்: முரண்பட்ட பிக்கர் வெளியே அனுப்பப்பட்டார்!
-
- 7 replies
- 691 views
- 1 follower
-
-
பொலிஸ் திணைக்கள... இணையத்தளம் மீது, சைபர் தாக்குதல். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1277010
-
- 0 replies
- 491 views
-
-
புதிய அமைச்சரவை... நாளை, நியமனம்? அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டுசெல்வதற்காக புதிய அமைச்சரவையை நியமிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் புதிய அமைச்சரவை நாளைய தினம் நியமிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் புதிய சிலரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. https://athavannews.com/2022/1277008
-
- 0 replies
- 289 views
-
-
ஏன் தமிழில் பாடவில்லை- -அம்பிகா சற்குணநாதன் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்காக நான் காத்திருந்தேன் -ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது இடம்பெறவில்லை- இது சிறுபான்மையினத்தவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் மீறல்களிற்கு ஒரு உதாரணம். மொழி உரிமை மீறல் என்பது தமிழர்கள் அன்றாடம் அனுபவிக்கும் தொடர்ச்சியான அமைதியான மீறல். ஏன் அதனை தமிழில் பாடவில்லை- சிங்களம் பேசாத எழுதாத வாசிக்காத மக்கள் உள்ளனர் என மக்கள் சிந்திப்பதில்லை என்பதே எனது அனுபவம். தமிழ் உத்தியோகபூர்வமொழி என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்,மக்களால் தங்களால் சொந்தமொழியில் உரையாடமுடியாவிட்டால் அது அவர்களிற்கா…
-
- 2 replies
- 579 views
-
-
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: “மூன்று ஆண்டுகளாக கண்ணீர் வடிக்காத நாளே இல்லை” – ஒரு தாயின் வேதனை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகம் முழுவதும் ஈஸ்டர் தினம் இன்று கொண்டாடப்பட்டாலும், இலங்கைக்கு இன்றைய நாள் ஒரு கறுப்பு நாளாகவே இருந்து வருகின்றது. 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கொண்டாடப்பட்ட ஈஸ்டர் தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்தனர். 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். அத்துடன்,…
-
- 1 reply
- 262 views
- 1 follower
-
-
அரசியல் மாற்றத்தில்... எமக்கு, நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள். அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பக்கோரி இடம்பெறும் போராட்டங்கள் காரணமாக காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நன்மை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சிங்கள மக்களால் சமாளிக்க முடியாதுள்ளது . 69 லட்சம் மக்களால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியையும் அவர்களது குடும்பத்தினர…
-
- 0 replies
- 228 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை, 19ஆம் திகதி கையளிக்கப்படும் – எதிர்க் கட்சி. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் 19ஆம் திகதி (செவ்வாய்கிழமை) கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்தப் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார். தவறினால் புதன் கிழமை பிரேரணையை கையளிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த நாடாளுமன்ற வாரத்தின் முதல் இரண்டு நாட்களுக்குள் அது கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ந…
-
- 0 replies
- 136 views
-
-
கோட்டா, மகிந்தவை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம்? April 17, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கியதாக புதிய அமைச்சரவை இன்று மாலை பதவிப்பிரமானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டா அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பதவி விலகியிருந்த முன்னாள் அமைச்சர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று மாலை விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போது எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு உள்ளது. முன்னர் அமைச்சர்களாக பதவிவகித்திருந்த நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் புதிய…
-
- 4 replies
- 415 views
-
-
இலங்கையை தரமிறக்கிய உலகின் நிதித் தரப்படுத்தும் நிறுவனங்கள் April 17, 2022 அனைத்துலக நிதித் தரப்படுத்தும் நிறுவனங்கள் இலங்கையை மேலும் தரமிறக்கியுள்ளன. எஸ் அன் பி எனப்படும் நிதித் தரப்படுத்தும் நிறுவனம் இலங்கையை சி.சி.சி என்ற தரத்தில் இருந்து சி.சி நிலைக்கு தரமிறக்கியுள்ளது. இந்த நிரலானது இறுதி நிலையில் இருந்து மூன்றாவது தரமாகும். அதேசமயம், பிற்ஸ் எனப்படும் நிதித் தரப்படுத்தும் நிறுவனம் இலங்கையை சி.சி என்ற தரத்தில் இருந்து சி என்ற நிலைக்கு தரமிறக்கியுள்ளது, இது முற்றான வீழ்ச்சிக்கு முதல்படியில் உள்ள நிலையாகும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உறுதித் தன்மையற்ற நிலையைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் இலங்…
-
- 0 replies
- 334 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் செவ்வாயன்று : சுமந்திரன் (ஆர்.ராம்) ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போ…
-
- 0 replies
- 115 views
-
-
புதிய பிரதமராக... பதவியேற்கவுள்ளதாக, வெளியான தகவல் – நாமல் விளக்கம் பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென்றும் அமைச்சுப்பதவியை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எரிபொருட்கள் உள்ளிட்டவை இலகுவாக பெற்றுக்கொள்வதில் அசௌகரியமான நிலைமைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வினை காண வேண்டியுள்ளது. மக்களின்…
-
- 0 replies
- 144 views
-
-
போராட்டங்களை... கட்டுப்படுத்த, இராணுவம் – பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அமைதியான போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக ரீதியில் நடைபெறும் அமைதியான போராட்டங்களை ஒடுக்க இராணுவம் அனுப்பப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளார். சட்டவிரோதமான உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கு முன்னர் பல தடவைகள் சிந்திக்குமாறு பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிடம்பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின்…
-
- 0 replies
- 121 views
-
-
சபாநாயகரிடம்... நம்பிக்கையில்லாப், பிரேரணை.. கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பேரணி! அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அதனை கையளிக்க நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேவேளை அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு வரை நடை பயணப் போராட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 24ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகும் குறித்த நடை பயணப் போராட்டம் மே 1ஆம் திகதி கொழும்பை செ…
-
- 0 replies
- 293 views
-
-
திங்கட்கிழமைக்குள்... எரிபொருள் விநியோகம், வழமைக்குத் திரும்பும்! திங்கட்கிழமைக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 37,500 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 41,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் வந்துள்ள நிலையில் எரிபொருளை இறக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1276913
-
- 0 replies
- 104 views
-