Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை தரமிறக்கிய உலகின் நிதித் தரப்படுத்தும் நிறுவனங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை தரமிறக்கிய உலகின் நிதித் தரப்படுத்தும் நிறுவனங்கள்

April 17, 2022
 

அனைத்துலக நிதித் தரப்படுத்தும் நிறுவனங்கள் இலங்கையை மேலும் தரமிறக்கியுள்ளன. எஸ் அன் பி எனப்படும் நிதித் தரப்படுத்தும் நிறுவனம் இலங்கையை சி.சி.சி என்ற தரத்தில் இருந்து சி.சி நிலைக்கு தரமிறக்கியுள்ளது. இந்த நிரலானது இறுதி நிலையில் இருந்து மூன்றாவது தரமாகும்.

அதேசமயம், பிற்ஸ் எனப்படும் நிதித் தரப்படுத்தும் நிறுவனம் இலங்கையை சி.சி என்ற தரத்தில் இருந்து சி என்ற நிலைக்கு தரமிறக்கியுள்ளது, இது முற்றான வீழ்ச்சிக்கு முதல்படியில் உள்ள நிலையாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உறுதித் தன்மையற்ற நிலையைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் இலங்கையை தரமிறக்கியுள்ளன. வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்த முடியாது என இலங்கை அரசு கடந்த செவ்வாய்கிழமை (12) அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் உறுதியற்றதாக உள்ளதுடன், அது மக்களை அதிகம் பாதிக்கும் நிலையை எட்டியுள்ளதாக உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பரிஸ் ஹடாட்சேர்வோ கடந்த புதன்கிழமை (13) தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/the-worlds-financial-rating-agencies-that-downgraded-sri-lanka/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெண் காவலர்கள் பாதுகாப்பில் திருச்சி அழைத்துச் செல்லப்படும் சவுக்கு சங்கர் KaviMay 15, 2024 12:01PM பெண் காவலர்கள் பாதுகாப்பில் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். பெண் காவலர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய விவகாரத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர். அவர் மீது சென்னை, கோவை, தேனி என பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் யாஸ்மின் அளித்த புகாரின் பேரிலும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும்  திருச்சி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில், பாலின சமத்துவமின்மை இல்லாமல் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான அந்த வீடியோ தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்தார்.சங்கர்  பேசியதை வேண்டுமென்றே ஃபெலிக்ஸ் ஜெரால்ட் வெளியிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் நேற்று திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி சிறையில் பெலிக்ஸ்… நீதிமன்றத்தில் நடந்தது என்ன? இந்நிலையில் இவ்வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். வாகனம் முழுவதும் பெண் காவலர்கள் மட்டும் அடங்கிய பாதுகாப்பு குழுவோடு சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார். பெண் காவலர்களை இழிவாக பேசிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த, பெண் காவலர்களால் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. https://minnambalam.com/tamil-nadu/savukku-shankar-goes-to-trichy-court-under-the-protection-of-women-police/  
    • காசாவின் ரபா, ஜபலியாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: கடும் மோதல் உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலியர் தீ வைப்பு maheshMay 15, 2024 வடக்கு காசாவின் ஜபலியா நகரில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேலியப் படை அங்குள்ள வெளியேற்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களை சுற்றிவளைத்திருப்பதோடு தெற்கில் ரபா நகரில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. காசாவின் தெற்கு மற்றும் வடக்கில் மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் காசாவெங்கும் நேற்றும் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தியது. கடந்த திங்கட்கிழமை (13) நள்ளிரவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காசாவின் நுஜைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் சிறுவர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தக் கட்டத்தில் சுமார் 100 பேர் வரை தங்கி இருந்திருப்பதோடு அண்மையில் ரபாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும் இங்கே அடைக்கலம் பெற்றிருந்துள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதாக அஞ்சப்படும் நிலையில் அவர்களை காப்பற்ற போதுமான உபகரணங்கள் இல்லை என்று மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜபலியா அகதி முகாம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கடும் பலத்துடன் தொடர்ந்து படை நடவடிக்கையை முன்னெடுப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய டாங்கிகள், புல்டோசர்கள் மற்றும் கவச வாகனங்கள் அங்குள்ள வெளியேற்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களை சுற்றிவளைத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைகளே தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறைந்தது மூன்று வெளியேற்ற மையங்களை இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றிவளைத்துள்ளன. அங்கு சிக்கி உள்ள மக்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திடம் உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளனர். ஜபலியா நகரில் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டதாக இஸ்ரேல் பல மாதங்களுக்கு முன்னரே குறிப்பிட்ட நிலையிலேயே அங்கு மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கில் உள்ள காசா நகரின் செய்தூன் பகுதியில், புறநகர் பகுதி ஊடாக டாங்கிகள் செல்வதற்கு புதிய பாதையை அமைக்கும் வகையில் அங்குள்ள வீடுகளை புல்டோசர்கள் தகர்த்து வருகின்றன. 75 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இந்த பரந்து விரிந்துள்ள ஜபலியாவுக்குள் ஆழ ஊடுருவ முயற்சி மேற்கொள்ளும் இஸ்ரேலியப் படை கடும் செல் தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மறுபுறம் கிழக்கு ரபாவுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் ஆழ ஊடுருவி வருவதோடு அந்த டாங்கிகள் அல் ஜினைனா, அல் சலாம் மற்றும் அல் பிராசில் பகுதிகளுக்குள் நுழைந்திருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘இந்த டாங்கிகள் இன்று (14) காலை சலாஹுதீன் வீதியின் மேற்காக பிராசில் மற்றும் ஜினைனா பகுதிகளுக்குள் நுழைந்தன’ என்று குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். ‘அவை வீதிகளில் நிலைகொண்டிருப்பதோடு மோதல்களும் இடம்பெற்று வருகின்றன’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் எகிப்துடனான ரபா எல்லை கடவையை கைப்பற்றி மக்களை வெளியேறும் உத்தரவை பிறப்பித்த நிலையில் இதுவரை சுமார் 450,000 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ‘மக்கள் தொடர்ந்து சோர்வு, பசி மற்றும் பயத்தை எதிர்கொள்கின்றனர்’ என்று அந்த ஐ.நா நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ‘எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை. உடன் போர் நிறுத்தம் ஒன்றே ஒரே நம்பிக்கையாக உள்ளது’ என்றும் அது வலியுறுத்தியுள்ளது. ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார். கிழக்கு அல் சலாம் பகுதியில் அல் யாஸின் 105 ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேலிய வாகனம் ஒன்றை தாக்கி அழித்ததாகவும் சிலர் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதாகவும் ஹமாஸ் ஆயுதப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு இஸ்ரேல் தயாராக வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் முழு அளவில் படையெடுப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு ரபா நகர எல்லையில் இஸ்ரேலிய இராணுவம் போதுமான துருப்புகளை குவித்து வைத்திருப்பதாக அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் ரபா மீது படையெடுத்தால் இஸ்ரேலுக்கான ஆயுதங்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருக்கும் சூழலில் அவ்வாறான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பதில் உறுதியற்ற சூழல் இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை ரபா நகருக்கு அருகில் ஐரோப்பிய மருத்துவமனைக்கு பயணித்த ஐ.நா. வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்தது தொடக்கம் அங்கு சர்வதேச பணியாளர் ஒருவர் கொல்லப்பட்ட முதல் சம்பவமாக இது இருப்பதோடு இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், முழுமையான விசாரணை ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும் போர் வலயத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 234 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் 35,173 பேர் கொல்லப்பட்டு மேலும் 79,061 பேர் காயமடைந்திருப்பாக அந்த அமைச்சு கூறியது. காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை ஊடாக ஜோர்தானில் இருந்து காசாவுக்கு செல்லும் மனிதாபிமான உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ‘ஜோர்தானில் இருந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக காசா செல்லும் இந்த வாகனத் தொடரணிகள் தாக்கி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது மூர்க்கத்தனமானது’ என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலிவான் சாடியுள்ளார்.   https://www.thinakaran.lk/2024/05/15/world/60567/காசாவின்-ரபா-ஜபலியாவில்/
    • பொது வேட்பாளராகப் போட்டியிடுமாறு சுமந்திரனை கேட்கவேயில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன் May 15, 2024   “ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனை நான் கேட்கவில்லை. இது வெறும் அப்பட்டமான பொய். அது அவரது அதீதமான கற்பனையின் வெளிப்பாடு” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கோப்பாயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – “இன்று ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. சுமந்திரனிடம் ஜனாதிபதி தமிழ் மொது வேட்ப்பாளராக போட்டியிடுமாறு யாராவது உங்களிடம் கோரினார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியிருக்கின்றார். அதில், உத்தியோகபூர்வமாக யாரும் தன்னிடம் கேட்க்கவில்லை. இருந்த போதும், சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னைச்சந்தித்து நீங்கள் நிற்பீர்களா என்று என்னிடம் கேட்டார் எனவும் தான் அதை மறுத்தார் எனவும் அவர் சொல்லியிருக்கின்றார். அது ஒரு உண்மையான விடயம் அல்ல. ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பொது வேட்ப்பாளர் தொடர்பாக கருத்தை அவரிடம் கேட்டிருந்தேன் என்பது உண்மை. பொது வேட்பாளரது தேவையைப் பற்றி நான் கூறியிருந்தது மாத்திரமல்ல அவரது கருத்தையிம் நான் கேட்டருந்தேன் என்பது உண்மை. அந்த வேளையில், யார் வேட்பாளர் என்பது பற்றி நாங்கள் யோசிக்கவேயில்லை. அவ்வாறான வேளையில் நான் அவரைப் போய் பொது வேட்ப்பாளராக நில்லுங்கள் என்று நான் கேட்டேன் என அவர் கூறியிருப்பது, ஓர் அதீதமான கற்பனையின் வெளிப்பாடோ என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவ்வாறான ஒரு விடயத்தை நான் அவரிடம் கேட்கவில்லை என்பதை முதலாவதாக நான் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் பொது வேட்பாளர் தேவை என்பதில், ஈ.பி.ஆர்.எல்.எவ். மிகத் தெளிவாக இருக்கின்றோம். ஆகவே நான் சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரனிடம் நீங்கள் நில்லுங்கள் என்று கேட்டேன் எனக் கூறுவது இந்தப் பேச்சுக்களை, கலந்துரையாடல்களை குழப்புவதற்கான முயற்சியாக் கூட இருக்குமோ என்று நான் சிந்திக்கின்றேன். இவ்வளவு ஒரு குறுகிய நோக்கங்களை, சிந்தனைகளைக் கொண்டவராக இருக்கக் கூடாது என்பதும் எனது வேண்டுகோளாக இருக்கிறது. ஆகவே நடக்காத அல்லது பேசப்படாத விடத்தை பேசினேன் என்று அவர் சொல்லவது ஏற்புடைய விடயம் அல்ல. என்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் தமிழ் பொது வேட்பாளர் என்பது சுமந்திரனை விட பக்குவமான விசயங்களைக் கையாளக் கூடிய பல பேர் என்னைப் பொறுத்தளவில் கட்சிகளிலும் இருக்கின்றார்கள். அரசியல் கட்சிகளுக்கும் வெளியேயும் இருக்கின்றார்கள். எம்மைப் பெறுத்த வரையில் ஆரம்பத்தில் இருந்து ஒரு பொது வேட்ப்பாளர் என்பவர் கட்சி சாராதவராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். அந்த அடிப்படையில் பார்த்தால் கூட அவ்வாறான ஒரு கோரிக்கையை சுமந்திரனிடம் நான் வைக்கத் தேவையில்லை. ஆகவே அவ் விடயத்தில் அவர் ஒரு தவறான, பிழையான கருத்தைக் கூறியிருக்கிறார் என்பதை நான் வெட்ட வெளியில் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்று சுரேஷ் மேலும் தெரிவித்தாா்   https://www.ilakku.org/பொது-வேட்பாளராகப்-போட்டி/
    • 70 களில் கொழும்பில் இந்திய தூதகரத்தில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த எனக்கு தெரிந்த தமிழருக்கு வேலை கிடைத்தது. அவருக்கு வேலை , இலங்கை தமிழ் ஆங்கிலப்பத்திரிகையில் வரும்இந்தியா சம்பந்த்மான செய்திகளை வாசித்து அவர்களுக்கு அனுப்புவது. 
    • தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் - சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்! Vhg மே 15, 2024   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சசிதரன், மாவிலாறு அணையை மூடி இறுதிக் கட்டப் போருக்கு வழி வகுத்தவர் என்று இராணுவ வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றார். இறுதிக் கட்டப் போரின் போது அவர் இராணுவத்திடம் சரணடைந்ததாக எழிலன் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்திருந்த போதும், இராணுவம் அதனை மறுத்திருந்தது. எனினும் எழிலன் தொடர்பில் அதன் பின்னர் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. மேலும், காலங்களில் எழிலன் மனைவி அனந்தி, வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்திருந்தார். இந்நிலையில் தற்போது எழிலனின் மகள் நல்விழி LLB(Hons) in Law பட்டம் பெற்றுக் கொண்டுள்ளதுடன், உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணமும் செய்துகொண்டுள்ளார்.   https://www.battinatham.com/2024/05/blog-post_53.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.