Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நம்பிக்கையில்லாப் பிரேரணையை... எதிர்கொள்ள தயார் – அலி சப்ரி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயார் என ஆளும் தரப்பு அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஆளும் தரப்பின் தற்காலிக அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவிவகிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் நாட்டினை மீட்பதற்கான செயற்பாட்டில் பங்கேற்பதற்கு தயாராக இல்லாத நிலையில், இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்று நாடாளுமன்ற பெரும்பான்மையை காண்பிப்பார்களாயின் அவர்களி…

    • 1 reply
    • 272 views
  2. “எங்களுக்கு... ஜனாதிபதி, கோட்டா வேண்டும்” – தங்காலை மற்றும் கண்டியில் பேரணி எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும் என தெரிவித்து தங்காலை மற்றும் கண்டியில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி அவருக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவை தெரிவித்து போராடி வருகின்றனர். இதேவேளை கொட்டும் மழையிலும் இன்று இரண்டாவது நாளாக காலிமுகத்திடலில் இளைஞர்கள் போராடிவருகின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவும் வகையில் சமூக ஆர்வலர்கள் உணவுகள் மற்றும் குடிநீர், மற்றும் மழைக்கவசம் ஆகியவற்றை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276097

    • 7 replies
    • 970 views
  3. மேலும் 19 இலங்கைத் தமிழர்கள்... அகதிகளாக, தனுஷ்கோடியில் தஞ்சம்! இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் அகதிகளாக வந்துள்ளதாக தனுஷ்கோடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே அரிசல்முனைக்கு வந்த 19 பேரிடம் கியூபிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டதையடுத்து, ஏற்கனவே 20 பேர் வந்தநிலையில் மேலும் 19 பேர் இன்று தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276056

    • 2 replies
    • 347 views
  4. சுகாதார அவசர நிலையை.. நாட்டில், பிரகடனப் படுத்த கோரிக்கை சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடிதம் மூலம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் சகல தரப்பினரையும் அழைத்து ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்து பரிசீலிப்பது மிகவும் முக்கியம் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது . இதேவேளை தொழிநுட்ப குழுவொன்றை நியமித்து தற்போது ஏற்பட்டுள்ள மருந்து முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பரிந்துரைகளை உருவாக்குவது அவசியம் என்பதோடு வெளிநாடுகளில் உள்ள இ…

  5. “போராட்டங்களுக்கு மத்தியில்... மக்கள் நாட்டின் பிரச்சினைகளை, மறந்து விட்டனர்” அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் நாட்டின் பிரச்சினைகளை மறந்து வருகின்றனர் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு பின்னரும் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என அந்த அமைப்பின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார். ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கக்கோரி மக்கள் முன்னெடுத்த போராட்டம் விலைவாசி அதிகரிப்புடன் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு போன்ற உண்மையான பிரச்சினைகளை துடைத்தெறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சதொச விற்பனை நிலையங்களில் ஏற்கனவே பொருட்கள் தீர்ந்துவிட்டது என்று…

  6. சுயாதீனமாக... செயற்பட தீர்மானித்த, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... ஜனாதிபதி அழைப்பு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட குழுவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனையை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள…

  7. எரிவாயுவை தாங்கிய... மற்றொரு கப்பல், நாட்டுக்கு வருகை 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று ( சனிக்கிழமை ) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார் . மேலும் எரிவாயு நிரப்பும் செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறதோடு, நாள் ஒன்றுக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் . https://athavannews.com/2022/1276033

  8. 100 மில்லி மீற்றருக்கும்... அதிகமான, பலத்த மழை – மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு! நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால், நீர் மின் உற்பத்திக்கு நல்லதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL…

  9. நாட்டில் இன்று... ஒரு மணிநேரம், மின்சாரம் துண்டிப்பு! நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு மணிநேரம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்றைய தினம் A முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1276048

  10. கொழும்பில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் 2 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் ! கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் , நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப…

    • 7 replies
    • 1.6k views
  11. அபிவிருத்திகளை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் - நிதியமைச்சின் செயலாளர் (இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை 3மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும்.சமூக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நட்பு நாடுகள்,சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையுடனான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளோம். வீதி செப்பனிடும் நிலைமையில் நாட்டின் பொருளாதாரம் தற்போது சீரான தன்மையில் இல்லை.அவசரமற்ற அபிவிருத்திகளை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசிமானதாகும் என நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன தெரிவி…

  12. சஜித்துடன் பேச்சு நடத்தும் பத்துக்கட்சிகளைச் சேர்ந்த அணியினர் (ஆர்.ராம்) தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தினை வீழ்த்துவதே பிரதான இலக்காக உள்ள நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவது வீணானது என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பத்துக்கட்சிகளைக் கொண்ட அணியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இந்த விடயம் சம்பந்தமாக பத்துக்கட்சிகள் அணியில் அங்கத்துவம் வகிக்கும் இடதுசாரியின் தலைவர் வாசுதேவநாணயக்கார எம்.பி கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது. அவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவவதால் பயனில்…

  13. கூட்டணிக்கு புதிய நிர்வாகம் தெரிவு! April 9, 2022 தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் காணப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவுகட்டி புதிய நிர்வாகம் இன்றைய தினம் சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை 11மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே நிர்வாக தெரிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அக்கட்சியின் தலைவராக சட்டத்தரணி பரமசிவம் ஸ்ரீதரனும் கட்சியின் செயலாளர் நாயகமாக அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட வீ.ஆனந்தசங்கரியும் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் அக்கட்சியின் மகளிர் பேரவைத் தலைவியாக சூரியமூர்த்தி சூரியபிரதீபா வாசவன் தெரிவுசெய்யப்பட்டார். …

  14. ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோரின் கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியமானவை அல்ல - பீரிஸ் (நா.தனுஜா) பொதுமக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கோ, தனியொரு அரசியல் கட்சிக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரானது அல்ல. நாட்டில் நடைமுறையிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கும் எதிராகவே அவர்கள் போராடுகின்றார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார். தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரமன்றி, அரசியல் நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்…

    • 3 replies
    • 403 views
  15. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் - எம்.பி. கஜேந்திரன் அழைப்பு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு. அந்த இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்ற நோக்கத்திற்காகவும் மே-18 நினைவேந்தல் நிகழ்வானது உணர்வுபூர்வமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு …

  16. சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வையே தமிழர்கள் விரும்புகிறோம்: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

    • 0 replies
    • 531 views
  17. ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா கண்டனம்- இலங்கை மக்களுடன் ஆக்கபூர்வமான வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும என வேண்டுகோள் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிற்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடுவதற்கான வெளிப்படுத்துவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவேண்டும் எனவும் ஐநா நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். MaryLawlor சமீபத்தில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டது சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை …

    • 4 replies
    • 475 views
  18. பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்து விட்டோம் நாட்டிற்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார். இப்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து நாடகம் ஆடுவதைப் பார்க்கிறோம். இன்று நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றம் தேவை. இப்போது நமது வெளியுறவு அமைச்சரும் நமது நிதி அமைச்சரும் சென்று சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்க வேண்டும். நாம் வேறு நாடுகளுக்குச் சென்ற…

    • 0 replies
    • 290 views
  19. 700 ரூபா விலைக் கழிவுடன் சதொசவில் இன்று முதல் நிவாரண பொதி! தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்டவை அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்ப…

    • 0 replies
    • 245 views
  20. இலங்கை போராட்டக் களத்தில் இணைந்த ஐடி ஊழியர்கள்: “மின்சாரம் இல்லாமல் எப்படி பணி செய்வது?” 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியானது, பாமர மக்கள் முதல் படித்த சமூகம் வரை நேரடி பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடைந்தமையானது, இலங்கைக்கு இன்று பல்வேறு எதிர்மறை சவால்களை தோற்றுவித்துள்ளது. அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பிரதான தொழில்துறைகளான தேயிலை, ரப்பர், ஆடை உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும், சர்வதேச நாடுகளிடமிருந்து நேரடியாக அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மற்றுமொரு தொழில்துறையாக ஐடி துறை காண…

  21. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கடன் வரம்பு நிர்ணயித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இலங்கையிடம் அமெரிக்க டொலர் கையிருப்பு பெப்ரவரியில் 2.31 பில்லியன் டொலர்களில் இருந்து மார்ச் மாதத்தில் 1.93…

  22. அடுத்த ஆறு மாதங்களில்... வரி மற்றும் எரிபொருள் விலையை, மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் – வெளிநாட்டு ஊடகத்திடம் நிதி அமைச்சர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறினார். எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை நாடும் என்றும் இது சுமார் 5 வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று சப்ரி கூறினார். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ச…

  23. ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்களால்... ஆட்சியை, தக்கவைக்க முடியவில்லை – கொழும்பு பேராயர் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களை முன்னிறுத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்பவர்களால் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டினார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். https://athavannews.com/2022/1276004

  24. இலங்கையின் நிலைமை குறித்து... கனடா, ஆழ்ந்த கவலை! இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக கனடா தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். இந்த கடிதமான காலத்தில் இலங்கை மக்களோடு கனேடியர்கள் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடரும் போராட்டங்களின் விளைவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276001

  25. நம்பிக்கையில்லா பிரேரணை, கொண்டு வரப்பட்டால்... ஆதரவளிப்போம் – கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியம் போன்ற பொதுக் கட்டமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமுடியாது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆகவே வெகுவிரையில் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://athavannews.com/2022/1275977

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.