Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 11 இல் இடம்பெறவிருந்த... சர்வதேச நாணய நிதியத்துடனான, கலந்துரையாடல் ஒத்திவைப்பு ! இலங்கைக்கு உதவி வழங்குவது குறித்து ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில் நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டடமிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் குழு இன்னும் அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடிக்குத…

    • 3 replies
    • 296 views
  2. பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்து விட்டோம் நாட்டிற்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார். இப்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து நாடகம் ஆடுவதைப் பார்க்கிறோம். இன்று நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றம் தேவை. இப்போது நமது வெளியுறவு அமைச்சரும் நமது நிதி அமைச்சரும் சென்று சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்க வேண்டும். நாம் வேறு நாடுகளுக்குச் சென்ற…

    • 0 replies
    • 290 views
  3. 700 ரூபா விலைக் கழிவுடன் சதொசவில் இன்று முதல் நிவாரண பொதி! தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்டவை அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்ப…

    • 0 replies
    • 245 views
  4. இலங்கை போராட்டக் களத்தில் இணைந்த ஐடி ஊழியர்கள்: “மின்சாரம் இல்லாமல் எப்படி பணி செய்வது?” 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியானது, பாமர மக்கள் முதல் படித்த சமூகம் வரை நேரடி பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடைந்தமையானது, இலங்கைக்கு இன்று பல்வேறு எதிர்மறை சவால்களை தோற்றுவித்துள்ளது. அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பிரதான தொழில்துறைகளான தேயிலை, ரப்பர், ஆடை உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும், சர்வதேச நாடுகளிடமிருந்து நேரடியாக அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மற்றுமொரு தொழில்துறையாக ஐடி துறை காண…

  5. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கடன் வரம்பு நிர்ணயித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இலங்கையிடம் அமெரிக்க டொலர் கையிருப்பு பெப்ரவரியில் 2.31 பில்லியன் டொலர்களில் இருந்து மார்ச் மாதத்தில் 1.93…

  6. நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற... நிதி அமைச்சராக, இருந்து தேவையானதைச் செய்வேன் – அலி சப்ரி எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது. இதன்போது புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார். அதனை தெளிவுபடுத்திய அலி சப்ரி, தான் நிதியமைச்சராகவே தற்போது உ…

    • 9 replies
    • 498 views
  7. அடுத்த ஆறு மாதங்களில்... வரி மற்றும் எரிபொருள் விலையை, மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் – வெளிநாட்டு ஊடகத்திடம் நிதி அமைச்சர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறினார். எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை நாடும் என்றும் இது சுமார் 5 வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று சப்ரி கூறினார். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ச…

  8. ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்களால்... ஆட்சியை, தக்கவைக்க முடியவில்லை – கொழும்பு பேராயர் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களை முன்னிறுத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்பவர்களால் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டினார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். https://athavannews.com/2022/1276004

  9. இலங்கையின் நிலைமை குறித்து... கனடா, ஆழ்ந்த கவலை! இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக கனடா தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். இந்த கடிதமான காலத்தில் இலங்கை மக்களோடு கனேடியர்கள் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடரும் போராட்டங்களின் விளைவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276001

  10. நம்பிக்கையில்லா பிரேரணை, கொண்டு வரப்பட்டால்... ஆதரவளிப்போம் – கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியம் போன்ற பொதுக் கட்டமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமுடியாது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆகவே வெகுவிரையில் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://athavannews.com/2022/1275977

  11. அலரிமாளியை... சுற்றி, பலத்த பொலிஸ் பாதுகாப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறும், அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஈஸ்டர் அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டி தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அலரிமாளியை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிந்தது. https://athavannews.com/2022/1275998

  12. இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது- பேராசிரியர் சந்தா தேவராஜன் இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கை ஜனாதிபதியின் கடன் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக அமைதியின்மை தொடர்வதால் நாடு ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றது என அவர் சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார். உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகளும் முன்னொருபோதும் இல்லாத பணவீக்கமும் தொடர்ச்சியான மின்வெட்டுகளும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை வீதியில் இறங்கச்செய்துள்ளன,1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஒருபோதும் இல்லாத வீழ்ச்சியை நாடு எதிர்கொள்கின்றது. சமூக கொந்தளிப்பே மிகப்பெரும் ஆபத்து இதன…

  13. விடுதலைப் புலிகளுக்கு... ஆயுதம் வழங்க முயன்ற, ஜப்பானிய... பாதாள உலக தலைவர் கைது! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தரையில் இருந்து தாக்க கூடிய ஏவுகணைகளை வழங்க முயற்சித்த ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்த்து மூன்று தாய்லாந்து நபர்களையும் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மூவரும் நியூயோர்க்கில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தானியங்கி ஆயுதங்கள், ரொக்கெட்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தரையிலிருந்து வான்நோக்கி தாக்…

    • 1 reply
    • 320 views
  14. இடைக்கால அரசாங்கத்தின்... பிரதமர் பதவி : ரணில், பொன்சேகா உள்ளிட்ட... ஐவரின் பெயர் பரிந்துரை தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினரால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பல ஐரோப்பிய இராஜதந்திர தலைவர்களை சந்தித்து, தற்போது நிலவும் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது இடைக்கால அரசாங்கத்தின் தேவை மற்றும் அதன் பதவிக்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக…

  15. நாணய சபை வட்டி வீதங்களை... இறுக்கப்படுத்த, மத்திய வங்கி நடவடிக்கை! பணவீக்கத்தை குறைக்கும் நோக்கிலேயே மத்திய வங்கி, நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேச மூர்த்தி குறிப்பிட்டார். நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, துணைநில் வைப்பு வீதம் 13.50 சதவீதமாகவும், துணைநில் கடன் வீதம் 14.50 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. இதன்படி, இந்த இரண்டு வட்டி வீதங்களும் 700 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்ட நிலையில் வட்டி வீதம் அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் குறித்…

  16. அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை: 18 உறுப்பினர்கள் கையொப்பம் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி நேற்று சபையில் அறிவித்திருந்தது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேராவும், முஜிபுர் ரஹ்மானும் இதனை உறுதிப்படுத்தினர். அத்தோடு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். லக்ஷ்மன் கிரி…

  17. நிறைவேற்று அதிகாரம் கொண்ட... ஜனாதிபதி முறையை ஒழிக்க, தமிழ்க் கட்சிகள் ஏகமனதாக கோரிக்கை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரதான தமிழ் கட்சிகளின் ஐந்து தலைவர்களும் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி கலந்துரையாடினர். இதன்போது நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக விடுக்கப்பட்டது. குறித்த சந்திப்பில் டெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தும் கூட்டறிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் சார்பில் வெளியிடுவது பற்றியும் பேசப்பட்டதாக அறிவ…

  18. போராட்டங்களினால்... சுற்றுலாப் பயணிகளுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது – அரசாங்கம் இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அமைச்சு, இலங்கை தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுடன் , கடந்த ஆண்டு …

  19. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற தேவையான மாற்றங்களை தாமதமின்றி செயற்படுத்துங்கள் - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரே…

  20. சதொசவில்... இன்று முதல், நிவாரண பொதி ! தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதியை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நிவாரணப் பொதிகளை இன்று ( சனிக்கிழமை ) தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது . இதன்படி அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்ட பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் எ…

  21. ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு (எம்.மனோசித்ரா) இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை. இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெள்ளிக்கிழமை (8) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கை தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்…

  22. இலங்கையில்... போராட்டங்கள் மீதான, அடக்குமுறைக்கு... ஐ.நா. நிபுணர்கள் கண்டனம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நடத்தப்பட்ட சில போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையிலான ஒன்றுகூடல் மற்றும் போராட்டங்களின் போது கருத்து தெரிவிப்பதற்காக உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அவசரகால பிரகடனம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடை ஆகியவற்றால் மிகவும் கவலையடைவதாகவும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கூறியுள்ளது. மேலும் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிகத்தை அதிகமாகப் பயன்படுத்துவதையும் கண்டிப்பதாக அறிவித்துள்ளது…

  23. கொழும்பு: பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இலங்கையிடம் அ…

  24. தமிழர் விடுதலைக் கூட்டணி... மீண்டும், தலைதூக்க போகின்றது – ஆனந்தசங்கரி இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தரவேண்டும் நாளை(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்றார். …

  25. மக்கள் வரிசையாக நிற்கும் நிலையை உடனடியாக மாற்ற வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள கௌரவ டக்ளஸ் தேவானந்தா, உணர்ச்சிகளாலோ அல்லது சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகள் மூலமோ இந்த நிலைமையை மாற்ற முடியாது எனவும் அறிவு ரீதியாக அனைவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பற்றிய அறிக்கை தொடர்பாக அரசாங்கக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், எமது…

    • 2 replies
    • 292 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.