ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
நாட்டின்.. தற்போதைய நெருக்கடி நிலை குறித்த, இரண்டாம் நாள் விவாதம் ஆரம்பம் ! நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த இரண்டாம் நாள் விவாதம் இன்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற விவாதத்தின்போது கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் போராட்டம் காரணமாக இரு முறை சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275517
-
- 1 reply
- 133 views
-
-
ஜனாதிபதி பதவி விலகமாட்டார் – மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: ஜோன்ஸ்டன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகமாட்டாரெனவும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட மாட்டார் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மீண்டும் சபையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வின்போது, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, பால்மா தட்டுப்பாடு, எண்ணை தட்டுப்பாடு என்பன விரைவில் தீர்க்கப்படும். இந்த பிரச்சினைகளை விரைவில் தீர்க்க முடியுமென நாங்கள் நம்புகிறோம். இலங்க…
-
- 0 replies
- 166 views
-
-
ஜனாதிபதி... வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே... மக்கள் விரும்புகின்றனர் – அனுரகுமார ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ஆசனத்தில் இருந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கும் எந்தவொரு தீர்வையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்றும் இடம்பெறும் விவாதத்தின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெ…
-
- 0 replies
- 103 views
-
-
நாடாளுமன்றம் வந்த, சிறிது நேரத்திலேயே... சபையை விட்டு வெளியேறினார், ஜனாதிபதி கோட்டா! நாடாளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக நாடாளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்றும் இன்றும் விவாதங்கள் இடம்பெறும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்திருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற அமர்வுகளை பார்வையிடுவதற்காக சபைக்கு இன்று (வியாழக்கிழமை) வருகை தந்தார். தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாடளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறு…
-
- 0 replies
- 90 views
-
-
உத்தியோகபூர்வ வாகனங்களை... மீள ஒப்படைக்காத, முன்னாள் அமைச்சர்கள்… பிள்ளையானும் ஒப்படைக்கவில்லை !! அண்மையில் பதவி விலகிய அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளையடுத்து, கடந்த 3 ஆம் திகதி அமைச்சரவை பதவி விலகியது. பின்னர், சில அமைச்சுப் பதவிகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் வெற்றிடமாக இருந்த நிதியமைச்சர் பதவிக்கு முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டார். எனினும், அலி சப்ரி 24 மணித்தியாலங்களுக்குள் அப்பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பதவி…
-
- 0 replies
- 102 views
-
-
அரச, தோட்ட மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள்... பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்! நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச, அரை அரச, தோட்ட மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன. நாளை தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி போராட்டம் நடத்தப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரான சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால்இ அதற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும்…
-
- 0 replies
- 122 views
-
-
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு... ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் – ஹம்டி, “ஐ.நா. சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்கிறது. பொருளாதார மீட்சிக்குத் தேவையான அவசர நடவடிக்கைகளில் நாடு கவனம் செலுத்த அனுமதிக்கும் நெருக்கடிக்கு ஒரு அமைதியான தீர்வை நோக்கி செயற்பட கட்சிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்றும் ஹம்டி ஒரு அறிக்கையில் கூறினார். அவசரகாலச் சட்டத்தை இரத்துச் செய…
-
- 2 replies
- 211 views
-
-
தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி (கூட்டாட்சி) முறைமை – இதுவே இன்றைய நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டெழ ஒரே வழி – கஜேந்திரகுமார் இன்று சிறிலங்கா அரசு எதிர் கொண்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக இங்கு கூடியிருக்கின்றோம். இன்றிருக்கிற நெருக்கடியானது, ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் (Government) மீதுள்ள நெருக்கடிபோன்று தோன்றினாலும், உண்மையில் சிறிலங்கா அரசே (State) நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. ஏனெனில், எதிர்வரும் நாட்களில் இந்த அரசாங்கம் எதிர்கொள்ளும் நிர்ப்பந்தங்களால், பதவியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்தாலும் கூட, புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள், அவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும், துண்டம் துண்டமாக சிதைந்து போயிருக்கும் இந்த ச…
-
- 2 replies
- 288 views
-
-
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான சீற்றம் தீவிரமடைவதால் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயங்கும் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள்- இலங்கையின் பொருளாதார குழப்பநிலை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் சீற்றம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயங்குவதால் நிதியமைச்சர் பதவி தொடர்ந்து காலியாக உள்ளது. நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி தனது பதவியை 24 மணிநேரத்திற்குள் இராஜினாமா செய்ததை தொடர்ந்தே இந்த நிலை நீடிக்கின்றது. ஜனாதிபதி தேசிய பட்டியல் மூலம் சுயாதீன நிபுணர் ஒருவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கு உதவும் விதத்திலேயே அலிசப்ரி நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதன்பி…
-
- 1 reply
- 306 views
-
-
நிபுணர்கள் குழுவை நியமித்தார் ஜனாதிபதி பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி. 02- ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன். 03- நிறுவனத் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் IMF இன் ஆபிரிக்க திணைக்கள…
-
- 13 replies
- 824 views
-
-
எனது மக்களின் குரலாக... நான், எப்போதும் செயற்படுவேன் – அங்கஜன் எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. அந்த செய்தி குறிப்பில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை ஆணையாக வழங்கிய என் மாவட்ட உறவுகளும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரங்களில் மக்களை நேரில் சந்தித்து அவர்களது நிலைப்பாடுகளை நேரில் கேட்டறிந்து கொண்டேன். நாட்டின் பொருளாத…
-
- 7 replies
- 487 views
-
-
இராணுவத்தினர் இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்திருக்க கூடாது – பொலிஸார் அவர்களை தாக்கியிருக்க கூடாது – சரத்பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவத்தினரை தாக்கியிருக்ககூடாது என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நான் அதனை எதிர்த்திருப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்திருக்ககூடாது- அவர்களை யாராவது அனுப…
-
- 8 replies
- 577 views
-
-
உலக நாடுகள் சில இலங்கைக்கான பயண எ்சரிக்கையை விடுத்துள்ளன! April 7, 2022 பிரித்தானியா, அவுஸ்ரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கை செல்லும் தமது பயணிகளுக்கு பயண ஆலோசனையை விடுத்துள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மற்றும் சில மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா தனது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையினால் பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை மின் தடை ஏற்படும் என்பதனால் பயணிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என…
-
- 0 replies
- 182 views
-
-
இலங்கை மக்களின் மனதை வெல்லுமாறு அரசாங்கத்தைக் கோருகிறேன்! இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை தனது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் இந்தத் தருணத்தில், ஒவ்வொருவரின் குரலும் முக்கியமானகும் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்ட அவர், எதிர்ப்பாளர்களை அமைதியுடன் இருக்குமாறும், அவர்களின் குரல்கள் மற்றும் ஒற்றுமையைப் பயன்படுத்தி மாற்றத்துக்காக எடுக்கப்படும் முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன். இதற்கான தீர்வை விரைவாகக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தி, இலங்கை மக்களின் மனதை வெல்லுமாறு அரசாங்கத்தைக் கோருகிறேன்- என…
-
- 9 replies
- 540 views
-
-
சட்டமா அதிபருக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணை – விஜயதாச ராஜபக்ச சட்டமா அதிபருக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரiணையை கொண்டுவருவதற்கு சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர் என விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் மாத்திரம் காரணமில்லை நீதித்துறையும் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சட்டத்தரணிகள் சமூகத்தினர் சில விவகாரங்களில் தனது கடமையை நிறைவேற்ற தவறிவிட்டார் என கருதுகின்றனர் என தெரிவித்துள்ள அவர் மல்வான மாளிகை தொடர்பான வழக்கு சட்டமா அதிபர் உரிய ஆத…
-
- 2 replies
- 231 views
-
-
ஹர்ஷ டி சில்வாவை... ஜனாதிபதியாக்க, வேண்டும் – ஹரின் கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,இந்த நாடாளுமன்றில் எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் 225 உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இதுதான் இந்த நாட்டின் நிலைமை எனவும் அவர் தெரிவித்தார். ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம் எனவும், நாடாளுமன்றில் உள்ள உணவகத்தில் உணவு உட்கொள்ள மாட…
-
- 4 replies
- 336 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர்... விரைவில், அடித்து துரத்தப்படுவார்கள் – சுரேஸ் தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று இன்று பொய்யான வேடதாரிகளாக செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் வடகிழக்கிலிருந்து அடித்து துரத்தப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டில் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இன்று தெற்கில் ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது. ஆட…
-
- 3 replies
- 360 views
-
-
ஜூலை வரைதான் டைம்! இலங்கை கழுத்தை நெரிக்கும் டிராகன்! நேரம் பார்த்து கடனை திருப்பி கேட்ட சீனா! செக்! tamil.oneindia. கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இலங்கைக்கு கொடுத்த கடனின் ஒரு பகுதியை சீனா திருப்பி கேட்டுள்ளது. ஒருவேளை இலங்கை கொடுக்க முடியாத பட்சத்தில் சீனா இதற்கு ஈடாக வேறு இழப்பீடுகளை கேட்கும் வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக உலகின் பல நாடுகளுக்கு .. முக்கியமாக தெற்காசிய நாடுகளுக்கு சீனா அதிகமாக கடன் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளது. பெல்ட் அண்ட் ரோட் திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் சீனா முதலீடு செய்யும். இதற்கு கடனாக பல மில்லியன்களை சீனா அந்த…
-
- 5 replies
- 448 views
-
-
சிறிலங்காவின் அதிகரித்த இராணுவச் செலவீனங்களே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணி ! தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் !! – வி.உருத்திரகுமாரன் Digital News Team 2022-04-06 இன்று இலங்கைத்தீவு எதிர் கொள்ளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு சிங்கள அரசின் தமிழ்மக்களுக்கு எதிரான இனவழிப்புப்போரும், பெருந்தொகை பணம் இராணுவச் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமையும் கூட முக்கிய காரணிகளாக அமைகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவின் இன்றைய பொருளாதார நெருக்கடி குறித்…
-
- 1 reply
- 298 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்கு... திடீர் விஜயம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்கு திடீர் என விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஜனாதிபதி இதுவரை சபைக்குள் பிரசன்னமாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும்(புதன்கிழமை) நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே, ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு திடீர் என விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், ஜனாதிபதி சபைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில், அவரிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1275350
-
- 1 reply
- 248 views
-
-
பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு இதோ ! அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனை அடுத்து புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com
-
- 0 replies
- 187 views
-
-
நாடாளுமன்றில்... எச்சரிக்கை விடுத்தார், விஜேயதாச ராஜபக்ஷ!! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தபோதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், மாணவர்கள் பாடசாலை சென்று பரீட்சை எழுதக்கூடிய சூழல் தற்போது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். மேலும் வினாத்தாள்களை அச்சிடுவதற்குரிய பொருட்கள், எரிவாயு விநியோகம், எரிபொருள் விநியோகம் என்பன உறுதி செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் வகையில் புதிய பிரதமரைத் தேர்ந்தெ…
-
- 1 reply
- 274 views
-
-
இலங்கையில், ஆளும்தரப்பு... நாடாளுமன்றத்தை கலைக்க முனைகிறதா? நாடாளுமன்றத்தினை கலைக்கும் நோக்குடனேயே ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக காண்பித்த இரா.சாணக்கியன் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அத்துடன், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடப்படுகின்றனர். எனினும் பதவி விலக வேண்டியது 2…
-
- 0 replies
- 212 views
-
-
ராஜபக்சக்களின்... வீட்டுக்கு, முன்னால் சென்று போராட்டம் நடத்துங்கள் – சாணக்கியன் ராஜபக்சக்களின் வீட்டுக்கு முன்னால் சென்று போராட்டம் நடத்துங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மக்கள் தமது போராட்டத்தை கைவிடக்கூடாது என்பதே தனது வேண்டுகோள் என்றும் கோரிக்கை விடுத்தார். இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீவிரவாதிகள் என கூறியமைக்கும் அவர் கடும் கண்டனத்தை வெளியிட்டார். பால் பக்கெட் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 89 வயதான தாய் ஒருவரும் தீவிரவாதியா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்…
-
- 0 replies
- 366 views
-
-
அமைதியான முறையில்... பதற்றத்தை, கட்டுப்படுங்கள் – ஐ.நா மனித உரிமை அலுவலகம் வலியுறுத்து. பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறும் போராட்டங்களை அமைதியான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் திடீர் தட்டுப்பாடு மற்றும் மோசமான பணவீக்கம், பண மதிப்பிழப்பு மற்றும் மின்வெட்டு போன்றவற்றால் நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. இது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அடிப்படை பொருட்களைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களால் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடக பேச…
-
- 4 replies
- 250 views
-