ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142872 topics in this forum
-
ஊரடங்கு சட்டம், தளர்வு ! நாடளாவிய ரீதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை ) காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது . நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது . இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது . எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் அவசரகால சட்டம் தொடர்ந்தும் அமுலில் காணப்படுகின்றது . https://athavannews.com/2022/1274668
-
- 0 replies
- 88 views
-
-
பிரதமர் பதவியிலிருந்து.. விலக தயாராகின்றார், மஹிந்த? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு இடம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு…
-
- 7 replies
- 648 views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்தில்.... அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை, குறைவாகவே இருக்கும்? தற்போதுள்ள அமைச்சரவை பதவி விலகவுள்ளதாகவும், புதிய இடைக்கால அரசாங்கம் விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரமே புதிய அரசாங்கம் பயணிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274622
-
- 2 replies
- 366 views
-
-
அரசிலிருந்து... வெளியேற தயாராகின்றது, இ.தொ.கா – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் ஜீவன் தொண்டமான்! அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும். …
-
- 7 replies
- 502 views
-
-
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகினர் ! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார். http://www.newswire.lk/wp-content/uploads/2021/08/1597227928-New-Cabinet-and-State-Ministers-L.jpg இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒருமித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இவ்வாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இராஜாங்க அமைச்சர…
-
- 1 reply
- 473 views
-
-
பதவி விலகினார் நாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/125232
-
- 0 replies
- 382 views
-
-
இலங்கையில் அவசர நிலை, சமூக ஊடகங்களுக்குத் தடை: ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்குமா? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISHARA S. KODIKARA/GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் அவசரச் சட்டம் - காவலில் ராணுவத்தினர். இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது தவிர, 36 மணி நேர ஊரடங்கு சட்டமும் அமலில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு முதல் இலங்கையில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
தெற்கில்... அரசியல்வாதிகளை விரட்டியடிப்பது போன்று, கிழக்கில் உள்ளவர்களையும்... மக்கள் விரட்டியடிக்க வேண்டும் – இரா.சாணக்கியன் இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே இன்று பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை வைத்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது வேதன…
-
- 1 reply
- 260 views
-
-
அமைச்சு பதவிகளை, துறக்க தயாராகும்... ராஜபக்சேக்கள்? – சிங்கள ஊடகம் தகவல்! ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த மூவர் அமைச்சு பதவிகளை துறக்க தயாராகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரே இவ்வாறு பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று மாலை இறுதி முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1274613
-
- 2 replies
- 286 views
-
-
“நாட்டில்... அரபு வசந்தத்தை, உருவாக்குவோம்“ என கோசமிட்டு... போராட்டத்தை முன்னெடுத்ததாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை! நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏ…
-
- 23 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்திற்கு... அதிகரிக்கும், நெருக்கடி – சுயாதீனமாக செயற்பட தயார் என அறிவித்தது வாசுதேவ தரப்பு! நாடாளுமன்றில் எதிர்வரும் 5ஆம் திகதி தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இதுதொடர்பாக கொழும்பில் உள்ள மூன்று இடங்களில் பேச்சுவார்த…
-
- 0 replies
- 226 views
-
-
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும்... இடையில் அவசர சந்திப்பு? இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து பேசப்படலாம்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதற்கமைய நா…
-
- 0 replies
- 204 views
-
-
மின்வெட்டினை, நிறுத்துமாறு கோரி... ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக, முதியவர் தற்கொலை! மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, குறித்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது அவர் போதையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1274605
-
- 2 replies
- 278 views
-
-
இலங்கை ஊரடங்கை மீறி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் 3 ஏப்ரல் 2022, 06:42 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி. இலங்கை அரசாங்கத்தின் அவசர நிலைப் பிரகடனம், ஊரடங்கு, சமூக ஊடகங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் இன்று நடத்தியது. கொழும்பு சுதந்திர சதுகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவி…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் – நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைக்கின்றது அரசாங்கம்? நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் காரணமாக, அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுகிய காலத்துக்கு ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டங்கள் இல்லை எனத் தெரிவித்து புதுவருடத்தை முன்னிறுத்தி இவ்வாறு ஒத்திவைக்க முடியுமென அரச உயர் மட்டத்தில் உள்ள சிலர் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்…
-
- 0 replies
- 150 views
-
-
பேராதனையில்... போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, கண்ணீர்ப்புகை பிரயோகம் ! பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக பல கோணங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றது. அந்த வகையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ப…
-
- 0 replies
- 245 views
-
-
சமூக வலைத்தள முடக்கத்தை... நீக்குமாறு, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை! சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து கைப்பேசி சேவை வழங்குநர்களிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று காலை அறிவித்திருந்தா…
-
- 0 replies
- 163 views
-
-
சிலிண்டர்களின் விலை, 21,000 ரூபாவாக.... அதிகரிப்பு ! லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது . தலை நகரிலும் அதை தாண்டி பல மாவட்டங்களின் பல மாதங்கள் கடந்தும் சிலிண்டரின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது . இந்த நிலையில் வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு சிலிண்டர் 16,000 ரூபா வரையிலும், 5 கிலோ சிலிண்டர் 9,900 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1274583
-
- 4 replies
- 398 views
-
-
சமூக ஊடங்களை... முடக்குவதை, ஏற்றுக் கொள்ளமாட்டேன் – நாமல் சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் ‘சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றதோடு (வி.பி.என்) கிடைப்பது தற்போது நான் பயன்படுத்துவதுபோல அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை “அதிகாரிகள் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும், என்பதோடு முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்“ எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274563
-
- 4 replies
- 343 views
-
-
சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் பதவிகளை துறந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானம் (லியோ நிரோஷ தர்ஷன்) அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்புகள் போன்ற நெருக்கடிகளினால் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்புகள் இன்று நாட்டை ஆபத்தான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு பொது நிகழ்வுகளில் பங்குப்பற்றுவது என்பது சவால் மிக்கதாகியுள்ளதுடன் ராஜபக்ஷ குடும்பத்தினரை இலக்கு வைத்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் தீவிரம் கண்டு வருகின்றன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு பாரிய மக்கள் எதிர்ப்பை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என தெரிவித்த ஆளு…
-
- 2 replies
- 328 views
-
-
மட்டக்களப்பு: வாகரையில் அமைக்கப்படும் இரால் பண்ணைகளால் மக்கள் பாதிப்பு April 3, 2022 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் அமைக்கப்படும் இரால் பண்ணைகள் காரணமாக வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரம் உட்பட பலவிதான நன்மைகள் அழிக்கப்படுவதை தடுத்துநிறுத்த வலியுறுத்தி இன்று கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு முன்னேற்றக்கழகம் என்னும் அமைப்பு உட்பட மீனவ,விவசாய அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி, தட்டுமுனை, புளியங்கண்டலடி, கட்டுமுறிவு,பால்சேனை,கதிரவெளி போன்ற பகுதிகளில் இன்றைய கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 227 views
-
-
விமான நிலையங்களுக்கு செல்வோருக்கான... முக்கிய தகவல் வெளியானது! விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் பயண சீட்டு மற்றும் விமான கடவுச்சீட்டு ஆகியவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274514
-
- 2 replies
- 223 views
-
-
கொழும்பு, மஹரகமவில் பதற்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (03) ஒன்று திரண்டிருந்தனர். வௌ்ளைநிற ஆடையை அணிந்திருந்த அவர்கள், ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே அமைதியான முறையில், காரியாலயத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காரியாலயத்தில் இருந்து வெளியேறியவர்கள் சுதந்திர மாவத்தை வரையிலும் பேரணியாக சென்றனர். அங்கு வீதித்தடை போட்டப்படிருந்தது. அதனையும் மீறி செய்வதற்கு முயன்றபோதே, அங்கு பதற்றமான நிலைமையொன்று எற்பட்டுள்ளது. இதேவேளை, மஹரகமவில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பௌத்த தேரர் உள்ளிட்ட ஒரு குழுவினர், பொ…
-
- 0 replies
- 344 views
-
-
ஊரடங்கிற்கு மத்தியிலும்... எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு அண்மையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா, நளின் பண்டார, கபிர் காசிம், ஹக்கீம், முஜீப்பு ரகுமான், ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், மனுச நாணயக்கார, ரஞ்சித் மத்துமபண்டார, வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 159 views
-
-
பதவி விலகினார்... தகவல் தொடர்பாடல், தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர்! தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார். அவர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274556
-
- 0 replies
- 127 views
-