Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: Digital Desk 2 11 Aug, 2025 | 05:46 PM யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், இரண்டாவது 'யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025' ஆனது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை (11) யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது. அப்போது ஏற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்…

  2. அரசுக்குள் குழப்பம் என்று கூறி ஆட்சியைப் பிடிக்க முடியாது - பிரதமர் தெரிவிப்பு! தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரதமரை மாற்ற வேண்டுமா, இல்லையா என்பதை ஜனாதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன அவசரம்? பிரதமர் பதவியை நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. ஜனாதிபதி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் கேள்விக்குட்படுத்தவில்லை. ஜனாதிபதியும், தேசிய மக்கள் ச…

  3. மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது - சச்சிதானந்தம் வலியுறுத்து! தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதியன்று வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும் தமிழ்மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய சச்சிதானந்தம் மேலும் கூறுகையில்:- தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெட…

  4. படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு! யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு மீனவர்கள், படகு பழுதடைந்து நடுக்கடலில் அந்தரித்த நிலையில், தமிழக மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறைப் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு மீனவர்களுமே, நடுக்கடலில் அந்தரித்த நிலையில், தமிழக மீனவர்களால் மீட்கப்பட்டு கடலோரக் காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!

  5. 15 AUG, 2025 | 05:09 PM (நா.தனுஜா) இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாகும். எனவே நாம் உள்ளகப்பொறிமுறையை மேலும் பலப்படுத்தவேண்டுமென காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். சுதந்திர ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் எழுதிய 'செம்மணி' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும், அதனைத்தொடர்ந்து 'இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனிதப்புதைகுழிகள்' எனும் தலைப்பிலான …

  6. 15 AUG, 2025 | 05:56 PM (நா.தனுஜா) தற்போதைய அரசாங்கம் 'வலிந்து காணாமலாக்கப்படல்' என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில் இதனைச் செய்யமுடியும்? என்று தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திர ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் எழுதிய 'செம்மணி' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும், அதனைத்தொடர்ந்து 'இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனிதப்புதைகுழிகள்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் இளம் ஊடகவியலாளர் சங்கத்த…

  7. Published By: PRIYATHARSHAN 15 AUG, 2025 | 01:36 PM இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான ‘இந்திய இல்லம்’ இல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியை ஏற்றி வணக்கத்தை செலுத்தினார். அணிவகுப்பு மரியாதையில் கலந்துகொண்டதுடன் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் உரையின் சில பகுதிகளைவும் வாசித்தார். https://www.virakesari.lk/article/222610

  8. யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்! இந்தியாவிலிருந்து MV Express அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது. இன்று (15) மாலை வரை குறித்த கப்பல், காங்கேசன் துறையில் தரித்து நிற்கும் என துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது. 10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவில் இருந்து சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட நிலையில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர். குறித்த கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகளும், 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக…

  9. 15 Aug, 2025 | 06:03 PM புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆம் திகதி அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா (அகிலன்) அவர்களின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது. இதனால் புங்குடுதீவு - யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு நீதி வேண்டி புங்குடுதீவில் போராட்டம்! | Virakesari.lk

  10. 15 Aug, 2025 | 05:17 PM யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் , இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம்(15) வெள்ளிக்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய தூதுவர் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் போது, யாழ் . மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக குமாரவும் அஞ்சலி செலுத்தினார். விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “பவன்” நடவடிக்கை மற்றும் 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்த…

  11. 14 AUG, 2023 | 01:58 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. செஞ்சோலை வளாகம் செஞ்சோலைய…

  12. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம்: கொழும்பு பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு! பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443192

  13. இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால் இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு! தென்மேற்கு பருவகாற்று காரணமாக, இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் இலங்கையின் கடற்கரைகளில் சேருவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக கல்பிட்டி, நீர்கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவு கடல் பகுதிகளில் இந்த கழிவுகள் பெரும்பாலும் கரைத்தட்டுவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் குறித்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் சுற்றுச்சூழ…

  14. தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு August 15, 2025 இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி அத்தியாவசிய செய்திகளை அறிக்கையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது. முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதா…

  15. கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்துக்கு 2026 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி உறுதி Published By: Vishnu 15 Aug, 2025 | 02:25 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவு திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (13.08.2025) இடம்பெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறி…

  16. மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம் Published By: VISHNU 15 AUG, 2025 | 03:19 AM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை (14) காலை 12 வது நாளாக முன்னெடுக்கப்பட…

  17. முத்தையன்கட்டு சம்பவம் - ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Published By: Rajeeban 15 Aug, 2025 | 10:37 AM முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால் அதற்கான தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்,ஹர்த்தால் என்றாலும் சரி இல்லாவிட்டாலும் எங்களால் வேறு எதனையும் செய்ய முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவ…

  18. மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். 2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண்…

  19. 13 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் தலைவன் கைது சென்னை - மத்திய போதை தடுப்பு பிரிவு பொலிஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி, மதுரைக்கு செல்ல இருந்த ரவிக்குமார், மாலினி தம்பதியினரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பைகளில்33 கோடி ரூபாய் மதிப்புடைய 3.3 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையைச்சேர்ந்த முகமது முனாவர் என்பவர் தான், இந்த போதைப் பொருளை தங்களிடம் கொடுத்து, மதுரையில் உள்ள மற்றொரு, இலங்கை நபரிடம் கொடுக்கப்படி கூறினார். அதற்காக முகமது முனாவர் எங்களுக்கு, ரூ.10,000 கொடுத்தார் என்றும் கூறினர். இதை அடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், …

  20. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு! இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார். இதேவேளை, இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் , அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட…

  21. இலங்கையின் மனித உரிமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நிலைப்பாடு! அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான உலக மனித உரிமை அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்றும், அவற்றால் வருந்தத்தக்க சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளம் காண்பதிலும், அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதிலும் இலங்கை அரசாங்கம் மிகக் குறைவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாது இலங்கையில் நடைபெறும் தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், விளக்கமறியலில் இருக்கும் வேளை இடம்பெறும் மரணங்கள் , ஊடகவியலாளர்கள…

  22. தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.! Vhg ஆகஸ்ட் 14, 2025 மட்டக்களப்பு வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) பங்குபற்றுதலுடன் நேற்று (13.08.205) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கிறது என்றும், அந்த காணியினை விடுவித்து மக்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கோரியி…

  23. 14 AUG, 2025 | 05:15 PM (இராஜதுரை ஹஷான்) மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தல் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்து…

  24. கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்-ஐநா மனித உரிமை ஆணையாளர். இலங்கை அரசாங்கம் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக ஏற்க மறுத்து வந்துள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கெர் டேர்;க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல் புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவித்தல் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சி…

  25. யாழ். நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 07:43 PM யாழ். நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால், ஆலயத்திற்கு தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும், அணிந்துள்ள தங்க நகைகளில் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். அத்துடன், பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸார் ஆலய சூழல்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அருகில் உள்ளவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தால், பொலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.