ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142874 topics in this forum
-
இலங்கையின் பணவீக்கம்... கடந்த மார்ச் மாதம், 18.8 சதவீதமாக அதிகரிப்பு! இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 164.9 ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன், மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 31 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது. https://athavannews.com/2022/1274210
-
- 0 replies
- 256 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்.. விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் நிலைமை மற்றும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. https://athavannews.com/2022/1274216
-
- 0 replies
- 167 views
-
-
பல்வேறு துறைகளுக்கு... மேலும் மூன்று நாடுகள், ஒத்துழைப்பு! வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைகல் நெஸ்பி (Michael Naseby), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்த போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை பாராட்டினார். சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை மின் உற்பத்தியில் இணைப்பதற்கு பி…
-
- 0 replies
- 192 views
-
-
சீமெந்தின் விலை... அதிகரிக்கப் பட்டது! சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1274232
-
- 0 replies
- 268 views
-
-
தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க... பிரித்தானியா உதவ வேண்டும் – சிறீதரன் தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாற்றியிடம்(Henry Donati) கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாற்றிக்கும் (Henry Donati) இடையிலா…
-
- 0 replies
- 171 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மிரிஹானவில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து வருகின்றனர். நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், காஸ், மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. Tamilmirror Online || ஜனாதிபதியின் இல்லத்துக்…
-
- 6 replies
- 537 views
-
-
ஞாயிறன்று நடைபெறும் அரசவிரோதப்போராட்டத்தில் பங்கேற்குமாறு மனோ மலையக மக்களுக்கு அழைப்பு (நா.தனுஜா) அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை நகரில் தமது கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் தலவாக்கலை உட்பட மலையக மக்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்று தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அழைப்புவிடுத்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழ் முற்போக்குக்கூட்டணி என்ற ரீதியில் நாம் எதிர…
-
- 0 replies
- 204 views
-
-
பல இடங்களில் காலையில் பதற்றம் நாட்டின் பல இடங்களிலும் பல்வேறானா போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. 1) பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தச்சர்கள் ஆர்ப்பாட்டம். செய்கின்றனர். மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மொரட்டுவ குருசா சந்தியிலிருந்து காலி வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 2) புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 3) குடும்பநல சுகாதார ஊழியர்கள், மருதானை டீன்ஸ் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…
-
- 0 replies
- 233 views
-
-
இலங்கையுடன்... எதிர்வரும் சில நாட்களில், சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை! இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த மாதத்தின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதன்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1274230
-
- 0 replies
- 212 views
-
-
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 6 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இணக்கம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 6 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை இன்று வியாழக்கிழமை வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதாகவும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதாக மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி தெரிவித்துள்ளார்.(…
-
- 0 replies
- 196 views
-
-
முல்லைத்தீவு, புதுமாத்தளனைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் திகதி அம்பலவன்பொக்கணைக்கு மாலை நேர வகுப்புக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 மற்றும் 15 வயதுச் சிறுமிகள் இருவர் வீடு திரும்பவில்லை. மாலை நேர வகுப்புக்கும் அவர்கள் செல்லவில்லை. பெற்றோர் இது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இரு நாள்கள் கழித்து இரு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சிறுமிகளில் ஒருவருடன் பேஸ்புக் ஊடாகப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரைச் சந்திப்பதற்காக சிறும…
-
- 1 reply
- 262 views
-
-
தீவிரமடைந்தது போராட்டம்! கண்ணீர் புகைக்கும் கலையாத கூட்டம்!
-
- 3 replies
- 360 views
-
-
கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து... மீள்வதற்கு, இலங்கை... அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் – எஸ்.ஜெய்சங்கர்! இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வர, உரிய காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது காணப்படும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்த கதியிலேயே செயற்படுவதாகவும் அவ…
-
- 4 replies
- 448 views
-
-
ஜனாதிபதி கோட்டாவின்... பேஸ்புக் பதிவுகளுக்கு, கருத்து தெரிவிக்க தடை! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (புதன்கிழமை) மாலை முதலே தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளில் அதிகளவானவர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274067
-
- 15 replies
- 596 views
-
-
(நா.தனுஜா) வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்திற்கு முரணான வகையில் உயர்வான நாணயமாற்று வீதத்தை அடிப்படையாகக்கொண்டு கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டமையின் காரணமாக வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் நாணயமாற்று நிறுவனமொன்றின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச்செய்வதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வரையறுக்கப்பட்ட இந்த நாணயமாற்று நிறுவனமானது உயர்வான நாணயமாற்றுவீதத்தைப் பேணுவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, இதுகுறித்து மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயமாற்றுப்பிரிவு நேற்று முன்தினம் புதன்கிழமை விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இவ்விசாரண…
-
- 1 reply
- 343 views
-
-
புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும். இவ்வாறு நேற்றுத் தமிழன் பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டமை பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர்…
-
- 32 replies
- 2k views
- 1 follower
-
-
மீரிஹானையில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்கள் களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதியை பதவி துறக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. களனி தலுகம பகுதியில் கண்டி வீதியின் குறுக்கே பலகைகளையும் ரயர்களையும் இட்டு கொழுத்தி மக்கள் வீதியின் இரு மருங்கிலும் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் கொழும்பு - கண்டி வீதியூடான போக்குவரத்து களனி தலுகம பகுதியில் தடைப்பட்டுள்ளது. Tamilmirror Online || மீரிஹானையைத் தொடர்ந்து களன…
-
- 0 replies
- 313 views
-
-
ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Tamilmirror Online || உடன் அமலாகும் வகையில்கொழும்புக்கு ஊரடங்குச் சட்டம்
-
- 0 replies
- 253 views
-
-
ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு? இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்துள்ளார். மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274148
-
- 1 reply
- 224 views
-
-
கட்டணம் செலுத்தப்படாததால்... இலங்கை கடற்பரப்பிற்குள், நுழைய மறுக்கும்... டீசல் கப்பல்? இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டணம் செலுத்தப்படாததால் அவர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலில் எவ்வளவு டீசல் உள்ளது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், கட்டணம் செலுத்தப்படும் வரை கப்டன் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்திருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளனர். கப்பலிற்கு கட்டணத்தை செலுத்துவோம் என ஜனாதிபதி உறுதியளித்…
-
- 2 replies
- 312 views
-
-
வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு நாணயமான குவைத் தினார் ஒன்றின் பெறுமதி 1000 ரூபாவை கடந்துள்ளது. இதன்படி, தனியார் வங்கிகளில் குவைத் தினார் ஒன்று 1001.70. ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை ஏனைய மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. பஹ்ரைன் தினார் ஒன்றின் பெறுமதி 797.33 ரூபாவாகவும் ஓமான் ரியால் ஒன்றின் பெறுமதி 785.59 ரூபாவாகவும் கட்டார் ரியால் ஒன்றின் பெறுமதி 83.98 ரூபாவாகவும் சவூதி அரேபிய ரியால் ஒன்றின் பெறுமதி 84.24 ரூபாவாகவும் ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் ஒன்றின் பெறுமதி 84.87 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. முதன்முறையாக வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி ஆயிரத்தை கடந்தது | Virakesari.lk
-
- 0 replies
- 204 views
-
-
தமிழ் அரசியல்வாதிகள்... மக்களை காப்பாற்றுவதற்காக, செயற்படவில்லை – எஸ்.ஸ்ரீசற்குணராஜா தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சிந்திக்கிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் காணப்படுகின்றார்கள் ஆனால் எமது அரசியல் வாதிகளிடம் அவர்களுக்கு உதவுவதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை நிகழ்ச்…
-
- 1 reply
- 250 views
-
-
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம் நாட்டுக்கு தேவையான அளவு நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார். இதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னரே மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும். ஏப்ரல் மாதம் வரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு நாணய கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவ…
-
- 0 replies
- 236 views
-
-
யாழ். கொரோனா சிகிச்சை நிலைய... மோசடி குறித்து, விசாரணை செய்யுமாறு பிரதமர் பணிப்பு! யாழ். கொரோனா சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களை இன்று (வியாழக்கிழமை) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியது. வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் …
-
- 0 replies
- 236 views
-
-
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... மீண்டும் 5,000 ரூபாய்! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273764
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-