ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் குறியீடாக இந்திய கடற்படை கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளது - இந்திய உயர்ஸ்தானிகராலயம் (செய்திப்பிரிவு) இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைவாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் மிகவும் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றின் குறியீடாக இந்திய கடற்படை கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நட்புறவு பாலங்களை கட்டியெழுப்பும் இந்திய கடற்படையின் பெரு முயற்சியின் தொடர்ச்சியாக கடந்த 10 - 19 ஆம் திகதி வரையில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 5 பாய்மரக்கப்பல்கள் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தன. சுதேசிய முறையிலான இப்பாய்மரக்கப்பல்களில…
-
- 2 replies
- 287 views
-
-
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்... வரிசையில் காத்திருந்த, மற்றுமொருவர் உயிரிழப்பு ! கடவத்தையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது பதிவாகிய இரண்டாவது மரணம் இதுவாகும். கண்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் சுமார் 5 மணித்தியாலங்கள் வரிசையில் நின்றிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1272595
-
- 1 reply
- 412 views
-
-
ஒரு இலட்சம் என்ற அறிவிப்பு... உறவுகளின் உணர்வுகளை, கொச்சப்படுத்தும் நோக்கிற்கானது அல்ல – அலி சப்ரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக மனிதாபிமான அடிப்படையிலான நிவாரணமே ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதென்ற அறிவிப்பு என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். அதனை உயிர்களின் விலையாகவோ, போராட்டத்தனை மலினப்படுத்தும் செயற்பாடாகவோ உறவுகளின் உணர்வுகளை கொச்சப்படுத்தும் நோக்கமாகவோ கொண்டுவரப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார். காணாமலாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் ஒரு இலட்சம் ரூபாயை வழங்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது, இந்நிலையில், குறித்த அமைச்சரவை …
-
- 1 reply
- 232 views
-
-
முகநுால் காதலால் விபரீதம்- இரு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் March 19, 2022 முகநுால் காதலால் ஏற்பட்ட விபரீதத்தில் காணாமல் போயிருந்த முல்லைத்தீவு சிறுமிகள் இருவரும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிகள் இருவரும் கடந்த 16ம் திகதி அன்று மாலைநேர வகுப்பிற்கு என புறப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர்கள் அவர்களை தேடிய நிலையில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். குடும்பத்தினர் மற்றும் கிரமத்தவர்கள், காவல்துறையினர் இணைந்து தேடிய நிலையில் நேற்று(18) மாலை புதுக்குடியிருப…
-
- 4 replies
- 884 views
-
-
சர்வகட்சி மாநாட்டில்... பிரதான எதிர்க்கட்சிகள், பங்கேற்காது என அறிவித்துள்ளன ! மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கப்போவதில்லை என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் சர்வகட்சி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆளும்கட்சியின் பங்காளி கட்சிகளான பிவிதுறு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என அறிவித்துள்ளன. அரசாங்கத்தின் பங்காளி காட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.…
-
- 2 replies
- 280 views
-
-
சீனாவிடம் இருந்து... "1.5 பில்லியன் டொலர் நிதி" உதவியை, கோரியது அரசாங்கம் ! சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை 2.8 பில்லியன் டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்குவதற்கும் கடன் கோரப்பட்டதாக கடந்த வாரம் ஆதவன் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த ஆண்டு சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான கடனை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1272692…
-
- 0 replies
- 152 views
-
-
எரிபொருள், எரிவாயுக்காக... இன்றும் வரிசையில் காத்திருக்கும் மக்கள் !! எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால், அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் காத்திருப்பதை இன்றும் அவதானிக்க முடிந்தது. அதேநேரம், பீப்பாய்கள் மற்றும் கான்களில் எரிபொருள் வழங்குவதை கட்டுப்படுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற இருப்புக்களை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் இன்றும் பல இடங்களில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது. நேற்றையதினம் உத்தியோகபூர்வ அ…
-
- 0 replies
- 323 views
-
-
தற்போதய பிரச்சினைகளை, அரசியல் மயமாக்கக் கூடாது – ஐ.தே.க. நாட்டின் தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கும் செயற்பாடுகளை நிராகரிப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விரிவான வேலைத் திட்டத்தின் மூலமே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் செயற்படும் பட்சத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையும் என அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் அரசியலில் ஈடுபடும் தரப்பினர் மக்களின் சுமையை குறை…
-
- 0 replies
- 139 views
-
-
போத்தலில் அடைக்கப்பட்ட... குடிநீரின் விலையும், அதிகரிப்பு – விலை விபரம் இதோ! போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒன்று அரை லீட்டர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 120 ரூபாயாகவும் 5 லீட்டர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் வெற்று போத்தல்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1272682
-
- 0 replies
- 120 views
-
-
35,000 மெட்ரிக் தொன் டீசலுடன், கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது ! 35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 500 மில்லியன் டொலர் இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த டீசல் கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இறக்கும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது. https://athavannews.com/2022/1272687 ############# ############## ################# ஏலே... சண்முகம், வுட்றா வண்டிய... கொழும்பு துறைமுகத்துக்கு. 🤣
-
- 0 replies
- 188 views
-
-
எரிபொருள் நிரப்பு நிலையத்தில்... வாய்த்தர்க்கம், கத்திக்குத்தாக மாறியது – 29 வயதுடைய நபர் உயிரிழப்பு! நிட்டம்புவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து 29 வயதுடைய ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் எடுக்க வந்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வெளியே எரிபொருள் நிரப்பிவிட்டு காத்துக்கொண்டிருந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி, கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த நப…
-
- 0 replies
- 127 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் கடுமையாக உயர்த்த லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை லாஃப் நிறுவனம் 4,199 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,680 ரூபாவாக நிர்ணயித்துள்ளதுடன், 2 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சமையல் எரிவாயுவிற…
-
- 1 reply
- 553 views
-
-
(ஆர்.ராம்) சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்று ஒட்டுமொத்தமான மக்களின் வெறுப்பினைச் சந்தித்து வீழ்ச்சி கண்டுள்ள ராஜபக்ஷக்களுக்கு உயிர்கொடுக்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பினை கையிலெடுத்து இரண்டு ஆண்டுகளாகின்றபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்கே தயக்கம் காண்பிக்கின்றார்கள். அதுமட்டுமன்றி நாட்டில் இனப்பிரச்சினையே இல்லையென்று கூறியும் வருகின்றார். இதனைவிடவும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் …
-
- 2 replies
- 420 views
-
-
மருந்துப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார். கண் சத்திர சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார். ’மருந்துப் பொருள்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சில மருந்துப் பொருள்கள் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. மருந்துப் பொருள்கள் இல்லாமையால் கண் சத்திர சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் மருந்துப் பொருள்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது’ என்றார் மருத்துவர் நந்தகுமார். மருந்துப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 270 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான உயர் மட்ட இராஜதந்திர அதிகாரிகள் மூவர் திங்கட்கிழமை (21) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட், பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச் செயலர் அமண்டா ஜே. டோரி மற்றும் தெற்கு , மத்திய ஆசிய விவகாரங்கான உதவிச் செயலர் டொனால்ட் லூ ஆகியோரே இவ்வாறு விஜயம் செய்யவுள்ளனர். அரசியல் விவகாரங்களுக்கான செயலர் விக்டோரியா நுலண்ட் தலைமையிலான உயர் மட்ட குழு பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை சனிக்கிழமை ஆரம்பித்துள்ளது. இந்தோ - பசிபிக் பங்காளிகளுக்கான அ…
-
- 0 replies
- 287 views
-
-
Published on 2022-03-20 13:56:28 பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். யாழ்ப்பாணத்திற்க்கு இரண்டு நாள் விஜயமாக நேற்றைய தினம் வருகைதந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வுக்கு பிரதமர் வருவதனை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயன்றனர். நிகழ்வு நடைபெறும் இடத்தில் போராட்டத்தினை முன்னெடுக்க முல்லைத்தீவில் …
-
- 0 replies
- 275 views
-
-
Published on 2022-03-20 20:00:02 நேர்காணல் ரொபட் அன்டனி உலகில் எங்குமே மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் சில விடயங்களில் முரண்பாடுகள் இருக்கும். கப்பல் மூழ்கி விடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி அதிகரிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் பொருத்தமற்ற நிபந்தனைகளை அரசு நிராகரிக்கும் நான் ஜோதிடம் கூறமுடியாது. ரூபாவின் பெறுமதியை மிதப்பதற்கு இடமளித்து இருக்கின்றோம். எனவே டொலர் வருகை அதிகரிக்கும் என நம்புகிறோம். அத்துடன் டொலர் வருகைக்கு மேலும் பல ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதனூடாக மக்கள்…
-
- 0 replies
- 235 views
-
-
அரசியற் தீர்வு குறித்து பேசவா ஜனாதிபதி அழைக்கின்றார்? – செல்வம் எம்.பி.கேள்வி ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார். …
-
- 0 replies
- 242 views
-
-
எரிபொருள் வரிசைகளுக்கு இவ்வாரம் முடிவு எரிபொருள் வரிசைகள் இவ்வாரம் முடிவுக்கு வருமென தெரிவிக்கும் அமைச்சர் காமினி லொக்குகே, அதிகளவில் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்வதே எரிபொருள் தட்டுப்பாட்டுக்குக் காரணமெனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் பவுசர்கள் ஊடாக நேற்றும் (19), இன்றும் (20) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் வரிசைகள் குறையும் எனவும் அவர் தெரிவித்தார். நாட்டில் எரிபொருள் வரிசைகளுக்குக் காரணம் எரிபொருள் விநியோகத்தை விட எரிபொருளை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே. எரிபொருளை வாகனங்களுக்கு நிரப்பிக்கொள்வதைவிட பெரள்களிலேயே அதிக…
-
- 0 replies
- 244 views
-
-
இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம் இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம். அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் அற்ற செயற்பாடுகளால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பால்நிலை சமத்துவத்தை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின விழா இன்று (20) காலை பதுளை தபாற் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.வ…
-
- 0 replies
- 300 views
-
-
தேசப்பற்று குறித்த பொய்யான போலியான கதைகள் மூலம் அரசாங்கம் நாட்டை அழிக்கின்றது தேசப்பற்று குறித்த பொய்யான போலியான கதைகள் மூலம் அரசாங்கம் நாட்டை அழிக்கின்றது என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்திடம் அரசாங்கம் உதவியை பெற்றால் தான் பதவி விலகுவேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்,அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியுள்ளது வாசுதேவ நாணயக்கார இன்னமும் பதவி வகிக்கின்றார் என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தற்போதைய நெருக்கடிகளிற்கு நல்லாட்சி அரசாங்கத்தை குறைகூறு முயல்கின்றார் ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் உணவும் ஏனைய பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டன என அவர் குறிப்பி;ட்டுள்ளார். …
-
- 0 replies
- 171 views
-
-
இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக்கப்பல்கள் இலங்கை வருகை நட்புறவு பாலங்களை கட்டியெழுப்பும் இந்திய கடற்படையின் பெரு முயற்சியின் தொடர்ச்சியாக 2022 மார்ச் 10ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 5 பாய்மரக்கப்பல்கள் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தன. சுதேசிய முறையிலான இப்பாய்மரக்கப்பல்களில் மாதே, தரிணி, புள்புல், கடல்புறா மற்றும் ஹரியால் உள்ளிட்டவை அடங்குகின்றன. இலங்கை கடற்படைக்கு சமுத்திரத்தில் பாய்மரக்கப்பலோட்டும் பயிற்சிகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் நோக்குடன் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது. 2022 மார்ச் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் இக்கப்பல்கள் திருகோணமலையில்…
-
- 0 replies
- 200 views
-
-
யுத்தம் காரணமாக... மூடப்பட்ட, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு... சென்றார் பிரதமர் மஹிந்த! யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. 2021 பெப்ரவரி 08 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் படி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் எஞ்சிய கட்டிடங்களை எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. எனினும் 80 வீதமான கட்டிடங்களை புனரமைத்து பயன்படுத்த முடியும் என பிரதமரின் விஜயத்தின் போது தெரியவந்துள்ளது. அதன்படி காங்கேசன்…
-
- 0 replies
- 142 views
-
-
சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள... கூட்டமைப்பு தீர்மானம், பிரதான எதிர்கட்சிக்கு அழைப்பு கிடைக்கவில்லையாம் ! எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தீர்மானத்தை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், புதன்கிழமை நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியும் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார். இதேவேளை, இந்த மா…
-
- 0 replies
- 235 views
-
-
உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி... உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ ! 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை 4,199 ரூபாயாக அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோவின் விலை 1,856 ரூபாயில் இருந்து 2,840 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 1,359 ரூபாய் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 5 கிலோ சிலிண்டரின் விலையை 544 ரூபாயால் அதிகரித்து புதிய விலை 1680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 2 கிலோ சிலிண்டர் 672 ரூபாயாகவும் விற்பனை செய்ய லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் லிட்ரோ எரி…
-
- 1 reply
- 238 views
-