Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கே .குமணன் எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? எங்களின் உறவுகளின் பெறுமதியினை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள் எனவே இலங்கை அரசிற்கு ஒரு இலட்சம் இல்லை அதேபோன்று பத்து மடங்கு பணத்தினை நாங்கள் தருகின்றோம். உங்களிடம் கையளித்த உறவுகளை மீட்டுத்தாருங்கள் என முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இன்று (16) முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் மேற்கொண்ட ஊடக சந்திப்பின் ஊடாக இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். காணாமல் போனோரின் குடும்பங்களைப் மீள்வாழ்வளிப்பதற்க…

    • 2 replies
    • 340 views
  2. (எம்.மனோசித்ரா) இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. வியாபார மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்தினால் இவ் விசேட வரி விதிக்கப்பட்டுள்ளது. யோகர்ட், வெண்ணெய், ஏனைய பால் உற்பத்தி பொருட்கள், தோடம்பழம், அப்பிள், திராட்சைப்பழம் ஏனைய பொருட்கள் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு இவ்வாறு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய யோகர்ட் , வெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு கிலோவொன்றுக்கு 1,000 ரூபாவும் , தூளாக்கப்பட்ட சீஸ் வகைகளுக்கு கிலோவொன்றுக்கு 400 ரூபாவும் , பேரீச்சம் பழம் மற்றும் தோடம்பழத்திற்கு ஒரு கிலோவிற்கு 400 ரூபாவும் , திராட்சை பழத்திற்கும் , அப்பிள் உள்ளிட்ட ஏனைய பழத்திற்கும் கிலோ ஒன்றுக்கு 300 ரூபாவும் விசேட பண்ட வரி விதிக்கப்ப…

    • 1 reply
    • 225 views
  3. தக்க தருணத்தில் உதவிகளை மேற்கொள்வதே நட்புக்கு அழகு – இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.அந்த உதவியையே தக்க தருனத்தில் இந்திய அரசு மன்னார் மீனவர்களுக்கு தற்போது மேற்கொண்டுள்ளது என இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் தெரிவித்தார். இந்திய அரசின் உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு பொதிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இலங்கைக்கான இந…

    • 5 replies
    • 455 views
  4. எரிபொருளைப் பெற காத்திருந்தவர்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் மோதலாக மாறிய சம்பவம் கெஸ்பாவே பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த மக்களிடம் யார் பல மணிநேரமாக வரிசையில் காத்திருக்கின்றீர்கள் என கேள்யேழுப்பியுள்ளார். இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமைபுரியும் ஊழியர் ஒருவர் இதன்போது தலையிட்டதால், அந்த நபருக்கும் பல மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் குழப்பமடைந்த மக்கள் சிலர் ஊழியர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மோதலை கட்டுப்படுத்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். இதேவே…

  5. (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமையவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அவ்வாறு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினை நாடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மத்திய வங்கி ஆளுனரை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு …

  6. அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதியுடன் மட்டுமல்ல சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் - சம்பந்தன் (ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அரை நூற்றாண்டுகாலமாக அக்கறை செலுத்தி வருகின்றோம். தீர்வுக்கான நகர்வுகளில் சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற கட்சி என்ற ரீதியில் முழு ஆயத்தத்துடனேயே எமது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதியுடன் மட்டுமல்ல சகல தரப்புடனும் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ள பேச்சுவார்த…

    • 4 replies
    • 340 views
  7. சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமிக்க பிக்குகள் முயற்சி! March 16, 2022 சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்ற நிலையில், இதைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், மக்களும் முன் வரவேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர். வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயமான பறாளாய் விநாயகர் ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு. குறித்த ஆலய வளாகத்தில் பல ஆண்டுகள் பழமையான அரச மரம் காணப்படுகின்றது. https://globaltamilnews.net/2022/174206

  8. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு... மரணச் சான்றிதழுடன் 100,000 ரூபாய் இழப்பீடு: ராஜபக்ஷ அரசாங்கம் அறிவிப்பு! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே அவர்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக போராடி வருகின்றனர். https://athavannews.com/2022/1271959

    • 14 replies
    • 672 views
  9. எரிபொருள் கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம்! நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.d.R.ஒல்கா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். எரிபொருளுக்கான 42 மில்லியன் டொலர் பணம் இதுவரை திரட்டப்படவில்லை எனவும் நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) அந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலா 22 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும் விமான எரிபொருளை ஏற்றிய கப்பல் நாட்டை நெருங்கி 05 நாட்களாகின்றன. எனினும், கொடுப்பனவைச் செலுத்த முடியாமையினால் எரிபொருளை கப்பலிலிருந்து இறக்குவதற்கு முடியாமற்போயுள்ளது. இதனிடையே, நாட்டின் தற்போதை…

  10. மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகின்றது! மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டதுடன், கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார். https://athavannews.com/2022/1272221

  11. இலங்கை பொருளாதார நெருக்கடி: உச்சத்துக்கு சென்ற அத்தியாவசிய பொருட்களின் விலை - மக்கள் பரிதவிப்பு 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது. அத்தியாவசிய…

  12. ”இலங்கை தொடர்பில் பிரிட்டனின் பயண ஆலோசனை தவறானது”: பீரிஸ்! இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விடுத்து பிரிட்டன் விடுத்துள்ள அறிவிப்பில் தவறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகளாவிய கொவிட் தொற்றுநோயின் விளைவாக நாட்டின் சுற்றுலாத் துறை புத்துயிர் பெறத் தொடங்கியுள்ள மற்றும் அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வெளிநாட்டுப் பணம் தேவைப்படும் வேளையில், பயண ஆலோசனையில் தவறான தன்மைகள் நிலவும் பொருளாதார பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இலங்கையிலுள்ள நடைமுறை யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை தொடர்பான பயண ஆல…

  13. பசில், ஜெயசங்கரையும் சந்தித்தார்! March 17, 2022 உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெயசங்கருடன் நேற்று (16.03.22) பிற்பகல் கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவம் தொடர்பில் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டு மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார செ…

  14. ஜனாதிபதி செயலகத்தை.. முற்றுகையிட்ட, போராட்டம். ############## ################# ################## ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் ! ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்தே போராட்டம் இடம்பெறுகின்றது. இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், “முழு நாடும் அழிவில், பொறுத்தது போதும், ஒன்றாய் அணித்திரளுங்கள்” என்ற தொனிப்பொருளின் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. https://athava…

    • 10 replies
    • 845 views
  15. பெரும் அச்சுறுத்தலில் மன்னார் மாவட்டம் - ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ கவலை மன்னாரில் தற்பொழுது பேசும்பொருளாக இருந்துவரும் சட்டவிரோத மண் அகழ்வு, காற்றாலை போதைவஸ்துப் பாவனையுடன் மன்னார் தீவுக்கு எதிர்காலத்தில் பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதால் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டிய கட்டாயம் உள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது திருமடல் ஊடாக அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களுக்கு தவக்காலத்தில் வருடந்தோறும் எழுதும் திருமடலில் மேலும் தெரிவித்திருப்பதாவது, மன்னார் மாவட்டத்தில் இன்று பேசுபொருளாக சட்டவிரோத மண் அக…

    • 1 reply
    • 277 views
  16. (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தைப் போன்று இலங்கையை மீண்டும் சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்க நாம் தயாராக இல்லை என்று வெளிநாட்டலுவலகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் 85 சதவீதமானவை இலங்கையின் உள்ளக விவகாரங்களுடன் தொடர்புடையவையாகும். இலங்கை ஐ.நா.வின் அங்கத்துவ நாடாகவுள்ளது என்பதற்காக உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை அதற்கு கிடையாது என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சு…

    • 2 replies
    • 513 views
  17. ல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதன் வெகுவான வீழ்ச்சி இன்று பதிவானது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த வெளிநாட்டு நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில், இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 264.66 ரூபாவாகவும் விற்பனை விலை 274.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி நேற்று 269.99 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது 25 வருடங்களில், இலங்கை ரூபா கண்டுள…

  18. Published by T. Saranya on 2022-03-16 12:18:30 யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 13 வயதான குறித்த சிறுவனுக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் ஓரின பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை புரிந்து வந்த நிலையில் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, நேற்…

    • 3 replies
    • 486 views
  19. நேற்று மட்டும்... 83.04 பில்லியன் ரூபாயை, அச்சிட்டது மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை 22.27 பில்லியன் ரூபாயை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மொத்தம் 229 பில்லியன்களை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. https://athavannews.com/2022/1272075

    • 7 replies
    • 522 views
  20. (எம்.ஆர்.எம்.வசீம்) சமையல் எரிவாயு இல்லாமை காரணமாக சிற்றுண்டிச்சாலைகளில் உணவு வசதிகளை நாளை முதல் முற்றாக நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டுவரும் பிரதான இரண்டு நிறுவனங்களும் தங்களின் கைவசம் இருந்த தொகை முடிவுற்றுள்ளதால் சமையல் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்திருக்கின்றன. இதன் காரணமாக பாரியதொரு நெருக்கடிக்கு சிற்றுண்டிச்சாலைகள் முகம்கொடுக்கவேண்டி ஏற்படுகின்றது. குறிப்பாக சிற்றுச்சாலைகளை மூடிவிடவேண்டிய நிலை ஏற்பட்டால் சுமார் 5 இலட்சம் பேரின் தொழில் இல…

  21. ஜனாதிபதி கோட்டாவின் உரைக்காக மின்வெட்டு நேரத்தில் மாற்றம் ! இன்றைய தினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரம் தடைப்படும். அத்தோடு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள், 2 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை 5.30 முதல் இரவு 11 மணி …

  22. யாழ். நெடுந்தீவில் சிறுமியைக் கொலைசெய்த குற்றவாளியே ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண்ணையும் கொலை செய்துள்ளார் - விசாரணையில் அம்பலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24 ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பட்டப்பகலில் வீடு புகுந்து ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பி…

  23. செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வு சவாலாக இருக்கும் – ஜயநாத் கொலம்பகே மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர் கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மால் உண்மைகளை முன்வைக்கவும் அது குறித்து விளக்கவுமளிக்கவும் முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார். யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறுவதற்கு பதிலாக உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்தே ஆணையாளரின் அறிக்கை கவனம் செலுத்தியது என சுட்டிக்காட்டினார். அத்தோடு ஊடாடும் உரையாடலின் போது 31 நாடுகள் இலங்கை தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத…

    • 1 reply
    • 191 views
  24. சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தம் – மக்களுக்கு மேலும் அடி ….! சமையல் எரிவாயு விநியோகத்தை இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்களான லாப் மற்றும் லிட்ரோ ஆகியன நிறுத்தியுள்ளன. தமக்கான இருப்புக்கள் கிடைகாத்தமை காரணமாக விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக குறித்த இரு நிறுவங்களும் அறிவித்துள்ளன. தற்போது இலங்கை சந்தையில் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதேவேளை நாடளாவிய ரீதியில் குறித்த நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1272055

    • 2 replies
    • 228 views
  25. இலங்கையின் ஒரே நம்பிக்கையாகியுள்ள இந்தியா இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக இந்த ஒத்துழைப்புகளானது அரசாங்கத்தின் பேரில் வழங்கப்படுவதுடன் மேலும் பல திட்டங்கள் நேரடியாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. மறுப்புறம் சர்வதேச அரங்கிலும் பல்வேறு ஒத்துழைப்புகளை இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது. தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கையாக இந்தியா உள்ளதாக குறிப்பிடலாம். ஊதாரணமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 500 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளது. எக்ஸிம் வங்கி ஊடான இந்த கடன் தொகையிலிருந்து கொள்வனவு செய…

    • 1 reply
    • 196 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.