ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142885 topics in this forum
-
ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் யாழில் ஆரம்பித்து வைப்பு! ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.யாழ் இந்தியத் துணைக் தூதரகத்தின் ஏற்பாட்டில் வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி நிறுவனமும், யாழ் மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகமும் இணைந்து நடாத்தும் “ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்” யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்தி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முகாமில் கலந்துகொள்ளும் பயனாளிகள் தமது பதிவுகளை பிரதேச செயலகங்கள…
-
- 0 replies
- 211 views
-
-
அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாடு நெருக்கடியான நிலையில் உள்ள நேரத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது ஏற்புடையதல்ல என்றும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அக்கட்சி கருதுவதாக அறியமுடிகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிலுள்ள 14 பேரில், பெரும்பான்மையானவர்கள் கருத்தையே கொண்டுள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும், ஓரிரு உறுப்பினர்கள் மட்டுமே அரசாங்கத்தில் இருந்து வெளிய…
-
- 0 replies
- 165 views
-
-
கோட்டாவுடன் பேசப்போகும் விடயங்கள் என்ன ? செவ்வாய் கூடுகின்றது கூட்டமைப்பு – மாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்போகும் விடயங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதின் நல்லெண்ண சமிக்ஞைகளின் பின்னரே சந்திப்பினை மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம், கடிதம் மூலம் சம்பந்தனுக்கு அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த விடயம் குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தொலைபேசிய…
-
- 4 replies
- 290 views
-
-
அதானி குழுமத்தின்... வசமாகியது, மன்னார் மற்றும் பூநகரி : வெள்ளியன்று கைச்சாத்தானது முக்கிய ஒப்பந்தம் இரு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்காக வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியை அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 500 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள குறித்த இரு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதாக அறிய முடிகின்றது. இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை, சம்பூரில் சூரிய மின்சக்தி பூங்காவை அமைப்பதற்கான புரிந்துரணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் அதானிய…
-
- 1 reply
- 329 views
-
-
தமிழ் மக்களின்... அபிலாஷைகளை, வென்றெடுக்கும் முகமாகவே... பேச்சுவார்த்தை இடம்பெறும் சுயலாப அரசியலாலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் முகமாகவே பேச்சுவார்த்தை இடம்பெறும் என கூறினார். மேலும் பேச்சுவார்த்தை என்ற கதவுகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த வாய்ப்பை கைநழுவ விட்டுவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு இந்த பேச்சுவார்த்தையின்போது, புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை அழுத்தமாக வலியுறுத்தவுள்ளதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 174 views
-
-
தமிழ் மக்களது இருப்பிற்கு... இந்தியா, குந்தகம் விளைவிக்க கூடாது – தமிழ் தேசிய மக்கள் முன்னணி! அபிவிருத்தி என்னும் போர்வையில் திருகோணமலை மாவட்டத்தில் கால் பதிக்கும் இந்தியா, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு எதிராக தன்னுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பை பயன்படுத்தக்கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .. மேலும் அவர் தெரிவிக்கையில் திருகோணமலையின் எண்ணெய் குதங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் கையகப் படுத்தியுள்ள இந்தியா, தற்போது சம்பூர் ப…
-
- 0 replies
- 134 views
-
-
யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஏற்க முடியாது – ஈ.பி.டி.பி யாழ்.மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஏற்க முடியாது என்றும் எதிர்வரும் திங்கட்கிழமை செயலகத்தை முற்றுகையிட தீர்மானித்துள்ளதாகவும் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் அறிவித்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளையும் அவர்களது விருப்புகளுக்கேற்ப அவசியமான மற்றும் முன்னுரிமையான திட்டங்களை மக்களிடமிருந்து நேரடியாக பெற்று அவற்றை செய்து கொடுப்பதே மக்களின் தற்போதைய தேவையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஆனால் யாழ் மாவட்ட அபிவிருத்திகளை பிரதேச ரீதியாக முன்னெடுக்கும்போது அரசின் சுற்று நிருபங்களை கணக்கில் கொள்ளாது தன்னிச்சையாக செயற்படுவதால் மக…
-
- 0 replies
- 143 views
-
-
ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனை தமிழகத் தலைவர்கள் சந்திக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தின் போது சுமந்திரனுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றும் துரோகி சுமந்திரனே தமிழகத்தை விட்டு வெளியேறு, ஐ.நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கைக்கு மூன்று தடவைகள் கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்த சிங்களத்தின் கைக்கூலி சுமந்திரனுக்கு தமிழகத்தில் என்ன வேலை?, விடுதலைப் புலிகள் மீதும் விசாரணை வேண்டும் என்று சிங்களத்துக்கு ஆதரவாக கூச்சலிடும் துரோகி சுமந்திரனை தமிழகத்தில் அனுமதிக்கலாமா? என இதன்போது கேள்வியெழுப்பியுள்ளனர். அத்துடன்,…
-
- 32 replies
- 2.5k views
-
-
இலங்கையில் பெட்ரோல், கோதுமை, உணவுப்பொருள் விலை அசாதாரண உயர்வு - என்ன நடக்கிறது? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 12 மார்ச் 2022, 05:59 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த தருணத்தில், பொருட்களின் விலைகள் கடந்த இரு தினங்களுக்குள் வரலாற்றில் முதல் தடவையாக கட்டுப்பாட்டை இழந்து அதிகரித்துள்ளன. நாணய மாற்று வீதத்தை நெகிழ்வு போக்குடன் தீர்மானிக்க இலங்கை மத்திய வங்கி கடந்த 7ம் தேதி அனுமதி வழங்கியதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்த…
-
- 3 replies
- 419 views
- 1 follower
-
-
‘தமிழர்களுக்கு... அரசியல் தீர்வு தேவையில்லை என கூறும் ஜனாதிபதி, கூட்டமைப்புடன் எதற்கு பேச்சு நடத்த வேண்டும்?’ தமிழினத்திற்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது, அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். இதற்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் அவரே அதனை இரத்து செய்து வேறு திகதியை வழங்குவதாக உறுதியளித்த போதும் எந்த அழைப்பும் ஜனாதிபதி அலுவ…
-
- 2 replies
- 404 views
-
-
கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கக்கூடியவாறான சட்டத்தை அறிமுகப்படுத்துங்கள் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் (நா.தனுஜா) பாலியல் வன்புணர்வின் விளைவாகக் கருத்தரிக்கும் சந்தர்ப்பங்களுக்கென கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குதல் குறித்துப் பரிசீலிப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை முக்கியமானதொரு முன்னேற்றமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், பாலியல் வன்புணர்விற்கு உள்ளானவர்களுக்கு மாத்திரமன்றி அனைவருக்கும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கக்கூடியவாறான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது. கூட்டு வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு சில நிபந்தனைகளின்கீழ் கருக்கலைப்புச் செய்வதற்கான சட்டத்தைக்கொண்டுவருவதற்கான முன்மொழிவ…
-
- 0 replies
- 243 views
-
-
வடக்கு, கிழக்கில் 30 வருடங்களாக உள்ள காணிப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - காணி அமைச்சர் உறுதி (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு கிழக்கில் 30வருடமாக இருந்துவந்த யுத்தம் காரணமாக அங்குள்ள அதிகமான காணிகளுக்கு உரிமை இல்லை. அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்போம் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) காணி அபிவிருத்திச் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கில் இடம்பெற்ற 30வருடகால விடுதவைப்புலிகளின் யுத்தம் காரணமாக அங்குள்ள அதிகமானவர்களுக்கு காணி உரிமை இல்லை. யுத்தம் கா…
-
- 1 reply
- 218 views
-
-
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகோரி மக்கள் வீதிக்கிறங்கி போராட வேண்டும் - ஜே.வி.பி. (எம்.மனோசித்ரா) நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் உண்மையை நிலைவரத்தை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ராஜபக்ஷ குடும்பத்தினால் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வினைக் கோரி , மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டும் என்று அழைப்பு விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , வரலாற்றில் முதல் தடவையாக டொலருக்கு சமாந்தரமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. முன்…
-
- 1 reply
- 253 views
-
-
ரமழான் நோன்பு ஆரம்பிக்கவுள்ளதால் பேரீச்சம் பழத்துக்கான இறக்குமதி தடையை நீக்க வேண்டும் - முஜிபுர் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் இறக்குமதி செய்ய தடைவிதித்திருக்கும் பொருட்களில் பேரீச்சம் பழத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால் பேரீச்சம் பழத்தின் தேவை அதிகரிக்கின்றது. அதனால் பேரீச்சம் பழம் இறக்குமதிக்கான தடையை அரசாங்கம் நீக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவ…
-
- 1 reply
- 228 views
-
-
ராஜபக்ஷ ஆட்சியின் மோசடிகளே நாடு வங்குரோத்தடையக் காரணம் - பல சம்பவங்களை வெளிப்படுத்தினார் சந்திரிகா (எம்.மனோசித்ரா) நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளமைக்கான காரணம் 2005 - 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே ஆகும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எனது ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெறுமதியுடைய விமானங்கள் , ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டமையினாலேயே ராஜபக்ஷவினால் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 2005 - 2014 வரையான காலப்பகுதியில் காணப்பட்ட ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகளின் காரணமாகவே நாட்டு பொருளாதாரம் இன்று வங்குரோத்து நிலை…
-
- 2 replies
- 307 views
-
-
அரசாங்கத்தின் மீது... மக்கள் தொடர்ந்து, நம்பிக்கை வைக்க வேண்டும் – பசில் ரஷ்யா – உக்ரேன் போரினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்க முயற்சித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொரோனா தொற்று, எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறினார். இருப்பினும் இதற்கான தீர்வை காண்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். https://athavannews.com/2022/1271560
-
- 0 replies
- 152 views
-
-
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினால்... மேலும் நெருக்கடிக்குள் மக்கள்! பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையில் தற்போது எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிகொண்டுள்ள இலங்கையில் இறக்குமதிக்கு தொடர்ந்து இரண்டு வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு அத்தியாவசிய பொருட்களுக்கு செலுத்த டொலர் இல்லாதமை காரணமாக ஆயிரக்கணக்கான பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. ஏற்கனவே விவசாயத்துறை வீழ்ச்சி, பொருட்களுக்கு தட்டுப்பாடு என்பவற்றினால் கடும் கோபத்தை வெளிப்படுத்திவரும் மக்களிடம், எரிபொருளை அதிகரிக்க போவதில்லை என அரச…
-
- 0 replies
- 165 views
-
-
முச்சக்கர வண்டிக் கட்டணமும் அதிகரிப்பு ! முச்சக்கர வண்டிக் கட்டணம் நாளை (13) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. முதல் கிலோமீட்டர் 70 ரூபாயாக அதிகரித்துள்ள அதேநேரம் அதற்கு மேலதிகமாக செல்லும் ஒரு கிலோமீட்டருக்கு 55 ரூபாய் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் டொலர் பற்றாக்குறையினால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை, தற்போது எரிபொருள் விலை உயர்வினால் பல பொருட்களின் விலையையும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1271535
-
- 0 replies
- 190 views
-
-
அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்? மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1271545 #################### ################# ############# தொடர் மின்வெட்டினால்.... அவசரநிலை பிரகடனம். மின்வெட்டின் தொடர்சியாக இலங்கை மின்சாரச் சட்டத்தின் …
-
- 14 replies
- 577 views
-
-
Published by T. Saranya on 2022-03-11 13:36:39 உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய உணவுப் பொதி ஒன்றின் விலை இன்று முதல் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அச் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் கொத்துரொட்டி ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 05 ரூபாவினாலும் அதிகரிப்பட்டுள்ளது. இதேவேளை, பாண் ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உணவுப் பொதி, கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள்…
-
- 0 replies
- 259 views
-
-
திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி பங்குதாரர்கள் உடன்படிக்கையில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளது. இலங்கை மின்சார சபைக்கும் (CEB) இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்திற்கும் (NTPC) இடையில் இன்று மாலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. திருகோணமலை, சம்பூரில் உள்ள சூரிய சக்தி பூங்கா தொடர்பான ஆரம்ப விவாதங்கள், இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய எரிசக்தி நிறுவனமான NTPC லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையில் பெப்ரவரி மாதம் ஆரம்பமானது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 50 மெகாவாட் சோலார் பூங்காவை திறப்பதற்கான சாத்தியம் குறித்து, தனியார்-பொது கூட்டுஒப்பந்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. கடந்த அரசா…
-
- 0 replies
- 209 views
-
-
Published by T. Saranya on 2022-03-11 17:12:57 (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கடந்த சில நாட்களாக டொலருக்கான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக மருந்துகளின் விலையை 29 வீதத்தினால் அதிகரிக்க தேசிய ஒளடத கூட்டுத்தாபனத்தின் விலை கட்டுப்பாட்டு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஒளடத உற்பத்திகள் , விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரயர் சன்ன ஜயசுமன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, இலங்கையில் உளவியல் ஆலோசனைகள் /உளவியல் சிகிச்சையாளர்களை ஒழுங்குறுத்தல்கள் பற்றிய விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் | Virakesari.lk
-
- 1 reply
- 253 views
-
-
Published by T Yuwaraj on 2022-03-11 19:38:35 கச்சதீவு அந்தோணியார் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு இன்று(11.03.2022) நடைபெற்றது. இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாடடில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களையும், ஆதங்கங்களையும் வெளியிட்டனர். குறிப்பாக, இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறை காரணமாக பாதிப்புக்களை எதிர்…
-
- 2 replies
- 291 views
- 1 follower
-
-
பசில் ராஜபக்ச சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் – மக்கள் அவரை நாட்டிலிருந்து துரத்தவேண்டும் SayanolipavanMarch 11, 2022 பசில் ராஜபக்ச சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச இந்த நாட்டு மக்கள் ஓன்றுதிரண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை பசில் ராஜபக்ச தனது பாரம்பரியமாக மாற்றிவிட்டார்,ஜனாதிபதியாலோ அல்லது பிரதமராலோ எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவிற்கு தெரியாமலே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன என கருதலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.battinews.com/2022/03/blog-post_268.ht…
-
- 0 replies
- 249 views
-
-
கூட்டமைப்பை சந்திக்கிறார் கோட்டாபய – உறுதிப்படுத்தினார் சம்பந்தன் March 11, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (Ra.Sampanthan) தலைமையிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பானது எதிர்வரும் 15ஆம் திகதி அரச தலைவர் மாளிகையில் இடம்பெறவுள்ளதாக இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் கூட்டமைக்கும் இடையிலான சந்திப்புக்குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புக்கள் வெளியாகியிருந்த நிலையில், அவை நடைபெறவில்லை. இந்நிலையில், எதிர்வரும் 15ம் திகதி தலைவர் கோட…
-
- 2 replies
- 427 views
-