ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
பயங்கரவாத தடுப்பு சட்டமூல திருத்தங்களுக்கு 2/3 பெரும்பான்மை தேவை! March 8, 2022 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) சில ஷரத்துகளும், பல ஷரத்துகளில் திருத்தங்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென அந்த வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்ததன் பின்னர், சபாநாயகர் அறிவிப்பின் போதே, உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை விடுத்தார். https://globaltamilnews.net/2022/173885
-
- 1 reply
- 288 views
-
-
தொடரும் இராணுவமயமாக்கல் குறித்து... பிரித்தானியா கவலை ! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை வரவேற்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் பொறுப்புக்கூறலில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாதது மற்றும் மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை சிவில் சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்தும் கவலையடைவதாக ரீட்டா பிரெஞ்ச் தெரிவித்துள்ளார். அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து கவலையடைவதாகவும் அவர் கூறினார். ஆகவே 46 கீழ் 1 தீர்மானத்தில் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வ…
-
- 0 replies
- 372 views
-
-
தொடர் துன்புறுத்தலை நிறுத்துங்கள் – இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய அமெரிக்கா சிவில் சமூகம், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நேற்று பேசிய அமெரிக்கா, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இலங்கையின் முயற்சியையும் 40க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டமையும் வரவேற்றுள்ளது. இருப்பினும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க பயங்கவராத தடைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கருத்து…
-
- 0 replies
- 210 views
-
-
காணாமல் போனோர் விவகாரம் : முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 25 விசாரணை குழுக்கள் ! காணாமல் போனோர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக 25 விசாரணை குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இது குறித்து அறிவிக்கப்பட்டது. https://athavannews.com/2022/1270932
-
- 0 replies
- 163 views
-
-
வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினர் மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் (நா.தனுஜா) இலங்கையில் மனித உரிமைகளுடன் தொடர்புடைய மிகமுக்கிய வழக்குகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பின்னடைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கரிசனையை வெளிப்படுத்திய பிரிட்டன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் காணி அபகரிப்புச்சம்பவங்கள் உள்ளடங்கலாக சிறுபான்மையின மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல…
-
- 0 replies
- 133 views
-
-
பொலிஸ்காவலின்கீழ் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் அவசியம் - அம்பிகா சற்குணநாதன் (நா.தனுஜா) நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் இராணுவமயப்படுத்தப்படுவது குறித்தும், போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டு பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருந்த நபர்கள் உயிரிழக்கும் விதம் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கரிசனைகளை வெளிப்படுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், தடுப்புக்காவலின்கீழ் இடம்பெற்ற மரணங்கள் குறித்து போதிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமையானது தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் போக்கு தொடர்வதையும் அரசகட்டமைப்புக்களால் வன்முறை கையா…
-
- 0 replies
- 124 views
-
-
ஜனாதிபதி தலைமையில் பொருளாதார பேரவை நியமனம்! நாட்டின் பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் பொருளாதார பேரவையொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி ஒட்டுமொத்த பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கி…
-
- 0 replies
- 124 views
-
-
இலங்கையில் டொலரின் பெறுமதி உயர்வு: ஊக்குவிப்பு தொகை 38 ரூபாவாக அதிகரிப்பு! இலங்கையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 230 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களின்போது ஒரு அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 230 ரூபாவாக அமையும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை புலம்பெயர் தொழிலாளர்கள் எமது நாட்டுக்கு அனுப்புகின்ற ஒரு அமெரிக்க டொலருக்காக தற்போது செலுத்தப்பட்டு வரும் 10/- ரூபா ஊக்குவிப்புக் தொகையை 38/- ரூபா வரை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறைய…
-
- 0 replies
- 144 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தினர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி!, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேசமே நாம் அழுவது கேட்கவில்லையா? வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேணடும்., தமிழரின் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும்., எங்கே எங்கே உறவுகள் எங்கே…
-
- 1 reply
- 245 views
-
-
கையடக்க தொலைபேசியை திருடியதாக, இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவபாலன் சத்தியபவான் (44வயது) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் தனது சித்தியுடன் கங்குவேலி பகுதியில் வசித்து வருகின்ற நிலையில் மதுவுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருடி அதனை விற்பனை செய்து மது வாங்க…
-
- 8 replies
- 582 views
-
-
விமல், கம்மன்பிலவை அரசிலிருந்து வெளியில் விடாதீர்கள்! – திலும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” – என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்றுச் செயற்பட முடியாது. ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அரசியலில் இருந்து …
-
- 3 replies
- 333 views
-
-
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு... புதிய புகையிரத சேவை! கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய புகையிரத சேவையை ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் புகையிரதம் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு சேவை மீண்டும் ஆரம்பமாகும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த புகையிரதத்தில் சுமார் 530 பேர் வரை பயணிக்க முடியும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1270769
-
- 8 replies
- 547 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வழங்க வேண்டும் என கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கார்டினல் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ளபோதிலும் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி எமக்கு தெரியவில்லை. நாங்கள் இன்னும் இருளில் இருக்கிறோம். இத்தாக்குதல் தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்களை சேகரிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க…
-
- 0 replies
- 248 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முட்டைக்கு இவ்வாறு விலை கூடியுள்ளமை இதுவே முதல் தடவை. பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது முட்டையின் விலையும் அதிகரித்துள்ளது. கோழி தீவனங்களுக்கான விலை அதிகரிப்பே முட்டையின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணம் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கோழிப் பண்ணை உரிமையாளர் எம்.ஏ.எம். தாஹிர். முன்னர் 3,200 ரூபாவுக்கு கிடைத்த முட்டைத் தீன் (கோழிகளுக்கு முட்டையிடும் பருவத்தில் வழங்கப்படும் தீன்) தற்போது 6,800 ரூபாவுக்கு விற்கப்படுவதாக தாஹிர் தெரிவிக்கின்றார்…
-
- 0 replies
- 235 views
-
-
( எம்.நியூட்டன்) நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இலங்கை. இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்று தருமாறும் இழுவைப்படகுகளுக்கு நடவடிக்கை எடுக்ககோரியும் வடக்கு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலில் தங்கியிருக்கும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம். …
-
- 0 replies
- 159 views
-
-
இலங்கையில் இன்றும் தமிழர்களை பழி வாங்கும் சட்டத்தில் திருத்தம் - தமிழர் தரப்பு கூறுவது என்ன? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,R.SHANAKIYAN இலங்கையில் கடந்த 43 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அதற்கு உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இம்முறை ஜெனீவா அமர்வுகளில் இலங்கைக்கு சாதகமான பதிலொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்த முயற்சிக்கப்படுவதாக பல்வேறு த…
-
- 1 reply
- 285 views
- 1 follower
-
-
மயில்வாகனம் நிமலராஜன்: 22 ஆண்டுகள் கழித்தாவது நியாயம் கிடைக்குமா? இலங்கை தமிழ் பத்திரிகையாளர் கொலை வழக்கில் எழும் கேள்வி விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 6 மார்ச் 2022, 04:14 GMT படக்குறிப்பு, பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்தார் நிமலராஜன் "எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே அரசாங்கத்தின் துணை இல்லாமல் யாராலும் அதை செய்திருக்க முடியாது." என்கிறார் 22 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயி…
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம், ஏற்கனவே 1500 உணவகங்கள் மூடல் !! மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பல உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களில் உள்ள சுமார் 1500 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். அத்தோடு வைத்தியசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார். வைத்தியசாலைகளில் இந்நிலை ஏற்பட்டால் நோயாளிகள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அனைவருக்கும் உணவு கிடைக்காது என்றும் அவர் சுட்…
-
- 0 replies
- 214 views
-
-
புதிய அரசாங்கத்தை அமைக்க தயாராகும், பொதுஜன பெரமுன.. நாடாளுமன்றில் தனித்து செயற்பட... மைத்திரி உள்ளிட்டவர்கள் தீர்மானம் கம்மன்பில, வீரவங்ச ஆகியோரின் பதவி நீக்கம் அரசியல் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மைத்திரிபால சிறிசேன மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 11 பேர் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சுயாதீனமாக செயற்பட வாய்ப்புள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட இருவரையும் திரும்பப் அழைப்பது குறித்த எந்த அறிகுறியையும் ஜனாதிபதி காட்டவில்லை என்பதோடு இணைந்து செயற்பட முடியாதவர்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அத்தோடு 11 பங்காளி கட்சிகளுடனும் அவர் எவ்வித சந்திப்புகளை நடத்தவில்லை என்பதோடு முடங்கிய பணிகளை மீண்…
-
- 0 replies
- 167 views
-
-
ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால்... பேரிழப்பு ஏற்படும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரிக்கை தெரிந்தோ தெரியாமலோ யாராவது ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் அதனால் பேரிழப்பு ஏற்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். இதன் காரணமாகவே அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்தார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார். அமைச்சர்களானாலும், இராஜாங்க அமைச்சர்களானாலும் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சியில் இருந்து செய்தவற்றையே தற்போதும் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் சஜித் மற்றும் அநுர ஆகியோர் நாட்டில் எரிபொருள் இல்லை என கூறிய குழப்பத்தை ஏற்படுத்தியமையினாலேயே மக்கள் தற்போது வரிசையில் நிற்பதாக கூறினார். …
-
- 0 replies
- 173 views
-
-
அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான... இறக்குமதி தடை குறித்த அறிவிப்பு அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கிய பட்டியல் இன்று அமைச்சரவைக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார். இதற்கு அமைச்சரவைப் பரிந்துரை கிடைத்தவுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்த நிலையில் 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. நுகர்வோ…
-
- 0 replies
- 145 views
-
-
தொடர்ந்தும்... அமைதியாக, இருக்கப்போவதில்லை – ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களில் நாடு சீர்குலைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். பொருட்களை வாங்குவதற்காக நாடு முழுவதும் மக்கள் வரிசையில் நிற்பது, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதை காட்டுவதாக கூறினார். இதேவேளை அரசா…
-
- 0 replies
- 194 views
-
-
மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானம், கட்சியின் தொகுதி அமைப்பாளர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான விசேட சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. “தற்போதை அரசியல் பிரச்சினைக்கு மத்தியில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்ன?” என இந்தக் கூட்டத்தின் போது மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். எனினும்,…
-
- 0 replies
- 198 views
-
-
இந்த ஆட்சிக்கு எதிராக மக்களே கிளர்ந்தெழுக - சுமந்திரன் நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். - இவ்வாறு அறைகூவல் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்…
-
- 0 replies
- 184 views
-
-
ஓரணியில் ஒன்றுபட்டுள்ளோம் எனவே இது சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளி – இரா.சாணக்கியன் தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட இது அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார் . நுவரெலியா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எமது விடுதலைப்போராட…
-
- 2 replies
- 305 views
-