ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142885 topics in this forum
-
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு... புதிய புகையிரத சேவை! கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய புகையிரத சேவையை ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் புகையிரதம் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு சேவை மீண்டும் ஆரம்பமாகும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த புகையிரதத்தில் சுமார் 530 பேர் வரை பயணிக்க முடியும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1270769
-
- 8 replies
- 548 views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தினர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி!, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேசமே நாம் அழுவது கேட்கவில்லையா? வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேணடும்., தமிழரின் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும்., எங்கே எங்கே உறவுகள் எங்கே…
-
- 1 reply
- 246 views
-
-
புதிய அரசாங்கத்தை அமைக்க தயாராகும், பொதுஜன பெரமுன.. நாடாளுமன்றில் தனித்து செயற்பட... மைத்திரி உள்ளிட்டவர்கள் தீர்மானம் கம்மன்பில, வீரவங்ச ஆகியோரின் பதவி நீக்கம் அரசியல் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மைத்திரிபால சிறிசேன மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 11 பேர் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சுயாதீனமாக செயற்பட வாய்ப்புள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட இருவரையும் திரும்பப் அழைப்பது குறித்த எந்த அறிகுறியையும் ஜனாதிபதி காட்டவில்லை என்பதோடு இணைந்து செயற்பட முடியாதவர்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அத்தோடு 11 பங்காளி கட்சிகளுடனும் அவர் எவ்வித சந்திப்புகளை நடத்தவில்லை என்பதோடு முடங்கிய பணிகளை மீண்…
-
- 0 replies
- 168 views
-
-
ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால்... பேரிழப்பு ஏற்படும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரிக்கை தெரிந்தோ தெரியாமலோ யாராவது ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் அதனால் பேரிழப்பு ஏற்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். இதன் காரணமாகவே அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்தார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார். அமைச்சர்களானாலும், இராஜாங்க அமைச்சர்களானாலும் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சியில் இருந்து செய்தவற்றையே தற்போதும் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் சஜித் மற்றும் அநுர ஆகியோர் நாட்டில் எரிபொருள் இல்லை என கூறிய குழப்பத்தை ஏற்படுத்தியமையினாலேயே மக்கள் தற்போது வரிசையில் நிற்பதாக கூறினார். …
-
- 0 replies
- 174 views
-
-
அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான... இறக்குமதி தடை குறித்த அறிவிப்பு அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கிய பட்டியல் இன்று அமைச்சரவைக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார். இதற்கு அமைச்சரவைப் பரிந்துரை கிடைத்தவுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்த நிலையில் 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. நுகர்வோ…
-
- 0 replies
- 145 views
-
-
தொடர்ந்தும்... அமைதியாக, இருக்கப்போவதில்லை – ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களில் நாடு சீர்குலைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். பொருட்களை வாங்குவதற்காக நாடு முழுவதும் மக்கள் வரிசையில் நிற்பது, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதை காட்டுவதாக கூறினார். இதேவேளை அரசா…
-
- 0 replies
- 195 views
-
-
மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானம், கட்சியின் தொகுதி அமைப்பாளர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான விசேட சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. “தற்போதை அரசியல் பிரச்சினைக்கு மத்தியில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்ன?” என இந்தக் கூட்டத்தின் போது மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். எனினும்,…
-
- 0 replies
- 199 views
-
-
இந்த ஆட்சிக்கு எதிராக மக்களே கிளர்ந்தெழுக - சுமந்திரன் நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். - இவ்வாறு அறைகூவல் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்…
-
- 0 replies
- 185 views
-
-
விமல், கம்மன்பிலவை அரசிலிருந்து வெளியில் விடாதீர்கள்! – திலும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” – என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்றுச் செயற்பட முடியாது. ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அரசியலில் இருந்து …
-
- 3 replies
- 334 views
-
-
பொலீசாரினதும் அரச கட்சியினதும் அராஜகத்தை அனுமதிக்க முடியாது! த.தே.ம.முன்னணி கண்டனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச ஆதரவுக் கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்,சுகாஷ் தெரிவித்துள்ளார். இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச ஆதரவுக்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. …
-
- 0 replies
- 176 views
-
-
ஐ.நாவால் மாத்திரமே இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும்! செல்வம் எம்.பி உலக நாடுகளில் ஐ.நா ஒன்றால் தான் எங்களது இனப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். உலக நாடுகளில் ஐ.நா ஒன்றால் தான் எங்களது இனப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எல்லா இனங்களையும் சமமாக கருத்தப்பட வேண்டு…
-
- 0 replies
- 193 views
-
-
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள்! விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு 73 ஆம் இலக்க ஆசனமும் பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவுக்கு 78 ஆம் இலக்க ஆசனமும் வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பின்வரிசை இருக்கைக்கு பதிலாக ஆளும் கட்சியின் இரண்டாவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, போக்குவரத்து அமைச்சர…
-
- 0 replies
- 195 views
-
-
மயில்வாகனம் நிமலராஜன்: 22 ஆண்டுகள் கழித்தாவது நியாயம் கிடைக்குமா? இலங்கை தமிழ் பத்திரிகையாளர் கொலை வழக்கில் எழும் கேள்வி விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 6 மார்ச் 2022, 04:14 GMT படக்குறிப்பு, பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்தார் நிமலராஜன் "எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே அரசாங்கத்தின் துணை இல்லாமல் யாராலும் அதை செய்திருக்க முடியாது." என்கிறார் 22 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயி…
-
- 1 reply
- 321 views
- 1 follower
-
-
இலங்கையில் திறந்து வைக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் ஒரு கப்பல் கூட வந்து போகாத துறைமுக பராமரிப்புக்கு மாதம் 56 லட்சம் செலவு யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 32 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் இயங்கிய போது எடுத்த புகைப்படம் இலங்கையில் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட துறைமுகமொன்றுக்கு இது வரை கப்பல் ஒன்று கூட - வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 56 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருகின்றது. இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமொன்…
-
- 4 replies
- 381 views
- 1 follower
-
-
ஓரணியில் ஒன்றுபட்டுள்ளோம் எனவே இது சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளி – இரா.சாணக்கியன் தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட இது அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார் . நுவரெலியா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எமது விடுதலைப்போராட…
-
- 2 replies
- 306 views
-
-
ஐ.நா. அறிக்கை... காலத்திற்கு காலம் வரும், அறிக்கையே – டக்ளஸ் காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) வவுனியாவில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில் ” நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இலங்கையில் இருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேரும் கச்சதீவுக்கு போகலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது . அதன் பின்னர் ஜனாதிபதியுடன் நான் கலந்துரையாடி இரு பக்கத்தில் இருந்தும…
-
- 5 replies
- 424 views
-
-
1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் : கடும் நிபந்தனையை விதித்த இந்தியா ! இலங்கை அரசாங்கம் கோரிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக அறிய முடிகின்றது. அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து நீண்டகால மீட்சியை இலக்காகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க இந்தியா கோரியுள்ளது. மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதாரத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டு பட்டியலையும் இந்தியா கோரியுள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த வருடம் டிசம்பரில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக் கொண்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயம் இரண்டு முறை இரத்து செய்யப்பட…
-
- 5 replies
- 535 views
-
-
இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் மூடைகள் பறிமுதல் இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற .10லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூடைகளை நேற்று போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் . தூத்துக்குடியில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க கியூ பிரான்ச் போலீசார் மாவட்டம் முழுவதும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்ட கியூ பிரான்ச் போலீசார் 2 படகுகளில் சோதனையிட்ட போது மொத்தம் 14 மூடைகளில் 550 கிலோ ஏலக்காய் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10லட்சம் என்று கூறப்படுகிறதோடு , மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்…
-
- 0 replies
- 198 views
-
-
சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களை தடை செய்ய வேண்டும். பிரித்தானிய எம்.பி. கோரிக்கை! இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தடை செய்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தற்போது இலங்கையில் தொடரும் சித்திரவதைகளிற்கும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவே காரணம் என்றும் அவர் கூறினார். சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த வருடம் அமெரிக்கா பயணத்தடை விதித்தது போன்று பிரித்தானியாவும் தங்கள் மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் கீழ் தடை செய்ய வேண…
-
- 2 replies
- 242 views
-
-
ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை... பாரதூரமானது, என்கின்றார் ஜி.எல்.பீரிஸ்! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட்டின் அறிக்கையில் பாரதூரமான முரண்பாடுகளும், பலவீனங்களும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் செயற்பாடுகளில் தலையிடுவதைப் போன்று இந்த அறிக்கை அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஏனைய உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற விசாரணை நடைமுறையில் பாகுபாட்டை காட்டுவது, ஐக்கிய நாடுகள் சபையின் அடித்தளத்தையே தாக்கும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் இது நாடுகளின் இறையாண்மை, சமத்துவம் தொடர்பான கொள்கைகளை மீறுகிறது என்றும் பேர…
-
- 0 replies
- 177 views
-
-
நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை, பொய்யான செய்திகள் பரவுகின்றன – பிரதமர் மஹிந்த எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எரிபொருள் இருப்பு நான்கு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்றது என தவறான செய்திகள் பரவுவதாக தெரிவித்த அவர், நாட்டில் எவ்வித எரிபொருள் நெருக்கடியும் இல்லை என கூறினார். அரசியலில் குறைந்த அனுபவம் கொண்டவர்களினால் வெளியிடப்படும் இவ்வாறான அறிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். மேலும் இவ்வாறான செய்திகள் காரணமாக நாடு முழுவதும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ …
-
- 5 replies
- 335 views
-
-
வட்டுவாகல் கோத்தாபாய கடற்படையினருக்கு தமிழர்நிலங்களை விடுவிக்கும் எண்ணமில்லை; மாறாக நிலங்களை பறிக்கவே தொடர்ந்தும் பிரயர்த்தனம் – ரவிகரன் குற்றச்சாட்டு Digital News Team 2022-03-05 முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான பூர்வீக காணிகளை கோத்தாபாய கடற்படைமுகாம் கடற்படையினர் அபகரித்துள்ளனர் இந்நிலையில் இக் காணிகளை விடுவிக்குமாறுகோரி, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பலதடவைகள் போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் அக்காணிகளை மக்களுக்கு விடுவித்து வழங்கும் நோக்கம் கடற்படைக்கோ, ஏனைய அரச திணைக்களங்களுக்கோ இல்லை எனவும், மாறாக தமிழ் மக்களின் காணிகளை எப்படியாவது அபகரித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவர்கள் செயற்படுவதாகவும் முன்னா…
-
- 0 replies
- 220 views
-
-
இந்தியா விடுத்துள்ள அறிக்கை மற்றும் தொடர்ச்சியான அழைப்புகளை வரவேற்கின்றோம் – கூட்டமைப்பு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிக்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.இந்நிலையில் அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக இந்தியா விடுத்துள்ள அறிக்கை மற்றும் தொடர்ச்சியான அழைப்புகளை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் மக்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், சமத்துவத்துடனும், நீதியுடனும் வாழ, 13வது திருத்தத்தை அ…
-
- 4 replies
- 646 views
-
-
என்.ராஜ் யாழ். மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தனர். வடக்கிற்கான பிறீமா மா விற்பனை முகவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இதில், யாழில் பேக்கறி உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள். எனினும் எமக்கு வழங்கப்படும் மாவின் அளவினை குறைக்க வேண்டாம் என்று கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் ஒரு காரணத்தை கூறின. எதிர்வரும் நாட்களில் யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மாவின் அளவினை உடனடியாக குறைக்க உள்ளதாகவும் தெரிவித்த…
-
- 4 replies
- 369 views
-
-
Published on 2022-03-05 18:46:28 கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் உணவுகளின் விலைகள் மிக மோசமாக அதிகரித்து காணப்படுகின்றமையால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் உணவுகளின் விலைகள் இன்றைய தினம் சடுதியாக அதிகரித்த நிலையில் காணப்பட்டது. குறிப்பாக கிளிநொச்சி பொதுச்சந்தை பகுதியில் பெரிய மீன் வகைகள் ஒரு கிலோ 800 ரூபா முதல் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் இறால் கணவாய் ஆகியனவும் 1200 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல சிறிய வகை …
-
- 11 replies
- 485 views
-