Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிறைவேற்று அதிகாரம் கொண்ட... ஜனாதிபதி முறையை ஒழிக்க, தமிழ்க் கட்சிகள் ஏகமனதாக கோரிக்கை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரதான தமிழ் கட்சிகளின் ஐந்து தலைவர்களும் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி கலந்துரையாடினர். இதன்போது நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக விடுக்கப்பட்டது. குறித்த சந்திப்பில் டெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தும் கூட்டறிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் சார்பில் வெளியிடுவது பற்றியும் பேசப்பட்டதாக அறிவ…

  2. போராட்டங்களினால்... சுற்றுலாப் பயணிகளுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது – அரசாங்கம் இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அமைச்சு, இலங்கை தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுடன் , கடந்த ஆண்டு …

  3. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற தேவையான மாற்றங்களை தாமதமின்றி செயற்படுத்துங்கள் - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரே…

  4. சதொசவில்... இன்று முதல், நிவாரண பொதி ! தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதியை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நிவாரணப் பொதிகளை இன்று ( சனிக்கிழமை ) தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது . இதன்படி அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்ட பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் எ…

  5. ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு (எம்.மனோசித்ரா) இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை. இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெள்ளிக்கிழமை (8) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கை தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்…

  6. இலங்கையில்... போராட்டங்கள் மீதான, அடக்குமுறைக்கு... ஐ.நா. நிபுணர்கள் கண்டனம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நடத்தப்பட்ட சில போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையிலான ஒன்றுகூடல் மற்றும் போராட்டங்களின் போது கருத்து தெரிவிப்பதற்காக உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அவசரகால பிரகடனம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடை ஆகியவற்றால் மிகவும் கவலையடைவதாகவும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கூறியுள்ளது. மேலும் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிகத்தை அதிகமாகப் பயன்படுத்துவதையும் கண்டிப்பதாக அறிவித்துள்ளது…

  7. மக்கள் வரிசையாக நிற்கும் நிலையை உடனடியாக மாற்ற வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள கௌரவ டக்ளஸ் தேவானந்தா, உணர்ச்சிகளாலோ அல்லது சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகள் மூலமோ இந்த நிலைமையை மாற்ற முடியாது எனவும் அறிவு ரீதியாக அனைவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பற்றிய அறிக்கை தொடர்பாக அரசாங்கக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், எமது…

    • 2 replies
    • 297 views
  8. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மே மாதத்திலிருந்து முன்னர் எடுத்த ஏற்பாடுகள் விமான ஆசன முன்பதிவு (Bookings) என்பனவற்றிற்கான நிதியை மீள வழங்க அறிவித்துள்ளதாக பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அதாவது,நாட்டில் தினமும் ஏற்படும் டொலர் மாற்றம் காரணமாக விமான நிறுவனங்களுக்கு முன்பதிவு செய்யப்படும் பணத்தினை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் முன்பதிவு என்பனவற்றில் பிரச்சினை ஏ…

  9. இலங்கையில் மருத்துவ அவசர நிலை? அரசு மருத்துவர்கள் சங்கம் கூறுவது என்ன? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் சுகாதாரத்துறையினரின் போராட்டம் இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், மக்களின் வாழ்க்கை அபாயத்தை நோக்கி நாளாந்தம் நகர்ந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில், மக்கள் பொருளாதார ரீத…

  10. இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம: கோப்புப் படம் கொழும்பு: இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர…

    • 4 replies
    • 485 views
  11. கொழும்பு: பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இலங்கையிடம் அ…

  12. தமிழர் விடுதலைக் கூட்டணி... மீண்டும், தலைதூக்க போகின்றது – ஆனந்தசங்கரி இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தரவேண்டும் நாளை(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்றார். …

  13. நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற... நிதி அமைச்சராக, இருந்து தேவையானதைச் செய்வேன் – அலி சப்ரி எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது. இதன்போது புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார். அதனை தெளிவுபடுத்திய அலி சப்ரி, தான் நிதியமைச்சராகவே தற்போது உ…

    • 9 replies
    • 504 views
  14. நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே.... கைகலப்பு – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது ஆளும் கட்சி மட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி மற்றும் பொதுஜன பெரமுனவின் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோரை அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை எண் 79ன் கீழ் அவர்களை வெளியேற்றுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். குறித்த இரண்டு உறுப்பினர்களையும் அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு வசதியாக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டன. https:…

    • 3 replies
    • 257 views
  15. நம்பிக்கையில்லா பிரேரணை: கையொப்பங்களை பெற ஆரம்பித்தது எதிர்க்கட்சி ! இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சி முன்னெடுத்துள்ளது. இதேவேளை கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறு விஜித்த ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1275862

  16. நீங்கள் போகவில்லை என்றால்... நம்பிக்கையில்லா பிரேரணையை, கொண்டு வருவோம் – சஜித் எச்சரிக்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார். தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒன்று வழி நடத்துங்கள் அல்லது வழியை விட்டு வெளியேறுங்கள் என கேட்டுக்கொண்டார். மேலும் 6.9 மில்லியன் மக்கள் ஜனாதிபதிக்கும், 6.8 மில்லியன் மக்கள் அரசாங்கத்திற்கும் வாக்களித்திருந்தமையினை அரச தரப்பு உறுப்பினர்கள் மறந்து செயற்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். ஆகவே மக்களின் தற்போதைய கோரிக்கைக்கு ச…

  17. மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால்... அது ஜனாதிபதிக்கு, பிரச்சினையாக மாறும் – ரணில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது ஜனாதிபதிக்கு பிரச்சினையாக மாறும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செவ்வியில், பொதுமக்களின் உணர்வுகள் தங்களிற்கு எதிராக மாறியுள்ள போதிலும் இலங்கை ஜனாதிபதியாலும் பிரதமராலும் தொடர்ந்து எவ்வாறு பதவியில் நீடிக்க முடிகின்றது என கேள்வியெழுப்பப்பட்டது. குறித்த கேள்விக்கு பதிலளித்த ரணில், “ஜனாதிபதியை பொறுத்தவரை அவர் ஐந்து வருடங்களிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவர் வீட்டிற்கு செல்லவேண்டும் என ஆர்ப்பாட…

  18. மன்னாரில்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 4 பேர் கடல் வழியாக... தனுஷ்கோடியை சென்றடைந்தனர்! இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும் மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்தனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை )அதிகாலை மன்னார் முத்தரிப்புத்துறை யை சேர்ந்த ஒர…

  19. இந்த அரசாங்கம் பதவி விலகாது – போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஹரீன் கோரிக்கை! நாட்டின் நெருக்கடியை தீர்க்க நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டும் என எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கம் பதவி விலகாது எனவும், அவர்கள் பதவி விலகும்வரை போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275772

  20. பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை.. நாடாளுமன்றத்திற்கு, சமூகமளிக்க போவதில்லை என அறிவித்தார் ஆளும் தரப்பு எம்.பி! நாட்டின் பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மூன்று மாத காலத்திற்கு தான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1275759

  21. இலங்கை பொருளாதார நெருக்கடி: மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஜித் நிவார்ட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிற்கு வெளிநாடு செல்ல, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் (07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவியல் நம்பிக்கை மீறல், வங்கியாளரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் சட்டம் மற்றும் பத்திரங்கள், பரிவர்த்தனைகள் கட்டளை சட்டத்தின் கீழ் நிதி மோசடி மற்றும் முறைகேடு இடம்பெற்றுள்ளமை உள்ளிட்ட 6 குற்…

  22. புதிய அமைச்சரவை.. அடுத்த வாரம், பதவியேற்கும் – ஆளும்தரப்பு அறிவிப்பு ! புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1275765

  23. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு... சதொசயில், நிவாரணப் பொதி! சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடங்குவதோடு, இந்த நிவாரணப் பொதி ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 பொருட்களின் கொள்முதல் விலையைவிட நுகர்வோர் 700 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளர்து. http…

  24. திங்களும்... நாடாளுமன்றை கூட்டுங்கள் – ரணில் கோரிக்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் நாடாளுமன்றம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என குறிப்பிட்டார். அவரது இந்த கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். https://athavannews.com/2022/1275827

  25. நாடாளுமன்றுக்கு, ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – அவர் பதவி விலக மாட்டார்: காஞ்சன இந்த வீர வசனத்தை முடிந்தால் எரிபொருள் வரிசையில் நிற்பவர்களிடம் கூறுங்கள் - எதிர்க்கட்சி! நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு, அரசமைப்புக்கு இணங்க ஜனாதிபதி விலக மாட்டார் என்றும் அவர் எதற்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்…

    • 3 replies
    • 193 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.