ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142887 topics in this forum
-
22 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகையை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/122986
-
- 0 replies
- 259 views
-
-
இந்த வருடத்திற்குள் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் அபாயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் பிரதமர், தற்போது சந்தையில் டொலரின் உண்மையான பெறுமதி 250 ரூபாவிற்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். அவரது அறிக்கையில், பொருளாதாரம் இன்னும் சீரழிந்து வருகிறது. டொலர் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. ரூபாய் பற்றாக்குறை இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று ரூபாயின் உண்மையான மதிப்பு டொலருக்கு ரூ.250 இதிலும் அதிகம்.. இதன் மூலம் ரூ. 275 வரையும் உயரும். அதோடு நிறுத்தவில்லை என்றால், அது ஆண்டு இறு…
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக இடம்பெறுகின்றது : நீதி அமைச்சர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவ…
-
- 1 reply
- 268 views
-
-
நிதி நெருக்கடிக்கு, தீர்வாக... இலங்கையில் முதலீடு செய்யத் தயார் – ஜெய்சங்கர் நிதி நெருக்கடியைக் குறைக்க இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்படும் நிதி நெருக்கடியை குறைக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். குறிப்பாக அந்நியச் செலாவணியை பேணுவதற்கும், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இந்தியா கடன் உதவியை வழங்கியுள்ளது. இருப்பினும் கடுமையான அந்நியச்…
-
- 1 reply
- 274 views
-
-
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்பட்டு வருகிறது – ஜீ.எல்.பீரிஸ் 43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரிகளுக்கு மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என சுட்டிக்காட்டினார். பயங்கரவ…
-
- 1 reply
- 197 views
-
-
ரணிலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கையா? முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் இரகசியஉடன்படிக்கையொன்று காணப்படுகின்றது என வெளியாகும் செய்திகளை ஐக்கியதேசிய கட்சி நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் அதிக நாடாளுமன்ற ஆசனங்களை பெறுவதற்காக ஐக்கியதேசிய கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைப்பது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் இரகசிய உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார் என வெளியான தகவல்களையே ஐக்கியதேசிய கட்சி நிராகரித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ளார் இந்த பேச்சுவார்த்தைகளில் ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் இசினிவிக்கி…
-
- 0 replies
- 222 views
-
-
ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிடுவோம் – சாணக்கியன் எச்சரிக்கை வடபகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுத் தரத் தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்த…
-
- 0 replies
- 282 views
-
-
அரசியல் கைதிகள் யாழ். சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம்! யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களைச் ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில…
-
- 0 replies
- 185 views
-
-
ஐ.நா. அமர்வு – ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளை மறுதினம் ஜெனிவாவுக்கு பயணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை குறித்த அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். குறித்த அறிக்கை ஏற்கனவ…
-
- 0 replies
- 127 views
-
-
யாழில்... கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும், அமெரிக்க பிரஜையின் உடைமைகள் திருட்டு! கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார். படகில் யாழ்ப்பாணம் வந்தவர் குருநகர் கடற்பகுதியில் தனது படகினை நிறுத்தி விட்டு , தங்குவதற்காக யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார். விடுதியில் தங்கி விட்டு மறுநாள் படகுக்கு சென்ற போது , படகில் …
-
- 0 replies
- 146 views
-
-
பூநகரி, முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாக மக்கள் விசனம்! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம் குஞ்சுக் குளம் ஆனைவிழுந்தான் மற்றும் பூநகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் வனவளத் திணைக்களத்தினால் தங்களது காணிகள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப் பட்டு எல்லையிடப் படுவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த காலங்களில் பொது மக்கள் பயன்படுத்திய பயிர் செய்கை காணிகள் தணியார்காணிகள் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த மிகப் பழம் பெரும் கிராமங்களான குஞ்ச…
-
- 4 replies
- 408 views
-
-
PreviousNext பிக்கு ஒருவருக்கு எதிராக விகாரை முன் திரண்ட தோட்ட மக்கள்! வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர். வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவரை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்கு, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையால் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு வட்டவளை…
-
- 6 replies
- 443 views
-
-
போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? February 22, 2022 “புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள். இதன் மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.” என முன்னாள் நாடாளும…
-
- 2 replies
- 642 views
-
-
உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டனவற்றிலிருந்து இவ்வாறு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்டியல் மற்றும் ஹவாலா முறைமைகள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் முறைமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் இந்த உண்டியல் மற்றும் ஹாவாலா முறைமையுடன் அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தர்கள் உள…
-
- 5 replies
- 701 views
- 1 follower
-
-
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தனியார்த் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நியச் செலாவணியை உருவாக்குதல், அரச நிதிக் கொள்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்…
-
- 1 reply
- 205 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலை நடத்த விரும்பும் பசில், நெருக்கடிக்கு மத்தியில் தவிர்க்க கோரும் மூத்த அமைச்சர்கள் ! கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கு முதலில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சுக்கள் மத்தியில் நிதி அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இருப்பினும் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தலுக்கு தயாராகவில்லை என கூறி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி, அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் பிரச்சினை என்பன நாட்டில் ப…
-
- 1 reply
- 202 views
-
-
எரிபொருள் ஏற்றிய கப்பலில் உள்ள எரிபொருளை இறக்குவதற்கு 36 மில்லியன் டொலர் இல்லை என்பதால், வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 300 மெகா வோட் மின்சாரத்தை இன்று முதல் உற்பத்தி செய்ய முடியாமல் போகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 36 மில்லியன் டொலர் இல்லாத காரணத்தினால், நாட்டு மக்களின் போக்குவரத்து மாத்திரமல்லாது மின்சாரத்தை அரசாங்கம் இல்லாமல் ஆக்கியுள்ளது. நாடு அடைந்துள்ள பிச்சைக்கார நிலைமை சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் ஆகிய ராஜபக்ச சகோதரர்கள் பொறுப்ப…
-
- 1 reply
- 268 views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக, விசாரணை நடத்துங்கள் – ஐ.நா. ஆணையாளரிடம் உறவுகள் கோரிக்கை. தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை போராடிய 112 பெற்றோர்கள் மனஅழுத்தத்தினாலும் நோய்வாய்ப்பட்டதாலும் மரணித்துள்ள நிலையிலும், நீதி கிடைக்க வேண்டும் என எஞ்சியிருப்பவர்கள் தொடர்ந்தும் போராடிவருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க …
-
- 2 replies
- 227 views
-
-
ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலம், அரசியலமைப்பிற்கு முரணானவை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முன்னாவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வினை தொடங்கிவைத்து உரையாற்றும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதனை நிறைவேற்ற வேண்டுமாயின், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டத…
-
- 0 replies
- 140 views
-
-
பிரதேசவாசிகள், பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, குருணாகல் மாவட்டம் பொத்துஹெர, அரம்பேபொல பிரதேசத்தில் விகாரை என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதியை நடத்தப்பட்டு வருவதாக “துக்க ஹந்துனன அபி” என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. குறித்த இடத்தில் விகாரை இயங்கினாலும் ஹொட்டல் என்று அந்த கட்டடம் பதிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் தலைவர் நிலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரே விகாரை அமைந்திருந்த இடத்தை விற்பனை செய்துள்ளார். விகாரைக்குள் இந்த ஹொட்டல் இயங்குகிறது. சீன விகாரை என அழைக்கப்படும் இந்த ஹொட்டலில், சீனப் பெண்கள் தங்கியுள்ளனர். பிரதேசவாசிகளுக்கு விகாரையில் நடப்பது என்ன என்பது தெரிய…
-
- 6 replies
- 513 views
-
-
“இறுதிவரைப் போராடியே மடிந்தவர் பிரபாகரன்” “இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார்.” - இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துத் தொடர்ப…
-
- 1 reply
- 492 views
-
-
யாழில். கூலிக்கு, யாசகம் பெற்றவர்கள் கைது! சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…
-
- 7 replies
- 492 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தின் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடாத்திய விசேட செய்தியாளர் சந…
-
- 7 replies
- 547 views
-
-
புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதியதிட்டம் உருவாக்கப்படுகின்றது – முதலீட்டுச்சபை புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் இலங்கை முதலீட்டுச்சபை ஈடுபட்டுள்ளது. இலங்கையில் முதலீடுசெய்யும் புலம்பெயர்ந்தவர்களிற்கு விசேட ஊக்குவிப்பு திட்டங்களை உள்ளடக்கியதாக புதிய திட்டம் காணப்படும். இது புதிய யோசனை என தெரிவித்துள்ள இலங்கை முதலீட்டுசபை வட்டாரங்கள் ஜனாதிபதிதனது சுதந்திர தின உரையில் புலம்பெயர் இலங்கையர்களை இலங்கையின் அபிவிருத்தியில் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததன்பின்னணியில் இந்த திட்டம்…
-
- 11 replies
- 723 views
-
-
சுதந்திரக்கட்சி, சிங்களக் கட்சி அல்ல கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எனக்கு வழங்கிய மிகப்பெரிய ஆணைக்கு செயல் வடிவில் நன்றி கூறி வருகிறேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இன்று (21) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டு நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ் மக்கள் எமக்களித்த அன்புக்கும் அரவணைப்பிற்கும் தலை வணங்கவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு வந்துள்ளார். ஸ்ரீலங்கா சுத…
-
- 3 replies
- 495 views
-