Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப்பெட்டி, இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் Published by T Yuwaraj on 2022-02-15 21:55:53 (இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரத பெட்டிகள் மற்றும் எஞ்சின்களை பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறதால் அரச நிதி மாத்திரம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். கொழும்பில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்…

    • 5 replies
    • 478 views
  2. மாபெரும் போராட்டத்திற்கு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்பு! வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி இந்த அழைப்பினை விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. இலங்கை அரசிடம் தீர்வு கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நாங்கள் போராடி வருகின்றோம். …

  3. வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் நாளை முதல் யாழ்.போதனாவில் மீள ஆரம்பம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை(புதன்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான…

  4. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்புவது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகள் ஆராய்வு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுகூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதேநேரம், ‘ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் – தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்’ என்ற தலைப்பில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடனான கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1267245

  5. இலங்கை தொடர்பான ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை இம்முறை கடுமையாக இருக்கும் – சித்தார்த்தன் அரசாங்கத்திற்கு ஆதரவாக விடயங்களை திரட்டம் முகமாகவே அமைச்சர்கள் அலி சப்ரி, ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் வடக்கில் நீதிச் சேவை முகாம்களை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளார்.அத்துடன் இலங்கை தொடர்பான ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை இம்முறை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையாக இருக்கும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்கனவே கடிதம் ஒன்றை சக நாடுகளுக்கு அனுப்பியுள்ள நிலையில் அனைத்து…

  6. இலங்கையில் கோவிட்டுக்கு மருந்து கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தியவரின் வீட்டில் நடந்த சோகம் கோவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 58 வயது எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கடந்த 12ஆம் திகதி உயிரிழந்த அவரின் சடலம் கேகால…

  7. மத்திய கிழக்கில் கைவிடப்படும் தமிழ்ப் பெண்கள் – நடவடிக்கைக்குத் தயாராகும் த.தே.ம.முன்னணி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை செய்வதற்குச் சென்று கைவிடப்படும் தமிழர்கள் விசேடமாகப் பெண்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக அக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி. இ. ஸ்ரீஞானேஸ்வரன் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்புக்களுக்காகச் செல்லும் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் சார்பாகத் தமக்குப் பல காணொளி முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அவ்வாறு கைவிடப்பட்டுள்ள தமிழர்கள் சார்பாக தாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய க…

  8. புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான நபர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நபர் நிரபராதி என தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, யாழ்ப்பாணம் – விக்ணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆலோசனையின்படி இறுதி யுத்தகால பகுதி…

  9. இனம், மதம் மற்றும் மாகாண அடிப்படையில் மக்களை நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டாம் – மனோ கணேசன் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையை உண்மையாக ஏற்றுக்கொண்டால், நாட்டை இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தின் கீழ் இந்த நாட்டை அரசாங்கம் கொண்டு வர முடிந்தால், அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் ஆனால் தற்போது சிங்கள சமூகத்திற்கென தனிச் சட்டம், தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கென தனிச் சட்டம் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, இனம், மதம் மற்றும் மாகாண அடிப்படையில் மக்களை நடத்தி…

  10. யார் ஆட்சிக்கு வந்தாலும்... தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை, சடுதியாக மாற்ற முடியாது – பிள்ளையான் இலங்கையில் யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோதிலும் அரசாங்கம் கிராமமட்ட பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையிலேயே சமுர்த்தி ப…

  11. கைதிகள் விடுதலை தொடர்பில் மனித உரிமை பேரவையோ சர்வதேச சமூகமோ செல்வாக்கு செலுத்த முடியாது- நாமல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேசசக்திகளோ சிறைக்கைதிகள் தொடர்பில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு பிரச்சினைகள் எழாது என குறிப்பிட்டுள்ள அவர் சிறைக்கைதிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்துவேன் என ஜனாதிபதி தனது கொள்கை உரையில் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலைகளில் இடநெருக்கடியை குறைக்க தீர்மானித்துள்ளோம்,நீதிமன்ற விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப…

  12. இரு கடிதங்களை இறுதி செய்வதற்கு புதனன்று கூடவுள்ள தமிழ்த் தலைமைகள் (ஆர்.ராம்) தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இருவேறு கடிதங்களை இறுதி செய்வதற்காக கூடிக்கலந்துரையாடவுள்ளனர். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா ஆகியோரே இவ்வாறு கூடிவுள்ளவர்கள் ஆவர். இவர்களின் கூட்டத்தின் போது, முதலாவதாக, கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மற்றும் உறுப்பு ந…

  13. கண்டாவளை வைத்தியாலைக்கு நிரந்தர வைத்திய அதிகாரி நியமனம் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா (Gajendra) நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார பணிமனை உறுதிப்படுத்தியது. பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த கண்டாவளை வைத்தியசாலையின் விவகாரத்தின் பின்னர் புதிய வைத்திய அதிகாரியாக கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் உறுதிப்படுத்துவது கடினமாக இருந்திருந்தது. எனினும் இது தொடர்பான உறுதிப்படுத்தலினை இன்றைய தினம் வடமாகாண சுகாதார பணிமனை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தெரவித்திருந்த விடயம், கண்டாவளை பிரதேசத்தின் மருத்துவ சேவைக…

    • 2 replies
    • 450 views
  14. விடுதலை புலிகளுக்கும், ஜே.வி.பிக்கும்... பாரிய வேறுபாடுகள் கிடையாது – நாமல் மிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற ஆளும்கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பேசிய அவர், இருதரப்பினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள் என கூறினார். கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என கூறினார். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் விமர்சிப்பது எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கொள்கை என நாமல் ராஜபக்ஷ…

    • 12 replies
    • 713 views
  15. சுஐப் எம். காசிம்- மனிதனின் வாழ்வாதாரப் பிரச்சினை, கடல்வாழ் உயிரினங்களையும் விட்டபாடில்லை. ஒருசாண் வயிற்றுக்கான போராட்டம், இன்று பலகோடி ஜீவன்களை பலியெடுக்கும் நிலைமைக்கு மாறிவருவதுதான் கவலை. இன்றைய தேவைக்காக என மனிதன் வாழ்ந்தால், இயற்கை இவ்வளவு சீரழிக்கப்படாது. இயற்கை விரும்பிகளும் இதைத்தான் விரும்புகின்றனர். அளவுக்கு அதிகமான நுகர்வு, மனிதனின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்தாவது பற்றி எவர் கருத்தில்கொள்கின்றனர்? தமிழக மற்றும் வடபகுதி மீனவர் பிரச்சினையும் இப்படித்தானுள்ளது. தொப்புள்கொடி உறவென்றும், இணைபிரியா உணர்வு என்றும் ஒன்றுபட்டுள்ள இவர்களின் பிரச்சினை, "தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு” என்பதையே உணர்த்துகிறது. தலைமன்னார், தனுஷ்கோடி இன்னும் ராமேஸ்வர…

    • 0 replies
    • 247 views
  16. ஒக்டோபர் மாதம் முதல் 89 இலங்கை தமிழர்கள் டியோகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்- பிரிட்டன் உறுதிசெய்துள்ளது Digital News Team 2022-02-15 20 சிறுவர்கள் உட்பட 89 இலங்கை தமிழர்கள் 2021 ஒக்டோபர் மூன்றாம் திகதி முதல் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை பிரிட்;டிஸ் அரசாங்கம் உறுதி செய்துள்ளது என ஆசிய பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது. நடுக்கடலில் காப்பாற்றப்பட்ட இவர்கள் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என பிரிட்டன் உறுதி செய்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி நடுக்கட…

  17. கச்சதீவு செல்லும் பக்தர்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்தியிருத்தல் அவசியம் - யாழ். அரச அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை 500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு செல்வோர் கொவிட்-19 க்கு எதிரான மூன்று தடுப்பூசி டோஸ்களையும் செலுத்தி இருத்தல் அவசியம் என்று யாழ். அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கச்சதீவு தேவாலய உற்சவம் எதிர்வரும் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கொரோனா சுகாதார நட…

  18. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் நான்காம் மாடிக்கு அழைப்பு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனுக்கு , கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸார் ஊடாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவர் விசாரணை பிரிவில் முன்னிலை ஆகும் போது அன்றைய தினம் குறித்த அமைப்பு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.thaarakam.com/news/6de7b477-ad34-43be-a583-5dc69d8fe5be

  19. அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன் மணல் அகழ்வு மன்னாரில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியே அவுத்திரேலிய நிறுவனத்தால் கனிய மணல் அகழ்வு இடம்பெறுகிறது என மன்னார் சுற்றாடலை பாதுகாப்போம் எனும் அமைப்பினர் குற்றம் சாடியுள்ளனர். மன்னார் பிரிஜின் லங்கா நிறுவன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர். அந்த அமைப்பினர் மேலும் தெரிவித்ததாவது: மன்னாரில் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக கனிய மணல் ஆய்வுகள் மிகவும் ரகசியமான முறையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கனிய மணல் அகழ்வால் மன்னார் தீவுப் பகுதி குறுகிய காலத்தில் முற்று முழுதாக கடலில் மூழ்கும் நிலை ஏற்படும். எங்களால் இயன்றவரை இது த…

  20. போர்க்குற்ற விவகாரத்தில்... இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது – அரசாங்கம் போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் மிகத் தெளிவாக உள்ளமையால் இலங்கைக்கு எந்தவிதமான ஆபத்தும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொறுப்புக்கூறல் பிரச்சினைக்கு சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் பதிலளித்த விதம் குறித்து அதிர்ச்சியும், ஆச்சரியமுமடைவதாகவும் கூறினார். குறிப்பாக அப்போதைய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்…

  21. 3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து இன்று இறுதி தீர்மானம் நாடடில் நிலவும் மின்சார நெருக்கடியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்தமை போன்ற பல காரணிகள் மின்வெட்டுக்கான காரணங்களாக உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, 03 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை இதற்கு முன்னர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியிருந்தது. இந்நிலையில், மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மின்சாரத்தை துண்டிப்பத…

  22. 49 ஆவது அமர்வில் யாருக்கு நீதி கிடைக்கும்? February 15, 2022 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை கலந்துகொள்வதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையான சமூகம் ஏற்றுக்கொள்ளும் என வலியுறுத்தினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (14.02.22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவ…

  23. திருத்தம் செய்யப்படுகின்றது... தொல்லியல் கட்டளைச் சட்டம்! தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தொல்லியல் கட்டளைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரகாரம், தொல்பொருட்களைத் திருடும் நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை அல்லது 500,000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1266885

  24. (ஆர்.யசி) நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் இன்றைய கடன் நெருக்கடிக்கு ஒட்டுமொத்தமாக ராஜபக்ஷவினரே பொறுப்புக்கூற வேண்டும். ராஜபக்ஷவினரின் ஆட்சி இனிமேலும் தொடருமானால் பிரபாகரன், சஹரான் அல்லது ரோஹன விஜயவீரவினால் கூட இதுவரை செய்ய முடியாத அளவிற்கு அழிவுகள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார். நாட்டின் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து தனது நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார். இந்த நாட்டின் மொத்த கடன்களில் …

    • 1 reply
    • 244 views
  25. Freelancer / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 07:20 - 0 - 87 இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை தெரிவித்தார். சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரம தாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்றும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, இன்று (14) தெரிவித்தார். இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு சற்று முன்னர் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், சர்வதேச ரீதியில் இலங…

    • 1 reply
    • 512 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.